எழுத்துக்கு அடையாளம்

This entry is part [part not set] of 41 in the series 20080117_Issue

உஷாதீபன்



அன்புடையீர், வணக்கம்.
அனைவருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள்.
இந்த நல்ல நாளில் கீழ்க்கண்ட மகிழ்ச்சிகரமான செய்தியை திண்ணை வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். மனித மேன்மைக்கு, இந்த சமுதாயத்தின் நன்னெறிகளுக்கு, ஆதாரமாக எத்தனையோ, மனிதச் சிந்தனையை மேன்மைப்படுத்தும் படைப்புக்களை என்னால் கொடுக்க முடிந்திருக்கிறது என்று கருதும் எனக்கு எழுத்தின் பயன்பாடு என்கிற புள்ளியில் இருந்து பிரியக்கூடிய கிளைகளுக்கு ஆதாரமாக இருக்கும் எண்ணற்ற உயர் சிந்தனையுள்ள வாசக நண்பர்களுக்கு இதைச் சொல்வதில் அளவிலா மகிழ்ச்சி ஏற்படுகிறது.

செய்தி: திருப்பூர் டி.ஆர்.ஜி. அறக்கட்டளை, திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம், திருப்பூர் கலை இலக்கியப் பேரவை இணைந்து நடத்திய இலக்கியப் பேராசான் ஜீவானந்தம், மார்க்சீய மாமேதை பி.இராமமூர்த்தி நூற்றாண்டு இலக்கியப் பரிசுகள் விழாவில் (11.12.2007-ல்) எனது “வாழ்க்கை ஒரு ஜீவநதி” என்ற சிறுகதைத் தொகுப்பு (என்.சி.பி.எச். வெளியீடு) பரிசு பெற்றுள்ளது என்பதைப் பெரு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இதனை வெளியிட்ட நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றி.

இப்புத்தகத்தைப் பரிசுக்குத் தேர்வு செய்த நடுவர் குழுவினருக்கு எனது நன்றி.

விழாவில் இத்தொகுப்பிலுள்ள மூன்று கதைகளைப் பற்றி ரொம்பவும் பொறுப்பான சிந்தனையோடு சிலாகித்துப் பேசிப் பாராட்டிய மேடம் திருமதி திலகவதி, ஐ.பி.எஸ். அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி உரித்தாகுக.
இத்தொகுப்பிற்கான இதரப் பெருமைகளையும் கீழ்க்கண்டவாறு தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
நடப்பு 2007-ம் ஆண்டில் மதுரை லேடி பெருமாட்டி கல்லூரியில் இப்புத்தகம் தமிழ் இலக்கிய மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
பெரியார் ;தொலைநிலைக் கல்வி நிறுவனம், பெரியார் பல்கலைக் கழகம், சேலம்
பல்கலை மாணவி திருமதி க.க.தமிழ்ச்செல்வி, ஆய்வாளர் அவர்களால் எம்.ஃபில் ஆய்வு (2005)
செய்யப்பட்டுள்ளது.
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தொலை நெறித் தொடர் கல்வி இயக்ககம், திருநெல்வேலி-627012 பல்கலை மாணவி ப.சித்ரா அவர்களால் எம்.ஃபில் ஆய்வு (அக்டோபர் 2007) செய்யப்பட்டுள்ளது.
ஒரு படைப்பாளி தன் ஆக்கங்கள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டிருக்கின்றன
என்று மகிழ்ச்சியோடு வாசக மனங்களோடு பகிர்ந்து கொள்வதில என்ன தவறு இருக்க முடியும்?
இதோ தொடர்ந்த செய்திகள்;:
இதுவரை வெளிவந்துள்ள இதர படைப்புக்கள்:
1)உள்ளே வெளியே – மீனாட்சி புத்தக நிலையம், மதுரை-1.
2) பார்வைகள் – ராஜேஸ்வரி பதிப்பகம், தி.நகர், சென்னை-17.
3) நேசம் – -.இதே-
4) சில நெருடல்கள் – நிவேதிதா பதிப்பகம், சென்னை-83.
-2-
5) மழைக்கால மேகங்கள் – குறுநாவல் – நிவேதிதா பதிப்பகம், சென்னை-83.
6) புயலுக்குப் பின்னே அமைதி-குறுநாவல் – வானதி பதிப்பகம், சென்னை-17.
எனது சிறுகதைகள் கீழ்க்கண்டவாறான பரிசுகளையும்; பெற்றுள்ளன என்ற விபரத்தையும் வாசக நண்பர்களுக்கு அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்கி நினைவு சிறுகதைப்போட்டி: சிவகாசி அண்ணாமலை நாடார் நினைவு சிறுகதைப்போட்டி: அமுதசுரபி பொன் விழா சிறுகதைப் போட்டி: குங்குமம் நட்சத்திரச் சிறுகதை: குங்குமம் இளைய தலைமுறைச் சிறுகதை: சதங்கை: கணையாழி: தாய், கல்கி, குங்குமம், விகடன், தினமணிகதிர்,செம்மலர்,தீக்கதிர் வண்ணக் கதிர், தாமரை, வாரமலர், உயிர்எழுத்து, என பல்வேறு இதழ்களில் என்
படைப்புக்கள் வந்துள்ளன. வந்துகொண்டுமிருக்கின்றன.
கடைசியாக வந்த படைப்பு: தினமணிகதிர் 6-1-08 இதழில் வெளி வந்த பெண்ணே நீ என்ற சிறுகதை. இவைகளைத் ;தெரிவிப்பதில் களமாக நின்று உதவும் திண்ணை இதழுக்கு என் உளமார்ந்த நன்றி.
அன்புடன்,
உஷாதீபன்
12.1.2008.


ushadeepan@rediffmail.com

Series Navigation

உஷாதீபன்

உஷாதீபன்