கிரிஜா மணாளன்
(கற்பனை: கிரிஜா மணாளன், திருச்சி.)
—————————————————————————————————————————————————–
(~உடான்ஸ் டி.வி|யில் ஒரு காதல் மன்னரைப் பேட்டி (GUEST MEET) காண்கிறார் செய்தி வாசிப்பாளர்.)
பேட்டியாளர்: காதலைப்பற்றி கரைகண்டவரும், தனது ~காதல் முயற்சி|களில் நூறுமுறை படுதோல்வி கண்டதால், ~காதல் சந்நியாசம்| வாங்கி, ~காதல் ஒரு
கசமாலம்!| என்ற ஓர் ஆய்வுநூலை எழுதி ~படுதோல்விஸ்ரீ| என்ற விருது பெற்றவருமான ~திரு. மன்மத ராசனார்| அவர்களை இந்த ~காதலர் தின|த்தில் பேட்டி காண்பதில் மகிழ்ச்சி யடைகிறோம்!
(பேட்டி துவங்குகிறது.)
பேட்டியாளர்: வணக்கம் மன்மத ராசனார் அவர்களே! இந்த தள்ளாடும் வயது வரை, காதலைத் தள்ளாமல் அதில் கரைகாண முயன்ற உங்கள் அனுபவங்களை; ~உடான்ஸ் டிவி|யின் ரசிகர்களுக்கு அறிமுகப் படுத்துவதில் மகிழ்கிறோம். ~அந்தக்கால காதலைப் பற்றியும், இந்தக் கால காதலைப் பற்றியும் உங்களிடம் ஒரு பேட்டி!….முதல் கேள்வி…..~அந்தக் கால காதலுக்கும், இந்தக் கால காதலுக்கும் என்ன வித்தியாசத்தை நீங்கள் காண்கிறீர்கள்?
பதில்: பொண்ணோட மனசைப்பிடிக்கறதுக்கு ~காளையை அடக்கி|யது அந்தக் காலம்! புதிரான பொண்ணு மனசைப் புரிஞ்சிக்கற வரைக்கும் ~காளைகள்| ~மனசை அடக்கி|க்கிட்டு இருக்கவேண்டியது இந்தக்காலம் தம்பி! லேட்|டாத்தான் இந்தக்காலக் குட்டிகளுக்கு காதல் முளை விடுது! ..ச்சே! ……எல்லாம் ~ட்யூப் லைட்|டுங்க!
கேள்வி: ஒரு குட்டி….மன்னிக்கணும்…..ஒரு பெண் நம்மை காதலிக்கிறாள்
என்பதை எதை வைத்துப் புரிந்துகொள்ளலாம்?
பதில்: என்கிட்ட பழகின நூறு ~பன்னாடைகள்|க்கிட்டே அதைப் புரிஞ்சிக்க
முடியாமத்தானே அதுகளை தலைமுழுகி நான் சந்நியாசம் வாங்கித் தொலச்சேன்!….~பன்னாடைங்க! பன்னாடைங்க!
கேள்வி: (அதிர்ந்துபோய்) தாங்கள் ~பன்னாடை| என்று குறிப்பிட்டது…….?
பதில்;: உன்னைச்சொல்லலே தம்பி! என்னை ஏமாத்தின அந்த
பொட்டச்சிகளை!
கேள்வி: நன்றி! நன்றி!
கேள்வி: அடுத்த கேள்வி, ஒரு பெண் தன் மனத்திலுள்ள காதலை எப்போது
வெளிப்படுத்துகிறாள்?
பதில்: அந்தக்காலப் பொண்ணுங்க ரொம்ப காலம் யோசிச்சுத்தான் தன்
மனசைத் தொறப்பாளுங்க! இப்பல்லாம் காதலனோட மணிபர்ஸைத் தொறந்து பாத்துட்டுத் தான் மனசைத் தொறக்கறாளுங்க!. …கொள்ளைக்காரிங்க! கொள்ளைக்காரிங்க!
கேள்வி: அருமையான சொல்நயம்! …….முற்காலப் பெண்கள் தன் காதலன்
முன்னால் வெட்கப்பட்டதற்கும், இப்போது வெட்கப்படுவதற்கும் என்ன வித்தியாசம்?
– 2 –
பதில்: வெட்கம்|கறது பொண்ணுங்கக்கிட்ட இப்ப ஏது தம்பி? அந்தக் காலத்துல வெட்கம் வந்துச்சுன்னா நகத்தைக் கடிச்சிக்கிட்டு, கால்
நகத்தால தரையைக் கீறுவாளுங்க! இப்ப எதிர்ல இருக்கற
காதலன் மேலே விழுந்து, அவனையில்ல கீறிக் கிழிச்சிடுறாளுங்க!
………வெறி நாய்ங்க! வெறி நாய்ங்க!
கேள்வி: நீங்கள் தாய்க்குலத்தை ~வெறிநாய்|க்கு ஒப்பிடுவதைக்கேட்டு நாட்டிலுள்ள ~மகளிர் அமைப்புகள்| பொங்கி எழக்கூடும் பெரியவரே! நிதானமாகப் பேசுங்கள்!
பதில்: என்னய்யா நிதானம் வேண்டிக்கெடக்கு? என் காதல் உணர்ச்சி களையே அழிச்சி, என்னை நாய்படாத பாடு பட வச்ச அவளுகளை திட்டாம, வாழ்த்தவா முடியும்?
கேள்வி: சரி, ஒரு காதலி, காதலனிடமிருந்து முதலில் என்ன பரிசை எதிர்பார்க்கிறாள்?
பதில்: முற்காலத்துல ~மனசை| எட்டிப் பார்த்தவளுங்க, இப்ப அவனோட
~பர்ஸை|த்தானே எட்டிப்பார்க்கறாளுங்க! ~ஒரு முழம் பூ|வுக்கு மசிஞ்ச காதல், இப்ப ஓரு ~ஃபாரீன் செல்ஃபோன்| லெவலுக்குல்ல ஏறிப்போயிடுச்சி! ….பிசாசுங்க! பிசாசுங்க!
கேள்வி: சரியாச் சொன்னீங்க! …..காதலியிடம் நேரில் பேசுவது, தொலைபேசியில் பேசுவது – எதில் மகிழ்ச்சி அதிகம்?
கிழவர்: அந்தக் காலத்துல ஆத்தங்கரை, மாந்தோப்புங்கதான் காதலை வளர்த்துச்சு! இப்பத்தான் அந்த செல்ஃபோன் வந்துடுச்சே! அது லேயே இளசுகள் எல்லாத்தையுமே முடிச்சிடுறாங்க! அந்த செல்ஃபோன் படற அவஸ்தை இருக்கே….உடம்புல ஒரு அடிஷனல் உறுப்பாவே ஒட்டிக்கிட்டு, ~மாமா| வேலையே பண்ணிக்கிட்டு இருக்கு! ……….
(அப்போது பேட்டியாளரின் செல்ஃபோன் ஒலிக்க, அசடு வழிந்த பேட்டியாளர்,
அதை எடுத்துப் பேசுகிறார். எதிர் முனையில் அவரது காதலி!)
எதிர்முனை: டீவி பார்த்துக்கிட்டுத்தான் பேசறேன்……என்ன, பீச்சுக்கு வர்றதாச் சொல்லி ஏமாத்திட்டு அந்த ~கிழக் கோட்டானோட| உக்காந்து ரொம்ப நேரமா கதைச்சிக் கிட்டு இருக்கீங்க? ~லவ்வர்ஸ் டே| அன்னிக்குத்தான் உங்க ஒய்ஃப் உங்களை ரூம்ல போட்டுப்பூட்டி சிறை வச்சிட்டாங்கன்னு எனக்கு பார்ட்டி தராம ~டேக்கா| குடுத்துட்டீங்க! இப்ப உடனே புறப்பட்டு வர்றீங்களா இல்லே…..நான் அங்கே ஸ்டூடியோவுக்கே வந்து ஒரு கலக்கு கலக்கட்டுமா?
பேட்டியாளர்: (அதிர்ந்து) ஐயோ….கலக்கப்போறியா! அதெல்லாம் வேண்டாம் டார்லிங்! ப்ளீஸ் …..இது முடிஞ்சு உடனே புறப்பட்டு வர்றேன்.
கிழவர்: ~கலக்கப்போவது யாரு| தம்பி?
பேட்டியாளர்: அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க! ஒரு ஃப்ரண்ட் அந்த ப்ரோக் ராமைப்பத்தி பாராட் டறான்.. அதான்!….ஹி….ஹி…..ஹி……சரி, அடுத்த கேள்வி சார், ~காதலுக்கு அந்தக் காலத்துல இருந்த மரியாதைக்கும் இந்தக்காலத்து மரியாதை|க்கும் என்ன வித்தியாசம்?
கிழவர்: அந்தக்கால அப்பன்களுக்கு தன் பொண்ணோட காதல் சமாசாரம் தெரிஞ்சு போச்சுன்னா காதலனை ~ஆள்வச்சி அடிச்சி மரியாதை| பண்ணுவானுங்க! இப்ப ஆட்டோல வந்து ~பின்னியெடுத்து| மரியாதை பண்ணிட்டுப் போயிடுறா னுங்க! ~மரியாதை செய்யற செலவு| கொஞ்சம் அதிகமாயிருக்கு, அதான்!
– 3 –
பேட்டியாளர்: (அவரிடம் நெருங்கி, மெதுவாக) நேயர்களுக்கு கேட்காத மாதிரி மெதுவா சொல்லுங்களேன்……உங்களுக்கு எத்தனை தடவை இப்படி ~மரியாதை| கிடைத் திருக்கிறது?
கிழவர்: என் வயித்தெரிச்சலை ஏன்யா கொட்டிக்கறே? எனக்குக் கிடைச்ச மரியாதையை எல்லாம் யாருக்காச்சும் திருப்பிக் கொடுத்துடணும்னு ப்ளான் பண்ணிக்கிட்டு இருக்கேன்……விருப்பமனா சொல்லு, அதை உன்கிட்டேயே ஆரம்பிக்கறேன்!
பேட்டியாளர்: (பயந்து) தெரியாமல் கேட்டுவிட்டேன்…..மன்னியுங்கள்! இன்னும் ஒரே ஒரு கேள்வியோடு பேட்டியை முடித்துக்கொள்ளலாம். நீங்கள் கோபப்படாமல் பதில் சொல்லவேண்டும்.
கிழவர்: அப்படி என்ன கேட்டுப்போறே? நீ பயப்படாமக் கேளுய்யா!
பேட்டியாளர்: வந்து…வந்து…..இந்த வயதில் உங்களுக்கு……..காதலி யாராவது ……….?
கிழவர்: காதல் பண்ணியே வளர்ந்த உடம்பு இதுப்பா! ~கட்டைக்குப் போற வரை காதல் செய்!|யின்னு என் குருநாதர் சொல்லியிருக்காரு! ~லவ்வர்ஸ் டே| அன்னிக்கு, நாலு ~முதியோர் இல்ல|த்துக் குப்போய்……….
பேட்டியாளர்: அடாடா……எவ்வளவு பெரிய மனசு உங்களுக்கு! அவங்களுக்கு உதவி பண்ணப் போறிங்கன்னு சொல்லுங்க?
கிழவர்: அவசரப்படுறியே! என்னோட பழைய காதலிகள் நிறையபேர்
~முதியோர் இல்லங்கள்|ல இருக்காங்கப்பா! லேட்டஸ்ட் டிசைன்ல சுடிதார், சல்வார் கம்மீஸ், ஸ்வீட் டெல்லாம் வாங்கிட்டுப்போய்க் கொடுத்துட்டு அவங்கக்கிட்ட ~ஜாலியா|ப் பேசிட்டு வந்தேன்யா!…..இந்த தள்ளாத வயசிலும் என்னை பிரியத்தோட இறுக்கமா கட்டிப்புடிச்சி…..அதை ஏன்யா கேக்கறே! சும்மா ~நச்|சின்னு இருந்துச்சி போ! …..என்னப்பா ஆச்சு உனக்கு? தலை சுத்துதா?
(பேட்டியாளருக்கு மயக்கம் ஏற்பட்டு கீழே சாய்கிறார்.)
girijamanaalan2006@yahoo.co.in
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 9- கண்ணை மறைத்த ஆக்ரோஷப் புயல்
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 4 காட்சி 2
- பெருஞ்சித்திரனாரின் பள்ளிப்பறவைகள்
- காதலர் தின’த்தில் ஒரு பேட்டி!
- மனித வேட்டை
- மூழ்கும் காதல்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! காலாக்ஸிகளை இயக்கும் கருமைச் சக்தி (Dark Energy) (கட்டுரை: 5)
- ‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 1 -தேவன்
- விமர்சித்தல் லா ச ரா எழுத்தை; லா ச ரா வையல்ல
- அறிஞர் மு.சண்முகம் பிள்ளை தமிழகராதி – தமிழ்மாமணி மு.இறைவிழியனார் பாராட்டிய தகுதிமிக்க தமிழகராதி
- சிறுகதை என்னம் களம் துரும்படியில் யானை படுத்திருக்கும்
- கனவில் நிகழுகிற பயங்கர உலகம்
- மலேஷிய தமிழர்கள் மீது துப்பாக்கிச்சூடு
- கடிதம்
- கடிதம்
- Exploitation of Migrant Workers in the United Arab Emirates
- Tamil programmes during the Writers Festival
- நாட்டாமை தீர்ப்பை மாத்திப்போடு – 1
- பன்னாட்டுக் கருத்தரங்கம்
- குறிப்பேட்டுப் பதிவுகள் – 3
- தைவான் நாடோடிக் கதைகள் (2)
- மாத்தா ஹரி அத்தியாயம் -38
- அத்தையம்மா!
- டிசம்பர் 1 எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள் : எச் ஐ வி/ எய்ட்ஸ் சிகிச்சையில் இன்றைய சவால்கள்
- நூலகம் எனும் அன்னை
- “பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள்” – மார்வின் ஹாரிஸ் சொல்ல மறந்த கதை
- சூரன் போர்
- படித்ததும் புரிந்ததும்..(12) வன்முறை – உதிரிப்பூக்கள் – மீடியர்
- பூக்கள்
- ஜெகத் ஜால ஜப்பான் – 2. ஓஹாயோ கோசைமாஸ்
- மும்பைத் தமிழர் அரசியலும் தாதாக்களும் : (2)
- அக்கினிப் பூக்கள் – 2
- தாகூரின் கீதங்கள் – 5 உன்னுருவில் என் வடிவம் !
- பாத்திரத்தில் இல்லை
- தாழ் படுக்கைகள்
- வளரும் வலிகள்