புதுக்கவிதை அரங்கம்

This entry is part [part not set] of 37 in the series 20080925_Issue

கெடா மாநில தமிழ் எழுத்தாளர் சங்கம்/ கெடா மாநில கோலா மூடா/யான் மாவட்ட ஒருமைப்பாட்டுக் கழகத்தின் தமிழ்மொழிப் பாடக் குழு


கெடா மாநில தமிழ் எழுத்தாளர் சங்கமும் கெடா மாநில கோலா மூடா/யான் மாவட்ட ஒருமைப்பாட்டுக் கழகத்தின் தமிழ்மொழிப் பாடக் குழுவும் இணைந்து வழங்கும்
“புதுக்கவிதை அரங்கம்”
நாள்: 28-09-2008(ஞாயிற்றுக்கிழமை)
இடம்: லாடாங் பெர்பாடானான் தோட்டத் தமிழ்ப்பள்ளி
நேரம் : மாலை மணி 2.00 முதல் 5.00 வரை

கோலா மூடா மாவட்ட தமிழ் ஆசிரியர்களின் இலக்கிய ஆற்றலை வலுப்படுத்துவதற்காகவும் கெடா மாநில எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து புதுக்கவிதை தொடர்பான கலந்துரையாடலை நடத்துவதற்காகவும் கெடா மாநில தமிழ் எழுத்தாளர் சங்கம் இந்தப் புதுக்கவிதை அரங்கத்தை கோலா மூடா தமிழ்மொழிப் பாடக்குழுவின் ஆதரவுடன் நடத்துகிறது.
முதல் அங்கமாக தேர்ந்தெடுந்த புதுக்கவிதைகளை வாசித்து அதனையொட்டிய கலந்துரையாடல் நடைபெறும். இந்த அங்கத்தை பிரபல மலேசிய எழுத்தாளர் திரு.கோ.புண்ணியவான் அவர்கள் வழிநடத்துவார். அதனை தொடர்ந்து கவிதை படைப்பு அங்கத்தில் ஆசிரியர்களும் எழுத்தாளர்களும் கவிதைகளைப் படைப்பார்கள். மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவரும் நாடறிந்த எழுத்தாளருமான முனைவர் ரெ.கார்த்திகேசு அவர்கள் படைப்பாளர்களின் கவிதைகள் குறித்து ஒரு சிறப்புரையை நிகழ்த்துவார்.
கோலா மூடா/யான் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளின் மேலாளரான திரு.பி.அர்ஜுனன் அவர்களும் கெடா மாநில தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் திரு.பொ.சந்தியாகு அவர்களும் ஆசிரியர்களையும் பொது மக்களையும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிற்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றனர். மேலும் விவரங்களுக்கு கெடா மாநில தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் திரு.கே.பாலமுருகன் அவர்களைத் தொடர்புக் கொள்ளவும்.(016-4806241).
“கவிதை கலையை வளர்ப்போம்”

கே.பாலமுருகன்
செயலாளர்
கெடா மாநில தமிழ் எழுத்தாளர் சங்கம்
சுங்கைப்பட்டாணி

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு