திசைகள் அ.வெற்றிவேல்
சென்ற வாரக் கடிதத்தின் தொடர்ச்சியாக… இக்கடிதம்.
ஜுலை 19 திண்ணை இதழில் திரு.குருராகவேந்திரன் என்ற நண்பர்,”பாபு என்றால் நாற்றம் என்று எங்கு படித்தார் என்று தெரியவில்லை”…என்று எழுதி இருந்தார்.
1995-ல் கவிதா வெளியீடாக வந்துள்ள ஓஷோவின் “என் இளமைக்கால நினைவுகள்”..தமிழாக்கம் பக்கம் 221-222 ல் …
“இப்பொழுது இந்த பாபு(Babu) என்ற வார்த்தையைப்பற்றிச் சொல்லப் போகிறேன்.இந்த வார்த்தை எப்படி வந்தது என்று தெரிந்தால்,நீஙக்ள் ஆச்சர்யப்படுவீர்கள்!நீங்கள் யாரையாவது “பாபு” என்று அழைத்தால் ,அது மிகவும் மரியாதையாக அழைப்பதாக அர்த்தம்.ஆனால்,அந்த வார்த்தையின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா? “நாற்றம் உடையவன்” (one who stinks) என்று அர்த்தம்! இந்த வார்த்தை ஆங்கிலேயர்களால் பெங்காலிகளுக்கு சூட்டப்பட்ட பெயர். ஏனென்றால்,அவர்கள் அருகில் சென்றால் ஒருவித மீன்வாடை அடிக்கும்.மீன் சாப்பிடுவதில் அலாதியான பிரியம் உடையவர்கள் பெங்காலிகள்தான் ——-………ஆங்கிலேயர்கள் முதன்முதலில் கல்கத்தாவில் தான் தன் அலுவல்களைத் தொடங்கினார்கள்.அப்பொழுது அவர்களுக்குக் கீழ் பெங்காலிகள்தான் வேலை பார்த்தார்கள்.அப்பொழுது ஆங்கிலேயர்களால் வெறுப்பாகச் சூட்டப்பட்ட இப்
பெயர் இந்தியாவில் மற்ற இடங்களுக்கும் பரவி,அதற்கு ஒரு அந்தஸ்த்தை உருவாக்கிவிட்டது.ஏனெனில் அந்தப்பெயர்,அரசாங்க உத்தியோகஸ்தனுக்கு மட்டும் உரியதாம். இங்கு இப்படி ஒரு மரியாதையற்ற வார்த்தை, மரியாதையுடையதாக மாறி இருப்பதை கவனியுங்கள்.மனிதனுக்குத் தான் புரியாத தலைவலி என்று இல்லை.வார்த்தைக்கும் உண்டு.இந்த வார்த்தையில் உள்ள “பா”(ba) என்பதற்கு “உடைய”என்றும் “பு”(Bu)என்பதற்கு”நாற்றம்” என்றும் அர்த்தம் பண்ணி “பாபு” என்று சேர்த்தார்கள்.”
எந்த மொழியையும் மட்டம் தட்டவேண்டும் என்பது எனது நோக்கமல்ல என்பதை நண்பர்.குருராகவேந்திரன் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இம்மொழியாக்கத்தினை கொடுத்துள்ளேன்.
தமிழகத்தில் எத்தனை பெற்றோர்கள் தன் ஆசைக் குழந்தைகளுக்கு பாபு என்று பெயரிட்டு அழைத்து வருகிறார்கள்.அதன் உண்மையான அர்த்தம் “நாற்றமுடையவன்” என்று தெரிந்தால் அவர்கள் மனம் என்ன பாடுபடும்? அர்த்தம் தெரியாமல் அழகாக இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் குழந்தைகளுக்கு பெயர் சூட்டலாமா? தமிழர்களிடத்தில் மட்டுமே இப்படி ஒரு பழக்கம்.அதுவும் தாய்த்தமிழில் அழகான் பெயர்கள் இருக்க ..இது தேவையா என்பதே எனது கேள்வி.தமிழ்ச் சமூகத்தின் முன்..தமிழ்ப் பெற்றோர்கள் முன் ..எனது வேண்டுகோளாகவே இதனை வைக்கிறேன்..தங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டி, பெற்றோர்களை அப்பா அம்மா என்று தமிழில் அழைக்க பழக்கப்படுத்துங்கள்.
(இந்த நூலின் தேவையான பக்கங்களை படியெடுத்து மின்னஞ்சல் மூலம் எனக்கு அனுப்பிவைத்த தமிழ் ஆர்வலர் முகம் தெரியா நண்பர் திரு.சௌரிராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.)
அன்புடன்
அ.வெற்றிவேல்
E-mail:vetrivel@nsc-ksa.com
- வாசிப்பின் நீரோட்டம்
- திரு முருகு
- எண் கோணத்தின் நான்கு கோணக் கேள்விகளுக்கு எனது பதில்
- புதியதோர் உலகம்
- தேவமைந்தனின் ”புலமைக் காய்ச்சலும் கவிஞருக்கான உரிமமும்’ கட்டுரை அருமை!
- பிலாக்கோபோபியா
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் இருபத்தொன்று: கார்லோவின் புண்ணியத்தில்…
- ” பாபு என்றால் நாற்றமுடையவன் என்று அர்த்தம்”
- கால நதிக்கரையில்…… – அத்தியாயம் – 17
- காதல் நாற்பது – 32 நேசிப்பதாய் உறுதி அளித்தாய் !
- (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -2 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)
- யாமறிந்த உவமையிலே
- திண்ணை. காம்
- கடிதம்
- சில வரலாற்று நூல்கள் – 3 -மதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ)
- மலேசிய அரசுக்குப் பரிந்து வரவேண்டிய கட்டாயம் என்ன?
- அராஜக சட்டமும், தனி மனித உரிமையும்
- கூர் கலை, இலக்கியத் தொகுப்பு
- கடிதம்
- அலுமினியப்பறவைகள்
- கோவை ஞானி தந்த அங்கீகாரம்!
- திரைவெளி – சுப்ரபாரதிமணியனின் திரைப்படக் கட்டுரைகள்
- பிரமிளின் ‘காலவெளி’: ‘கர்வத்தின் வெளிப்பாட்டில் ஞானத்தின் சீர்குலைவு’!
- சூட்டு யுகப் பிரளயம் ! ஓஸோன் வாயுவால் விளையும் தீங்குகள் -7
- புறாவின் அரசியல்
- கவிதை
- “அவர்கள் காதில் விழவில்லை!”
- வாவிகள் தற்கொலை செய்தன
- மன அதிர்வுகள்
- கைக்குமேல் புள்ளடி
- கௌசல்யா
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 21
- கை நழுவிய உலகம்