ஆசாரகீனன்
தாரிக் அலியின் புத்தகத்தில் ஒரு சிறு பகுதியை மொழி பெயர்த்திருந்தேன். சென்ற இதழில் நாகூர் ரூமி எதிர் வினை எழுப்பினார்.
தாரிக் அலியின் புத்தகத்தை ரூமி வாசித்திருப்பார் என்று தோன்றவில்லை. மேலும், எந்தப் பின்னணியில் அப் புத்தகம் எழுதப்பட்டது என்பது கூட ரூமிக்குத் தெரியும் என்று நான் நம்பவில்லை.
தடித்த எழுத்துகளில் உள்ளவை சென்ற வாரம் திண்ணையில் நாகூர் ரூமி எழுதிய கடிதத்தில் உள்ள சில வரிகள்.
இஸ்லாத்தின் தோற்றம் என்ற ஆசாரகீனனின் தமிழாக்கக் கட்டுரை சில கேள்விகளை எழுப்புகிறது. அவை தாரிக் அலியின் முட்டாள்தனமான அந்த புத்தகத்தின் அத்தியாயம் பற்றியதல்ல.
அது புஷ் கார்ப்பரேஷனின் உலகை ஆளும் வெறியை அம்பலப்படுத்த எழுதப்பட்ட ஒரு புத்தகம். ஆனால், உலகிற்கு இப்போதைய பேராபத்து அமெரிக்க ஏகாதிபத்தியம் மட்டுமா ? இல்லை. தமிழக/இந்திய ‘முற்போக்குகளும் ‘, இதர இடதுசாரிகளும், முஸ்லிம் பஞ்சாங்கங்களும் அந்த ஒரே காரணத்தை மட்டும் காட்டி இந்தியரை மூளைச் சலவை செய்து கொண்டிருக்கிறார்கள். உள்நாட்டுத் தகவல்களை மட்டுமே நம்பியிருக்கும் ‘பாமரர்களை ‘ அதுவும் இந்து, தினமணி, இதர தண்டப் பத்திரிகைகளை மட்டும் படிப்பவர்களுக்கு இப்படி மூளை சலவை செய்யப்படுவதைத் தவிர்க்க வழி இல்லை.
மூளை இருப்பதே ஒரு தொந்தரவு என்று கருதுபவர்கள் ரூமியைப் போல அரைத்த பழைய மாவையே திரும்பத் திரும்ப அரைத்து தோசை போட்டுத் தருபவர்களை நம்பிக் கொண்டிருக்கலாம் தான். அதைக் கழற்றி வைத்து விட்டால் தேவலை என்று நம்புபவர்கள் டிவி தொடர்கள், தினமலர், ராணி, கவிதாசரண்/முரசொலி போன்ற பத்திரிகைகளைப் படித்துப் புல்லரித்துக் கொண்டிருக்கலாம். ஆனால், கேள்வி என்னவென்றால், நாம் கண்ணை மூடிக் கொண்டு நமக்குத் தெரிந்தது தான் உண்மை, மற்றவர் எல்லாம் பொய்யர்கள் என்று நம்பிக் கொண்டிருந்தால் எதிர்காலம் நமக்கு எப்படி அமையும் என்பதுதான். புஷ் & கோ-வின் விபரீத விளையாட்டுகள் உலகுக்கு பெரு நாசத்தைக் கொணர்கின்றன என்றாலும், இன்னொரு புற்று நோய் நம்மைப் பீடித்துக் கொண்டு இருக்கிறது என்பது நமக்கு உடனடியாகத் தெரிய வேண்டி இருக்கிறது.
பாலைவனங்களில் புதைந்து கிடந்து அவ்வப்போது உயிர்த்துப் பெரும் புயலாகப் புறப்பட்டு பல்லாயிரக்கணக்கான ஏக்கர்கள் விளை நிலங்கள், காடுகள், சோலைகள் என்று எந்தப் பாகுபாடும் பாராது ஒரு பச்சை இலையைக் கூட விட்டு வைக்காமல் அனைத்துத் தாவரங்களையும் கபளீகரம் செய்யும் லோகஸ்ட் (Locust) எனப்படும் ஒரு வகை வெட்டுக் கிளியைப் பற்றி பொது அறிவு சற்றாவது உள்ள வாசகர்கள் அறிந்து இருப்பார்கள் . இப்படிப் பட்ட லோகஸ்டுகளின் பெரும் புயல் இந்த மாதம் இப்போதே மாகரப் என்று அழைக்கப்படும் (வடமேற்கு ஆப்பிரிக்கா – மொராக்கோ, அல்ஜீரியா, துனிசியா, லிபியா ஆகிய நாடுகள், மேலும் ஒரு காலகட்டத்தில் ஸ்பெயின்) பகுதியைத் தாக்கவிருக்கிறது. இது ஆஸ்திரேலியாவிலும், சீனாவிலும் (மங்கோலியாவை ஒட்டிய பகுதிகளில்) இதே காலகட்டத்தில் தாக்கவிருக்கிறது. இது தாக்கிய பகுதிகளில் மக்கள் வாழ்க்கை பல ஆண்டுகளுக்குச் சர்வ நாசமாகி விடும். ஏனெனில் ஒரு பெரும் புயல் அல்லது பேரலையாக வந்து போகும் லோகஸ்டுகள், தாவர வகைகளை முற்றிலும் அழிப்பதோடல்லாமல், முட்டையிட்டு தரையில் புதைத்து வைக்கும். சரியான நேரத்தில், சிறிது ஈரப் பசை வந்ததும் அடுத்த தலைமுறை லோகஸ்டுகள் உயிர் பெற்று எழுந்து சுற்றிலும் பல நூறு மைல்கள்/கிலோமீட்டர்கள் பகுதியின் பசுமை வளத்தை அழித்து விடும். இந்த லோகஸ்டுகள் பற்றிய ஒரு பகுதியை விவிலிய நூலிலே (Bible) கூட காணலாம். ஆக லோகஸ்டுகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மனிதரை வருத்தி வருகின்றன.
இவற்றை ஒழிக்க ஏராளமான பணம் மட்டுமல்ல பல வகையான அறிவியல் நிபுணர்களின் உதவியும், பூச்சி கொல்லி மருந்துகளை சரியாகப் பயன்படுத்துவதும், எக்கச் சக்கமான திட்டமிடலும் தேவை. இல்லையெனில் அழிவு – பஞ்சம் பட்டினி, பல்லாயிரம் மக்களின் சாவு எல்லாம் நேரும்.
உலகை அச்சுறுத்தும் புஷ் & கோ ஓர் எரிமலைத் தீ போல என்றால், லோகஸ்டுகளின் புயல் போன்றது வஹாபிசம் என்னும் ஓர் அழிகேடன். இதுவும் பாலைவனத்தில் இருந்து துவங்குவதுதான். லோகஸ்டுகளைப் போல இதற்கும் ஒரு புல் பூண்டு, தாவரம் அதாவது மனித நாகரிகம் பண்பாடு எதுவும் காணக் கூடச் சகியாது. பாரபட்சம் பாராது அழிக்கும் குணம்/பார்வை இதன் மிருக குணம். அதுதான் போர்க் கைதிகளின் தலையை விடியோ காமிராக்களின் முன்னே வெட்டச் சொல்லும் ‘அமைதியே ‘ உருவான நடத்தைக்கு இதன் ஆதரவாளர்களைத் தள்ளுகிறது. புத்தரின் சிலைகளை உடைக்கச் சொல்கிறது. ஷியாக்களின் பள்ளி வாயில்களை வெடி குண்டு வைத்து அதுவும் தொழுகை நேரத்திலேயே தாக்கச் சொல்கிறது.
லோகஸ்டுகளைப் போல இந்தப் பாலைவனத்துக் கொடு நோய் உலகெங்கும் மதப் பள்ளிகளில் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது கடும் வெறுப்பை வளர்க்க முயன்று வெற்றி பெற்று வருகிறது. இதற்கு இருக்கும் மதம்சார் ஆதாரங்கள் என்ன என்று தாரிக் அலி கேள்வி எழுப்புகிறார். இது பஞ்சாங்கங்களுக்குப் பிடிக்க வாய்ப்பில்லைதான்.
இந்த நோய் இந்தியாவில் இல்லை என்று ரூமி நம் கண்ணில் மண்ணைத் தூவப் பெரு முயற்சி செய்கிறார்.
Wahhabi Movement in India By Qeyamuddin Ahmad Hardcover / South Asia Books / October 1994 /
இப்புத்தகம் ஏதோ 1994 இல்தான் வெளி வந்தது என்று கருத வேண்டாம். இதன் முதல் பதிப்பு வந்தது 1966-ல்! அப்போதிலிருந்தே திட்டமிட்டு வெறுப்பை வளர்த்து வரும் வஹாபியரை ரூமி ஏதும் குறை சொல்லி இருக்கிறாரா என்று பார்த்தால் நமக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். இனி வஹாபி இயக்கம் ஒரு சுத்திகரிப்பு இயக்கம், புனிதமானது என்றெல்லாம் இன்னும் கண்ணில் மண் தூவும், இல்லை நம் மூக்கில் குளோரஃபார்மை வைக்கும் திருப்பணியை ரூமி செய்ய முயல மாட்டார் என்று நம்புகிறேன்.
ஏனெனில், இதன் வழி வரும் ஆபத்து முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மட்டும் இல்லை. முஸ்லிம்களுக்குமே தான். சூடானில் இன்று கருப்பின ஆப்பிரிக்க முஸ்லிம்களைக் கொன்று குவிப்பவர்கள் வெறும் அரபு முஸ்லிம்கள் மட்டும் இல்லை. அவர்கள் பின்பற்றும் பாதை என்ன ? தீவிரவாத இஸ்லாமியப் பாதைதான், வேறு என்னவாக இருக்கும் ? பின் லாடனின், தலிபான்களின் பாதை என்ன ? வஹாபி இயக்கம்தான். ரூமிக்கு இவர்கள் எல்லாம் புனிதப் போராளிகளாகத் தெரிய வாய்ப்பு நிறையவே இருக்கிறது. நாளைக்கு அதிகாரம் தன் கையில் கிட்டும் என்ற கனவு எதுவும் அவருக்கு இருக்கலாம். ஒரு வேளை இந்தப் புற்று நோய் ஏற்கனவே ரூமியிம் துலக்கமான அறிவையே கூடப் பற்றி இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அது குறித்து அவருக்குத் தான் என்ன உண்மை என்பது தெரியும். நமக்குத் தெரிய வாய்ப்பு இல்லை.
ஆனால் ஷியாக்கள், இஸ்மாயிலிகள், போஹ்ராக்கள் இன்னும் இஸ்லாத்தின் பிற வகைப் பாதைகளில் பயணிப்பவர்களுக்கு வஹாபி இயக்கத்தின் பரவல் ஒரு நோயாகத்தான் தெரியும். அழிப்பதைத் தன் தலையாய கடனாகக் கருதும் ஒரு நோய்ப்பட்ட மனப் பாங்கு அது என்று அழிக்கப் படவிருக்கும் அவர்களுக்குத் தெரியாமல் வேறு யாருக்குத் தெரியும் ? என்னுடைய குறைப்பட்ட அறிவுச் சேமிப்பின் படி, இஸ்லாத்தில் இன்று உள்ள பல பாதைகளின் பட்டியல் இதோ:
சுன்னிகளில் –
ஹனாஃபி – பரெல்வி, தியோபந்தி;
ஹன்பாலி- வஹாபி;
மாலிகி;
ஷாஃபி;
மேலும் ஷியாக்களில் –
பன்னிருவரில்- இத்னா-அஸ்ஹாரி; உசுலி;அக்பாரி; ஷய்கி;
எழுவரில்- அலவி, போஹ்ரா, ட்ரூஸ்; கோஜா;
ஐவரில்- சையதி, காரிஜித்;
அஹமதியாக்களில் – காத்யானி, மேலும் லாஹூரி என்று பல பாதைகள் உண்டு என்று ஒரு முஸ்லிம் வலை மையம் தெரிவிக்கிறது.
ஆங்கிலத்தில் படிப்பதால் பெயர்களைத் தமிழில் எழுதியது தவறாக இருக்க வாய்ப்புண்டு. அதுவல்ல இங்கு கவனிக்கப் பட வேண்டியது.
இந்தப் பாகுபாடுகளே கிடையாது என்று என்னிடம் அடித்துச் சாதிக்கும் முஸ்லிம்களை நான் சந்தித்திருக்கிறேன்.
முஸ்லிம் அல்லாதவர்கள் முன் முஸ்லிம்கள் நடுவே எந்தப் பாகுபாடும் கிடையாது, அவர்களிடையே கருத்து வேற்றுமைகளே இல்லை, அனைவரும் சர்வ சமம், ஒரே வழிதான் இஸ்லாத்தில் என்றெல்லாம் நிறையக் கரடி விடுவதில் இஸ்லாம் குறித்து விளக்கப் புத்தகம் எழுதும் (தமிழ்) முஸ்லிம்களின் பங்கு மிக அதிகம்.
இப்படி எல்லாம் பொய் சொன்னால்தான் இஸ்லாம் வளரும் அல்லது பிழைத்து இருக்கும் என்று பாமர முஸ்லிம்கள் அபத்தமாக நினைப்பது இல்லை. தமது மதம் குறித்தும் அதன் நன்மை குறித்தும், அதன் வளமை குறித்தும் பெரிதும் சொற்பொழிவு எல்லாம் தேவை என்று அவர்கள் நினைப்பதில்லை. ஓர் எளிய, ஆனால் நல்லொழுக்கம் உள்ள பாதை தமது இஸ்லாம் என்று கருதுவதோடு அவர்கள் நிறுத்திக் கொள்கிறார்கள். உலகை ஆண்டால்தான் தமது மதம் கவுரவப்படும் என்றெல்லாம் அவர்கள் கருதுவதாக நான் நினைக்கவில்லை. அதற்கு வகை தேடுபவர்கள் ரூமி போன்ற அறிவாளர் தளத்தில் உலவும் நபர்கள் தான். பாமரர்கள் போகிற போக்கில் எல்லா வகை முஸ்லிம்களையும் பற்றி யதார்த்தமாகவே பேசுகிறார்கள்.
பொழுது விடிந்தால் ஒரு குண்டு வெடிப்பும், தலை சீவலும், தூக்கு தண்டனையும், கல்லெறிந்து கொல்லுதலும் நிரம்பி வழியும் இஸ்லாமிய நாடுகளில் முஸ்லிம்கள் நடுவே கருத்து வேற்றுமை, பாகுபாடு, சமமின்மை, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், மோசமான மண முறைகள், படிப்பின்மை, பெண்களை அடக்கும் ஆணாதிக்க மனப்பாங்கு, உலகை ஆளும் ஏகாதிபத்திய மனப்பாங்கு, பிற மதத்தினரைப் புழுப் போலக் கருதும் நோக்குகள் ஏதுமே இல்லாத புனிதமானவர்கள்தான் வாழ்கிறார்கள் என்று ஒரு பொய்ப் பிரசாரத்தை உலகிலும், முஸ்லிம் அல்லாதவர்கள் நடுவேயும் பரப்பப் பாமர முஸ்லிம்களுக்குத் தேவையும் இல்லை, நேரமும் இல்லை, அதற்கான முயற்சியும் இல்லை. அவர்கள் தம்மையும், தம் மதத்தையும் நம்புகிறார்கள். அவர்களுக்கு எதை நம்புவது என்று அறிய ரூமி போன்றவரின் சிபாரிசுகள் தேவை என்று எனக்குத் தோன்றவில்லை.
மேற்படி பொய்களைத் திறம்படவே தயாரித்து, இந்தியரிடையேயும், உலகில் மற்ற நாட்டு மக்களிடையேயும் பரப்புகிறவர்கள் பெரும்பாலும் உடலுழைப்பால் தமது கரங்களைக் களங்கப்படுத்தாத புத்தகப் புழு முஸ்லிம்கள். இவர்களுக்கு மார்க்க அறிஞர்கள் என்று வேறு சால்வை எல்லாம் போர்த்திப் புகழ் மாலை சூட்டி பீடத்தில் அமர்த்தி விடுகிறார்கள். இப்படிப் பட்ட ஒரு மார்க்க அறிஞர் முல்லா ஒமார் (தாலிபான் புகழ்).
பல முஸ்லிம் நாடுகள் குறித்துப் பல பத்தாண்டுகள் ஆய்வுகள் நடத்திப் புகழ் பெற்ற வரலாறு மேலும் அராபிய இலக்கிய அறிஞர் நடுவே கூட வந்து இத்தகைய பொய்களைச் சற்றும் கூச்சமின்றிப் பேசிப் போகும் இஸ்லாமிய மத அறிஞர்களை நான் கண்டிருக்கிறேன். அவற்றைக் கேட்டு விட்டுப் போய்த் தமது மேசைகளின் முன் அமர்ந்து அந்த அறிஞர்கள் தயாரிக்கும் புத்தகங்கள் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள் ?
Bernard Lewis- What went wrong: the clash between Islam and Modernity in the middle east/ 2003/Harper collins
Ahmed Rashid: The Taliban:Exporting Extremism 1999
Jihad: The Rise of Militant Islam in Central Asia (yale univ press, 2002)
Gunaratna, Rohan Inside Al Qaeda, 2002 /berkeley trade
Ze ‘ev Schiff and
Ehud Ya ‘ari: The Intifada (Simon and Schuster 1990)
Rudolph Peters Jihad in Classical and Modern Islam (Princeton, Markus Weiner/ 1996)
Giles Kepel Muslim Extremism in Egypt: The Prophet and the Pharoah (Ali Saqi books, 1985)
Sadanand Dhume Islam ‘s Holy Warriors: Laskar Jihad (Masariku Network, 26 april 2001)
இது போல நூற்றுக் கணக்கான புத்தகங்களின் பட்டியல் என்னால் தர முடியும். ரூமிக்கு இதை எல்லாம் படிக்க முனைப்பு இருக்குமா என்று அவர்தான் சொல்ல முடியும். ஆனால் சிறிதும் இருக்காது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஒப்பீட்டால் தாரிக் அலியின் புத்தகம் கைக் குழந்தைக்குத் தரும் பால் மாவு போலச் சிறிதும் சீரண சக்திக்குத் தொல்லை தராத நூல். அதற்காகத்தான் அதைத் தேர்ந்தெடுத்தேன். இதைப் பார்த்தாலே கலங்கிப் போகும் ரூமி கண்பட்டி போட்ட குதிரை போல தமிழக முஸ்லிம்கள் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.
பொய்களைத் திரும்பத் திரும்பச் சொல்வதால் அவற்றை உண்மையாக்க முடியும் என்று கோயபல்ஸ் மட்டும்தான் கருதினானில்லை. இப்படிப் பொய் சொல்வதில் திறமையும் பேரார்வமும் உள்ளவர்களாக ஸ்டாலின், மாவோ, இந்த இருவரின் வால் பிடிக்கும் மார்க்சிஸ்டுகள், பெரியாரியவாதிகள், இந்திய இடது என்று ஒரு பெரும் பட்டியலே போடலாம். இந்துத்துவாக்கள், கிருஸ்தவ எவாஞ்சலிஸ்டுகள், இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்றும் இப் பட்டியலில் மதங்களைச் சார்ந்த ஒரு கூட்டமே இருக்கிறது.
உண்மை உறுத்தும், ஆனால் நோயை மூடி மூடி வைப்பதால் உறுப்புகள் அழுகுவதுதான் நடக்கும். சில நேரம் அறுவை சிகிச்சை செய்துதான் ஆக வேண்டும். இதை தாரிக் அலி போன்ற முஸ்லிம் உலகில் இருந்து வந்துள்ள சில அறிஞர்களாவது அறிந்து இருக்கிறார்கள். ஏதோ அவர் ஒரு தனி நபர் இல்லை. வலி இல்லாது அறுவை சிகிச்சை செய்ய கோமெய்னி, பின் லாடன் போன்றவர்களை நம்புவதை விட காலெத் அபெள எல் ஃபதல் போன்றாரின் நூல்கள் உதவலாம்.
அவருடைய ஒரு நூல் – Speaking in God ‘s name, Oxford, 2003 (reprint) இவரிடம் இருந்து பெறப்பட்ட, தவிர எனக்கு ஓரளவு பரிச்சயம் உள்ள நூல் ஆசிரியர்களின் கலவையான பட்டியல் இது:
காலெத் அபெள எல் ஃபதல்
லைலா அஹ்மெத்
ஃபவுத் அஜாமி
ஹமீத் அல்கர்
அப்துல்லாஜி அஜ்மத் அன்-நய்ம்
அலி-கரமலி
முஹம்மத் அர்கவுன்
ஷவுல் பக்ஷ்
ஹென்றி கார்பின்
என்.ஜே. கவுல்சன்
பத்வா எல் குயிண்டி
மஜித் ஃபக்ரி
வயில் ஹலாக்
மார்ஷல் ஹாட்க்சன்
ஹுசெய்ன் ஹில்மி ஐஷிக்
ஃபாத்திமா மெர்னிஸி
ஒலிவர் ராய்
அப்த் அல்-கரிம் சொரவ்ஷ்
பஸாம் டிபி….
கண்ணெதிரே உள்ள 800 கிலோ கொரில்லாவை அது அறையிலேயே இல்லை என்று நாம் நினைக்க வேண்டும் என்று ரூமி சொல்கிறார். தாரிக் அலி அப்படி ஒரு மகத்தான பொய்யைச் சொல்லத் தயாராக இல்லாத ஒரு சிந்தனையாளர். அவர் இடதுசாரிகள் சொல்லும் வேறு விதமான பொய்களைச் சொல்லத் தயங்க மாட்டார் என்பது எனக்குத் தெரியும். அந்தப் பொய்களை ஒழிக்க வேறு யாரையாவது படித்து அதைப் பயன்படுத்த நான் தயங்க மாட்டேன். இப்போதைக்கு வஹாபிசத்தின் பொய்களை அம்பலப் படுத்துவது அவசியம் என்று தோன்றுகிறது. அதைத் தான் தாரிக் அலியின் புத்தகம் செய்கிறது.
உலகம் முழுவதையும் ஆளும் பேராசை உள்ள சிறு நாட்டுப் பாலைவன இனக் குழுவின் இனவெறி கலந்த, முரட்டுத்தனத்தில் வேரூன்றிய வஹாபிசத்தால் மூளை சலவை செய்யப்படும் ‘பாமர முஸ்லிம்கள் ‘ அதுவும் இளைஞர்கள் இன்று உலகெங்கும் இருக்கிறார்கள். பாலைவனங்களில் இருந்து புறப்பட்டு உலகெங்கும் பரவி, வளமான விவசாயம் நடைபெறும் பகுதிகளை எல்லாம் அழித்து மக்களைப் பஞ்சத்திலும் பட்டினியிலும் சாக வைக்கும் லோகஸ்ட் வெட்டுக்கிளிகளை ஒத்த வஹாபிசத்தின் மூடத்தனங்களால் பாதிக்கப்படப் போகிறவர்கள் – உலகெங்கும் உள்ள முஸ்லிம் அல்லாதவர்களும், தவிர நல்லொழுக்கமும், சமாதானமும் நோக்கமாக உள்ள பல கோடி முஸ்லிம்களும். இவர்கள் அனைவரும் பெரும் போர், வன்முறைகளுக்குக்கு உலகம் தள்ளப்படுகிறது என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் என்பது பாமரத்தனமாக உலகைப் பார்ப்பவர்களுக்குக் கூடப் புலப்படுகிறது. ரூமிக்கு மாத்திரம் புலப்பட மாட்டேன் என்கிறது. ஏன் ?
கிணற்றுத் தவளையாக இருப்பதில் ரூமிக்கு நிறைய விருப்பம் இருக்கலாம். வஹாபிசம் ஒரு புற்று நோய் என்று அவர் கருதாமல் இருக்கலாம். அப்படி இருப்பதில் அவருக்கு ஏதும் வசதி கிட்டுமா என்று எனக்குத் தெரியாது. ஏனெனில் வஹாபிசம் இந்தியாவைக் கைப்பற்றி, காஷ்மீர ஜிகாதிகள் வெளிப்படையாக நேர்காணல்களில் எல்லாம் சொல்வது போல (பார்க்க – யோகிந்தர் சிகந்தின் சமீபத்துப் புத்தகங்கள், மேலும் பேட்டிகள், மேலும் இங்கே பின் குறிப்புகள்) தில்லி செங்கோட்டையில் பிறை நிலா உள்ள பச்சைக் கொடி பறக்க நேர்ந்தால் ஒரு வேளை ரூமி அதிகாரத்தில் இருப்பார் என்பதில் சந்தேகம் எனக்கு இல்லை. இப்போது அவர் எழுதுவது போலத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தால் ஜிகாதிகளுக்கு அவரை ஆவி சேர்த்து அணைத்துக் கொள்வதில் என்ன தயக்கம் இருக்கப் போகிறது ?
ஆனால் வஸாபிசக் கத்தியால் வெட்டப்படப் போகும் தலைகளில் என்னுடையதும் ஒன்றாக இருக்கக் கூடாது என்று காத்துக் கொள்ள எனக்கு அவசியம் இருக்கிறது, இல்லையா ? அதனால்தான் தாரிக் அலி, மேலும் வஹாபிசம் பற்றிய பல அபாய அறிவிப்புகளை எல்லாம் மொழி பெயர்த்து இருக்கிறேன். சாதாரண இஸ்லாம் பற்றி எதையும் எழுத எனக்கு எந்த அவசியமும் இல்லை. அது இன்னொரு மதம். மதங்களின் மீது எந்தப் பற்றுதலும் இல்லாத எனக்கு அதைப் பொருட்படுத்த ஒரு அவசியமும் இல்லை. அதிகாரத்துக்கு அலையும் எந்த சமூகக் குழுவும் நெறியானதா, அதற்கு அதிகாரம் ஏன் தேவைப்படுகிறது, முன்னால் அதிகாரத்தில் இருந்த போது அது என்ன செய்தது என்று பார்த்து என் கணிப்பை எழுதவும் நான் முற்படுவேன். ஏனெனில் கழுத்துக்கு மேல் கத்தி எனக்குத் தானே ?
வஹாபிசத்தை ஒரு மதம் என்று கருத நான் தயாரில்லை. அது ஒரு அரசியல் புற்று நோய்தான். மனித சமுதாய வரலாற்றில் பின்னே காணக் கிட்டும் பல பெரு நோய்களில் – நாஜியிசம், இத்தாலியப் பாசிசம், அமெரிக்க/ஐரோப்பிய அடிமை முறைகள், இந்தியாவின் தீண்டாமைப் பழக்கம், ஸ்டாலினியக் கொலை வெறி, மாஒயிச ஒடுக்குமுறை, பால்பாட்டிய இனப் படுகொலைகள் என்று நீளும் இப்பட்டியலில் புதுச் சேர்க்கை வஹாபிசம் என்பது என் கருத்து.
எனவே தமிழாக்கப் பகுதியை ஒட்டுமொத்தமாக அலட்சியப் படுத்துவதே இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு உள்ள வழியாகும். இது போன்ற கட்டுரைகளை அறிவும் தெளிவும் உடையோர் பொருட்படுத்த மாட்டார்கள்.
அதாவது அறிவு, தெளிவு என்பதை ரூமி வரையறுக்கும் விதத்தோடு ஒத்துப் போவாருக்கு அதுதான் வழியாக இருக்கும். ஆனால் அறிவை உலகத்தாருக்குத் தெரிகிற வழிகளில் வளர்ப்பதில், தாம் வளர்வதில், மேலும் மூட நம்பிக்கைகளை வளர்ப்பதில் ஆர்வம் இல்லாத பாமரருக்கு அந்த வழி பொருந்துமா ? இல்லை என்பது என் கருத்து.
தேடிப்பிடித்து தாரிக் அலியின் ஒரு பகுதியை தமிழாக்கம் செய்ய வேண்டிய அவசியம் இப்போது என்ன ஏற்பட்டது ஆசாரகீனனுக்கு ? ஒரு ஆர்.எஸ்.எஸ். மனப்பான்மை அதில் தெரிகிறது.
தேடிப் பிடிக்கவே தேவை இருக்கவில்லை. உலக வலை மையத்தில் சிந்தனை மேலும் நூல் விமர்சனம் பற்றிய பத்திரிகைகளில் திரும்புகிற இடத்தில் எல்லாம் தாரிக் அலி தென்படுகிறார். ஒரே நேரம் பல இடங்களில் அதுவும் நான் உலவுகிற இடதுசாரி மையங்களில் அவரது பெயரைக் காணாமல் இருப்பதுதான் கடினம். இது தவிர நான் அவ்வப்போது நுழைகிற புத்தகக் கடைகளின் முனையில் இராக் யுத்தத்தை எதிர்க்கிற வாசகர்களின் பணப் பையின் சுருங்கிய வாயைத் திறக்க வைக்கும் முயற்சியில் அடுக்கடுக்காக வைக்கப்பட்ட தாரிக் அலியின் புத்தகத்தைத் தவிர்ப்பதுதான் கடினமாக இருந்தது. அதைப் படிப்பதும் மாலை நேரங்களில் உருளை வறுவல் சாப்பிடுவது போல சுவாரசியமாகவே இருந்தது. மனிதருக்குக் கரகரவென்று படிக்கத் தருவதில் நிறையவே திறமை.
தவிர கடைசி வரியில் போகிற போக்கில் சேற்றை வாரி இறைத்துப் போனால் தான் அதைத் தற்செயலாகச் செய்ததாக வாசகர் கருதுவர் என்று பாமரத்தனமாக ரூமி கருதுகிறார் போல இருக்கிறது. மொத்தக் கடிதமே இந்தக் கடைசி வரிக்காகத்தானே எழுதி இருக்கிறார், இல்லையா ரூமி அவர்களே ?
ஆர்.எஸ்.எஸ். என்று முத்திரை இட்டாலே ஒருவரை குப்பையில் தள்ளி விட முடியும் என்று ரூமிக்குத் தெளிவாகவே தெரிகிறது. அப்படி என்றால் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்குத் தமிழ் நாட்டில் என்ன அந்தஸ்து இருக்கிறது என்பதும் உடனடியாக நமக்குத் தெரிகிறது. அதிலும் திண்ணையில் அமரும் ‘அறிவு ஜீவி ‘ வாசகருக்கு என்ன மனச் சாய்வு இருக்கிறது என்பதும் ரூமிக்குத் தெரிகிறது. ஒருவரை ஆர்.எஸ்.எஸ் என்று சொன்னாலே அவரைத் தொற்று நோயாளி போலத் திண்ணை வாசகர் கருதுவர் என்பது ரூமிக்குத் தெரியும்.
இப்படிப் பார்க்கலாமா ? காஷ்மீர் ஜிகாதிகள், ஜமாதி இஸ்லாமி, தப்ளீக் இயக்கத்தினர், முஸ்லீம் லீக் கட்சியினர், தமுமுக, மஜ்லிகள், SIMI என்று முக்குக்கு முக்கு முஸ்லிம்களுக்குப் பல விதத்தில் வாதிட நிறுவனங்களும், அரசியல் இயக்கங்களும், அமைப்புகளும் பெருகி வருகின்றன. களத்தில் இறங்கி சிலம்பம் சுற்றி இஸ்லாத்தின் எதிரிகளை மாய்க்கப் பல இடதுசாரிப் பேரறிஞர்கள் வேறு இருக்கிறார்கள். இதெல்லாம் போதவில்லை ரூமிக்கு.
இந்துக்களுக்காக வாதிட எந்த அமைப்பும் இருக்கக் கூடாது என்று வேறு ஆக்க வேண்டி இருக்கிறது. நாளைக்கு தில்லி செங்கோட்டையில் பச்சைக் கொடியை, பிறை நிலாக் கொடியைப் பறக்க விடும் கனாவுக்கு எதிரியாக இன்றைய தேதியில் உலவும் ஒரு நிறுவனம் ஆர்.எஸ்.எஸ் என்று ரூமிக்கு அபிப்பிராயம். அதனால் போகிற போக்கில் அதன் மேல் ஒரு கல்லை எறிந்த மாதிரி இருக்கும் என்று ரூமி செயல்படுகிறார். தில்லியில் பச்சைக் கொடி பறப்பதை தடுக்கக் கூடிய அமைப்பு ஆர்.எஸ்.எஸ். என்பதில் எனக்குச் சிறிதும் நம்பிக்கை இல்லை. லஷ்கார்-இ-தொய்பா, லஷ்கார்-இ-ஹிந்த், லஷ்கார்-இ-ஜாங்வி, ஜய்ஷ்-இ-முஹம்மத், ஹர்கத் அல்-ஜிஹாத் அல்-இஸ்லாமி போன்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுடன் ஒப்பிடுகையில் ஆர்.எஸ்.எஸ். வெறும் சோளக் கொல்லை பொம்மைதான். இதுவும் ரூமிக்குத் தெரியும். அதை முன்வைப்பது ஒரு மந்திரவாதியின் கவனத் திருப்பு வேலை. எப்படி பார்வையாளரின் கவனத்தை மையத் தலைப்பில் இருந்து திருப்பி விடுவது என்று ரூமிக்கு நன்றாகவே தெரிகிறது.
எந்த மரபு மீதும் பிடிப்பு இல்லை என்று குறிக்கும் வகையில் புனை பெயர் வைத்துக் கொண்டிருக்கும் எனக்கும் ஒரு சூட்டுக் கோல் முத்திரை வைத்தது போல் இருக்கட்டும் என ஆர்.எஸ்.எஸ் பார்வை என்றும் குறிக்கிறார். கீழ்த் தரமான அரசியல் முறை இது. தேவையா ?
ஆர்.எஸ்.எஸ்-இல் இருந்து எதைச் சாதித்து விட முடியும் ? பிரிட்டிஷ் காவல் துறையினரின் சீருடையை அணிந்து கொண்டு சுதேசியம் பேசியபடி ஒரு மைதானத்தில் அரை மணி நேரம் கம்பு சுத்தத்தான் முடியும். எனக்கு அதை விட மேலான வேலைகள் எவ்வளவோ உண்டு. உலகில் எத்தனையோ இடங்களில் தண்ணீருக்கும், உணவுக்கும், உடைக்கும் போராடும் அப்பாவி மக்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதுவும் செய்ய முயல்வது மேலான வேலையாக இருக்கும்.
இன்னொன்றும் சொல்ல வேண்டி இருக்கிறது. ஒரு விஷயத்தில் ரூமிக்கும் எனக்கும் கருத்தொற்றுமை இருக்கும் என்று நினைக்கிறேன். அதாவது இன்னும் இருபது முப்பது ஆண்டுகளில் தில்லி செங்கோட்டையில் நிச்சயம் பிறைநிலா பச்சைக் கொடி பறக்கும், மறுபடி இன்னொரு ஆயிரம் ஆண்டுகள் அடிமைகளாக வாழும் பாக்கியம் முஸ்லிம் அல்லாத இந்தியர்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்று நாகூர் ரூமி நம்புவதாக எனக்குத் தோன்றுகிறது. நானும் அதேதான் நினைக்கிறேன். இது தெரிந்து ரூமிக்கு நிச்சயம் மனது பூரிக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. ஆட்சிக்கு வருவது என்றால் பெரு மகிழ்ச்சி அடையாத அறிஞர்கள் எத்தனை பேர் இருக்கப் போகின்றனர் ?
ஆனால் இந்தியா முழுதும் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு போகப் போகும் பல கோடிப் பெண்களில் என் குடும்பப் பெண்கள் எத்தனை பேர் இருப்பர் என்று யோசிக்க தயக்கமாகத்தான் இருக்கிறது. இன்று பொறியியல், மருத்துவம், வங்கி மேலாண்மை, பள்ளி ஆசிரியை, அறிவியல் ஆய்வாளர், தகவல் தொழில்நுட்ப நிபுணர் என்று பல வகைத் துறைகளில் மிக இயல்பாகப் பணியாற்றித் தம் குடும்பங்களில் தலைமைப் பதவி கூட எடுத்துச் செயல்படும் இப் பெண்கள் திடாரென்று நிலை மாறி தெருவில் நடக்கக் கூட ஓர் உதவாக்கரை ஆணின் துணையும், ஒரு முக்காடும் இல்லாமல் வெளியே போக முடியாது என்ற அதி நாகரிகம் நாட்டை ஆளப் போகிறது. அதற்கு நமது மாஒயிச, மார்க்சிய, பெரியாரிய வாதிகள் அனைவரும் ஜால்ரா போடப் போகிறார்கள் என்பதை நினைத்து எனக்குப் புல்லரிக்க வேண்டும் என்று ரூமி எதிர்பார்க்கலாம்.
ஆனால் நான் இன்னமும் ஒரு நல்ல மனிதனாகத்தான் இருக்கிறேன். என் குடும்பப் பெண்கள் மட்டுமல்ல, எந்த இந்தியப் பெண்ணுக்கும் இந்த விபத்து நேரக் கூடாது என்பதில் கருத்தாக இருக்கிறேன். அது மட்டுமல்ல, தில்லி செங்கோட்டையில் பச்சைக் கொடி, சிலுவைக் கொடி, செங்கொடி, காவிக்கொடி என்று எந்த மதக் கொடியும் பறக்கக் கூடாது என்பதிலும் நான் உறுதியாகவே இருக்கிறேன். ஆனால் ஒரு தனி நபரின் உறுதி எந்த மூலைக்கு ?
இறுதியாக இப்புத்தகம் குறித்து – தாரிக் அலியின் புத்தகம் உலகப் பார்வையில் ஒரு மதத்தின் ஒரு சிறு வரலாற்றுத் துண்டை நோக்குகிறது. உலகம் பரந்தது. கிணற்றில் இருக்கும் தவளைகளுக்கு அது தெரியாதுதான். வெளியில் எடுத்து கைப்பிடிச் சுவரில் வைத்தால், பயத்தில் கிணற்றுக்குள்ளே மறுபடி குதிக்கத்தான் அவற்றால் முடியும் போலத் தெரிகிறது.
aacharakeen@yahoo.com
பின் குறிப்புகள்:
இந்தியாவில் இயங்கும் ஜிகாதி இயக்கங்கள், அவற்றினால் இந்தியாவிற்கு ஏற்பட இருக்கும் பேராபத்து குறித்த சிறு துளித் தகவல் இது. அசல் நிலை தெரிந்தால் பல மாதங்களுக்குத் தூக்கம் கூட வராது – அதாவது சுதந்திரம் என்ற நல்ல பதார்த்தத்தின் மீது உங்களுக்குச் சற்றாவது பிடிப்பு இருக்கும் பட்சத்தில். அடிமையாக இருப்பதுதான் நல்லது என நினைப்பவர்கள் கீழ்க்கண்ட பகுதிகளைப் படித்து ஆகா நமக்கு நல்ல காலம் விரைவில் வரப் போகிறது என்று மகிழ்வாரோ என்னவோ! அதைப் பற்றி நான் என்ன சொல்ல ?
http://www.ceip.org/files/events/events.asp ?EventID=684
http://windsofchange.net/archives/004043.php
http://www.rediff.com/news/2003/apr/03spec.htm
http://www.dawn.com/weekly/mazdak/20040103.htm
For the kind of lies told in Pakistan about India, which may indeed appeal to Rumi as well see
http://66.102.7.104/search ?q=cache:0FEgI72qmSIJ:www.jamaat.org/qa/revival.html+jihadi+movements+in+India&hl=en
ON Simi movement, a sympathetic newspaper states clearly that the central aim of SIMI is to dismantle secularism and to establish an Islamic path of life. It is also interested in establishing a caliphate.
On the issue of secularism SIMI ‘feels it is essential to emphasise that no political party or organisation can bring about a solid and constructive change through secularism in the light of their erratic ideologies. The only way to bring about real change through ஸஸ establishing an Islamic system of life ‘ (Ibid. Page34). Interpretation of secularism and democracy as un-Islamic, rejection of nationalism and propagation of Islam as ‘only way to bring about real change ‘ suggest that SIMI believed in confrontative Islam.
http://www.kashmirtelegraph.com/1103/nine.htm
look at what Syed Saleem Shahzad writes from Karachi in Asia Times- obviously not a R.S.S propaganda.
http://www.atimes.com/ind-pak/DE18Df03.html
another source which is quite worried about international muslim organizations funding terrorism in India
http://www.alternatives.ca/article393.html
- கடிதம் ஜூலை 15, 2004
- பாரென்ஹீட் 9/11
- Capturing the Freidmans (2003)
- பாப்லோ நெருடா
- அரசியலும் ஆங்கில மொழியும்
- எத்தனை நூற்றாண்டு வந்தாலும்
- ஆட்டோகிராஃப் ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ‘
- மனவெளி 11-வது வருட நாடக நடன விழா- ஜூலை 18 , 2004
- உலகத் தமிழ் சிறுகதைப் போட்டி முடிவுகள்
- கடிதம் ஜூலை 15,2004
- கடிதம் ஜூலை 15,2004
- சிம்ஃபனியில் திருவாசகம்
- கடிதம் ஜூலை 15, 2004 -பாலைவன வெட்டுக்கிளிகள், வஹாபிசம், கிணற்றுத் தவளைகள்
- மெய்மையின் மயக்கம்-8
- கேள்விகளின் புத்தகத்திலிருந்து
- இந்தப் புத்தகத்தின் மீதென் காதல்
- விழிப்பு
- வேடத்தைக் கிழிப்போம் – 2
- மழை வருது
- கழிவுகள்
- அதே கனவு
- நிஜங்களாக்கு….
- சமாதானமே!
- உணர்வு
- தமிழ் இலக்கியத் தோட்டம் – வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது – 2004
- எங்கள் தாயே
- நாகூர் ஹந்திரி
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -28
- குண்டுமணிமாலை
- வாரபலன் – ஜூலை 15 , 2004 : பொன்குன்னம் வர்க்கி , மரணத்திற்குப் பின்னும் மதம் விடாது , அடி உதவுமா , சிவகுமாரின் ‘கொங்குதேர் வாழ்
- சீனா : கம்யூனிஸத்திலிருந்து பாஸிஸத்துக்கு
- காங்கிரஸின் இன்னொரு கரிபி ஹடாவ் பட்ஜெட்
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் -11 : AIMSIndia இசைக் கச்சேரி
- In a different league : ஹிண்டுவைப் பற்றிய ஒரு முன் எச்சரிக்கை
- பாஸ்டன்வாசியின் செல்லாத வோட்டு
- தீருமா சென்னையின் தாகம் ?
- உள் சாரல்
- நிஜங்களாக்கு….
- துணைநலம்
- கழுகுக்குத்தெரியுமா கற்பூர வாசனை ?
- சத்தியின் கவிக்கட்டு 15
- கருவறை சொர்க்கம்
- சாவோடு வாழ்தல்
- காற்றுக்கிளி
- காலம் கடந்த காதல் கவிதைகள்
- கணவனைக் கொல்லும் காரிகை
- பரிதியின் ஒளிக்கனலில் மின்சக்தி உற்பத்தி [Electrical Energy from Solar Power]
- வெந்தயக் கோழிக்கறி
- வெங்கடேஷின் ‘நேசமுடன் ‘- அறிவுப்பூர்வமான தளம்: அக்கறையான தேடல்.
- புரட்சி வருகுது – பாரன்ஹீட் 911