மறக்க முடியுமோ ?

This entry is part [part not set] of 16 in the series 20011029_Issue

‘அனந்த் ‘ அனந்தநாராயணன்


தெருவிலே பாட்டொன்று கேட்குது – அதில்
தேன்சுவை சொட்டித்த தும்புது

உருவிலாக் குரலென்றன் உள்ளத்தில் – களிப்
போடிப்பெ ருகிடச் செய்யுது

அருவியாய்ப் பாயு மமுதமோ – அது
ஆனந்த வெள்ளப்பெ ருக்கமோ ?

கருவிலு திதித்தகு ழந்தையின் – காதில்
கர்த்தன் படித்திட்ட கானமோ ?

குருவிட மன்றிக்கு ளத்தினில் – துள்ளிக்
கூத்திடும் மீனிடம் கற்றதோ ?

பருவத்தில் பாடுங்கு யிலிடம் – இசைப்
பாடத்தைக் கேட்டுப்ப டித்ததோ ?

ஒருவரும் கேளாத ஓரிசை – என்றன்
உள்ளத்தில் ஓங்கிஒ லிக்குது

வருடங்கள் ஓடிம றையினும் – என்றன்
மனமிந்தப் பாட்டைம றக்குமோ ?

Series Navigation

அனந்த் (அனந்தநாராயணன்)

அனந்த் (அனந்தநாராயணன்)