வைகைச் செல்வியின் ஆவணப்படம் வெளியீட்டுப் படங்கள்

This entry is part [part not set] of 31 in the series 20090528_Issue

அனுப்பியவர் : சி. ஜெயபாரதன், கனடா



கவிஞர் வைகைச் செல்வியின் தண்ணீர் பற்றிய ஆவணப்படம் மே மாதம் 9ம் தேதி சென்னையில் எழும்பூர் இக்சா மையத்தில் 10 மணிக்கு வெளியிடப்பட்டது. படத்தின் பெயர் : “ஒவ்வொரு சொட்டும்.”

20 நிமிடப் படத்தில் தண்ணீர் எப்படி மாசுபடுகிறது, அதனால் வரும் சுகாதாரக் கேடுகள், அவற்றை எப்படித் தடுக்கலாம், சட்டத்தின்படியான தீர்வுகள், உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரங்கள், மழைநீர்ச் சேகரிப்பு, தண்ணீர் பாதுகாப்பில் தனி மனிதனின் பங்கு ஆகிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. முனைவர் நாகநாதன் ஐ.எப்.எஸ்., பத்திரிகையாளர் மாலன், முனைவர் சாய்பிரசாத் ஆகியோரின் செய்திகளும் உள்ளன.

இப்படத்தின் குறுந்தகடு வெளியீட்டு விழாவை தமிழ் ஸ்டூடியோ.காம் மற்றும் “வானகமே… வையகமே” சுற்றுச்சூழல் பத்திரிகையும் இணைந்து நடத்தின. இயக்குநர் வசந்த் வெளியிட கல்கி ஆசிரியா சீதாரவி முதல் குறுந்தகடைப் பெற்றுக்கொண்டார். அண்ணா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் கல்வி மையத்தின் இயக்குநா முனைவர் நவநீத கோபால கிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்.

இப்படத்தின் எண்ணம், எழுத்து, இயக்கம் வைகைச்செல்வி. ஒளிப்பதிவு மற்றும் தொகுப்பு முறையே மா.மணிவண்ணன், கார்த்திக் சோமசுந்தரம் ஆகியோர்.

குறுந்தகடின் விலை : 100 ரூபாய்
பெற விரும்புவோர் தொடர்பு மின்னஞ்சல் :
josephine_india@hotmail.com

அனுப்பியவர் : சி. ஜெயபாரதன், கனடா

Fig. 1
Vaigai Selvi’s DVD Release Function -1

Fig. 2
Vaigai Selvi’s DVD Release Function -2

Fig. 3
Vaigai Selvi’s DVD Release Function –

Fig. 4
Vaigai Selvi’s DVD Release Function -1

-******************************

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா