மீண்டும் மரணம் மீதான பயம்

This entry is part of 48 in the series 20060203_Issue

சாம்


மெளனத்தின் கொடுக்குகள்
கொட்டிய வலியின் மீது
இனி
உன் விஞ்ஞாபனத்தை எழுது.
விருப்புப் பற்றியும் இருப்புப் பற்றியும்
எத்தனை தடவைதான் பேச முடியும்.
தீட்டிய வாளினை மோகித்தபின்
இரத்தத்தைப் பற்றி
யார் அங்கே அறிமுக விழா செய்பவன் ?
வாழ்வு என்பதன்
இறுதி நம்பிக்கைகளும்
பொய்த்துப் போன பின்
தூங்கிய துப்பாக்கிகள்
வீங்கி எழுந்து நின்றன
என் தேசத்து வீதிகளில்.
துணங்கைக் கூத்தாடும்
யுத்தத்தின் கற்பழிப்புகளுக்குப் பயந்து
நீண்ட நாட்களின் பின்
படலைகளை மூடும்
என் இனிய ஊாின் சாளரங்களில்
மீண்டும் அப்பிக் கிடக்கிறது
மரணம் மீதான பயம்.

—-
samprem@btinternet.com

Series Navigation