வீர சாவர்க்கர் குறித்து ஒரு இடதுசாரி சிந்தனையாளரின்எதிர்வினை (ப்ரண்ட்லைன் பத்திரிகையில் (ஆகஸ்ட்-3 – 16, 2002) வெளியான கடிதம்)

This entry is part [part not set] of 41 in the series 20040909_Issue

P.அனந்த கிருஷ்ணன்


நான் இந்துத்வத்தின் ஆதரவாளன் அல்ல. அந்தமானின் செல்லுலார் சிறை ஒரு புனித பூமி என்பதிலும் அது அங்கு சிறை வைக்கப்பட்ட அனைத்து புரட்சியாளர்களின் நினைவையும் பாராட்டும் வகையில் அமைக்கப்பட வேண்டும் சாவர்க்கரது நினைவை மட்டுமல்ல என்பதில் எனக்கு உடன்பாடே. ஆனால் மற்ற புரட்சியாளர்களின் நினைவை போற்ற சாவர்க்கரை குறை கூற வேண்டும் என்பதல்ல. சாவர்க்கருக்கு 50 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது. அதில் 16 வருடங்களை அவர் செல்லுலார் சிறையில் கழித்தார். என் தகவல் சரியென்றால் மற்றும் 10 வருடங்கள் ரத்னகிரியில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அவரிடம் பல குறைகள் உண்டு. ஆனால் கோழைத்தனம் அவற்றில் ஒன்றல்ல. அத்தகையதொருத் தன்மையின் ஒரு கீற்று அவரிடம் தென்பட்டிருந்தால் கூட பிரிட்டிஷ்காரர்கள் அவரை 26 வருடங்கள் காவலில் வைத்திருந்திருக்க மாட்டார்கள். கான் அப்துல் காபர் கானைக்காட்டிலும் வேறெருவரும் இத்தனை வருடங்கள் சிறையில் இருந்திருக்க முடியாது. மேலும் செல்லுலார் சிறைகளை ஒப்பிடுகையில் காந்தியும் நேருவும் அனுபவித்த சிறைவாசங்கள் சுகவாச ஸ்தலங்கள். எனவே சாவர்க்கர் சில அணுக்கமான வேண்டுகோள்களை பிரிட்டிஷாருக்கு முன் வைத்தார் என்றால் அவை அவரது சூழலின் நியாயத்திலிருந்து காணப்பட வேண்டியவை. லிங்லித்தோ பிரபுவிடம் சாவர்க்கர் இந்துத்வமும் பிரிட்டனும் நண்பர்களாக இருக்க முடியுமெனக் கூறியதும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. 1939 ஆம் ஆண்டின் அக்டோபர் இரண்டாம் உலகப்போரின் இரண்டாவது மாதம். இத்தகைய நட்பு முறை விளக்கங்கள் தலைவர்களிடையே வேகமாக பறந்து கொண்டிருந்த காலம். உதாரணமாக நேரு இதே பிரபுவுக்கு எழுதினார்: ‘ பிரிட்டனுக்கும் இந்தியாவிற்குமான பிணக்கு முடிவுக்கு வரவேண்டும். இரு நாடுகளும் பரஸ்பரம் உதவ வேண்டும். ‘ நேரு மேலும் கூறுகிறார், ‘ தங்களை இரண்டாம் முறையாக சந்திக்க வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் நான் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வேன். பிரிட்டிஷ் வைசிராயின் தனிச்செயலர் ‘காந்திக்கும் பிரிட்டிஷ் அரசருக்கும் இடையே உள்ள பெரும் உள்ளார்ந்த புரிதல் என்றென்றும் மாறாது ‘ எனக் கூறினார். எனில் காந்தியும் நேருவும் பிரிட்டிஷ் ஆதரவாளர்கள் எனலாமா ? இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து கிடைப்பதை ஏற்றதால் சாவர்க்கர் மட்டும் பிரிட்டிஷ் ஆதரவாளராகிவிடுவாரா ? இரு பெரும் உலகப் போர்களுக்கிடையேயானக் காலகட்டங்கள் பெரும் சித்தாந்தங்களின் பரிசோதனைக்கூடமாக அமைந்தன. உதாரணமாக சுபாஷ் போஸ் பின்வரும் இணைப்பினைக் குறித்து பேசுகிறார், ‘ கம்யூனிசத்திற்கும் பாசிசத்திற்குமான எதிர்ப்பியக்கத்திற்கும் அப்பாலாக இரண்டிற்குமே சில பொது தன்மைகள் உள்ளன. அவை இரண்டும் தனிமனிதனுக்கு மேலாக அரசின் மேன்மையை வலியுறுத்துவன. இரண்டுமே பாராளுமன்ற மக்களாட்சியை நிராகரிப்பன. இரண்டுமே கட்சி அரசு ஒருமையை பேணுவன. இரண்டுமே கட்சி சர்வாதிகாரத்துடன், ஒத்துப்போகாத சிறுபான்மையினரை இரக்கமின்றி நசுக்குவன. …இப்பொது பண்புகள் அடிப்படையிலான ஒரு கலப்புருவாக்கம் தேவை…. அது இந்தியாவினால் முடியும் எனக் கருதுகிறேன். இந்தியத் தலைவர்கள் இந்து-முஸ்லீம் பிரச்சனையால் குழம்பியிருந்தனர். சாவர்க்கர் முஸ்லீம்கள் குறித்து கொண்டிருந்த பார்வைக்கு எவ்வித சமாதானமும் சொல்ல முடியாது. ஆனால் இதற்காகவே அவர் ஒதுக்கப்பட வேண்டுமென்றால், சாவர்க்கருடன் டாக்டர். அம்பேத்கரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். முஸ்லீம்களை குறித்து அம்பேத்கர் கூறியதாவது: ‘முஸ்லீம்களுக்கு முக்கியமான அம்சம் மக்களாட்சியல்ல. முஸ்லீம்களுக்கு முக்கியமானது இஸ்லாம். அவர்களது அரசியல் மதக்குருக்களால் ஆனது. அவர்களின் மதநம்பிக்கைகளில் நாம் கவனம் கொள்ளவேண்டிய இஸ்லாமின் கோட்பாடு, இஸ்லாமிய ஆட்சி இல்லாத நாட்டில் இஸ்லாமிய விதிமுறைக்கும் அந்த நாட்டின் சட்டத்திற்கும் பிணக்கு ஏற்படுமேயானால் முந்தையதே பிந்தையதைக் காட்டிலும் முக்கியமானது என்பதுடன், ஒரு முஸ்லீம் இஸ்லாமிய மதவிதிமுறையை அனுசரிக்க வேண்டுமேயல்லாமல், நாட்டின் சட்டத்தை அல்ல, என்பதாகும். மூன்றாவதாக கவனத்திற்கு வருவது அரசியலில் முஸ்லீம்கள் ஏற்றெடுத்துள்ள அணுகுமுறை குண்டர்களின் முறையாகும் (The third thing that is noticeable is the adoption by the Muslims of the gangster ‘s method in politics). அரசியலில் இந்த குண்டத்தன அணுகுமுறைக்கு போதுமான அடையாளங்கள் கலவரங்களாகும். …இதுவரையான கலவரங்களில் இந்துக்களே அடிவாங்கி வந்தனர். முஸ்லீம்கள் ஆக்கிரமிப்புத்தன்மையுடன் இருந்த போது அமைதியாக இருந்தனர். இனிமேலுமல்ல. இந்துக்கள் திரும்பத்தாக்க படித்துக்கொண்டார்கள். இப்போது ஒரு இந்து முஸ்லீமை கத்தியால் குத்தத் தயங்காத நிலைக்கு வந்துவிட்டான். ஆக குண்டர்களின் அரசியல் அதன் எதிர்வினையாக குண்டர்கள் அரசியலை உருவாக்கும் அசிங்கம் ஏற்பட்டுவிட்டது. ‘* சாவர்க்கரை ரத்னகிரியில் சென்று பார்த்தவர்களில் ஒருவர் பகத்சிங். பகத்சிங் சாவர்க்கரின் தேசபக்தியை குறை கூறவில்லை. இந்திய அரசியலைப் பொறுத்த வரை சாவர்க்கரின் சிந்தனைகள் விபரீதமானவை. அவை நிச்சயமாக எதிர்க்கப்பட வேண்டும். ஆனால் அதற்காக அவரது தியாகம் சிறுமைப்படுத்தப் பட வேண்டாம்.

-P.அனந்த கிருஷ்ணன்

புது டெல்லி.

*(இது மட்டுமல்ல வீர சாவர்க்கர் முஸ்லீம்கள் தேசிய நீரோட்டமாக தாம் கருதிய இந்துத்வத்தில் கலாச்சார ரீதியில் இணைவதையே விரும்பினார். ஆனால் அம்பேத்கர் இஸ்லாம் ஆன்மிக ரீதியில் பாரத பண்பாட்டிலிருந்து இணையமுடியாத அளவு பிளவுபட்டது என்றும் எனவே முழுமையாக முஸ்லீம்கள் பாரதத்திலிருந்து வெளியேறுவதே பாரதத்தின் சமுதாய முன்னேற்றத்திற்கு நல்லது என்றும் கருதினார். மேல் கண்ட கடிதத்தின் சில கருத்துகள் எனக்கு ஏற்புடையவை அல்ல. கடிதத்தை மொழிபெயர்த்து வெளியிட அனுமதி வழங்கிய திரு. அனந்த கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி. – மொ.பெ : அரவிந்தன் நீலகண்டன்)

P A கிருஷ்ணனின் முழுக் கடிதம் இது :

I am not an admirer of Hindutva. I agree that the cellular jail at Port Blair is a sacred space that should invoke in us the memory of all the revolutionaries who were incarcerated there and not that of Savarkar alone. This does not mean that one should vilify Savarkar to glorify other patriots, which is what Ravishankar’s supporting article (Aug 2) does.

Savarkar was sentenced to fifty years of imprisonment. He spent sixteen years in the Cellular Jail and, if I am not mistaken, another ten years under house arrest in Ratnagiri. He had many faults. Cowardice was not one of them. Had the British had even a hint that he had this trait they would not have kept him under custody for twenty-six years. Barring perhaps Khan Abdul Ghaffar Khan, no other National leader had spent as many years in jail as Savarkar did. Moreover, compared to the cellular jail the prisons where Gandhi and Nehru spent their days were cozy retreats. Thus if Savarkar had made certain friendly overtures to the British government they should be analyzed in the right perspective and not in the supercilious way Ravishankar does. His logic is no different from that of those who accuse Communists of betraying the Quit India movement.

He derides Savarkar for making a statement during his meeting with Lord Linlinthgow that Hinduism and Great Britain would be friends. This he considers was a volte-face. October 1939 was the second month of the Second World War and such protestations of friendship were flying around thick and fast. Nehru, for instance, wrote to the same Viceroy how much he desired ‘that the long conflict of India and England should be ended and that they should co-operate together.” He added “it was a pleasure to meet you for a second time, and whenever chance offers an opportunity for this again, I shall avail myself of it.” Laithwaite, Viceroy’s private secretary, assured Devdas Gandhi that “nothing will alter the great mutual understanding between H.E and your father.” Had Gandhi and Nehru committed a volte-face ? And how is it that accepting Dominion Status for India makes Savarkar pro-British ?

We must not forget that the inter-war years were the laboratory of grand ideologies. Thus we have Subhas Bose suggesting this blend:

In spite of antithesis between Communism and Fascism, there are certain traits common to both. Both Communism and Fascism believe in the supremacy of the State over the individual. Both denounce parliamentary democracy. Both believe in party rule. Both believe in the dictatorship of the party and in the ruthless suppression of all dissenting minorities. These common traits will form the basis of the new synthesis. It will be India’s task to work out this synthesis.

The Indian leaders were also confounded by the Hindu-Muslim issue. Savarkar’s views on Muslims are of course indefensible. But if he has to be ostracized for this Dr Ambedkar has to accompany him. This is what Dr Ambedkar says about the Muslims:

‘The dominating influence of Muslims is not democracy. The predominant interest of Muslims is Islam, their politics being essentially clerical. ‘

‘Among the tenets one that calls notice is the tenet of Islam which says that in a country which is not under Muslim rule wherever there is conflict between Muslim law and the law of the land, the former must prevail over the latter and a Muslim will be justified in obeying the Muslim law and defying the law of the land. ‘

“The third thing that is noticeable is the adoption by the Muslims of the gangster ‘s method in politics. The riots are a sufficient indication that gangsterism has become a settled part of their strategy in politics. They seem to be consciously and deliberately imitating the Sudeten Germans in the means employed by them against the Czechs. So long as the Muslims were the aggressors, the Hindus were passive, and in the conflict they suffered more than the Muslims did. But this is no longer true. The Hindus have learned to retaliate and no longer feel any compunction in knifing a Musalman. This spirit of retaliation bids fair to produce the ugly spectacle of gangsterism against gangsterism. ‘

How does the author say that Savarkar supported the Holocaust ? According to the Concise Oxford Dictionary the definition of Holocaust is the mass murder of Jews by the Nazis in the years 1939-45. Does Ravishankar possess any evidence that Savarkar supported the Nazi butchery ?

There is no doubt that Savarkar had weird ideas of Indian polity and these ideas are to be stoutly opposed. But to oppose his ideas one need not question his patriotic credentials. Ravishankar speaks of Bhagat Singh’s life. Bhagat Singh it was who brought out the third edition of Savarkar’s book on 1857. And, if I am not wrong, he also went to Ratnagiri to meet Savarkar. He did not have any doubt about Savarkar’s patriotism.

To summarize, the Indian freedom movement was a labyrinth of gigantic proportions. A few, like Gandhi and Nehru, came out of it bloodied and fractured but come out they did. Many floundered and could not find the way out. Savarkar was one of them. That does not make him a stooge of the British.

P.A.KRISHNAN

NEW DELHI

frontline@thehindu.co.in

Series Navigation