GMAIL ஒரு பார்வை.

This entry is part [part not set] of 41 in the series 20040909_Issue

கோவிந்த ராஜன் . K


hotmail.com & yahoo.com இரண்டிலும் மக்கள் பெருவாரியாக தங்களின் மெயில் முகவரியை வைத்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் தான் மெயில் மூலமான தகவல் தொடர்பின் தலையாய ஜாம்பவான்கள்.

சமீபத்தில், GOOGLE நிறுவனத்தார் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள GMail மேல் கூறிய இரண்டிலிருந்தும் வித்தியாசப்படுகிறது.

1. மெயில் பெட்டியின் இருப்பு சக்தி:

பொதுவாக 2MB கொள்ளளவு தரும் மற்ற மெயில் சேவை நிறுவனங்களிடமிருந்து மாறுபட்டு GMAIL தருவது 1GB. இது மிக மிக அதிகம் என்பதால் உங்கள் கடிதங்களை அழிக்க வேண்டியதில்லை

2. விளம்பரம்:

– எந்த விதமான பேனர் விளம்பரமும் கிடையாது. அதே போல் User Name / Password தந்து உள்ளே நுழைந்தவுடன், முதல் பக்கத்திலேயே நாம் கடித தகவல்களைப் பார்க்கலாம்.

– மற்ற படி நமது சம்பாஷனைகளின் அடிப்படையில் அதற்கு சம்பந்தமான தகவல் தொர்புக்கான link-குகள் மெயிலின் உள்ளே இடது பக்கம் வருகிறது.

கம்ப்யூட்டர் உதவியுடன் இது செயல்படுத்தப்படுவதால், நமது சம்பாஷனைகள் ஆராயப்பட்டு அத்தகைய தகவல், ‘தேடுதல் ‘ அடிப்படையில் சேமிக்கப்படுவதில்லை என்று GOOGLE நிறுவனம் உறுதி கூறுகிறது.

Google தேடுதல் பிரிவுக்கும் , GMAIL விளம்பர பிரிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அந்நிறுவனம் தெளிவாக கூறுகிறது.

3. நமக்கும் , இன்னொருத்தருக்கும், ஒரே REPLY – Forward – Reply அடிப்படையில் நடக்கும் கடித போக்குவரத்தை ஒரு தொகுப்பாக வைக்கிறது. இதை சம்பாஷனை ( Conversation ) என்று அழைக்கிறது இந்நிறுவனம்.

இது தான் மிகப் பெரிய விதத்தில், யாஹூ- ஹாட்மெயிலிடமிருந்து ,GMail ஐ வித்தியாசப்படுத்துகிறது.

இந்தத் தொழில்நுட்பம் நமக்கு ஒரு தொகுப்பாக கடித போக்குவரத்தை வைத்துக்கொள்ள உதவுவதுடன், தொடர் பிரிண்ட் எடுக்கவும் செய்கிறது.

4. அப்படி வைக்கப்படும் கடிதத் தொகுப்பில் எந்த ஒரு மெயிலுக்கும் எப்போது வேண்டுமானாலும் பதில் கொடுக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

எந்த ஒரு தொழில்நுட்பத்திலும் மனித சிந்தனையும், படைப்பாற்றலும் கலந்தால் புதிய புதிய கண்டுபிடிப்புகள் சாத்தியம் என்பதற்கு GMAIL ஒரு உதாரணமும் கூட.

5. ஆனால், யாஹூ, ஹாட் மெயில் மாதிரி சாட் வசதி இன்னும் வரவில்லை.

—-

தற்போது பரீட்சார்த்த அடிப்படையில் இயங்குவதால் GMAIL-ல் WWW.Gmail.com சென்று நேரிடையாக SUBSCRIBE செய்ய இயலாது.

அழைப்பின் அடிப்படையில் தான் GMAIL account பெறமுடியும்.

—-

திண்ணை வாசக நண்பர்கள் யாருக்காவது GMail அழைப்பு வேண்டுமானால் எனக்கு ஒரு மெயில் தட்டி விடுங்கள். முதல் 5 நபர்களுக்கு அழைப்பு அனுப்புகிறேன்.

—-

kgovindarajan@GMail.com

—-

Series Navigation