படுகொலை செய்யப்பட்ட சதாம் உசைன் அவர்கள்…

This entry is part [part not set] of 43 in the series 20070104_Issue

ப.வி.ஸ்ரீரங்கன்


கொலையாகிய சதாமின் அரசியல் வாழ்வு கூறுவது என்ன?

1:அரபு மொழி பேசுபவர்கள் எல்லோரும் ஒரு தேசிய இனமல்ல.

2:இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் ஒரு தேசிய இனமல்ல.

3:அரபு தேசத்தில் வாழும் முஸ்லீம்,அரபு மொழி பேசுபவர்கள் யாபேரும் ஒரு தேசிய இனமல்ல.

4:எண்ணை வயல்களைச் சொந்தமாக்கிய அரேபியர்கள் எந்தச் சொத்துமற்ற அரேபியர்களுக்கு பாதுகாவலர்களில்லை.

5: எண்ணை டொலர்களே ரிம்மில் ஓடும் அமெரிக்கப் பாசிச இராணுவத்தின் இருப்புக்கு மிக உந்து சத்தியாகும்.

6: உலக ஏகாதிபத்தியத்தின் கனி வளத் தேவைக்கு எந்தத் தேசத்தின் இறமையும் ஒரே நொடியில் சிதைக்கப்பட்டு,பிற தேசங்களின் வளங்களை ஒட்டச் சுரண்டும் அமெரிக்-ஐரோப்பிய ஏகாதிபத்திய மூலதனம்.

7:இந்த ஒழுங்குக் காகவே தமது அடிவருடிகளைப் பயன்படுத்தும் அமெரிக்க-ஐரோப்பிய மற்றும் பிற சமூக ஏகாதிபத்தியங்கள்,அந்த அடிவருடியைத் தமது தேவைக்காக ஒரு சந்தர்ப்பத்தில் கொலைகளைச் செய்வதற்குக் தூண்டித் தேவையுருவாகும்போது அதையே காரணமாக்கித் தமது அடிவருடியைக் கொல்லவும் முனையும்.

மக்கள் இந்தக் கொடுமையான முதலாளித்துவ உலகில் வர்க்கங்களாக இருக்கிறார்கள்.வர்க்கச் சமுதாயமாக இருக்கும் மக்கள் கூட்டத்துள் வர்க்க அரசியலே அடிப்படை.

வரலாறு கண்ட யுத்தங்கள் யாவும் வர்க்கங்களுக்கிடையிலான யுத்தமே.

இந்த அடிப்படையிலேயே உலகத்தின் வளங்களைச் சுருட்டி வைத்திருக்கும் ஒரு சிறுபான்மைக் கூட்டம் பெரும் பான்மையான மக்களை அனைத்து வகை ஒடுக்குமுறை அலகுகளாலும் அடக்கி ஒடுக்கி வருகிறார்கள்.

மக்களின் விபத்தாக உருவாகிய அனைத்துப் பிரத்தியேகியக் கூறுகளையும்(மொழி,மதம்,பண்பாடு)கூர்மைப்படுத்தி மக்களைக் கூறுபோட்டு ஒருவரையொருவர் பகையாக்கி இன-மதப் போர்களை உருவாக்கித் தமது சுரண்டலை நிறுவிக்கொள்ளும் இன்றைய நவ பாசிஸ்ட்டுக்கள் ஜனநாயத்தின் பெயரால் மக்களைக் கொன்று குவிப்பது தமது தொழிற்சாலைகளுக்கு வளங்களை-மூலவளங்களைத் தொடர்ந்து தங்கு தடையின்றிக் கிடைப்பதற்கே!

சதாமின் கொலையை ஆதரிப்பதற்காக ஒரு சிறுபான்மைச் சனத்தை அமெரிக்கா தனது தேவைக்கேற்றபடி தயாரித்துப் படம் காட்டுகிறது.இது ஏகாதிபத்தியத்தின் காட்டுமிராண்டித் தனத்தை நியாயப்படுத்தச் சிறுபான்மை இனத்தின் உரிமையைப் பயன்படுத்துவதாகும்.1965-1970 ஈராக் சிரியா மற்றும் குர்தீஸ் போராளிகளுக்கிடையிலானB-1 இரக யுத்தம் கூடவே 1974-1975,மற்றும்1976-1979 வரையான ஈராக் குர்தீஸ் பிரிவனைவாதப் போராளிகளுக்குள் இடம் பெற்ற B-2 வகையிலான யுத்தம்கூட அமெரிக்க அரசின் தூண்டுதலோடுதாம் நடை பெற்றது.இது போலவே1980 இல் நடைபெற்ற ஈரான்,ஈராக் யுத்தம் C-2 வகையிலானது,இதுவும் அமெரிக்க-ருஷ்சியப் பலப் பரீட்சையாகவே இந்த மண்களில் நடைபெற்றது. இத்தகைய இன்னொரு யுத்தமானது 1961 இல் B-1 இரகம், அமெரிக்காவுக்கும் இருஷ்யாவுக்குமானதான யுத்தமாக எத்தியோப்பியாவுக்கும் எரித்திரியாவுக்குமான சுதந்திரப் போராகப் படம் காட்டப்பட்டு பல இலட்சம் மக்கள் பலியாக்கப்பட்டதற்கும் இந்த அமெரிக்காவே முதல் காரணமாக இருக்கிறது.

ஈரக்கின் முன்னாள் அதிபர் சதாமைக் கொல்வதற்கு எவருக்கும் உரிமைகிடையாது.அது சதாமால் பாதிக்கப்பட்ட மக்களுக்குஞ்சரி அல்லது சதாமின் தேசத்து மக்களுக்ஞ்சரி இந்தக் கடமை இல்லை.

சதாம் மக்களின் உண்மையான அதிகாரத்தின் முன் விசாரணைக்கு உட்பட வேண்டியவர்.அவரை எந்த அதிகாரத்தினதும் முடிவும் கொல்வதற்கு தீர்ப்புக் கூறமுடியாது.இது எந்த வர்க்கத்தின் நலனுக்கும் பொருந்தும்.மக்கள் விரோதிகளைத் தூக்கில் போடுவதல்ல மக்கள் நலனின் நோக்கு.எதிரியையும் வாழும் உரிமையைக் காத்து ,அந்த எதிரியின் வாழ்வைத் திருத்துவதே மக்களினதும் ஜனநாயகத்தினம் உண்மையான நோக்காக இருக்கும்.இதுதாம் இன்றைய புதிய ஜனநாயகக் கோரிக்கைகளில் அதி முக்கியமான மனிதவுரிமைக் கோரிக்கையாகும்.

இந்த நோக்கற்று சதாமின் இருப்பை இல்லாதாக்குது அமெரிக்க அதிகாரத்தினதும்,அவர்களினது தேசம் கடந்த ஆதிக்கத்தினதும் மிகக் கொடுமையான அச்சுறுத்தலாகும் இது.இத்தகைய கொலைக்கூடாகத் தம்மை எதிர்க்கும் எந்தத் தேசத்துத் தலைவர்களுக்கும் இதுவே கதியென்று மனோவியல் தாக்குதல் இதுவாகும்.தமது சுரண்டல் நலனுக்குக்கு குறிக்கே நிற்கும் தேசங்களுக்கும்,அந்த் தேசத்து வளங்களைக் காக்க முனையும் அரசுகளுக்கும் அமெரிக்க-ஐரோப்பிய முதலாளிகளால் விடப்படும் மிகப் பெரிய கொலை அச்சுறுத்தல் இதுவாகும்.

இந்தத் திமிர்தனமான அதிகாரம் அமெரிக்க முதலாளித்துவத்தோடு இணைந்த உலகத்தின் அனைத்து முதலாளிய நாடுகளுக்கும் விடப்படும் அச்சுறுத்தலாகும். அமெரிக்க-ஐரோப்பிய நலன்களுக்கு எதிராக இத்தகைய நாடுகளின் அரசியல் மாற்றமுறுமானால் அத்தகைய நாடுகளை அமெரிக்க-ஐரோப்பியர்களான நாம் சதாமின் நிலைக்கு உந்தித் தள்ளுவோம் என்று அnமிரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியம் விடும் சவால் இது!

இதை மீறிய எந்தத் தேசத்தின் முடிவும் இந்த ஈராக்கின் நிலைக்கு மாறியே தீருமென்று உலகப் பகாசூரக் கம்பனிகளின் அடியாளாகிய அமெரிக்கப் பயங்கரவாத அரசினூடாக இன்று உலக மக்களுக்கும் அவர்களின் இறைமைக்கும்,அவர்களின் தேசங்களின் வளங்களுக்கும் விடப்படும் பாரிய அச்சுறுத்தலாகும் இது.

இத்தகைய உலகப் பயங்கரவாதக் கம்பனிகளால் மக்களின் நலன்கள் எங்ஙனம் இல்லாதொழிக்கப்படுகிறதென்பதை பக்கம் பக்கமாக எழுத வேண்டியதில்லை.உலகமயப் பொருளாதாரத்துக்கு முன்பே இவர்களின் காலனித்துவக் காட்டுமிராண்டித்தனங்களையும்,கொலைகளையும் அனுபவித்தவர்கள் நாம்.உலகத்தின் எத்தனையோ யுத்தங்கள்,அழிவுகள்,அணுக் குண்டுத் தாக்குதல்கள் யாவும் மிகப் பெரும் உண்மையை நமக்கு உணர்த்தி நிற்கின்றன.அவை இந்தக் காட்டுமிராண்டித் தனமான முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுறையென்ற மக்கள் விரோதத் தனியுடமைச் சர்வதிகாரத்தின் சர்வ வல்லமை படைத்த பாசிச வெளிப்பாடே.

அன்றைய கொலம்பஸ் முதல் இன்றைய ஜோர்ச் புஷ்வரை முதலாளித்து நலன்களுக்கான-தனியுடைமைச் சுரண்டலுக்கான அடியாட்களேயென்பது நாம் அறிய வேண்டிய உண்மையாகும்.இந்தப் பேய்களின் பின்னே தங்கு தடையின்றி சுரண்டிக்கொண்டிருக்கும் பாரிய தொழிற்கழகங்கங்கள் சதாமைமட்டுமல்ல இப்படி பல கோடி சதாம்களை-மக்களை தமது கனிவளத் தேவைக்காக நாளாந்தம் கொன்று குவித்து வருகிறது.

ஈராக்கின் எண்ணை இருப்பானது 490 கோடிகள் தொன்களாக இருக்கிறது.இது இன்னும் பத்தாண்டுகளுக்குள் கொள்ளையிடப்பட்டுவிடும்.ஈராக்கைவிட ஈரானில் கிட்டதட்ட 780 கோடிகள் தொன்களுடைய எண்ணையிருப்பு இருக்கிறது.இதையும் கண்ணைத் துருத்திக்கொண்டு கொத்துவதற்குத் தயாராகும் அமெரிக்கக் கழுகு ஈரானியப் பிரதமரையும் வேட்டையாடக் காத்திருக்கிறது.

சதாம் என்பவர் பாசிச வாதியென்பதும் மக்கள் விரோதியென்பதும் ஒரு புறமிருக்கட்டும்.ஆனால் அவரொருவர் மட்டுமேதாம் ஈhக்கிய நாட்டின் எண்ணைக் கிணறுகளைத் தனது சொத்தாக மாற்றாமல் தன் தேசத்துச் சொத்தாக மாற்றியவர்.அரபு நாடுகளில் பெரும் பாலும் அனைத்து எண்ணை வயல்களும் தனியுடைமாயாகவும், பெரும் எண்ணைக் குடும்பங்களாக இருக்கும் சில அரபுக் குடும்பங்களுக்குச் சொத்தாக இருப்பதால்,இத்தகைய தேச விரோத அரேபியர்கள் எண்ணையால் வரும் முழுப் பணத்தையும் உலக வங்கிகளில் பதுகஇகி வைத்திருக்கிறார்கள்.இப்பணம் பல பத்தாயிரம் றில்லியன்கள் டொலராகும்.இந்தப் பணமே அமெரிக்க ஆதிக்க இராணுவத்துக்கு தீனிபோடுவதற்குடைந்தையாக இருக்கிறது.அரபுத் தேசங்களை சில குடும்பங்களே ஆளுகின்றபடியால் தமது பணங்களை அமெரிக்கா தனதாக்கி விடும் என்ற காரணத்துக்காக தமது அயல் தேசத்தில் எது நடந்தாலும் மூச்சு விடாமல் இருக்கின்றன பல அரப்புத் தேசங்கள்.இங்கே வர்க்க நலனே முதன்மையானது.மற்றும்படி முஸ்லீம்,அரபு என்பதெல்லாம் வெறும் பம்மாத்து இவர்களுக்கு.

உலகத்திலுள்ள எண்ணைச் சுரண்டல் கம்பனிகள் ஏழு.இவற்றுள் 5 பெரும் எண்ணைக் கொன்சேர்ன்கள் அமெரிக்காவுக்குச் சொந்தமானதாகும்.ஒன்று இங்கிலாந்து மற்றது அங்கேலோ-கொல்லாந்துக்குச் சொந்தமானது.மற்றெல்லாம் நடுத்தரமான சிறியவை.அவைகள் இந்தப் பெரும் பகாசூரக் கம்பனிகளால் மட்டுமே உயிர் வாழும் தகமையுடையவை.அமெரிக்காவின் எக்சோன்(Exon) மற்றும் அங்கேலோ- கொலன்ட் செல்(anglo-Hollaend Shell)உலகின் அனைத்து எண்ணை வயல்களையும் ஆளுகிறது.இவையேதாம் உலகத்தின் எண்ணை விலையைத் தீர்மானிக்கின்றன-சந்தையைக் கட்டுப்படுத்துகின்றன.இங்கேதாம் சதாம் குறுக்கே நின்றார்.அவர் தனது தேசத்தின் ஆளுமைக்குள் சந்தையைச் சுதந்திரமாக்க முனைந்தார்.அந்தோ அவர் கதையும் முடிந்தது.British Petroleum Company(BP)பிரித்தானியாவின் அரச நிறுவனமாகும்.எனவேதாம் எண்ணைச் சந்தை முரண்பாடுகள் உருவாகியபோது இரண்டாம் உலக யுத்தக்காலத்தில் வின்சன் சேர்ச்சில் பீ.பியை தேசப்பற்றுடைய நிறுவனமாகவும் செல் எண்ணை நிறுவனத்துக்கு மாற்றாகவும் சொன்னது ஞாபகம்.(அந்தோனி சிம்சன்: ஏழு சகோதரிகள் ஆங்கலப் பதிப்பில் எப்போதோ வாசித்ததாக ஞாபகம்.)

சதாம் அமெரிக்கா சொல்வது போன்று தன்னிச்சிiயாக மக்கள் விரோதியாக வாழ்ந்தவர் அல்ல.சதாமை உருவாக்கியது அமெரிக்காவே.சதாம் தனது இறுதிக்காலங்களில் அமெரிக்காவின் அடிவருடியாகச் செயற்பட மறுத்தபோது அவர் ஈராக்கின் வளங்களைத் தேசத்தின் வளமாக்க முனைந்து அமெரிக்க அடிமைத்தனத்துக்கு குறுக்கே நிற்க முனைந்தார்.அதுவே அவரது அழிவுக்குக் காரணமாகவும் மாறியது.இங்கே ஈராக்குக்கு ஆதரவாக எழுந்த மக்கள் எழிச்சியையோ அல்லது ஜனநாயகக் குரல்களையோ அமெரிக்க ஆளும் வர்க்கம் ஒரு பொருட்டாக மதிக்காது ஈராக்கை வேட்டையாடியது.இந்தப் படிப்பனவு அமெரிக்காவை வலுவான வகையில் ஆயுத மூலமாகப் பாட்டாளிய வர்க்கம் எதிர்காதுபோனால் இந்தப் புவிப்பரப்பில் உயிர்கள் நிலைக்க முடியாதென்பதே.

இதற்குச் சதாம் அவர்களின் இன்றைய வாழ்வும் சாவும் நல்ல உதாரணமாகிறது.

அமெரிக்கா என்பது உலகப் பாசிசத்தின் அதியுச்சக் கொடுமுடியாகும்.இந்த அமெரிக்கா மனித சமூகத்துக்கே எதிரான விசச் செடியாகும்.

ப.வி.ஸ்ரீரங்கன்

30.12.2006

Series Navigation

ப.வி.ஸ்ரீரங்கன்

ப.வி.ஸ்ரீரங்கன்