கடிதம் செப்டம்பர் 9,2004 – இந்து சமுதாயத்தை இழிவுபடுத்தும் கருணாநிதி

This entry is part [part not set] of 41 in the series 20040909_Issue

மா. இரவிசங்கர்


திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் கருணாநிதி அவர்களுக்கு இந்து சமுதாயத்தை பற்றி இழிவாய் பேசுவது வாடிக்கையாகிவிட்டது. பகவத் கீதை என்பது இந்துக்களின் புனித நூலாக கருதப்படுகிறது. இந் நிலையில் இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் கீதையை பற்றி குறை கூறுவது ஒரு அரசியல் தலைவனுக்கு அழகல்ல. அவருக்கு கடவுள் மேல் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு மதத்தை சார்ந்தவர்களின் மனதை புண்படுத்தாமல் இருக்க தெரியவில்லை. கீதையைப் பற்றி மட்டும் குறை பேசும் இவர் கொஞ்சம் குர்ரான், பைபிள் பற்றி பேச துணிவில்லாதது ஏனோ ? பிற சமுதாய மக்களை சந்தோசப்படுத்த இவர் இந்து மதத்தை கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார். இவரின் இந்த பேச்சு இந்து சமுதாயத்தினரிடயே எழுச்சியை ஏற்படுத்தி கலவரம் உண்டாக்க வழி வகுக்கும் என்பதில் ஐய்யமில்லை. இவரின் பேச்சு இந்து முன்னனி அமைப்பினருக்கும், R.S.S அமைப்பினருக்கும் மக்கள் மனதை மாற்றி அமைக்க உதவும் வரப்பிரசாதமாகும். எந்த மதம் சிறந்தது என்பதை விட எல்லா மதத்தினரையும் ஒருங்கிணைத்து செயல்படுவதே கலைஞருக்கு நல்லது. மு.க. ஸ்டாலினையும், தயாநிதி மாறனையும் கோவிலுக்கு அனுப்பிவிட்டு இவர் நாத்திகம் பேசுவது வேடிக்கைதான். ஒரு வேளை இவருக்கு பதிலாக அவர்கள் பரிகாரம் செய்கிறார்களோ என்னவோ ? இந்து மதத்தை குறை சொன்னாலும் இவரின் கட்சிக்கான வாக்குகள் சிதறப்போவதில்லை என்ற நினைப்பில் பேசிக்கொண்டிருக்கிறார். இந்துக்களுக்குள்ளே இ ?லாமியர்களைப் போலவும், கிருஸ்துவர்களைப் போலவும் ஒற்றுமையில்லாததை இவருக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறார். இதே முதல்வர் ஜெயலலிதா குர்ரானையும், பைபிளையும் இவரைப் போல் குறைத்து பேசியிருந்தால் நிச்சயமாய் கலைஞர் தலைமையில் ஒரு பெரிய ஆர்ப்பாட்டமே நடத்தியிருப்பார். இவரின் வாழ்க்கை நெறி முறைகளே தவறாக இருக்கும் பட்சத்தில் இவரால் எப்படி பஞ்சபாண்டவர்களை பற்றி பேச முடிகிறது ? இந்துவாய் பிறந்ததற்காக வேதனைப்படுகிறேன் என்று சொல்லும் இவர் வேறு மதத்திற்கு தன்னை மாற்றிக் கொள்ளாதது ஏன் ? உண்மையில் இவர் இந்துவாய் பிறந்ததற்கு எல்லா இந்துக்களும் அல்லவா வேதனைப்பட வேண்டும் ? மனித உணர்வுகளை மதிக்க தெரியாத இவரால் எப்படி கடவுள் இல்லை என வேசம் போட முடிகிறது ? ஒவ்வொறு முறை தேர்தல் வரும் போது இந்து சமுதாயத்தைப்பற்றிய இவரின் தவறான கருத்துக்களை மக்களின் மனதில் திணிக்க போராடதது ஏனோ ? இவரின் நாகரிகமற்ற இந்த பேச்சுகளால் இந்து மக்களுக்கோர் ஒற்றுமையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது. மத சார்பற்ற கூட்டணி என சொல்லும் காங்கிரஸ், மதிமுக, பாமக, கம்யூனிஸ்டுகள் இந்த பிரச்சனையில் வாய் மூடிக்கிடப்பது மக்களை ஏமாற்றும் செயல். பிற மதத்தினரின் மனதை புண்படுத்தாமல் இருப்பதே எல்லோரின் நோக்கமாக இருக்க வேண்டும். இதைப் போன்ற போலி அரசியல்வாதிகளின் முகத்திரையை மக்கள் கிழித்தெறிய வேண்டும்.

மா. இரவிசங்கர்

ravi_sankar99@hotmail.com

Series Navigation

மா. இரவிசங்கர்

மா. இரவிசங்கர்