இலங்கை வலைப்பதிவாளர் சந்திப்பு – ஆகஸ்ட் 23

This entry is part of 44 in the series 20090813_Issue

எம்.ரிஷான் ஷெரீப்


அன்புடைய இலங்கை வலைப்பதிவாளர்களுக்கு
நீண்ட நாட்களாக திட்டமிடப்பட்ட இலங்கை வலைப்பதிவாளர்களை ஒன்றிணைக்கும் இந்த நிகழ்வு இந்த மாதம் நடைபெற ஏற்பாடகியுள்ளது.

காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை .
நேரம் : காலை 9 மணி.
இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்.

நோக்கங்கள் :

இலங்கைத் தமிழ் வலைப்பதிவாளர்களிடம் அறிமுகத்தையும் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளுதல்.
புதிய பதிவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குதல்
இலங்கைப் பதிவாளர்களின் திறமைகளை இணையத்தைவிட்டு வெளிக்கொணர முயற்சி செயதல்.
பதிவாளர்களிடையேயான கருத்துரைகள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல்.
பதிவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அல்லது தொழில்நுட்ப சந்தேகங்களுக்கான வழிமுறைகளை ஆராய்தல்
இன்னும் பல‌

வலைப்பதிவாளர்கள், புதிதாக வலைப்பதிபவர்கள், பின்னூட்டமிடுபவர்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

மேலதிக விளக்கங்களுக்கும் தகவல்களுக்கும் பின்வருவோரைத் தொடர்பு கொள்ளவும்.

லோஷன் : arvloshan@gmail.com
புல்லட் : bullettheblogger@gmail.com
வந்தி : vanthidevan@gmail.com

முழுமையான நிகழ்ச்சி நிரல் அடுத்த வாரம் பிரசுரிக்கப்படும்.

இங்ஙனம்
ஏற்பாட்டுக் குழுவினர்.

(வருகை தரவிரும்புபவர்கள் முன்கூட்டியே தங்கள் வருகையை உறுதிப்படுத்தினால் சில ஏற்பாடுகளைச் செய்ய இலகுவாக இருக்கும்.)

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

Series Navigation