மரணப்படுக்கையில் இருந்து ஒரு கடிதம்

This entry is part [part not set] of 24 in the series 20090101_Issue

கவிதா



நீ நலமா?

உனக்காய்த்தான் காத்திருக்கிறேன்

நான் நலமில்லை

என்று நான் சொல்லியா

தெரிய வேண்டும் உனக்கு…

எனது சந்ததிகள்

பிறக்கும் போதே

தேவர்களால்

சபிக்கப்பட்டவர்களா..

ஏதேன் தோட்டத்து

ஒற்றைப் பாம்பு

கால் மிதிக்கும் இடத்தில் எல்லாம்

ஆப்பிள் பழங்களுடன்

ஆலோசனை சொல்கிறது.

பண்பட்ட செம்மண்

கண்ணி வெடிகள் விதைந்து

விருட்சங்கள் வளர்ந்து

தூங்கும் விழுதுகள்

பாசக்கயிறுகளாகிப் போய்

பிணக்குவியல் செய்கிறது

இன்றய

குருதி படர்ந்த செம்மண்

கவ்வி நிற்கிறது

வீரச்சாவென்று சொல்லி

நாளைய உலகத்தை…

என் மடியிற் தவழ்ந்த

பூக்;களும் உயிர்களும்

காணமல் போவதை

கைகட்டி பார்க்க

நிர்பந்திக்கப்பட்ட

ஒரு தாயின் நிலை

என்னுடையது

உடமைகள் உட்பட

உரிமைகள் பறிக்கப்பட்டு

கற்காலம் போல

இது காடுகளிலும் குழிகளிலுமாய்

வாழப்பழகிய புதிய நாகரீகம்

நீயாவது

எமது வித்தில் இருந்து

மாற்றம் பெறு!

என்னுடனே அழியட்டும்

அத்தனையும்!

எனது எச்சங்களையும்

தொடாதே நீ!

தோண்டிய குழிகளையும்

சுடுகாடுகளையும் அழித்து

தோட்டம் செய்!

என்னில் கற்றதை

உரமாக்கு!

கொடும் செய்கை நிறுத்தி

மனிதர்களை பேசப்பழக்கு!

துப்பாக்கிகளால் கண்ணீர்

துடைப்பதை நிறுத்தச் சொல்!

கருங்குழலையும்;, சுடுங்குழகளையும்

ஈட்டி வாள்களுடன்

புராதண பொருகள் காப்பகத்தில்

சேர்க்க ஆணையிடு!

ஒற்றையாயுதமாக மொழியை

பிரகரணப்படுத்து!

ப+க்களை பறித்து வந்து

பரிமாறிக்கொள்ளச் சொல்!

இறந்த சடலங்களின்

ஆடை விலக்கி

மொய்க்கும் புச்சிகளுகளின்

அலுக்கேறிய கண்களுக்கு

மறுபார்வை கொடு.

கடைசி நொடி வரை

அடைந்தே கிடந்த

என் கூண்டுப்புறாவை மட்டும்

உன்னுடன் விட்டுப் போகிறேன்.

மனித அழிவின் அலறல்களினதும்

சிதைக்கப்பட்ட பூமியினின்றும்

கூடு கட்டிய பறவை அது.

மறுசாவி செய.;

கூடு திற!

பறக்கட்டும் விடு.

வயிற்றில் தொடங்கி

புற்றுநோயின் அவஸ்த்தை

என் உடல் முழுதும்.

என் இரத்தம் மேய்ந்து

சிறுநீரிலும் சக்கரை நோய்!

என் பிரதேசம் எங்கும் நரம்புத் தளர்ச்சி.

கால்களில் பக்கவாதம்

கைகள் கட்டப்பட்டு வெட்டப்பட்டன.

குண்டுகளின் வெடிச்சத்திலும்

மனித அலறல்களிலும்

செவிடாகி காலம் கடந்தபின்

வேண்டாம் எனறு கண்களை நானே

மூடிக் கொண்டேன்!

இதயம் மட்டும்

துடித்துக்கொண்டிருக்கிறது

மரணப்படுக்கையில்…

இறந்துபோவதில்

நான் பூரிப்பே அடைகிறேன்!

இன்னும் சில நிமிடம் இருக்கிறது.

முடிவு எனது.

தொடக்கம் உனது!

உலகம் உன்னை வரவேற்கக்

தாயாராயிருக்கிறது!

திரும்பியும் பாராதே என்னை

போ!

பிரசவத்தில் சாவும்

உன் தாய் நான்

கடைசி மட்டும்

என் சாயல் கொண்டோ

உன் தகப்பனின் முகம்

கொண்டோ பிறவாதே நீ!

உனது காலத்தில்

எனது கனவுலகம் விரியட்டும்!

“புதியதோர் உலகு செய்வோம்”

என்ற கூற்று ஜெயிக்கும் அந்நாளில்

என் அத்மா சாந்தி பெறும்.

நம்பிக்கையுடன்…

புத்தாண்டே…

ஜனனி நீ!


Series Navigation

கவிதா

கவிதா