ரதன்
Rathan
Rathan@rogers.com
Starring:
Shaun Toub, Khalid Abdalla, Nasser Memarzia, Said Taghmaoui, Atossa Leoni
Directed by:
Marc Forster
மார்க் போஸ்ரரின் சிறந்த படங்களுள் இதுவும் ஒள்று. இவர் ஏற்கனவே Finding Neverland, Stranger Than fction, Monster Ball போன்ற படங்களை இயக்கியுள்ளார். யேர்மன் பெற்றோருக்கு பிறந்த இவர் சுவிசுலாந்தில் வளர்ந்தார். பின்னர் நியு யோர்க் பல்கலைக் கழகத்தில், திரைப்படத் துறையில் பட்டம் பெற்ற இவர், பல விவரணச் சித்திரங்களை இயக்கியுள்ளார். பல விருதுகளையும் இப் படங்களுக்காக பெற்றுள்ளார்.
மார்க, ; Khaled Hosseini ன் “பட்டம் ஓட்டி; “ நாவலை அதே பெயரில் படமாக்கியுள்ளார். குசெய்னி காப+லில் 1965 ல் பிறந்தார். இவர் 70 ல் தெகரானுக்கு புலம் பெயர்ந்தார். 73 ல் மீண்டும் ஆப்கான் திரும்பி, பின்னர் 76ல் பாரிசில் குடிபுகுந்தார். பின்னர் கலிபோர்னியாவில் குடியேறிய இவர் அங்கு வைத்தியராக கல்வி கற்று வைத்தியரானார். “பட்டம் விடுதல்” நூல் வெளிவரும் வரை (2005) வைத்தியராக கடமையாற்றினார். இவரது மற்றொரு நூல் A Thousand Splendid Suns. இவர் தற்சமயம் யு.என.எச்.ஆர் ல் சிறப்பு தூதராக கடமையாற்றுகின்றார்.
நூலாசிரியரது வாழ்வைப்போலவே நூலும் அமைந்துள்ளது. வழமைபோல் நாவலை படமாக்குவதில் உள்ள சிக்கல்களை மார்க்கும் அனுபவித்துள்ளார். இன்றைய ஆப்கானில், படம் ஒன்றை படமாக்குவதில் பல சிரமங்களை பெற்றுள்ளார். படம் ஆப்கான் கரையில் உள்ள பாகிஸ்தான் எல்iலை கிராமங்களி;ல் படமாக்கப்பட்டுள்ளது.
அமீர், ஹசன் இரு சிறுவர்கள் ஒன்றக வளர்கின்றனர். இருவரும் தாயை இழந்தவர்கள். அமீர் ஒரு பெரும் வர்த்தகரின் மகன். ஹசன் அங்கு வேலை செய்யும் வேலைக்காரச் சிறுவன். அமீர் பாடசாலைக்குச் செல்கின்றான். ஹசன் பாடசாலைக்குச் செல்வதில்லை. அமீரும், ஹசனும் நல்ல நண்பர்கள். அமீரின் தந்தை ஹசனை அமீரின் பாதுகாவலனாகவே கருதுகின்றார். அமீருக்கு பிரச்சினைகள் வரும் பொழுது ஹசன் அமீரை காப்பாற்றுகின்றான். அமீர் ஓர் பஸ்தான். எனவே இவர் ஓர் சுனி முஸ்லீம், ஹசன் ஓர் ஹசரா, எனவே சியா முஸ்லீம். அமீர் மற்றவர்கள் முன்னிலையில் ஹசனுடனான உறவை வெளிக்காட்டுவதில்லை. இவர்களுக்கிடையிலான வர்க்க, சமூக வேறுபாடுகளை பாதுகாக்கின்றான். அசீப் இவர்களை விட வயதானவன். இவர்களது நெருக்கத்தை அறிந்து கொள்கின்றான். அசீப், அமீரை ஹசனுடன் நட்புக் கொள்ள வேண்டாம் எனக் கூறுகின்றான். ஹசன் வேறு இனம் என சுட்டிக்கபட்டுகின்றான். இவன் ஓர் பஸ்தான். இவனுக்கு இந்த உறவை வெறுக்கிள்றான். வருடாந்த பட்டம் விடும் போட்டியில் இவர்களை பழிவாங்க விரும்புகின்றான். பட்டம் விடும் போட்டி இரு பிரிவுகளானது. முதலாவது ஒருவர் விடும் பட்டத்தை மற்றவர் நூலினால், அல்லது பட்டத்தினால் கிழித்தல் அல்லது அறுத்தல். மற்றையது பட்டத்தின் நூலை கைவிடும் பொழுது அந்த பட்டத்தை ஓடிச் சென்று பெற்றுக் கொள்ளல். பெறும் பட்டம் இவர்களுக்கு வெற்றிக் கிண்ணம் போல் வைத்துக் கொள்வார்கள். ஹசன் நன்றாக ஓடுவான். இதளால் பட்டங்களை பெற்றுக் கொள்வதில் தீரன். இந்த வருடப் போடடியிலும் ஹசன் பட்டத்தைக் கைப்பற்றிவிடுகின்றான். இத்தருணத்தில் அசீப்ம் அவனுடன் வரும் இருவரும் ஹசனை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்குகின்றனர். இதனைகட காணும் அமீர் ஹசனுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. மாறாக ஆத்திரம் கொள்கின்றான். இப்பட்டத்தைக் காட்டி தனது தந்தையிடம் பாராட்டு பெறவேண்டும் என்பது அவனது விருப்பம். ஹசனும் அவனது தந்தையும் சூழ்ச்சி செய்து தனது விருப்பத்தை நிறைவேற்றவில்லை என கவலை கொள்கின்றான். 40 வருடங்களாக இவர்களுக்கு சேவகம் செய்தவர்களை வெறுக்கின்றான். ஆனால் அமீரின் தந்தை ஹசனை வெறுக்கவில்லை. அமீர் தொடர்நது நிழலில் வாழ்கின்றான்.
இதன் பிள்ளர் ருசிய படைகள் ஆப்கானில் நுழைகின்றன. இடது சாரி எதிர்ப்பாளரான அமீரின் தநடதை ருசிய படகைளால் தாக்கப்பட்டு . பின்னர் தப்பி பாகிஸ்தான் சென்று இறுதியாக கலிபோர்னியாவில் தஞ்சமடைகின்றார். பெரும் மாளிகையில் வளர்ந்த இவர்கள் சிறு மேல் மாடி குடியிருப்பில் வாழ்கின்றனர். தந்தை இரு வேலைகள் செய்கின்றார். விடுமுறை நாட்களிவ் பிளீ மார்க்கெட்டில் வியபாரம் செய்கின்றார். அங்கு சரோயா தகாரி குடும்பத்தை சந்திக்கின்றார்கள். அமீர் சரோயா நட்பு திருமணம் வரை வளர்ந்து விட்டது. பட்டப்படிப்பை முடித்துவிட்ட அமீரை சரோயாவிற்கு திருமணம் செய்து கொடுக்குமாறு சரேயாவின் தந்தையை அமீரின் தந்தை கேட்கின்றார். இவர்களது திருமணம் நடைபெறுகின்றது. அமீரின் தந்தை இரைப்பை புற்று நோயால் இறந்து விடுகின்றார். அமீர் இப்பொழுது பிரபல எழுத்தாளர். இவரது முதாலாவது நூலை குழந்தை போல் அணைத்து எடுக்கும் பொழுது தொலைபேசி அழைக்கின்றது.
அமீரின் தந்தையின் நெருங்கிய நண்பரும், அமீர் சிறுவனாக இருந்த பொழுது எழுத ஆரம்பித்த பொழுது, ஆதரவளித்தவருமான ரகீம் கானின் அழைப்பு அது. அமீரை உடனடியாக பாகிஸ்தானுக்கு வருமாறு அழைக்கின்றார். தனது நூல் சுற்றுப்பயணத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, தனது மகனையும், மனைவியையும் கலிபோர்னியபவில் விட்டு விட்டு பாகிஸ்தான் செல்கின்றான். அங்கு சென்ற பொழுது ஹசனின் தந்தை அலி கன்னி வெடித்தாககுதலில் இறந்து விட்டதையும், ஹசனும், அவனது மனைவியும் இறந்து விட்;டதையும் அறிந்து கொள்கின்றான். இவர்களது மகன் அனாதை ஆச்சிரமத்தில் வள்வதையும், ரகீம் கான் கூறுகின்றார். அமீரின் வீட்டை பாதுகாக்கும் பொறுப்பை ரகீம் கான் ஹசனிடம் ஒப்படைந்திருந்தார். தலிபான் வீட்டை தங்களுக்குத் தருமாறு கேட்ட பொழுது ஹசன் மறுத்துவிடுகின்றான். தலிபான் ஹசனையும், மனைவியையும் கொன்றுவிடுகின்றது. ரகீம் கான் மற்றொரு உண்மையையும் கூறுகின்றார். அது ஹசன் அலியின் மகனல்ல. அமீரின் தந்தை தான் ஹசனுக்கும் தந்தை என்பது. அமீர் ஹசனின் அரைத் தம்பி. ஹசனின் மகனை உன்னுடன் கூட்டிச் செல் என ரகீம் கான் கூறுகின்றார். அமீர் தலிபானின் கட்டுப்பாட்டில் உள்ள காப+ல் பகுதிக்குச் செல்கின்றான். அங்குள்ள ஆச்சிரமத்தில் ஹசனின் மகன் சோகரப் இல்லை. “தலிபான் இந்த ஆச்சிரமத்துக்கு உதவிகள் செய்கின்றனஈ அதே சமயம் ஒவ்வொரு தடவையும், அவர்கள் வரும் பொழுது பத்துக் குழந்தைகளை தூக்கிச் சென்று விடுவார்கள். அவர்களை எதிர்க்க முடியாது. அதேசமயம் மிகுதிக் குழந்தைகளுக்கு சாப்பாடும் போடவேண்டும்:” என ஆச்சிரமத்து தலைவன் கூறுகின்றான். அங்கு நடக்கும் உதைபந்தாட்டப் போட்டிக்குச் சென்றால் சோகரப்பை கூட்டிச் சென்றவனை காணலாம் எனக் கூறுகின்றான். உதைப்பந்தாட்டப் போட்டியில் தலிபான் அதிகாரியை சந்திக்கிள்றான். வேறு யாருமல்ல அசீப். அசீப் அமீரை ஓரு குறிப்பிட்ட இடத்திற்கு வரமாறு அழைக்கின்றான். அங்கு சென்ற பொழுது அசீப் இல்லை. பதிலாக வந்தவன் இவனை கேள்விகளால் துழைக்கின்றான். முஸ்லீம் சகோதரர்களை விட்டு விட்டு ஏன் அமெரிக்காவில் வாழ்கின்றாய் எனக் கேட்டு அடித்து துன்புறுத்துகின்றான். அங்கு நின்ற சோகரப் தனது கெற்ற போல்டினால் தலிபான் தலைவரை அடித்து விட்டு அமீருடன் தப்பி விடுகின்றான். அசீப்பின் வீட்டிற்கு அமீர் சென்ற பொழுது அசீப் இப்பொழுது எங்களுடன் இல்லை. கடிதம் ஒன்றறை அமீரிடம் கையளிக்கின்றனர். அது அசீப், அமீருக்கு எழுதிய கடிதம். அமீரும், சோகரப்பும், கலிபோர்னியாவில் தங்னது குடும்பத்துடன் இணைகின்றனர்.
மூன்று கால அரசியல் வரவாற்றினுபடாக இப்படம் நகர்கின்றது. முல்லா,பின்னர் சோவியத் படைகள், இறுதியாக தலிபான். ஓவ்வொரு கால கட்டத்திலும் ஏற்படும் வன்முறைகள் பதிவாக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக தலிபானின் வன்முறைகள் படமாக்கப்ட்டுள்ளன. (Return to taliban. Cross Fire, Karate Tailban, Two Devils, B1 and B52, Convert to Musilm, War in Afagnistan, Terrorists- You have no chance, Death to the West, Taliban Man, Taliban Sniper. Taliban beat woman, To my people)
உதைப்பந்தாட்டப் போட்டி மைதானத்துக்கு வருகின்றனர் தலிபான் படைகள். போட்டி நிறுத்தப்படுகின்றது. அனைவரும் எழுந்து நிற்கின்றனர். ஓர் பெண்ணை நடு மைதானத்தில் நிறுத்துகின்றனர். முகமற்று முகம் மூடி காணப்பாடுகின்றாள். கடவுளின் பெயரால் கல்லால் அவளை அடித்து கொல்லுமாறு உத்தரவிடுகின்றனர். அனைவரும் அவளை நோக்கி கல்வால் அடிக்கின்றனர். இக் காட்சி இப் படத்தில் காட்டப்படுகின்றது. முஸ்லீம் மக்களை அவர்களது உரிமைகளை ஏற்றுக் கொள்ளும் பலர் முஸ்லிம் தீவிரவாதத்தையும், தலிபானின் வன்முறைகளையும் வெறுக்கின்றனர். இந் நிலை தமிழ்த் தேசியத்திலும் உண்டு. நூலாசிரியரின் கருத்துப்படி. இத் தொடர்ச்சியான வன்முறைகள் கலாச்சாரத்தை மாத்திரமல்ல, உற்பத்தியையும் பாதித்து விட்டது. ஓர் விவசாய நாடான ஆப்கானில் விவசாய நிலங்களில் இன்று 5 சத வீதம் நிலங்கள் தான் விவசாயம் செய்யக்கூடியதாகவுள்ளது. ஒரு புறம் தலிபானிலாலும், மறுபுறம் அமெரிக்காவாலும் ஆப்கான் மக்கள் நசுக்கப்படுகின்றனர். இவர்களது வளங்களும் சுரண்டப்ப:டுகின்றன. பெண்கள் மிக மோசமாக நசுக்கப்பட்டு;ள்ளனர். இவர்கள் கல்விகற்ற உரிமையற்றவர்களாக தலிபானால் நசுக்கப்பட்டுள்ளனர். தலிபானுக்கு முற்பட்ட காலங்களில் வைத்தியர்களாக, சட்டத்தரணிகளாக தேசிய உற்பத்தியல் பெரும் பங்காற்றிய பெண்கள் இன்று பேச குரலற்று உள்ளனர்.
இப் படம் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிகக்ப்படவில்லை என்ற விமர்சனம் உண்டு. நூலாவிரியருக்கு பெண்கள் மீது மரியாதை உண்டு. அவர்கள் மீதான வன்முறையை எதிர்க்கின்றார். ஆனால் அவர்கள் உரிமையை சம அந்தஸ்தை இவரும் விழும்பவில்லை எனத் தெரிக்pன்றது. படத்தில் நகரும் பாத்திரங்கள் இதற்கு சான்று. மத்திய வர்க்கத்துக்கு மக்கள் மத்தியில் உள்ள வர்க்க,சாதி வேறுபாடுகள் காட்டப்படுகின்றன. இறக்கும் வரை அமீரின் தந்தை ஹசன் தனது மகன் என்பதனைக் கூறாமலேயே இறந்து விடுகின்றார். தந்தையரின் பொய்களை பதிவாக்கியுள்ளதுடன், பாதிக்கப்பட்ட ஹசன் போன்றோர் இறுதிவரை இவர்களுக்காக வாழும் அவலங்களை படமாக்கியுள்ளது. இக் காட்சிகள் எமது ஊர் சாதி,வர்க்க அவலங்களை நினைவ+ட்டுகின்றன.
நூலாசிரியரின் மனச்சாட்சி மீதான தேடல் விசாரணையானவே நாவலும், படமும் நகருகின்றது. இது நூலாசிரியரின் குற்ற உணர்வின் ஓர் பதிவே இப்படம். இயக்குனரும் ஓர் புலம் பெயர் வாசியே. இதனால் இவரால் நூலாசிரியரின் மன அழுத்தங்களை உணரக்கூடியதாகவுள்ளது. விசாரணைகள் அற்ற யதார்த்தக் காட்சிகளாக படம் நகருகின்றது. பெரும்பாலான காட்சிகள் சிறுவாகளுக்கிடையிலான உணாவு ரீதியான ஒற்றுமையையும், அது எவ்வாறு சமூகரீதியாக பாதிக்கப்படுகின்றது என்பதனையும் பதிவு செய்துள்ளது.
எமது ஊரில் பட்டம் விடுகின்றோம். எமது பட்டங்களின் பின்னாலும் பல கதைகள் உண்டு. இது வரையும் ஒன்றும் வெளிப்படவில்லையே.
சிறுவர்களின் சிறப்பான நடிப்பிற்கு இப்படம் சிறந்த உதாரணம். ஒரு திரைப்படம் சிறுவர்களையும், போரின் அவலங்களையும், சமூக வேறுபாடுகளையும், தலிபானின் வன்முறைகளையும் பதிவு செய்துள்ளது. திரைக்கதை அமைக்கப்பட்ட முறை இப்படத்தை ஓர் வரவாற்று பதிவாகவே, அரசியல் விமாசனமாகவே முன் வைக்காமல், ஓர் இயல்பான படமாக முன் வைத்துள்ளது. இப் படத்தை பார்ப்பதுடன் முடிந்தால் நாவலையும் வாசிக்கவும்.
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! அகிலத்தை மர்மான ஈர்ப்பியல் எப்படி ஆள்கிறது ?(கட்டுரை: 21)
- வெள்ளித்திரை
- சி புஸ்பராஜா இரண்டாவது நினைவு பகிர்தலும் நூல் அறிமுகமும்
- திருச்சியில் பன்னாட்டுக் கருத்தரங்கு (டிசம்பர் 2007)
- நஸீம்
- சம்பந்தமில்லை என்றாலும் – தமிழ்நாடு-நேற்று இன்று நாளை (எடிடர்: என். முருகானந்தம்)
- எல்லாமே சிரிப்புத்தானா?
- வெடிக்காய் வியாபாரம்
- The Kite Runner – பட்டம் ஓட்டி
- காற்றினிலே வரும் கீதங்கள் – 11 சரண் புகுந்திடுவாள் !
- தாகூரின் கீதங்கள் – 22 கவிஞனைத் தேடுகிறாயா ?
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 3
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!
- எழுத்துக்கலை பற்றி இவர்கள் …….16 தொ.மு.சி.ரகுநாதன்
- ஒட்டுக் கேட்க ஆசை
- அகண்ட பஜனை
- அஞ்சலியிலும் சாதி துவேஷமா?
- கிழிபடும் POAக்கள்
- வார்த்தை – ஏப்ரல் 2008 இதழில்…
- பன்முக நோக்கில் திருக்குறள் – தேசியக்கருத்தரங்கம்
- கி ரா ஆவணப்பட வெளியீடு
- தமிழ் பிரவாகம் – இலக்கியப் போட்டி
- Tamilnadu Thiraippada Iyakkam
- காக்கை எச்சமிட்டும் களங்கமடையாத பாரதி சிலை
- அநங்கம் சிற்றிதழ்-மலேசியா
- சகோதரர் வஹ்ஹாபியுடன் நேசகுமார் நடத்திக் கொண்டிருக்கும் விவாதம்
- மொழியால் நிகழும் மகத்துவம் நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை- பவா.செல்லதுரை சிறுகதைகள்
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 3
- சங்க இலக்கியத்தில் மேலாண்மை – முனைவர் ஆ. மணவழகன் நூல் மதிப்புரை
- சுடர்விடும் வரிகள் – பர்த்ருஹரியின் சுபாஷிதம் (தமிழாக்கம் : மதுமிதா)
- சுஜாதாவோடு..,
- சம்பள நாள்
- இரண்டு கடிதங்கள்
- மாட்டுவால்
- வளர்ப்பு
- ஜீன்களைச் சிதைத்துக் கொண்டு மீண்டும் பிற
- போய் வா நண்பனே
- கவிதைகள்
- விபச்சாரியை பெண்ணென்று ஆங்கீகரிப்பதும், சூசானும்*
- ‘தன்னுணர்வு’: பெருஞ்சித்திரனாரின் தமிழாக்கம்
- ஹிந்துக்களின் குரலை எதிரொலிக்கும் மலேசியத் தேர்தல்