திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20061109_Issue

அரசியலும் சமூகமும்

சாணார் அல்லர் சான்றோர்

அ. கணேசன் புதிய பார்வை அக்டோபர் 1-15, 2006 இதழில் வறீதையா கான்ஸ்தந்தின் அவர்களின் "கரையேறுமா மீனவர் சமூகம்?" என்ற கட்டுரை வெளிவந்துள்ளது. மீனவர் சமூகத்தின் முன்னேற்றம் குறித்து அவருக்குள்ள ஆழ்ந்த அக்கறையும், அச்சமுகத்தின்…

இஸ்லாம் – மார்க்ஸீயம் – பின்நவீனத்துவம்

ஹெச்.ஜி.ரசூல் இஸ்லாத்திற்கும் மார்க்சீயத்திற்கும் இடையே உள்ள உறவு முறைப்பற்றியும். இரண்டும் வெவ்வேறு துருவங்கள் என்றும் கம்யூனிசம் அது தோற்றுவிக்கப்பட்ட நாட்டிலேயே தோற்றுவிட்டது என்றும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இதனை நாம் எல்லாவிதமான கொள்கைகளுக்கும் யாந்திரிகமாக…

பேசும் செய்தி – 6

பாஸ்டன் பாலாஜி ------------------------------------------------------------------------- 1. ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்கள் ஓய்வுபெற ஊக்கத்தொகை: ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்கள், அவர்களது பதவிக் காலம் முடிவடைந்த உடன் பதவியில் இருந்து விலகும் அதிபர்களுக்கு, பத்தாண்டு காலத்தில் சுமார் ஐந்து…

இடதுசாரி இந்துத்துவம்

அருணகிரி இன்று வலதுசாரி இடதுசாரி என்ற பதங்கள் இந்திய அளவில் (உலக அளவிலும் கூட) மிகவும் குழப்பமான சொல்லாடல்களாக ஆகி விட்டிருக்கின்றன. சுற்றுச்சூழல் இயக்கம் தொடங்கி, சீனா, வடகொரியா வரை அனைத்து விஷயங்களும் இடதுசாரி…

ஜாகிர் நாயக் என்னும் காலிப்பாத்திரம் – முஸ்லிம் அறிவுஜீவிகளின் தரம் இதுதானா?

எழில்ஜாகிர் நாயக் என்னும் காலிப்பாத்திரம் - முஸ்லிம் அறிவுஜீவிகளின் தரம் இதுதானா? எழில் காலிப்பாத்திரம் ரொம்ப சத்தம் போடும்.. நிறை குடம் ததும்பாது என்பது தமிழ் பழமொழி. வழக்கம்போல யூ ட்யூபில் வீடியோ தேடி…

அறிவிப்புகள்

கனவுகள்..காட்டாறுகள்.. சதாரா மாலதியின் கவிதைகள்

நாகரத்தினம் கிருஷ்ணா படைப்புலகில் பாசாங்குகளை உணமையாகச் சொல்பவர் அநேகம், சதாரா மாலதி உண்மைகளை பாசாங்குகளாகச் சொல்பவர். சதாரா மாலதியின் கவிதைகளில் தோய்ந்து, அவரைச் சரியாய்க் கொலுவில் நிறுத்த லதா ராமகிருஷ்ணனுக்கு மாத்திரமே சாத்தியம், அதை…

ஒரு நாள் முழுதும் இலக்கியம்

அறிவிப்பு கனடா காலம் சஞ்சிகையின் ‘வாழும் தமிழ்’ புத்தகக் கண்காட்சி நவம்பர் 25 சனிக்கிழமை, காலை 9 மணியில் இருந்து இரவு 9மணிவரை நிகழவுள்ளது. ஸ்காபரோ சிவிக் சென்ரரில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான…

வஹி – ஒரு விளக்கம்

ஹமீது ஜா·பர் கடந்த அக்டோபர் திங்கள் 12 தேதி திண்ணையில் திரு H.G.ரசூல் எழுதிய “திருக்குர்ஆனின் புனிதம் சார்ந்த கற்பிதங்கள்” என்ற தலைப்பில் வந்த கட்டுரை, மறு வாரம் நண்பர் இபுனு பஷீரின் மறுப்பும்…

ஹெச்.ஜி.ரசூலின் வார்த்தைகள் வகாபிய போதையை தெளியச் செய்யுமா…

சூபிமுகம்மது 1. 2006 நவம்பர் 3 திண்ணை இதழில் பாபுஜி கூறுகிறார் ''மவ்லீது ஓத வருகிறவர்கள் குர்ஆனை படிக்க வராதிருந்தார்கள்....'' எந்த நேரத்தில், எந்த ஊரில் யார் வரவில்லை என்று கூறுவாரா? தமிழகம் முழுவதும்…

ஸ்ரீ குருஜி நூற்றாண்டு விழா சிந்தனையாளர் அரங்கம்

அறிவிப்பு ஸ்ரீ குருஜி நூற்றாண்டு விழா சிந்தனையாளர் அரங்கம் இடம்: ஜனரஞ்சனி அரங்கம், காந்தி பார்க் எதிர்புறம், கும்பகோணம் நாள்: ஐப்பசி 27 ( 13.11.06), திங்கள் கிழமை நேரம்: சரியாக மாலை 5.30…

இலக்கிய கட்டுரைகள்

மரணத்தை சந்தித்தல்-2 ருரு-ப்ரமத்வரா (ப்ரியம்வதா) மகாபாரதம்-ஸ்ரீ அரவிந்தர்

எஸ்.அரவிந்தன் நீலகண்டன் அடுத்ததாக நாம் காணப்போவது மகாபாரதத்தில் ஆதிபர்வத்தில் காணப்படும் ஒரு தொன்மக்கதை. பிருகு முனிவரின் வழி வந்த பிரமதி ஒரு அப்சர மங்கையை மணந்ததால் பிறந்தவன் ருரு. ஸ்தூலகேச மகரிஷியின் ஆசிரமத்தில் வளர்ந்த…

கோடிட்ட இடங்களை நிரப்புக :

கே ஆர் மணிபழைய கோப்புகள், புத்தகம் - போன்றவற்றை கிண்டிப்பார்ப்பதில் இருக்கும் சுகமே அலாதி. அவை அவ்வப்போது செய்யவேண்டிய நிகழ்வுகளும் கூட, நம்மை இறந்த காலத்துக்கு எடுத்துசென்று அதனோடு ஒட்டிய நிகழ்வுகளை ரீவைண்ட் (மறுஒட்டம்)…

கடித இலக்கியம் – கடிதம் – 31

வே.சபாநாயகம்கடிதம் - 31 மட்றம்பள்ளி 4 2-85 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். வாழ்க்கை வலியது. அது நம் இச்சைக்குகந்த இடங்களுக்குச் சென்று தோயா வண்ணம் நம்மை நன்கு இழுத்துப் பிடித்து விலங்கிட்டு விட்டது.…

நளாயினி தாமரைச் செல்வன்:உயிர்த்தீ

ப.வி.ஸ்ரீரங்கன் "குறுங்கை இரும்புலிக் கோள்வல் ஏற்றை ப+நுதல் இரும்பிடி புலம்பத் தாக்கித் தாழ்நீர் நனந்தலைப் பெருங்களி றடூஉம் கல்லக வெற்பன்" - நற்.36| 1-4 முன்னொரு காலத்தில்...பகிடிக்குப் பாடியவொரு கவிதையில் சுவைப்பதற்குப் பாவையின் அழகே…

மக்கள் புழங்கும் மரபுத் தொடர்கள்

தேவமைந்தன் காலைப் பொழுது. இதமான குளிர்ந்த காற்று வீசுகிறது. நாலாபுறமிருந்தும் பறவைகளின் ஒலிகள். சுறுசுறுப்பான அன்றாட வாழ்வை அவை தொடங்கிவிட்டன. இயல்பான வாழ்க்கை வாழும் உயிர்கள் அவை. அவற்றைப் போன்றே இயற்கையுடன் இயைந்து வாழ்ந்த…

கடித இலக்கியம் – கடிதம் – 29

வே.சபாநாயகம் கடிதம் - 29 நாகராஜம்பட்டி 10-11-81 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். இன்று மாலை சைக்கிளில் புல் கட்டுடன் பள்ளியிலிருந்து திரும்பியதும், வைஷ்ணவி தங்களின் 'ஹெலன் கெல்லர்' நூலுக்குத் தங்கப் பதக்கம் பரிசு…

பெண்ணியாவின்‘என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை!’ – ஒரு கருத்துரை

ஊர்வசி (இலங்கை)இது- கண்ணீரும் கவலையும் கழிந்து புத்துயிர்ப்புடன் வீறு கொண்டெழும் எல்லாப் பெண்களினதும் சார்பான குரலாக ‘என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை!’ சோம்பலுடன் சுருண்டு தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு பூனைக்குட்டியைச் சிலிர்த்துக்…

மாசு களையும் இலக்கியங்கள் அல்லது குறள் இலக்கியங்கள்

முனைவர் மு. பழனியப்பன் இலக்கிய வகை ஒவ்வொன்றுக்கும் அதன் வடிவம் என்பது இன்றியமையாதது. அதுவே ஒரு படைப்பை வெற்றிபெறச் செய்யும் புறக் கருவியாக அமைகின்றது. மேலும் வாசகன் மனதில் ஒரு படைப்பை நீங்கா இடம்…

அண்டம் அளாவிய காதல்

ஜடாயு பூங்கொடியே! பூமி அவன் திருவடி சூரியன், சந்திரன், தீ என்னும் முச்சுடர்கள் முக்கண்கள் அவன் மூச்சு புவனத்தின் சுவாசம் அலைகடல் ஆடை, வானம் திருமுடி ஆகாயம் உடல் வேதம் முகம், திசைகள் தோள்கள்,…

டாக்டர்.கே.எஸ்.சுப்ரமணியன் – தமிழ் இலக்கிய வெளியிலும், சமூக வெளியிலும்

லதா ராமகிருஷ்ணன் இன்று இலக்கிய உலகிலும் சரி, பிறவேறு துறைகளிலும் சரி, மொழிபெயர்ப்புக்கான முக்கியத்துவம் அதிகரித்துக் கொண்டே போகிறது. கணிணி, அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி, தொலைக்காட்சி, கைபேசி என பல வகையிலும் நமது அன்றாட…

கதைகள்

வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 10

நாகரத்தினம் கிருஷ்ணா அத்தியாயம் - 10 அப்பாவால் முடிந்ததெல்லாம் ஆச்சரியப்பட்டுக்கொண்டிருப்பது, அன்றைக்கும் அந்த நிலையில்தானிருந்தார். எல்ஸா எங்கள் வில்லாவுக்கு வந்துபோனதையும் தனது உடைமைகளை கொண்டுசென்றதையும், பணிப்பெண் அப்பாவிடம் கூறினாள். சொன்னவள், எனக்கும் எல்சாவுக்கும் இடையில்…

இரவில் கனவில் வானவில் – 11,12 (மு டி வு ப் ப கு தி)

எஸ். ஷங்கரநாராயணன் 11 டாக்டர்கள் எதிர்பார்த்தபடி மதியத்துக்கு மேல் சரவணப் பெருமாள் மெல்ல வலியை உணர ஆரம்பித்தார். வலி மெல்ல உயிர்க்குலையை அசைத்து அவரை உசுப்பியது. சிறு முனகல்கள், முகச் சுளிப்புகள் என்று உணர்வு…

வித்தியாசம் எதாவது…

குரல்செல்வன் திடீரென வரும் விருந்தினருக்கு வாங்கி வைத்திருங்கள் என்று விளம்பரங்களில் வருமே, அது போல சாமியும் பிறந்த நாள் பரிசாகப் பல விளையாட்டுப் பொருட்களை வாங்கி வைப்பது வழக்கம். சூரனுக்கு அவன் நண்பர்களில் யாருக்காவது…

தேடாதே, கிடைக்கும்

மலர் மன்னன் பூமி பிளந்து சீறிக் கிளம்பி உறைந்துபோன வால் நட்சத்திரம்போல் அகலமாய் நிலைத்து நின்ற கட்டிடம் ஒன்றின் பன்னிரண்டாவது தளத்தில் தமக்கென்றே பிரத்தியேகமாக ஆக்கிரமித்துக்கொண்ட விசாலமான அறையில் கணினியின் முன் அமர்ந்து, சுருதிப்பெட்டி…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:3) சீஸர் பட்டாபிசேகத்தின் முந்தைய நாள்

சி. ஜெயபாரதன், கனடாநேற்றைய தினம் பட்டப் பகலிலே அங்காடிச் சந்தையில் குந்தி அலறிக் கொண்டு ஊளை யிட்டது ஆந்தை! இயற்கைக்குப் புறம்பான நிகழ்ச்சிகள் அவ்விதம் ஒருங்கே கூடி முழங்கினால், மனிதர் கூறக் கூடாது: "அது…

விடுதலைப் பட்டறை

நடராஜன் ஸ்ரீனிவாசன் ================== பேய் பிடித்திருந்த அந்த பத்து பேரின் கூச்சல் அப்படியொன்றும் நாராசமாக இல்லை. ஆனால் ரசிக்கும்படியாகவும் இல்லை. சக்திவேல் சித்தரின் சக்திபீடம் என்றழைக்கப்பட்ட அந்த சிறு கோயிலுக்குச் சற்று தள்ளி இருந்த…

மடியில் நெருப்பு – 11

ஜோதிர்லதா கிரிஜா அந்தச் சதுரமுகக்காரனின் பார்வையில் ஓர் அசாதாரணத்தை சூர்யா உணர்ந்தாள்.பேரழகும், கவர்ச்சியும், வாளிப்பும் நிறைந்த ஓர் இளம் பெண்னை ஓர் ஆண் பார்க்கிற பார்வை மட்டுமே அன்று அது என்று எதனாலோ அவளுக்கு…

பல்லு முளச்சு, அறிவு வந்துருச்சப்பு!

இரா. நாகேஸ்வரன் நாலு கழுத வயசாயிப் போச்சு, இப்பதேன் அறிவு வருதுன்னு சொல்றாய்ங்க.. ம் என்னத்தச் சொல்ல.. மக்கா, மயிலக்காள கணக்காத் துள்ளித் திரிஞ்சு வேலபொழப்பப் பாத்துக்கிறுந்தேன்.. நல்ல சகுனத்துல, அந்த வலி வந்துச்சப்பு!…

கவிதைகள்

பெரியபுராணம்- 111 – 35. ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்

பா.சத்தியமோகன் 3153. மிக்க வளமும் புகழும் உடைய சோழமன்னர்க்குரிய நாட்டிலே நிலவும் பக்கங்களில் பொன் கொழிக்கும் காவிரியின் வடகரையில் கிழக்குத் திசையிலே ஆடும் பூங்கொடிகளும் மாளிகைகளும் நிறைந்து பெருமையும் அழகும் மிகுந்து காணப்படும்நகரம் -…

கீதாஞ்சலி (98) – வானக்கண் நோக்கும் என்னை!

சி. ஜெயபாரதன், கனடா எனக்குக் கிட்டிய தோல்விப் பூமாலைகள், பதக்கங்களைக் கொண்டு ஒப்பனை செய்வேன் உன்னை! தப்பி நழுவ எப்போதும் தைரிய மில்லை தோற்றுப் போன எனக்கு! எனது தன்னலப் பெருமை மதில் மேல்…

பதஞ்சலி சூத்திரங்கள்…..(3)

ருத்ரா (30) வ்யாதி ஸ்த்யான ஸம்சய ப்ரமாத ஆலஸ்யா அவிரதி பிராந்திதர்சன அலப்த்வ பூமிகத்வ அநவஸ்திதத்வானி சித்த வி§க்ஷபா: தே அந்தராயா. ஒன்றியத்துள் ஒன்றவிடாமல் தடுப்பவை எவை எவை? நோய், உள்ளம் தொய்தல், ஐயங்கள்…

நானும் நானும்

பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்) எல்லா இடத்திலும் என்னையே சந்திக்கிறேன் நான் நான் இல்லாத இடத்திலும் நான் இருக்கிறேன் நான் இருக்கும் இடத்திலும் என்னோடு இருப்பது நான்தான் எனக்கும் எனக்கும்தான் எல்லாம் எல்லா இடத்திலும் என்…

புல்லில் உறங்குதடி சிறு வெண்மணிபோல் பனித்துளியே!

கரு.திருவரசு எடுப்பு புல்லில் உறங்குதடி - சிறு வெண்மணிபோல் பனித்துளியே உள்ளம் தெளியுதடி - அந்த ஒரு துளியின் தூய்மையிலே கண்ணிகள் வானத் திறங்கி வந்த - அந்த வண்ணத் துளி போலிருந்தேன் ஞாலப்பெரு…

அணு ! அண்டம் ! சக்தி !

சி. ஜெயபாரதன், கனடா பிரபஞ்சப் பெரு வெடிப்பில் சிதறி ஒரு பொரி உருண்டை பரமாணுக்களாகி, துணுக்காகி அணுவாகி, அணுவுக்குள் அணுவாகித் திரண்டு அண்டமாகி, அண்டத்தில் கண்டமாகித் கண்டத்தில் துண்டமாகிப் பிண்டமாகி, பிண்டத்தில் பின்னமாகிப் பிளந்து,…

முகவரிகள்,….

மாதங்கி பெருவிரைவு ரயிலில் அரை மணி நேரப் பயணம்; பரிச்சயம் செய்துகொண்ட பக்கத்து இருக்கை பெண்மணி வங்கி அலுவலராம்; குழந்தைகள்,புத்தகம் பேச்சு நீண்டது ஷெண்டன்வே பக்கம் வந்தால் வங்கிக்கு வரவேண்டும்விடைபெற்றார். ஆறு மாதம் கழித்து…

டாலியின் வழிந்தோடும் வெளிபோல்… (Holographic Universe)

இரா. நாகேஸ்வரன்டாலியின் வழிந்தோடும் வெளிபோல்... (Holographic Universe) ------------------------------ நேர-இடப் புள்ளிகளில், குறைதூரக் காலங்களில் நிறைவுறா நினைவுகளும் நடந்தப் புள்ளிகளாய் அல்லாது தத்திச் சென்றத் தடங்களாக! தடங்களின் வரலாறு தனித்தனியானபோதும், தொக்கித் தெரிவனத் தெளிவிலா…

நகைச்சுவை

சுண்ணாம்பு

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா "உன்னைப் பிடித்துச் சுண்ணாம்புக் கால்வாயில் போடனுமய்யா !" என்று சொன்னாலும் சொல்வீர்கள். யாரைப் போடவேண்டுமென்று பாருங்கள். மிரண்டவனுக்கு அனைத்தும் பேய் மாதிரி வெள்ளையாக எதைப் பார்த்தாலும் எனக்குப் பேயாக இருக்கின்றது. வெள்ளைக்…