மகத்தான பணியில் மக்கள் தொலைக் காட்சி

This entry is part [part not set] of 35 in the series 20070705_Issue

நந்திதா


அன்பார்ந்த ஐயா

வணக்கம்
உயர் திரு வெற்றிவேல் அவர்கள் திண்ணையில் எழுதியுள்ள மகத்தான பணியில் மக்கள் தொலைக் காட்சி என்ற கட்டுரையைப் படித்தேன். இன்புற்றேன். அவருக்கு என் இதய பூர்வமான நன்றிகள். அரை குறை ஆடைகளுடன் ஆட்டமில்லாமல், அபத்தமான நகைச் சுவை காட்சிகள் இல்லாமல் ஏன் திரைப் படம் சம்பந்தமான எந்த ஒரு தொடர்புமின்றி தொலைக் காட்சி நிறுவனத்தை நடத்துவது மிகக் கடினம். மக்களை நேர் வழியில் கொண்டு செல்ல தமிழகத்தில் எந்த ஒரு தொலைக் காட்சியும் எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரியது. தமிழை வாழ்விக்கிறேன் என்று தமிழால் வாழ்கின்றவர்கள் கோடிப் பேர். ஆனால் மக்கள் தொலைக் காட்சி அந்தப் பாவத்தைச் செய்வதில்லை.,
தமிழை வளர்க்க அது மேற்கொண்ட முயற்சிகள்
1. சொல் விளையாட்டு
2. தமிழ் பேசு தங்கக் காசு
3.தமிழ்க் கூடல்
4.அகமும் புறமும். இன்னும் பல
பேராசிரியர் திரு நன்னன் அவர்களுக்குத் தமிழ் கூறும் நல்லுலகு மிகவும் கடமைப் பட்டுள்ளது. இளந்தலைமுறையினர் சிந்தையில் கொள்ள வேண்டிய ஒன்று.
மற்றும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் (நீதியின் குரல் உள்பட) கலந்து கொள்கின்ற நபர்கள் தவறி ஆங்கில வார்த்தைகளைப் பேசினால் கனிவான குரலில் தக்க தமிழ் வார்த்தைகளை எடுத்துக் கொடுப்பது மக்கள் தொலைக் காட்சியின் சிறப்பு, இதில் திரு பாசுகரன் பணி மிகச் சிறப்பானது.

குற்றங்காணுவது என் இயல்பல்ல. ஆயினும் சமூகச் சிந்தனையின் காரணமாக ஒரு சிறு விஷயத்தை இங்கு குறிப்பிட விழைகின்றேன். குடிப்பதனால் விளையும் கெடுதல்களை மக்கள் தொலைக் காட்சி நன்கு விளக்குகின்றது, ஆனால் மக்களால் ஆர்வமுடன் காணப் பெறும் ஒரு தொடரான ஆட்டோ சங்கரில் அநேகமாக ஒவ்வொரு காட்சியிலும் குடிப்பதாகக் காட்சி வருகின்றது, குடி குடியைக் கெடுக்கும், குடிப்பது நாட்டைக் கெடுக்கும் என்ற சொற்றொடர் நகரும் குறிப்பாகக் (SCROLLING)கொடுத்திருக்கலாம்.

வளர்க அவர் தம் தொண்டு.
உலகத் தமிழர்கள் ஆர்வம் கொண்டு வளர்க்க வேண்டிய ஒரு தொலைக் காட்சி மக்கள் தொலைக் காட்சி (ஏன் என்னைத் தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும்) இது நம் தொலைக் காட்சி.
அன்புடன்
நந்திதா


nandhithak@yahoo.com

Series Navigation

நந்திதா

நந்திதா