அதுவரை காத்திருப்போம்.

This entry is part of 30 in the series 20020909_Issue

சித்தார்த்


யாதும் ஊரே யாவரும் கேளிர்
எழுதிய கைகள்
இன்று சக மனிதனுக்கு மலம் ஊட்டுகின்றன.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய மனம்
இன்று கண் முன்னே
கொலையே நடந்தாலும்
அதற்கு நியாயம் கற்பித்துக் கொண்டிருக்கிறது.

என்ன நடக்கிறது ? எங்கே போகிறோம் நாம் ?

பாவம் இருந்தது.
பாவம் இருக்கிறது.
பாவம் இருக்கும்.

பிரச்சனை அதுவல்ல.

பாவம் நமக்கு பழகிவிட்டது.
பாவம் செய்யாதவன் சிறுமைபடுத்தப்படுகிறான்.
அது தான் பிரச்சனை.

கலங்காதீர். அயர்ச்சி கொள்ளாதீர்.

கட்டிப்போன மனங்களை உருக்கும் முயற்சியில் உள்ளோம் நாம்.

எதிரின் வெளியில் ஏதோ ஓர் புள்ளியில்
அவை உருகத்தொடங்கும்.

அது வரை காத்திருப்போம்,
மனதிற்கும் மனிதநேயத்திற்கும் இடையே உள்ள தூரத்தை கடந்தபடி……

***
siddhu_venkat@yahoo.com

Series Navigation