எதுவுமில்லாத போது

This entry is part of 48 in the series 20060203_Issue

சாம்


—-

புன்னகைக்கத் தொியாத
உதடுகளின் முன்னே
உருண்டது வாழ்க்கை.
ஒரு ‘ஹலோ’ வோடு அறுக்கப்படும்
மானுட உறவின் பிம்பத்தெறிப்பில்
உதிர்ந்தது எல்லாம்.
முழு வெளிகளையும்
மலர்ச்சியற்ற முக மனிதர்களின்
கொட்டாவிக் காற்று நிறைத்துவிட்டது.
சுரங்கக் கோச்சியுள் அடங்கிய
முடியாத என் பயணம்,
என்னோடு எப்போதும் புலம்பும் நான்,
அறியா இரவொன்றில்
பொய்த்துப் போன என் கனவு,
அடிக்கடி நினைவுக்கு மீளும்
அம்மாவின் சிாிப்பு,
எழுதத் தொியாத போது
எழுதிய முதல் கவிதை,
அாிதாரம் தடவி ஆடிய
இராவணன் கூத்து,
இப்படி இப்படி
இன்னும் சிலஸஸ
இவைகளைத் தவிர
இப்போது எதுவுமில்லை.
புன்னகைக்கத் தொியாத
உதடுகளின் முன்னே
உருண்டது வாழ்க்கை.

—-
samprem@btinternet.com

Series Navigation