ரெ.கார்த்திகேசுவின் புதிய நாவல் “சூதாட்டம் ஆடும் காலம்” தலை நகரிலும் பினாங்கிலும் வெளியீடு

This entry is part [part not set] of 35 in the series 20070308_Issue

அறிவிப்பு


ஆசியான் கவிஞர் சிங்கை க.து.மு.இக்பால் சிறப்புரை ஆற்றுகிறார்.

டாக்டர் ரெ. கார்த்திகேசு எழுதியுள்ள “சூதாட்டம் ஆடும் காலம்” நாவல் குவால லும்பூரில் வெளியீடு காணுகிறது. நிகழ்வு மார்ச் 10ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு தலைநகர் கிராண்ட் பசிஃபிக் ஹோட்டலில் (ம இ கா தலைமயகக் கட்டடத்திற்கு எதிரில்) தொடங்கும். நிகழ்ச்சிக்கு மலேசிய வானொலி தமிழ்ப் பகுதியின் முன்னாள் தலைவரும் மக்கள் ஓசை நாளிதழ் வாரியத் தலைவருமான திரு இரா. பாலகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். முன்னாள் துணை அமைச்சர் டத்தோ சி.சுப்பிரமணியம் நூலை வெளியிடுகிறார். முதல் பிரதியை Technip Coflexip Asia-Pacific நிறுவனத்தின் மேலாளர் திரு சிவகுமார் நாகலிங்கம் பெற்றுக் கொள்ளுவார்.

“சூதாட்டம் ஆடும் காலம்” நாவலை மலாயாப் பல்கலைக் கழக இணைப் பேராசிரியர் டாக்டர் முல்லை இராமையா அறிமுகப்படுத்துவார். பிற்பகுதியில் நடைபெறும் கருத்தரங்கில் ஆசியான் விருது பெற்ற சிங்கப்பூரின் மூத்த கவிஞர் திரு க.து.முகமது இக்பால் “என் பார்வையில் ரெ.கா.வின் படைப்புகள்” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுவார். தொடர்ந்து “ரெ.கா.வின் நாவல்கள்: ஓர் ஆய்வு” என்னும் தலைப்பில் மலாயாப் பல்கலைக் கழக முதுகலை ஆய்வு மாணவர் திரு த. குமாரசாமி உரையாற்றுவார். நிகழ்ச்சியை மின்னல் எஃப் எம் தயாரிப்பாளர் எம்.ஜெயபாலன் வழிநடத்துவார்.

பினாங்கு நிகழ்ச்சி:

பினாங்கில் இந்நூலின் வெளியீடு மார்ச் 17 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு, பினாங்கு சாலையில் உள்ள கொன்டினெண்டல் ஹோட்டல் மாநாட்டு அறையில் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்குப் பினாங்கு இந்து சங்கத்தின் முன்னாள் தலைவரும், பினாங்கு இராம கிருஷ்ணா ஆசிரமத்தின் துணைத் தலைவருமான வழக்கறிஞர் டத்தோ சுப. அண்ணாமலை தலைமை தாங்குகிறார். பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் மாண்பு மிகு பி.கே.சுப்பையா நூல்களை வெளியிடுகிறார். முதல் நூலினைப் பினாங்குத் தொழிலதிபர் திரு. மரியதாஸ் பெற்றுக் கொள்ளுவார்.

“சூதாட்டம் ஆடும் காலம்” நாவலை டாக்டர் ஜெயஸ்ரீ ஸ்ரீநிவாசன் அறிமுகப் படுத்துவார். மலாயாப் பல்கலைக் கழக முதுகலை ஆய்வு மாணவர் திரு த. குமாரசாமி “மலேசியாத் தமிழ் நாவல்கள்” என்ற தலைப்பில் உரையாற்றுவார். நிகழ்ச்சியை குமாரி செ.செல்வமலர் வழிநடத்துவார்.

இலக்கிய ஆர்வலர்கள் நிகழ்வில் கலந்து சிறப்பிக்கக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.


karthi@streamyx.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு