மரம்
வெள்ளைச் சுவற்றில்
கறுப்புக் கோலங்களாய்
அந்த இலையுதிர்ந்த
மரத்தின் நிழல்
அமாவாசை நாளின்
விதவை வானம் போலப்
பொலிவிழந்து நிற்கிறது
அந்த விருட்சம்
இலையுதிர்ந்தாலும்
பொலிவிழந்தாலும்
வேரூன்றி
நாளை வரப்போகும்
சூாிய உதயத்திற்காக
உயிர் பிடித்து
நிற்கிறது-
மழை
அந்த மேகத்தின் கறு மேனியில்
அங்காங்கே அந்திச்சூாியனுடைய
விளையாட்டின் அடையாளமாய்
குங்குமச் சிவப்பு!
கர்ப்பம் தாித்த மேகத்தின்
பயம் கலந்த
நாணமோ ?
சூாியன் மேகத்தினூடே
கர்வமாய்ச் சிாித்தான்.
நிறைமாத கர்ப்பிணியின்
பிரசவவேதனைக்
கூவலாய் இடி!
அந்த மேகத்துக்
கவலைக்கோடுகளாய்
மின்னல்!
சுகமான மழைச் சுமையை
இறக்கிய மேகம் மறைந்தது.
சேய் மழையோ பெய்து மடிந்தது!
கர்ப்பமாக்கிய சூாியன்
மழைமேகத்தின் வரவால்
சீக்கிரமே வீடு திரும்பிய
கணவன் போல்
நன்கு இளைப்பாறித்
தாயும் சேயும் இறந்த
பாதிப்பேதும் இராமல்
மறுநாள் காலை
தன் வீர்யம்
புதுப்பிக்கப் பெற்றவனாய்
புத்துணர்ச்சியுடன்
உஷ்ணத்தை உமிழ்ந்தான்..
கடவுள்
வேறெந்த கடவுளும்
தேவையில்லை எனக்கு
இயற்கை அன்னையின் மடி
எனக்காக விாிந்திருக்கும் வரை
காற்றின் இன்னிசையும்
காலைக் கதிரவனின் மென் கதிர்களும்
அடர்ந்த மரங்களின் தலையசைப்பும்
அலைகடலின் ஓங்காரமும்
மலைகளின் ஒய்யாரமும்
மலர்களின் வண்ணச்சிாிப்பும்
வண்டுகளின் ாீங்காரமும்
குயில்களின் கூவல்களும்
வானத்தின் நீலமும்
மழையின் மெல்லிசையும்
மூங்கில்களின் சலசலப்பும்
அப்பப்பா வேறென்ன வேண்டும் ?
இவற்றில் என்னைத் தொலைத்து
அதில் பிறக்கும் அமைதியில்
என்னை மீட்டுக்கொள்வேன்