‘காட்சிப்பிழை’ திரையிதழ் நடத்தும் வெகுமக்கள் சினிமா பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கு

This entry is part [part not set] of 37 in the series 20080925_Issue

வி.எம்.எஸ். சுபகுணராஜன்


அன்புள்ள நண்பர்களுக்கு,
வணக்கம்.
‘காட்சிப்பிழை’ திரையிதழ் நடத்தும் வெகுமக்கள் சினிமா பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கு செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
2008 அக்டோபர் 4 – 5 தேதிகளில், சென்னைப் பல்கலைக்கழகம் மெரினா வளாகம், தமிழ்ப்புலத்தில் உள்ள பவளவிழா அரங்கத்தில் இக்கருத்தரங்கு நடைபெற இருக்கிறது. நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.
தியடோர் பாஸ்கரன், எம்.எஸ்.எஸ்.பாண்டியன், வெங்கடேஷ் சக்கரவர்த்தி, ப்ரீதம் சக்கரவர்த்தி, வீ. அரசு, வ. கீதா, சுந்தர் – காளி, பிரேம், ‘எதிர்வு’ சிவகுமார், சுரேஷ்பால், வேணுமணி, மாலதிமைத்ரி, வளர்மதி, சஃபி, அமுதன், லீனா மணிமேகலை ஆகியோர் இக்கருத்தரங்கில் கட்டுரை வாசிக்கிறார்கள். யார் யார், என்னென்ன தலைப்புகளில் கட்டுரை வாசிக்கிறார்கள் என்ற தகவலை விரைவில் உங்களுக்குத் தெரிவிக்கிறோம்.
ஆர்வலர்கள் குறிப்பிட்ட இரண்டு தினங்களிலும் வேறு வேலைகளை வைத்துக்கொள்ளவேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அனைவரும் வருக.
தகவல்களுக்கு தொடர்பு கொள்க: வி.எம்.எஸ். சுபகுணராஜன்: 94439 87166; பாபு 98427 18676

Series Navigation

வி.எம்.எஸ். சுபகுணராஜன்

வி.எம்.எஸ். சுபகுணராஜன்