The Day After Tomorrow கடல் நீரோட்டம் மெதுவாவதால், பிரிட்டானியா கடும் குளிரை எதிர்நோக்குகிறது

This entry is part [part not set] of 34 in the series 20050206_Issue

ஜோனதன் லீக்


கல்ஃப் ஸ்ட்ரீம் எனப்படும் அட்லாண்டிக் கடல் நீரோட்டம் தனது வேகத்தை இழப்பதை தட்பவெப்ப ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். இந்த நீரோட்டமே ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தை குளிரிலிருந்து காப்பாற்றி உறையாமல் வைத்திருக்கிறது.

கிரீன்லாந்து கடலருகே இருக்கும் அதிகுளிருள்ள கடல்தண்ணீரே இந்த கல்ஃப் ஸ்ட்ரீம் எனப்படும் கடல் நீரோட்டத்துக்கு ஒரு என்ஜின் போல இருந்து அதனை ஓட்ட வைக்கிறது. இந்த அதிகுளிர் கடல் தண்ணீர் உலகளாவிய வெப்பமாதலால் தனது சக்தியை முந்தைய சக்தியில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே உள்ளதாக ஆகியிருக்கிறது என்பதையும் கண்டறிந்துள்ளார்கள்.

global warming என்றழைக்கப்படும் உலகளாவிய வெப்பமாதலால், வெப்பமூட்டப்பட்ட இந்த கடல் தண்ணீர் கல்ஃப் ஸ்ட்ரீமின் வலிமையை குறைத்து மெதுவாக்கும். இது வெப்பமான கடல் தண்ணீரை அட்லாண்டிக் கடலிலிருந்து கொண்டு வருவதைக் குறைக்கும். இது அடுத்த சில வருடங்களுக்குள் மிகப்பெரிய தட்பவெப்ப மாற்றத்தை ஐரோப்பாவிலுஇம் பிரிட்டனிலும் உருவாக்கும் என்றும், இது பிரிட்டன் மற்றும் வடக்கு ஐரோப்பா வெகுவேகமான வெப்ப நிலை குறைந்து அதி குளிர் பிரதேசமாகும் என்றும் கணக்கிடுகிறார்கள்.

இப்படிப்பட்ட ஒரு மாற்றத்தை வெகுகாலமாக அறிவியலாளர்கள் கணித்துக் கூறியிருந்தாலும், சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் இபரிசோதனை மூலம் இந்த மாற்றத்தை அறிவிக்கின்றன.

காம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கடல் இயற்பியல் பேராசிரியராக இருக்கும் பீட்டர் வாதாம்ஸ் அவர்கள் ராயல் நேவி நீர்மூழ்கிக் கப்பல்களில் பயணம் செய்து கிரீஇன்லாந்து கடலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு அளவீடுகளைச் செய்துள்ளார்.

‘மிகச் சமீபகாலம் வரைக்கும், மிகக்குளிர்ந்த அடர்ந்த தண்ணீர் ராட்சச சிம்னிகள் போல கடல் மேல்மட்டத்திலிருந்து கடல் ஆழம் வரைக்கும் தூண்போல சுமார் 3000 மீட்டர்கள் ஆழத்துக்கு இறங்கிக்கொண்டிருப்பதை பார்த்திருக்கிறோம். இப்போது இவைகளைச் சுத்தமாக காணவில்லை ‘ என்று இவர் கூறினார்.

‘இந்த தண்ணீர் இறங்கும்போது இந்த தண்ணீரை நிரப்ப தெற்கிலிருந்து வெப்பமான கடல் தண்ணீர் இங்கு வரும். இதுவே கடல் நீரோட்டத்துக்கு ஆதாரம். இந்த மெக்கானிஸம் வேகம் இழப்பது ஐரோப்பாவுக்கு வரும் வெப்பம் குறைகிறது என்பதையே காட்டுகிறது ‘ என்று கூறினார்.

இப்படிப்பட்ட இஒருஇ மாற்றம், பிரிட்டனுக்கு பலத்த விளைவை உண்டுபண்ணும். சைபீரியா இருக்கும் அதே ரேகையில்தான் பிரிட்டனும் இருக்கிறது. ரேகை மட்டுமே காரணமாக இருந்தால், பிரிட்டன் மிகவும் சைபீரியக் குளிரில் இருக்க வேண்டும். பிரிட்டன் உற்பத்தி செய்யும் மின்சார சக்தியை விட 27,000 மடங்கு வெப்பத்தை கல்ஃப் ஸ்ட்ரீம் என்னும் கடல் நீரோட்டம் கொண்டு வந்து தருகிறது. இதனால், பிரிட்டனின் சராசரி வெப்பம் 5-8 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கிறது.

சைபீரியக்குளிர் பிரிட்டனைத் தாக்கும் வேளை நெருங்குகிறது என்று வாதாம்ஸ் அவர்களும் அவரது தோழமை ஆராய்ச்சியாளர்களும் கணக்கிடுகிறார்கள். கல்ஃப் ஸ்ட்ரீம் நீரோட்டம் வேகம் குறைவது இன்னும் பல பக்க விளைவுகளைக் கொண்டு வரும் என்றும் கருதுகிறார்கள். 2020இல் ஆர்க்டிக் பனி மூடி உருகத்தொடங்கி 2080க்குள் முழுவதும் உருகிவிடும் என்றும் கருதுகிறார்கள். இது ஆர்க்டிக் காட்டு உயிரினங்கள் (போலார் கரடி) போன்றவை அழியவும் காரணமாகும் என்று கருதுகிறார்கள்.

வாதாம் அவர்களது நீர்மூழ்கி கப்பல் பயணங்கள் அவரை வட துருவ பனி மூடிக்குக் கீழாகவும், அங்கிருக்கும் பனியை ஆராயவும் அவரை அனுமதித்தன. கடந்த 20 வருடங்களில் அங்கிருக்கும் பனி 40 சதவீதம் குறைந்து விட்டது என்பதையும் அவர் கண்டறிந்துள்ளார். ஓட்டன் பனித்தரை Odden ice shelf) என்று வழங்கப்படும் விஷயத்தை அவர் ஆராயவும் முனைந்தார். இந்த பனித்தரை ஒவ்வொரு வருட குளிர்காலத்தின் போது கிரீன்லாந்து கடலுக்குள் நீண்டு கோடைக்காலத்தில் பின்னுக்குச் செல்லும்.

இந்த பனித்தரையின் வளர்ச்சியே கடலாழத்துக்குச் செல்லும் குளிர்தண்ணீர் தூண்களுக்கு ஆதாரம். கடல் தண்ணீர் உறைந்து பனித்தரையாக ஆகும்போது பனி ஸ்படிகங்கள் உப்பை வெளித்தள்ளி சுற்றிலிருக்கும் தண்ணீரில் உப்பை அதிகரிக்கின்றன. உப்பு அதிகரித்த கடல் தண்ணீர் அதிக அடர்த்தியாக இருப்பதால், மிகுந்த குளிரிலும் தண்ணீராக இருக்கும் நிலை பெற்று அடர்த்தியான காரணத்தால் கடல் ஆழத்துக்கு இறங்குகிறது.

ஆனால், இந்த ஓடன் பனித்தரை உருவாவதுஇ நின்று விட்டது. 1997இன் இலையுதிர்காலத்தில்தான் அது கடந்த முறை தோன்றியது. ஒவ்வொரு வருடமும் 9இலிருந்து 12 ராட்சச தண்ணீர் தூண்கள் உஇருவாவதை பார்க்கலாம். கடந்த கடல் பயணத்தின் போது இரண்டை மட்டுமே பார்த்தோம். அவையும் வலிமையற்றவையாக இருந்தன. இந்த குளிர் தண்ணீரால் கடல் ஆழத்தை தொடக்கூட முடியவில்லை ‘ என்று வாதாம்ஸ் சொன்னார். இந்த கண்டுபிடிப்புகளை வியன்னாவில் நடந்த ஐரோப்பிய புவியியல் மையத்தில் நடந்த சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த மாற்றங்களின் சரியான விளைவுகளை மிகச்சரியாக கணக்கிட முடியாது. ஏனெனில் இந்த தட்பவெப்ப மாற்றங்கள் மாற பல வருடங்கள் ஆகும். வடக்கு அட்லாண்டிக்கில் இன்னும் இரண்டு இடங்களில் இது போன்ற கீழிறங்கும் தண்ணீர் தூண்கள் இருக்கின்றன. அதனால், நீரோட்டம் தற்காலிகமாக ஓடிக்கொண்டிருக்கும். இங்கு எவ்வாறு தட்பவெப்பம் மாறியிருக்கின்றது என்பது இன்னும் ஆராயப்படவில்லை.

ஆயினும் வாதாம்ஸ் அவர்கள், இந்த விளைவுகள் அதிர்ச்சியடையச்செய்வதாக இருக்கும் என்று கூறுகிறார். ‘The Day After Tomorrow படத்தில், எவ்வாறு இப்படிப்பட்ட குளிர் நீர் தூண்கள் அட்லாண்டிக் கடல் நீரோட்டம் நின்று போனதும் நின்று போகின்றன. அது எவ்வளவு பெரிய விளைவை உருவாக்குகின்றது என்பதை காட்டினார்கள் ‘ என்று கூறுகிறார்.

‘குளிர் நீர் இறங்குவது நின்றுகொண்டிருக்கிறது என்பது உண்மை. படத்தில் காட்டியதை விட மெதுவாகத்தான் இது நிற்கிறது. சில நாட்களில் நடப்பதற்கு பதிலாக சில வருடங்கள் எடுக்கிறது. இது தொடர்ந்தால், வடக்கு ஐரோப்பா வெகு விரைவில் உறைகுளிருக்குள் போகும் ‘ என்று கூறினார்.

ஐரோப்பா உறைவதுஇ ஒரு சாத்தியம். உலகளாவிய வெப்பமாதலால், உலகெங்கும் அதிகரிக்கும் வெப்பம் சற்றுகடத்தப்பட்டு ஐரோப்பா இதே போல நீடிக்கவும் சாத்தியமுண்டு. ஆனால், உலகளாவிய வெப்பமாதலால் மிகவும் அதிகமான வெப்பத்துக்கும் அதிகமான குளிருக்கும் இடையே உலகம் நீடிக்கவும் வாய்ப்புண்டு.

http://www.timesonline.co.uk/article/0,,2087-1602579,00.html

Series Navigation

ஜோனதன் லீக்

ஜோனதன் லீக்