மொபைல் புராணம்

This entry is part [part not set] of 32 in the series 20051216_Issue

சந்திரசேகர்


மத்தவன் செல்லு வெச்சுகிட்டா நமக்கென்னன்னு கேக்கறீங்களா ? அதுலயும் பல தொல்லைகள் இருக்கு!!

புதுப் புருஷன் மாதிரி புதுசா மொபைல் வெச்சிருக்கிறவன் பண்ற இம்சைகள் நிறைய!

நல்லா கும்பல் இருக்குற பஸ் நெறிசல்ல திடார்னு பைக்குள்ள கைய விடுவான்! அடுத்தவன் தாடைல குத்துவிட்டோமேங்கிற கவலையில்லாம!!

டக்னு காதுல வெச்சு, ‘ஓ, சரி ப்லீஸ் வெயிட், ஜஸ்ட் கமிங் ‘னு பீட்டர் விடுவான்! இல்ல, உட்கார இடம் கிடைச்சுருச்சுன்னா, பல விதமான டயல் டோன்களை மாத்தி, மாத்தி, ஒண்ணு இறங்க வேண்டிய ஸ்டாப்பின்ங்ல இறங்க மறந்துடுவான், இல்ல இந்த டயல் டோன் இம்சை தாங்காத பக்கத்து சீட்டுக்காரன், இறங்க வேண்டிய ஸ்டாப் வரதுக்கு முன்னாடியே, இறங்கி ஓடிடுவான்!

கொஞ்ச திடார் பணக்காரங்க மொபைல் வெச்சுகிட்டு பண்ற அலம்பல் இருக்கே, அது தனி ரகம்! பெரிய குரல் எடுத்து, என்னமோ பேசுறது, நேரா கேக்குற ஆளோட காதுலயே போய் நுழையிற அளவுக்கு ை ? டெஸிபல்லில், கத்துவான்! அது ஆஸ்பத்திரியா இருந்தாலும் சரி! என் நண்பன் மொபைல் கடை நடத்துறான். அவன் சொன்ன ஒரு திடார் பணக்கார மொபைல் ஆசாமி, இவன் கடைல போயி, ‘என்னய்யா,இந்த SMS, அது இதுன்றாங்க, பாட்டு படிக்கும்னாங்க, TMS அ காணோமே ? பழைய தலைவர் பாட்டெல்லாம் வராதா ?பின்ன என்னாத்துக்கு வேஸ்டா, க்ரெடிட் கார்டுல (அதுவும் இருக்குதுன்னு எல்லாருக்கும் தெரியணும்ல ?) 12,000 ரூபா பிடிச்ச ? ‘ ன்னு, இவன பிடிச்சுகிட்டாறாம்!! அவருக்கு தனியா ஒரு ட்ரெய்னர் போட்டு, மொபைல எப்படி யூஸ் பண்றதுன்னு ஒரு நாள் முழுக்க சொல்லவேண்டியதாப் போச்சாம்!

—-

chandra_jgp@yahoo.co.uk

Series Navigation

சந்திரசேகர்

சந்திரசேகர்