திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20030717_Issue

அரசியலும் சமூகமும்

கடிதங்கள்

ஜூலை 17, 2003 திண்ணையில் அண்மைக்காலமாக நடந்து வரும் அறிவியல் புனைகதைகள் குறித்த தகவல் பரிமாற்றங்களில் ஏனோ தெரியவில்லை மாலனது பெயர்கள் தவிர்க்கப்படுகின்றன. எண்னிக்கையில் சுஜாதாவிற்கு அடுத்தபடியாக அதிகம் அறிவியற் புனைகதைகள் எழுதியவர் என்ரு…

பசுமை – அறிவியல், அரசியல் மற்றும் மண் சார்ந்த மரபுகள்-1

அரவிந்தன் நீலகண்டன் ஓர் உயிரினமாக இப்புவியில் நாம் வாழவும் நம் எதிர்கால சந்ததிகள் வாழவும் சுற்றுப்புற சூழலியல் ஓர் அறிவியலாக மட்டுமின்றி நம் அன்றாட பிரக்ஞையில் ஓர் பகுதியாகவும், நம் மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்யும்…

எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை

அ.முத்துலிங்கம் I என்னுடைய மகள் ஒரு multitasker. தமிழில் வேண்டுமென்றால் அட்டாவதானக்காரி என்று சொல்லலாம். ஒரு காரியத்தை ஒரு நேரத்தில் செய்வதென்று இல்லை. ஒரு சர்க்கஸ்காரி போல பல காரியங்களை ஒரே சமயத்தில் செய்யவேண்டும்.…

தமிழர் உணவு

தொ பரமசிவம் ஒரு குறிப்பிட்ட மக்கள் சமூகத்தின் அசைவியக்கங்களை உணர அவர்தம் உணவுப் பழக்க வழக்கங்களைக் கூர்ந்து நோக்க வேண்டும். உணவுப் பழக்க வழக்கங்கள் ஒரு சமூகம் வாழும் பருவச் சூழ்நிலை, வாழ் நிலத்தின்…

வரதட்சணை மீது வழக்குப்போர் தொடுத்த புரட்சிப் பெண் நிஷா ஷர்மா!

சி. ஜெயபாரதன், கனடா நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால், செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்! மகாகவி பாரதியார் (புதுமைப் பெண்) [முன்னுரை: பாரத…

பெங்களூர் ரயில் நிலையத்தில் ஒரு அனுபவம்

க. லெனின் குமார் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெங்களூர் இரயில் நிலையத்தில் எனக்கு ஏற்பட்ட ஒரு வித்தியாசமான அனுபவம் இது. சேலம் செல்வதற்காக அந்த சனிக்கிழமை காலை சற்று சீக்கிரமே எழுந்து விட்டேன்.…

குறிப்புகள் சில 17 ஜூலை 2003 (தாஜ்மஹால்-காங்கிரஸ்-இடஒதுக்கீடு-இரண்டு புத்தகங்கள் பற்றி ஒரு குறிப்பு)

K.ரவி ஸ்ரீநிவாஸ் தாஜ் மாஹாலைக் காப்பாற்ற உச்ச நீதிமன்றம் எடுத்துள்ள நடவடிக்கைகள் உதவும்.முன்பும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணைகள் காரணமாகவே மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தாஜ்மஹால் காக்கப்பட்டது. ஆக்ரா மற்றும் அதைச் சுற்றியுள்ள…

பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 10

K.ரவி ஸ்ரீநிவாஸ் காடுகள் குறித்த விவாத்ததில் மூன்று நிலைப்பாடுகள் காணப்பட்டன.காடுகள் அரசின் முழு உடைமை,அவற்றின் மீதான அதன் ஆதிக்கம் முழுமையானது, இதற்கு மாறாக உள்ள சலுகைகள்,விதிமுறைகள், நடைமுறையில் உள்ள உரிமைகள் விலக்கப்பட வேண்டும் என்று…

வாரபலன் ஜூலை 17, 2003 (மாம்பல செய்தித்தாள், சுத்தம் பாக்கில், கவிமணி கீர்த்தனை, ஜெயகாந்தன்)

மத்தளராயன் * பேட்டை செய்தித்தாள்கள், அதுவும் சென்னையில் வெளியாகிறவை படு சுவாரசியமானவை. காலையில் ஐந்து மணிக்கு இருட்டோடு வந்து விழும் இந்துப் பத்திரிகை தில்லி லாகூர் பஸ் சேவை திரும்பத் தொடங்கியதையும், எகனாமிக் டைம்ஸ்…

காமராஜர் 100

ஞாநி காமராஜரை விட நான்கு வயது சின்னவர் என் அப்பா வேம்புசாமி. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் நிருபராக இருந்த அவர் காமராஜருக்கு நெருக்கமாக இருந்தார். அவருடன் பலமுறை தமிழகத்தை சுற்றி வந்து செய்திக் கட்டுரைகள்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியல் மேதைகள் சர் ஜேம்ஸ் சாட்விக் (Sir James Chadwick)

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி அணுவின் உட்கட்டமைப்பு (internal structure of atom) அறிவியல் அறிஞர்களுக்கு எப்போதும் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும், பிரச்சினைகளுக்கு உரியதாகவும் இருந்து வந்துள்ளது. இப் பிரச்சினைகளுக்குத்…

விளாதிமீர் ஐவனோவிச் வெர்னாட்ஸ்கி

அரவிந்தன் நீலகண்டன் அவர் உயிரியியலாளர் அல்ல. ஏறக்குறைய அறுபது வருடங்களுக்கு முன் அவர் இறந்துவிட்டார். அவர் வாழ்ந்த கால கட்டம் குழப்பங்களும், சர்வதேச பிரச்சனைகளும் நிறைந்த காலம். அப்பிரச்சனை சூறாவளிகளின் மையக்கண்ணாகவே அவர் வாழ்ந்த…

பாரதத்தில் முதல் அணுசக்தி பரிமாறிய தாராப்பூர் கொதிநீர் அணுமின் நிலையத்தின் பிரச்சனைகள் [Problems in Tarapur Atomic Power Station

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா முன்னுரை: பம்பாயில் டாடா அடிப்படை ஆய்வுக் கூடத்தை [Tata Institute of Fundamental Research] டாக்டர் ஹோமி பாபா திறந்து வைத்த 1954 ஆம் ஆண்டிலிருந்துதான்,…

இலக்கிய கட்டுரைகள்

சா. கந்தசாமியின் படைப்புகள்

பாரதிராமன். புதுமைப்பித்தன், கல்கி மற்றும் மணிக்கொடி எழுத்தாளர்களின் காலத்துக்குப்பின் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி ஒரு மந்த நிலையை அடைந்திருந்தது.பத்திரிக்கைகள் தொடர்ந்து வெளிவந்துகொண்டுதான் இருந்தன. ஆயினும் வாசகர்களின் ஆர்வத்துக்கும், இலக்கிய தரத்துக்கும் தீனி போடுகின்ற விஷயத்தில்…

‘அனைத்தும் அறிந்த ‘ ஒரு விமர்சகருக்கு ‘ஒன்றுமே அறியாத ‘ ஒரு வாசகனின் பதில்

K.ரவி ஸ்ரீநிவாஸ் ரவி சீனிவாஸின் இலக்கிய உலகங்கள் என்ற தலைப்பில் ஜெயமோகன் எழுதியுள்ள கட்டுரையைப் படித்து விட்டு வாய் விட்டுச் சிரித்தேன். சுஜாதாவும் இலக்கியமும் கட்டுரையின் ஒரு பகுதிதான் வெளியாகியிருக்கிறது, ஒமாலாஸ் சிறுகதை குறித்து…

மானுட உறவின் புதிர்கள் ( திருகோணமலை க.அருள் சுப்பிரமணியனின் ‘அம்மாச்சி ‘ சிறுகதைத் தொகுதி-நூல் அறிமுகம்)

பாவண்ணன் (அம்மாச்சி-சிறுகதைத்தொகுதி. மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண்: 1447, 7, தணிகாசலம் தெரு, தியாகராய நகர், சென்னை - 17. விலை. ரூ66) 'அவர்களுக்கு வயது வந்துவிட்டது ' என்கிற நாவல் மூலம்…

விலைகொடுத்துக் கற்கும் பாடம் (துாமகேதுவின் ‘போஸ்டாபீஸ் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 69)

பாவண்ணன் சிவராம் மிகப்பெரிய கணிப்பொறி வல்லுநன். சிக்கலான எந்தவிதமான ஆணைத்தொடரையும் எளிதாக எழுதிவிடக்கூடியவன். அவனுடைய பேச்சும் பழக்கமும் யாரையும் எளிதில் வசீகரித்துவிடக்கூடியவை. பத்து நிமிடங்கள் அருகில் நின்று பேசினாலேயே பத்தாண்டுகளாகத் தொடர்ந்து பழகிவருவதைப் போன்ற…

சுஜாதாவும் இலக்கியமும்-புனைவுகளுக்கு அப்பால்-2

K.ரவி ஸ்ரீநிவாஸ் சுஜாதா தமிழில் பல பத்திரிகைகளில் எழுதியிருககிறார். ஒரே சமயத்தில் மூன்று அல்லது நான்கு பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார்.ஆனால் அவர் எந்த பத்திரிகையுடனும் குறிப்பாக தொடர்புபடுத்தி பாரக்கபடவில்லை.ஜெயகாந்தன் குமுதம்,விகடன் போன்றவற்றில் எழுதிய போதும் அவரது…

கதைகள்

காலம்

நம்பி வெக்க தாள முடியல. வய வாய்க்கல்லாம் பாளம் பாளமா வெடிச்சி கெடக்கு. இல தழ ஒன்னு அசயல. பய புள்ளங்க இந்த கத்திரி வெய்யில்லயும் கிட்டி வெளயாடுதுவ. சூடு தாங்காத பயலுவ கருவ…

அழகான ராட்சசி

நாகரத்தினம் கிருஷ்ணா ஐஸ்வர்யராய் அழுதால் மனம் பொறுக்குமா ? சல்மான்கானிலிருந்து சன்னாசிக்குப்பம் மாரிமுத்துவரை இன்றைய தேதியில் துடித்து விட மாட்டார்களா ? நானும் சந்திரின் அழுதபோது அப்படித்தான் துடித்தேன். என்னோட சந்திரின் ஐஸ்வர்யராயின் ஐரோப்பியப்…

ஒண்டுக் குடித்தனம்

இரா.முருகன் சரவணன் நடு ராத்திரிக்கு எழுந்தபோது கேத்தி அறையில் ‘பிடி ஜூட்’ என்று அங்கும் இங்கும் மிதந்து கொண்டிருந்தாள். அவளுக்குப் பின்னால் சுமார் முன்னூறு வருஷம் முந்திய இங்கிலாந்து ராணுவ உடை அணிந்த இளைஞன்…

திரிசங்கு

ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர். ‘திரிசங்கு’ன்னா என்ன ? .. .. .. .. பாட்டி தன் வேலைக்கு நடுவிலேயும் வந்து எனக்குச் சாப்பாடு கொடுக்கறாங்க. போதும்னு நான் சொன்னாலும் விடாம நான் மிச்சம் வெச்ச…

விடியும்! நாவல் – (5)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் (5) பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் பாயும் மீனில் படகினைக் கண்டான் எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான் சூடும் சத்தமும் உடலில் பரவும் கிட்டத்தில் விமானத்தைப் பார்த்ததும் அந்த சோர்விலும்…

அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினைந்து

இரா முருகன் 15 ஒரு பெரிய பாடை. மூங்கிலை வளைத்துக் கட்டி முத்துப் பல்லக்கு போல் செய்திருக்கிறது. உள்ளே சாட்டின் விரிப்பு. தலைக்கு வைத்துக் கொள்ள சாட்டின் தலையணை. பாடையைச் சுற்றிலும் மல்லிகையும், துலுக்க…

முக்கோணக் கிளையில் ஆடும் மூன்று கிளிகள்![பெருங் கதை]

சி. ஜெயபாரதன், கனடா [முக்கோணத்தில் ஒன்றுதான் நேர்கோணமாக இருக்க முடியும் என்று சிவாவின் கணக்காசிரியர் பத்தாம் வகுப்பிலே நிரூபித்துக் காட்டினார்! அந்த மெய்யுரை அவனுக்குப் பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் இன்னும் நினைவில் இருக்கிறது.…

ஊர்க்கதை

எஸ். ஷங்கரநாராயணன் படித்த இளைஞர்கள் வேலையில்லாமல் வேலை கிடைக்காமல் வாழ்க்கையில் விரக்தியுற்றுத் திரிகிறது பார்க்கவே சங்கடமாய் இருந்தது. அவர்கள் சிரிப்பைத் தொலைத்தவர்களாய், சிரிக்க ஏங்கியவர்களாய்த் திரிகிறார்கள். திரிந்த பாலாய் அவர்கள் ஆகிவிடக் கூடும் என்று…

ஜெனிபர் லோபஸ்:

கே ஆர் விஜய் அவளோட பேரை ஒழுங்கா சொல்லுடா ! என் காதுல ஏதோ கெட்ட வார்த்தை மாதிரி விழுது ! சரி சரி நீயே சொல்லு ! Helen Hunt. அதை அப்படி…

ஒரு பூட்டுக்குப் பின்னால்….

வேதா அந்த வீட்டுக் கதவில் இன்னும் பூட்டு தொங்கிக்கொண்டு இருந்தது. அது நான் அலுவலகம் செல்லும் வழியில் இருந்ததால், அடிக்கடி கவனிப்பேன். நகரத்தின் நட்ட நடுவே இப்படியொரு வீட்டை வைத்துக்கொண்டு ஒரேயடியாக பூட்டிப்போட எப்படித்தான்…

கலைகள்

ஸுகினி சட்னி (Zucchini chutney)

பி.என். விசாலாட்சி (விசாலம்மாள்) தேவையான பொருட்கள் (Ingredients) ஸுகினி - 2 (நன்குகழுவி துண்டுகளாக செய்தது) சிகப்பு மிளகாய்- 1; பச்சை மிளகாய்-1; உளுத்தம்பருப்பு + துவரம் பருப்பு -1 + 1/2 தே.…

கவிதைகள்

கோபத்துக்கும் கோபம் வரும்

சேவியர் 0 கோபப்படுகிறேன். கோபப்படக் கூடாதென நான் எடுக்கும் அதிகாலை முடிவுகளெல்லாம் கோபத்தீயில் கருகும் போதும், விட்டு விட வேண்டுமென பிடுங்கி எறியும் விரலிடை வெள்ளைச் சாத்தான் பிடிவாத வேதாளமாய் புகைந்து தொலைக்கும் போதும்,…

ஆதங்கம்!

ஜோதிர்லதா கிரிஜா ஆ! தங்கம் விலை குறைந்த தென்று ஆனந்தம் சிலருக்கு - ஆனால், ஆதங்கம் சோறு விலை குறையலையே என்று அன்றாடங்காய்ச்சிகள் எங்களுக்கு. செல்லுலர் தொலைபேசி இனிச் செல்லாத சிற்றூரே இருந்திடாதாம்! நெல்லுவிலை…

கால பூதம்…

ராம்பால் என்னை மண் என நினைத்து பானை செய்ய மனமில்லாது அங்குமிங்கும் உருட்டிக் கொண்டிருக்கிறது பொழுது போகாத குயவன் போலும்.. எல்லா கணங்களிலும் எவரோ எறிய எவரோ அடிக்க இலக்கில்லா பயணித்து எங்கோ விழுகிறேன்…

இருதலைகள்…

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை. இருதலை சகோதரிகளுக்கு விடுதலைக் கொடுக்கப்பட்டது இந்த உலகிலிருந்தே... இருபத்து ஒன்பது ஆண்டுகள் இருதலையாய் வாழ்ந்து இறுதியில் பிரிக்கபட்டு பிணமாக்கப்பட்டவர்கள்... இதனை இயற்கையின் வெற்றி என்பதா ? செயற்கையின் தோல்வி என்பதா ?…

காதல் கடிதம்

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை என்னவளை நான் தென்றலாய் மதித்தேன் அவளோ என்னை தெரு புழுதியாய் நினைத்தாள். காதல் கடிதம் எழுதிக் கொடுத்தேன் கண்டப்படி திட்டினாள் மனம் உடையவில்லை மறுக்கடிதம் எழுதினேன் மற்றொருவளுக்கு.... balageethan@rediffmail.com

கற்பனை

பசுபதி கண்கள் இழந்தபின்பு --மில்டன் . கண்டதே கவிதையென்பர் -நாம் பண்ணும் கற்பனைதான் -- ஆன்மா . பார்க்கும் விழிகளென்பர் (1) 'கற்பனை காட்டுமெழில் -- அதுவே . காலம் கடந்தமெய்யாம் ' --…

அழகு

அனந்த் காட்சி 1. ... மண்மகளின் சிரிப்பொலியும் வான்மகளின் பேரொலியும் ... வண்ணமுறக் கலந்தொலிக்கும் வனமதனில் மண்டிநின்று ... கண்நிறைக்கும் குளிர்தருவும் கவின்மலரும் காண்பவரை ... விண்ணுலகை வெறுத்திடவே வைத்ததெனில் வியப்பில்லை காட்சி 2.…

மரக்கூடு

புஷ்பா கிறிஸ்ரி வானவீதியை வலம் வரும் வண்ணப் பச்சைத் தூரிகைகள். கிளை விரல்களை நிறைத்து நிழல் தந்து பச்சை இலைகள் மேகத்தின் மோகனத்தில் மழை சிரிக்க மேனியெங்கும் செழிப்பு கண்டு விரிக்க வேர்கள் நீட்சி…

மழை

கற்பகம் சோமசுந்தரம். ஏ மழையே! பூமியுடன் வந்து இணைய ஏன் இன்னும் தாமதம் ? வரதட்சணை ஏது தேவையா ? சொல் தருகிறோம்!!!!! skarpag@yahoo.com

உறைவிடம்

வை. ஈ. மணி பிற்பகலில் நித்திரையில் பிறந்த எனது கனவில் கற்பனைக்கும் எட்டாத காட்சி ஒன்று கண்டேன் அற்புதமாய் ஒளித்ததொரு அரிய ஜோதி வானில் சொற்களில்லை வார்த்தைகளில் சொக்கும் அழகைக் கூற (1) கண்விழித்துப்…