பயணங்கள் முடிவதில்லை

This entry is part of 30 in the series 20020909_Issue

வசீகர் நாகராஜன்


சில நேரங்களில் நான்
எங்கிருக்கிறேன் என்றே தெரிவதில்லை

சில கைகள் பூக்களாய் வருட
பல கைகள் முட்களாய் குத்த
வந்த வழி திரும்பிடவும் இயலாமல்
மேலும் மேலும் கால்கள் முன்னேற
எது பாதை எது வழி
முச்சு திணறுகிறது

வெளிச்சமும் இருட்டும் கலந்து
யாராலோ முன்னால் இழுக்கப்பட்டு
என்னால் யாரோ தள்ளப்பட்டு
யாராலோ என் பெயர் அழைக்கப்பட்டு
என்னால் பலர் காயப்பட்டு
புதுப்புது வழிகள் புதுப்புது வலிகள்

ஆயினும்
மயிலிறகு நாளையேனும் குட்டி போடுமென்ற
சிறுவயது மனது இன்னும் கொஞ்சம்
மிச்சமிருக்கிறது

வசீகர் நாகராஜன்

Series Navigation