திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20051111_Issue

அரசியலும் சமூகமும்

எனது தொலைக்காட்சி அனுபவங்களும் இன்னும் உணர்வுகளும்

இளைய அப்துல்லாஹ் ஐந்து வருடங்களுக்கு முன்பு. இரண்டாயிரமாம் ஆண்டு ஓக்ஸ்ட்மாதம் ஏழாம் திகதி தீபம் தொலைக்காட்சியில் நேர்முகம் எனக்கு மிகுந்த ஆர்வம், மிகுந்த ஆவல், மிகுந்த மகிழ்ச்சி. ஏற்கனவே லண்டன் போனதில் இருந்து இரண்டு…

தமிழர்தம் மரபுசார் போர்க்கருவிகள்

முனைவர். மு.பழனியப்பன் தமிழர்களின் போர்முறை அறப்போர்முறை ஆகும், அவர்களின் போர்முறை வஞ்சகம், சூழ்ச்சி, அடுத்துக் கெடுத்தல் அற்றதாக நேரானதாக இருந்துள்ளது, காலை முரசறையத் தொடங்கும் அவர்களின் போர் மாலை முரசறைய நிறுத்தப்படுவதாக இருந்துள்ளது, முழுஇரவு…

ஜயலலிதாவின் குவாலிஃபிகேஷன்: சு.ராவுடனான கலந்துரையாடலையொட்டிக் கொஞ்சமாய்ச் சில பழங்கதைகள்

மலர் மன்னன் சுந்தர ராமசாமியுடனான உரையாடலில் எம்ஜிஆர் ஜயலலிதா பற்றிய சு.ரா. மற்றும் சிலரின் கருத்துகளைப் படித்தேன். இது தொடர்பாக எனக்குத் தெரிந்த விவரங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது உபயோகமாயிருக்கக் கூடும். நான் ஜயலலிதாவின் ஆதரவாளன்…

எடின்பரோ குறிப்புகள்

இரா முருகன் மறுபடியும் இங்கிலாந்தில் டேரா போடக் கிளம்பி வந்து ஒரு மாதத்துக்கு மேல் ஓடிவிட்டது. வழக்கம்போல் யார்க்ஷயர் இல்லை இந்த முறை. ஸ்காட்லாந்து. பழைய விக்டோரியா வாசனை யார்க்ஷயரை விடப் தூக்கலாக அடிக்கிற…

அவ்ரங்கசீப்பின் உயில்

நாகூர் ரூமி மெளலவி ஹமீதுத்தீன் என்பவரால் பாரசீக மொழியில் எழுதப்பட்ட சக்கரவர்த்தி அவ்ரங்கசீப்பின் வாழ்க்கை பற்றிய நூலின் 8வது அத்தியாயத்தில் அவரது உயிலில் சொல்லப்பட்ட விஷயங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதிலிருந்து: 1. நான் இந்தியாவின் சக்கரவர்த்தியாக…

ரோஸா லூசி பார்க்ஸ் (1913-2005)

வெங்கட்ராம கிருஷ்ணகுமார் அக்டோபர் மாதம் 30, 2005. அன்று அம்மையார் ரோஸா பார்க்ஸ் அமெரிக்காவில் இயற்கை எய்தினார். தமிழர்களுக்குத் தெரிய வேண்டியவரா இவர் ? ஆம். காந்தியடிகளை எப்படிக் கொண்டாடுகின்றோமோ அப்படி அமெரிக்காவில் கறுப்பின…

இயக்குனர் தியோ வான் கோ: முதலாமாண்டு நினைவு அஞ்சலி

ஆசாரகீனன் இஸ்லாத்தில் காணப்படும் பெண்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் போக்கையும், பால் சமத்துவமின்மையையும் விளக்கும் குறும்படமான Submissionபற்றியும், அதன் காரணமாக அந்தப் படத்தின் இயக்குனர் தியோ வான் கோ (Theo Van Gogh) இஸ்லாமிய…

சு.ரா வுடனான கலந்துரையாடல் மேலும் கிளர்த்தும் என்ணங்கள்

மலர் மன்னன் 'திண்ணை 'யில் சு.ரா வுடனான கலந்துரையாடல் மிகவும் சுவாரசியமாக மட்டுமின்றிப் பல கோணங்களில் சிந்தனையைத் தூண்டுவதாகவும் போய்க்கொண்டிருக்கிறது. அவர் இருக்கும்போதே இது வெளியாகி, அதனைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தால் நான்…

அறிவிப்புகள்

சுந்தர ராமசாமி அஞ்சலிக் கூட்டம்

அறிவிப்பு நாள் 13-11-2005 ஞாயிறு மாலை 6 முதல் 8:30 வரை ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் , எல்லிசு சலை பங்கேற்பு : த ஜெயகாந்தன் , ரவிக்குமார், கனிமொழி சுந்தர ராமசாமி…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அஞ்சலி – ரிச்சர்ட் ஸ்மாலி (1943-2005)

வெங்கட் ரமணன் Buckey Ball, Buckministerfullerene, C60 என்ற புதிய கார்பன் வடிவமைப்பிற்காக 1996ஆம் ஆண்டின் நோபெல் பரிசைப் பெற்ற http://smalley.rice.edu/ பேராசிரியர் ரிச்சர்ட் ஸ்மாலி 28 அக்டோபர் 2005 அன்று காலமானார். டெக்ஸஸ்…

நைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்ற கலைத்துவப் படைப்புகள் -6

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா எத்தனை கோடி இன்பம் வைத்தாய், எங்கள் இறைவா! இறைவா! இறைவா! சித்தினை அசித்துடன் இணைத்தாய், அங்கு சேரும் ஐபூதத்து வியனுல கமைத்தாய்! அத்தனை உலகமும் வர்ணக்…

இலக்கிய கட்டுரைகள்

பெளத்த மீட்டுருவாக்கத்தில் பெரும்பங்காற்றியவர் (க.அயோத்திதாசர் ஆய்வுகள் -கட்டுரைத் தொகுப்பு அறிமுகம் )

பாவண்ணன் ஸ்ரீலஸ்ரீ அயோத்திதாஸ பண்டிதர் என்று பெளத்த தலித்துகளால் மிகுந்த மரியாதையாக விளிக்கப்பட்ட க.அயோத்தி தாசர் மிகச்சிறந்த சிந்தனையாளர் . கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக வெளியுலகம் அறியவராத அவரது எழுத்துகள் அனைத்தும் ஞான.அலாய்சியஸ்…

சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – V

பி.கே. சிவகுமார் சு.ரா.: அவர் எழுத முடியாதுன்னுட்டார். அண்ணாமலை: அதாவது அவருக்கே... சு.ரா.: ஆமாமா. அவருக்கே அந்த block. ஆனா அது ஒரு தப்பான blockதான். அவர் அப்படி நினைச்சுண்டு - தனக்கு எழுத…

கதைகள்

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து) (ஏழாம் காட்சி பாகம்-3)

சி. ஜெயபாரதன், கனடா 'ஒரு மனிதன் உன்னதக் கருத்தை உரைத்தால், அவன் உயர்ந்த மனிதன். ஆனால் ஒரு மாது அவ்விதம் சிறந்ததோர் கருத்தை மொழிந்தால், அவள் பொட்டைநாய் என்று தூற்றப்படுவாள். ' பியடிரிஸ் டேவிஸ்…

கடைசி பிரார்த்தனை

என்.கணேசன் ____ கற்பகம் படுத்த படுக்கையாகி ஒரு வாரமாகி விட்டது. மரணம் நாட்களில் வருமா இல்லை வருடங்களாகுமா என்று சொல்ல முடியாதென டாக்டர்கள் சொல்லி விட்டார்கள். உடம்பில் கண்களை மட்டுமே அவளால் அசைக்க முடிகிறது.…

காப்பாத்துங்க..

ஷைலஜா 'செல்வராணீ எங்க காணோம் ? ' மளைய வேடிக்கைப் பாத்துகிட்டு மல்லிக்கொடி பந்தலு கீள நான் நிக்கறது தெரியல போலருக்கு என் பேரைச் சொல்லிட்டே வீட்டுக்குள்ள நுழையறாரு சின்ன எஜமான் குமாரு.காலேசுல படிக்கறபையன்.…

ஜாதியில்லை, வர்ணமுண்டு

மலர் மன்னன் ( 'அமுத சுரபி ' 2005 தீபாவளி மலரில் வெளிவந்தது) கங்கைக் கரைப் படித்துறையின் கடைசிப் படியில் மார்பளவு நீரில் சிரசு அமிழ மூழ்கியெழுந்தான், சுப்பையா. அப்படி மூழ்கியெழுகிற ஒவ்வொரு முறையும்…

அலைவரிசை

நரேந்திரன் 'செக்கப் பழுத்த சிறுநீரில் சித்தரத்தை ஒக்க வறுத்த ஒரு துவரை - நக்கி நக்கிப் பாலில் கரைத்து நெடி பாராமல் உள்ளருந்த ஓலமிடும் பாங்கே தனி. ' (சொக்கன் தந்தருளிய 'ஜேபர்வாக்கிய 'த்தில்…

கவிதைகள்

கீதாஞ்சலி (48) உனது கூட்டாளி ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா இப்படித்தான் பூரிப்பு உப்பி உள்ளது என்மேல் உனக்கு! இப்படித்தான் கீழிறங்கி ஒப்பி வந்தாய் என்னை நோக்கி! மேலுலகை எல்லாம் ஆளும் தேவனே! நானில்லா திருந்தால் வேறு எவனை நீ…

பெரியபுராணம் – 64 – 30. காரைக்காலம்மையார் புராணம்

பா.சத்தியமோகன் 1716. வளைந்த சங்குகளை கடல் அலைகள் சுமந்து கொண்டு மேல் ஏறி அருகிலுள்ள கழிக் கானல்களில் உலவும் வளம் மிக்க காரைக்கால் என்ற ஊர் மானம் மிக்க தருமத்தின் வழிநின்று பெருவணிகர்குடிகள் நெருங்கி…

ஆண்டவனே கண்ணுறங்கு

கவிஞர் புகாரி யாராரோ யாரெவரோ ஏதேதோ சொன்னாரோ ஆராரோ ஆரிரரோ ஆண்டவனே கண்ணுறங்கு தேரோட்டிப் போனாலும் தேர்மீதே போனாலும் தெருவோரம் கிடந்தாலும் திருவாகி நின்றாலும் யாராரோ யாரெவரோ ஏதேதோ சொல்வாரே ஆராரோ ஆரிரரோ ஆண்டவனே…

சூாியனின் சித்திரம்

த.அகிலன் ஒவ்வொரு பூவிடமும் இருக்கிறது சூாியன் குறித்த சித்திரம். பூக்களைத்தமக்குள் பதுக்கிக்கிடக்கும் மொட்டுக்களின் முதுகுகளில் எழுதப்படுகிறது சூாியனின் தோல்வி. பூக்களின் முகங்களில் ஒட்டிக்கிடக்கிறது சூாியனின் புன்னகை. ஆனாலும் இரவில் நிலவுக்குப்பயந்து அவற்றை உதிர்த்துக்கொண்டு தம்மை…

தீயாக நீ

புதியமாதவி. * நாடக மேடையில் அச்சம் தரும் அய்யனார் வேடத்தில் அரிவாளூடன் ஆடும் உன் வேஷம் எப்போதும் புன்னகைத் தவழும் உன் முகத்துடன் ஓட்டாமலேயே அழிந்துப்போகிறது என் விழித்திரைகளில். * மழையில் ஒளிரும் சிற்பங்கள்…