தமுஎச சிறுகதைப் போட்டி
உலகளாவிய பங்கேற்பில் சென்னை, மதுரை, புதுகைக்குப் பரிசுகள்!
வெளிநாட்டு எழுத்தாளர்களுக்கு சிறப்புப் பரிசுகள்!
புதுக்கோட்டையில் வாழ்ந்து மறைந்த பிரபல மக்கள் எழுத்தாளர் கந்தர்வன் நினைவாக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் ஆண்டுதோறும் சிறுகதைப் போட்டி நடத்திப் பரிசுகள் வழங்கி வருவது தெரிந்ததே. இரண்டாவது ஆண்டாக நடத்தப்பட்;ட இப்போட்டியில் இந்த ஆண்டு ‘கல்கி’உள்ளிட்ட பல்வேறு அச்சிதழ்களிலும், திண்ணை, பதிவுகள், கீற்று, மென்தமிழ் உள்ளிட்ட இணைய இதழ்களிலும் போட்டி அறிவிப்பு வெளிவந்ததால், உலக அளவிலான பங்கேற்புடன் 450க்கும் மேற்பட்ட சிறுகதைகள் வந்திருந்தன என்று, போட்டி அமைப்பாளரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளருமான கவிஞர் நா.முத்து நிலவன் முன்னிலையில், சங்கத்தின் பொதுச்செயலர் ச.தமிழ்ச்செல்வன் புதுக்கோட்டையில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
சிறுகதைப் போட்டியில் உலகளாவிய பங்கேற்பு!
கடந்த ஆண்டு நடந்த போட்டியில் 382 கதைகள் வந்திருந்தன. பரிசு வழங்கும் விழாவில் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் பரிசுகளை வழங்கிப் பாராட்டிப் பேசினார். இந்த -இரண்டாம்- ஆண்டில் நடத்தப்பட்ட போட்டிக்கு, 450க்கு மேற்பட்ட கதைகள் வந்திருந்தன. உலகளாவிய பங்கேற்பும் கூடுதலாக இருந்தது. தமுஎச.வின் மாநில நிர்வாகிகள் வழிகாட்டுதலில,; பிரபல எழுத்தாளர் உதயசங்கர் தலைமையில் 8பேர் கொண்ட நடுவர்குழுவினர். 15 நாட்களுக்கும் மேலாகக் கதைகளைப் பரிசீலித்து முடிவுகளை தெரிவித்தனர். இம்முடிவுகள், அக்.2ஆம் தேதி மதுரையில் நடந்த மாநிலச் செயற்குழு மற்றும் தமுஎசவின் மாநிலத்தலைவர் பேரா.இரா.கதிரேசன் ஆகியோர் ஒப்புதலுடன் அறிவிக்கப் படுகிறது.
தேர்வு செய்யப் பட்ட கதைகளும் அவற்றை எழுதிய எழுத்தாளர்களும் :
முதல் பரிசு ரூ.5,000 : “வெட்டிவேலை” : ம.தி.முத்துக்குமார், சென்னை19 –
பேசி:9884217447
இரண்டாம் பரிசு ரூ.3,000 : “தாத்தாவின் டைரிக்குறிப்புகள்” ச.சுப்பாராவ்,மதுரை-14–பேசி:9442182038
மூன்றாம் பரிசு ரூ.2,000 : ” பொதுத்தொகுதி”சு.மதியழகன், ஆலங்குடி, புதுகை(மாவ)–பேசி:9842910383
தலா ரூ.250 மதிப்புள்ள பரிசுகளைப்பெறும் இதரகதைகள் விவரம் :
1.’கிளாவரில் தொலைந்த சீட்டுக்கட்டுகள்’–லஷ்மி சரவணக்குமார், சென்னை-19
பேசி: 9790577460
2.’காந்தாரி’- ஆர்.ஸ்ரீதரன், மதுரை-2 — பேசி: 9443060431
3.’கூத்துப் பொட்டல்’ – தீபம் முத்து, திருச்சி — 9788064304
4.’பெயரில்தான் எல்லாமும் இருக்கிறது’ – கலைபாரதி, மன்னார்குடி — பேசி: 9943179909
5.’மழை’ –லெஷ்மி மோகன் சென்னை-28 — பேசி: 9962129333
6.’சீக்கு’ –தாண்டவக்கோன் திருப்பூர் — பேசி: 9360254206
7.’வலை’-பெரணமல்லூர் சேகரன், தி.மலை மாவ. — பேசி: 9442145256
8.’கருவேல முட்கள்’ – வி.ர.வசந்தன், திருச்சி — பேசி: 9894124683
9.’கடைசி நாள் படுக்கை’ – எஸ்.வி.வேணுகோபாலன், சென்னை-24 — பேசி:044-24832664
தமிழ்நாட்டுக்கு வெளியிலிருந்து வந்த கதைகளுக்கான “சிறப்புப் பரிசு” விவரம் :
1.’ஒருவகை உறவு’ – கே.எஸ்.சுதாகர், ஆஸ்திரேலியா,
2.’காணமட்டும் சுகமான கனவுகள்’ – பொன். கருணாகர மூர்த்தி, ஜெர்மனி,
3.’யார் குற்றவாளிகள்?’ – முகம்மட் முனாஸ் பாத்திமா, இலங்கை,
4’அப்பாவின் கண்ணம்மா’ – குரு.அரவிந்தன், கனடா,
5.’நீ நான் நேசம்’ – எம்.ரிஷான் ஷெரீப், கத்தார்,
6.’பாம்புத் தலை’- மைதிலி சம்பத், செகந்திராபாத்.
— ஆக மொத்தம் 18 கதைகள் தேர்வு செய்யப் பெற்றுள்ளன. இவற்றை ஒரு தொகுப்பாக அச்சிட்டு, வரும் திசம்பர் மாதம் சென்னையில் நடக்க உள்ள தமுஎச மாநில மாநாட்டின் போது நூலாக வெளியிட உள்ளதாக நா.முத்து நிலவன் தெரிவித்தார்.
பரிசுத் தொகை ஏற்பு:
மேற்காணும் பரிசுகளுக்கு உரிய தொகையில் ரூ.10,000ஐ திரைப்படப் பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார் அவர்களும், ரூ.5,000ஐ கீரனூரைச் சேர்ந்த பிரபல வழக்குரைஞர் கணபதி சுப்பிரமணியன் அவர்களும் வழங்குகிறார்கள் என்பது குறிப்பிட்டுப் பாராட்டத் தக்க செய்தியாகும்
பிரபஞ்சன், சீமான், நா.முத்துக்குமார், பங்கேற்கும் பரிசளிப்பு விழா!
புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள பரிசளிப்பு விழாவில்; பிரபல எழுத்தாளரும் -சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான பிரபஞ்சன், திரைப்பட இயக்குநர் சீமான், திரைப்படப் பாடல் ஆசிரியர் நா.முத்துக் குமார், கவிஞர் ஆதவன் தீட்சண்யா, கவிஞர் பாலா, ஆகியோருடன் தமுஎச பொதுச்செயலர் ச.தமிழ்ச்செல்வன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
மேற்கண்டவாறு, பரிசளிப்பு விழாவும், மாவட்;ட மாநாடும், ‘புதுகை பூபாளம்’குழுவினர்க்குப் பாராட்டு விழாவும் எதிர்வரும் 17,18ஆம் தேதி(வெள்ளி சனிக்கிழமை)களில் விரிவான அளவில் புதுக்கோட்டையில் நடைபெற உள்ளன. பிரபல எழுத்தாளர் தூத்துக்குடி உதய சங்கர் தலைமையில் எழுத்தாளர்கள் அல்லி உதயன், கடலூர் ஜீவகாருண்யன், கோவை கோதண்டராமன், திருப்பெருங்குன்றம் வெண்புறா, சென்னை மணிநாத், சேலம் ஷேக்அப்துல்லா, விமர்சகர் மு.அசோகன் ஆகிய 8 பேர், சிறந்த கதைகளைத் தேர்வு செய்யும் நடுவர் குழுவில் பணியாற்றியதாக போட்டி ஒருங்கிணைப்பாளர் நா.முத்து நிலவன் தெரிவித்;தார்
துணைச்செயலர் கவிஞர்ஜீவி, மாவட்டத் தலைவர்கள் தங்கம்மூர்த்தி, ரமா.ராமநாதன், பிரகதீஸ்வரன் நீலா, மதி, தனிக்கொடி, பேரா.செல்வராசு,ராசி.பன்னீர்செல்வன், புதுகை சஞ்சீவி முதலான விழாக்;குழுத் தலைவர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை விரிவாகத் திட்டமிட்டுச் செய்து வருகிறார்கள்.
- அக்டோபர் 2008 வார்த்தை இதழில்…
- புறம்போக்கு
- பெண் படைப்புலகம் இன்று- சமகால கருத்தரங்கம்
- வின்சென்டின் அனுபவக் குதிர்
- யமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன அரங்கு :
- தா.இராமலிங்கத்தின் கவிதைகள் காமம், இனவுணர்வு, ஆன்மீகம்-மானிட முழுமையின் செழுமையான வெளிப்பாடு
- புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் உலகளாவிய இலக்கியத் தேடல்
- புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் உலகளாவிய இலக்கியத் தேடல் – 2
- “கந்தர்வன் நினைவு தமுஎச சிறுகதைப் போட்டி-2008” முடிவுகள்:
- சிங்கப்பூர் வீரபத்திரகாளியம்மன் கோவில் எதிரில் தீபாவளி பட்டிமன்றம்
- ’எண்’ மகன். நாடகம்- பரீக்ஷா
- நூல் வெளியீட்டு, அறிமுக விழா
- நேற்றிருந்தோம் 12-10-2008 , மாலை 4:30 க்குத் துவங்க இருக்கும் கூட்டத்திற்கான அழைப்பு:
- பிரதியின் உள்ளர்த்தமும்,வெளியர்த்தமும்: மாற்றிலக்கணத்தின் புரிதலில்
- விட்டுவிடுங்கள்
- தப்பூ சங்கர்களின் தப்பு தாளங்கள்
- காதல் வழிப்போக்கனோடு நடந்துவரும் இயற்கை
- உங்களை என்னைத் திரும்பிப் பார்க்க வைக்கும் கவிதை…
- என்னோடு வா ! பாப்லோ நெருடாவின் கவிதைகள் -7
- தாகூரின் கீதங்கள் – 52 அச்சம் எனக்கில்லை இனி !
- அப்பாவி நாவுகள்
- நறுக் கவிதைகள்
- வரவேற்பின்மை
- பெண்மை விலங்கில்
- சந்திப்புக்கு அடுத்து பிரிவு
- இழப்பு
- கறுத்த நாயும் பாத்றூமும்
- இழப்பு
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்று நாடகம்) காட்சி -1 பாகம் -1
- நம்பிக்கை இயந்திரங்கள்(Belief Engines)
- தமிழ்நாட்டின் சித்தர்களும் சூஃபியர்களும்
- அண்ணா நூற்றாண்டு: ஒரு வரலாற்றுப் பார்வை
- மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 5
- என் கேள்வி இங்கே ! உன் பதில் எங்கே ?
- கடவுளின் காலடிச் சத்தம் – 1
- இந்திய இலக்கியம் – வாழ்க்கைக் கூறுகளும் பண்பும் – (2)
- ஆக்ரமிப்பு…,
- விரிக்கும் நிழலில் தேவதையின் சிறகு
- வேதவனம் விருட்சம் 7
- ரத்தக் கோபம் / கொப்பரைசில் /பிறந்தபோது
- திருமணம்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! இரு கருந்துளைகள் மோதினால் என்ன நேரிடும் ? [கட்டுரை: 43]
- கழுதை ஏர் உழவு!
- எனது வாழ்க்கையின் 3 தவறுகள் ( பிசினஸ்- கிரிக்கெட்-மதம்)The Three mistake of my life – By chetan Bhagat
- விஸ்வரூபம் – அத்தியாயம் பதினொன்று