சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகத்தின் 2-ஆம் தேசிய கருத்தரங்க அறிவிப்பு

This entry is part [part not set] of 31 in the series 20070524_Issue

அறிவிப்பு


இன்று(24.05.07) இதழாளர் சி.பா.ஆதித்தனார் 26ஆம் நினைவு நாளின்போது அனைத்திந்திய இதழியல் கழகம் வெளியிட்ட கருத்தரங்க அறிவிப்பு

மக்கள் தொலைக்காட்சியின் பாராட்டினைப் பெற்ற தமிழ்த்திணை இணைய இதழின் சார்பு அமைப்பான சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகத்தின் 2-ஆம் தேசிய கருத்தரங்க அறிவிப்பு முதல் மடல்

பேரன்புடையீர், வணக்கம்.

சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகத்தின் முதல் கருத்தரங்கம் 2007 மார்ச்சு திங்கள் 3ஆம் நாள் திருச்சிராப்பள்ளியில் பாரதிதாசன் பல்கலைக்கழக நல்லாதரவுடன் இனிதே நடந்து முடிந்தது. கருத்தரங்க நிகழ்வில் ஆய்வுக்கோவை நூல், மின்-நூல், இணையப் பதிவேற்றம் ஆகியனவும் நடந்தேறின. இதனைத் தொடர்ந்து இதழியல் கழகத்தின் இரண்டாம் கருத்தரங்க நிகழ்வுகள் 2008 ஜனவரி திங்கள் 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்களில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. நிகழ்விடம் பின்னர் அறிவிக்கப்படும்.

மகாகவி பாரதியாரின் 125ஆம் பிறந்தநாளின் நினைவாக, பெண்விடுதலை சிந்தனையில் தமிழ் இதழ்கள் என்னும் பொருண்மையில் கருத்தரங்கம் நிகழவுள்ளது. கட்டுரைகள் ஏ4 அளவில் 5 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும். கட்டுரைகளை முரசு TSCu_InaiMathi எழுத்துரு அல்லது யூனிக்கோடு எழுத்துருக்களில் 11 புள்ளி அளவில் 1 1/2 வரி இடைவெளியில் அமைக்கவேண்டும். யூனிக்கோடு எழுத்துருவிற்கு தமிழா இணைய தளத்திலும், தமிழ்த்திணை இணைய தளத்திலும், இணைமதி எழுத்துரு வேண்டுவோர் முரசு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது தமிழ்த்திணை அலுவலக முகவரிக்கு எழுதி எழுத்துருவைப் பெற்றுக்கொள்ளலாம். கட்டுரைகளை இணைப்பு கோப்பாக info@tamilthinai.com,tamilthinai@gmail.com மின்னஞ்சல் முகவரியில் அனுப்பி வைக்கலாம். மேற்கண்ட எழுத்துருவில் கட்டுரைகளை அமைக்க இயலாதவர்கள் கட்டுரைகளைத் தெளிவாக எழுதி அனுப்பினால் போதுமானது. வேறு எழுத்துருக்களில் கட்டுரைகளை அமைக்கவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். கட்டுரையாக்க மேற்பார்வையாளர்களாக மகாகவி பாரதியாரின் பேத்தி முனைவர் விஜயபாரதியும் பெண்ணிய களப்பணியாளர் முனைவர் அரங்க.மல்லிகாவும் இருந்திட ஒப்புதல் தந்துள்ளார்கள் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

கருத்தரங்கப் பேராளர்கள் தொகை ரூ.400/-, ஆய்வாளர்களுக்கு ரூ.300/- வெளிநாட்டவர்களுக்கு 25 அமெரிக்க டாலர்கள். பேராளர்கள் தொகையைத் தமிழ்த்திணை, இந்தியன் வங்கி (ஏவிசி கல்லூரி விரிவு கிளை) கணக்கு எண் : 497781951 -இல் அந்தந்த ஊர் இந்தியன் வங்கி கிளைகளில் செலுத்தி, விவரங்களை அனைத்தையும் கட்டுரையுடன் இணைக்க வேண்டுகிறோம். வங்கி சேவை இல்லாதவர்கள் தொகையை மணியார்டர் மூலம் அனுப்பி, தகவல் இடத்தில் பெயர் மற்றும் முகவரியைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டுகிறோம்.(வங்கி வரவோலை எடுப்பதில் தரகு தொகை அதிகம் என்பதால் வரவோலையைத் தவிர்க்க வேண்டுகிறோம்)

கட்டுரைகளை அனுப்பி வைக்கவேண்டிய கடைசி நாள் : 30 செப்டம்பர் 2007

கட்டுரை மற்றும் மணியார்டர் அனுப்ப வேண்டிய முகவரி :

முனைவர் தி.நெடுஞ்செழியன், தலைவர், சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம், 92, வெள்ளாந் தெரு, மயிலாடுதுறை – 609 001.

கருத்தரங்க அமைப்புக் குழு
முனைவர் கு.அண்ணாதுரை(நெறியாளர்),முனைவர்தி.நெடுஞ்செழியன்(தலைவர்), சீரிதழாளர்திருச்சிமா.சரவணன்(செயலர்), பேரா.இளையராஜா(பொருளாளர்), முனைவர் மு. அருணாசலம்(ஒருங்கிணைப்பாளர்,முனைவர் கா.வாசுதேவன், இதழாளர் தி.அன்பழகன் (துணைத் தலைவர்கள்), பேரா.வே.கண்ணையன், முனைவர் உ.பிரபாகரன்(துணைச்செயலர்கள்), பொறி.ச.குணசேகரன்(இணைய தொழில்நுட்ப ஆலோசகர்),பொறி.அ.முருகசுவாமிநாதன்(இணைய வடிவமைப்பாளர்)
கட்டுரையாக்க மேற்பார்வையாளர்கள்
முனைவர் விஜயபாரதி – பேரா.பி.கே.சுந்தரராஜன், முனைவர் முனைவர் அரங்க.மல்லிகா


Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு