ஓட்டப் போட்டி

This entry is part [part not set] of 31 in the series 20020330_Issue

தானா


‘வீரர்கள் இஇவேகமாக வந்துகொண்டிருக்கிறார்கள் ‘

‘இரு மருங்கிலும் தள்ளி நின்று உற்சாகப்படுத்தும்படி பொது மக்களை பணிவன்புடன்

கேட்டுக்கொள்கிறோம் ‘

முன்னால் சென்று கொண்டிருந்த காரில் இருந்து ஒலிபெருக்கியில் யாரோ பேசினார்கள்.

முன்னணியில் ஓடிக்கொண்டிருந்த தங்கராஜிற்கு ஒரே களைப்பு. இன்னும் கொஞ்சத் தூரம்தான்.

திரும்பிப் பார்த்தான்.அவனைப் பின்தொடர்ந்து பலர் ஓடிவருவது தெரிந்தது.

இ ன்னும் கொஞ்சத் தூரம்தான்.

முயற்சி எடுத்தால் – முதலாவதாக வரலாம்.

புதுச் சைக்கிள்-பரிசாக மனதில் வந்து போனது.

ஆனாலும் உடம்பில் தென்பு குறைந்துகொண்டே வந்தது. மீண்டும் திரும்பிப் பார்த்தான்.

தனக்கும் இரண்டாவதாக வந்துகொண்டிருந்தவனுக்கும் கொஞ்சம்தான் இடைவெளி இருந்தது..

தினமும் இதே வீதியில் பாடசாலைக்கு நடந்து வந்தவன் – நேரம் போய்விட்டால் ஒடியும்

வந்திருக்கிறான்.வீதியின் மேடு பள்ளங்கள் அனைத்தும் அவனுக்கு நன்றாகத் தெரிந்த

விஷயங்கள்தான்.ஆனாலும் இன்னும் நாலைந்து முறை ஓடிப் பயிற்சி எடுத்திருந்திருக்கலாமே எனத் தோன்றியது.கொஞ்சம் அசிரத்தையாக இருந்து விட்டோமே என நினைத்துகொண்டான்.

வீதியின் இரு பக்கத்திலும் நின்று பலர் தங்களுக்கு தெரிந்தவர்களின் பெயரைக் கத்தி உற்சாகப்படுத்தினார்கள். தனது பெயரைச் சொல்லி யாரும் கத்தப்போவதில்லை என்பது அவன் எதிர்பார்த்ததுதான்..

அயலூர்க்காரன்..

வேலை,வேலை என காலையில் போய் மாலையில் வீடு திரும்பும் பெற்றோர்..

வீதிக்கு இன்னும் தனியே வரப் பயப்படும் தங்கை..

ஒடாமல் இருந்திருந்தால் தங்கையையாவது இங்கே கூட்டிவந்து ஓட்டப் போட்டியைக் காட்டியிருக்கலாம் எனத் தோன்றியது.

ஆனால் புதுச் சைக்கிளை பரிசாகப் பெற்றுவிட்டால்..எல்லாக் கவலைகளும் ஓடி மறைந்தன.

இ ன்னும் கொஞ்சத் தூரம்தான்.பல தடைகளை தாண்டிவிட்டோம்.மனதை அலைக்கழிக்கவிடாமல்

பார்த்துக்கொள்ளவேண்டும் என தீர்மானித்துக்கொண்டான்.

வீதியின் இரு பக்கத்திலும் சனங்கள் முண்டியடித்துக்கொண்டு எட்டிப்பார்த்தார்கள்.

யாராலும் அவனை அடையாளம் காண முடியவில்லை. வேடிக்கை மட்டும் பார்த்தார்கள்.

மீண்டும் ஒலிபெருக்கி ‘தள்ளி நின்று வீரர்களை உற்சாகப்படுத்தும்படி ‘ கேட்டுக்கொண்டது.

‘வீரர்கள் ‘ என்னும் சொல் அவனையும் உள்ளடக்கியபோது உற்சாகம் வந்தது.

இ இன்னும் கொஞ்ச தூரம்தான்.

முதலாவதாக வந்துவிடலாம்..புதுச் சைக்கிள்..

இ றுதிக்கட்டத்தை நெருங்க நெருங்க சனக்கூட்டம் அதிகரித்தது.

ஒரே பரபரப்பு..

தங்கராஇஜின் உறுதியும் உழைப்பும் வீண்போகவில்லை..

இ ன்னும் வேகத்தை கூட்டினான்..

அவனுக்கும் அவனைப் பின்தொடர்ந்தவர்களுக்கும் இடைவெளி அதிகரித்தது.

வழியிலிருந்த டாக்கடையில் இருந்து ஒருவன் செம்பு நிறைய தண்ணீருடன்

தங்கராஜை நோக்கி திடாரென வந்தான்.களைத்துப் போன உடலில் குளிர் நீர் படுவது

தன்னை உற்சாகப்படுத்தும் என்பது தங்கராஜிற்கு தெரியும்..

இ றுதிக்கட்டதில் அங்கு ஒரு அனுதாபி..

தங்கராஜ் நன்றி கலந்த பார்வையுடன் அவனைப் பார்த்தான்..

கண்கள் எரிந்தன.நிலைகுலைந்து தடுமாறி விழுந்தான்.

உடம்பெங்கும் சுடுநீரின் ரணவேதனை..

அருகில் நின்றவர்கள் அவனை தூக்கி வீதியின் ஓரத்திற்கு கொண்டு வந்தார்கள்.

‘நல்லவேளை கண் தப்பிவிட்டது ‘ என்றாள் கூட்டதிலிருந்த ஒருத்தி.

‘பயப்பிடாத அடுத்த முறை வரும் ஓட்டப் போட்டிக்கு முதல் சுகமாகி விடுவாய் ‘ என்றான்

இ ன்னுமொருவன்.மனது கொஞ்சம் இதமாகி ஓடிவந்த திசைக்கு எதிர்த்திசையில் இருந்த ஆஸ்பத்திரி நினைவுக்கு வந்தது..அங்கு போக திரும்பினான்..அவனைப் பின் தொடர்ந்து ஓடியவர்கள் அவனைக் கடந்து மறைந்து போனார்கள்..தூரத்தில் ஆஸ்பத்திரி தெளிவாகத்

தெரிந்தது.

Series Navigation

தானா

தானா