எவர் மீட்பார் ?

This entry is part [part not set] of 25 in the series 20050429_Issue

சாரங்கா தயாநந்தன்


எழுந்தாடி
அழகு பொழிந்திருந்தாய்!
இளவான வர்ணத்தில்
இதயங் கவர்ந்திருந்தாய்!
வளங் கொண்டு மீன் வாரி
வயிறு நிறைத்திருந்தாய்!
மென்னந்திப் போதினிலே…
மிகவமைதி தேடி வந்த
தன்னந்தனி ஜோடி;
தனித்த ஒரு கிழவன்;
சின்னஞ் சிறுசெல்லாம்
சீராட்ட வாழ்ந்திருந்தாய்!
பொன்கடலே!
புகழ் கொண்டாய்,
பரந்த மன மனிதர்…
பாசமிகு அன்னை…
விரிந்த கருணை…
விசாலித்த அறிவு என
அனைத்துக்கும் பொதுமையுற்று
அகிலப் புகழ் கொண்டாய்
அது இறக்க
நேற்றுன் புதுமுகத்தை
நீசக்கடல் முகத்தை
எம் நெஞ்சில் எழுதினாய்.
வஞ்சம் மிகக் கொண்டு…
‘வம்பில் பிறந்தா ‘ளென
வசை கொண்டாய்!
விசைகொண்டு நீயழித்த சகலமும்
திசையெங்கும் கரம் நீட்டும்
மனிதத்தில் மீட்டிடலாம்.
ஆனால் நீ…
கரைத்த உயிர்களையும்
காலக் கடலிலும்
கரைந்தழியாதென்பதாய்க்
கர்வங்கொண்டென்னைக்
களிகூரச் செய்திருந்த
என்றுங் கிழியாத
என் பாட்டையும்
நீயொழித்த ஆழ்கடல்
மடிதடவி எவர் மீட்பார் ?

—-
nanthasaranga@gmail.com

Series Navigation

சாரங்கா தயாநந்தன்

சாரங்கா தயாநந்தன்