சித்ரா ரமேஷ்
1. கோட்டூர்புரம் கூவம் வழியாக அடையாறு வரை ஒருவர் நடந்து போனால் வாழ்க்கையின் பெரும் பகுதி மலேரியா காய்ச்சலில் கழிந்து விடும் என்ற பேருண்மை புலப்பட்டு விடும்.கண்ணும் செவியும் போதிய அளவிற்கு பண்பட்டு காணும் கண்றாவிக் காட்சிகளில், கேட்கும் கசுமால ஒலிகளில் வாழ்க்கையின் உண்மைகளை உய்ந்துணரும் பயிற்சி தம்பிக்கு இருந்திருக்க வேண்டும். கோட்டூர்புரத்திற்கும் கோனார் தெருவிற்கும் நான் நடந்து போன ஒவ்வொரு நாளிலும் புதிய புதிய கொசுக்களில் கடிபட்டு வந்திருக்கிறேன் என்றே சொல்வேன். என் தம்பி தங்கையருக்கு நான் வாங்கிச் செல்லும் அழுகல்களால் என் பை கனத்து வீடு திரும்பிய அனுபவங்களை விட
கொசுவால் கடிபட்டு யானைக்காலால் கனத்துப் போன அனுபவங்களை பெற்றுத் திரும்புவதும் என் வழக்கம். அப்படி விந்தி விந்தி வந்த நாட்கள் பல. வாழ்க்கையில் எவ்வளவோ மாறுதல்களைச் செய்திருக்கிறது. என் யானைக்கால் என்னை மனிதனாக்கியிருக்கிறது.
(இவரை விட்டால் தமிழில் வேறு இலக்கியவாதியே கிடையாது என்று இன்றும் பல தீவிர தமிழ் ஆர்வலர்கள் னைத்துக் கொண்டு இருக்கிறார்கள். தம்பிக்கு தங்கைக்கு என்று சகட்டுக்கு புத்திமதி சொன்னவர்)
2. வருடக்கணக்கில் நடக்கும் போராட்டங்களையும் அதன் காரணமாக பெற்ற சன்மானங்களையும் அவன் மனம் ஒரு கணம் னைத்தது. இந்த நாட்டை வளர்ப்பதிலும் தேய்ப்பதிலும் பங்கு கொண்டுள்ள திரையுலகமும் அந்தப் போராட்டத்தில் அன்றாடம் கலந்து விட்ட மாபெரும் சக்தி என்பதை அவனால் புறக்கக்க முடியவில்லை.
அந்த சக்தியின் அழைப்பை ஏற்றுக் கொண்டு நல்ல வகையில் அதை திருப்பிவிட்டால் என்ன ? யோசித்தான். வீட்டுக்கொரு விசிடி லையம் வேண்டும் என்ற ஆவலை முதன் முதலில் தன் வரையில் தீர்த்துக் கொண்டான். ‘அருள் ‘, ‘ஜனா ‘, ‘பேரழகன் ‘, ‘கில்லி ‘ என்ற புதுப்படங்களையும் ‘ஜக்குபாய் ‘ ‘கிருஷ்ணலீலா ‘போன்ற இன்னும் வெளிவராத படங்களையும் முதலில் வாங்க தீர்மானித்தான்.
‘ இவ்வளவையும் நீங்கள் எந்த காலத்தில் பார்த்து முடிக்கப் போகிறீர்கள் ? ‘, என்று கேட்டாள் கமலா.
‘இந்த இடத்திற்கு வந்தாலே எனக்கு நம் பண்பாடு னைவுக்கு வருகிறது. என்னுடைய மடமையை உணரும் இடம் இது. இவற்றை நான் பார்த்து முடிக்கா விட்டால் என்ன ? நம்முடைய பையன் பவித்ரன் இவற்றைப் போட்டு பார்ப்பானல்லவா ? ‘,
(இவருக்கும் விசிறிகள் ஏராளம். ஞான பீட பரிசு பெற்ற ஒரே தமிழ் எழுத்தாளர். யாராவது சண்டைக்கு வந்து விடப் போகிறார்கள்)
3. ‘இவளை முதன் முதலில் எப்போது துரத்தினோம் ‘ கிருஷ்ணன் தனக்குள் கேட்டுக் கொள்கிறான். எப்பொழுது ? கிட்டத்தட்ட அறுபது வருடங்கள் இருக்குமா ? அதற்கு மேலேயே இருக்கும். இப்பொழுது அவனுக்கு ஐந்து வயது. அவளுக்கு ? இவனை விட ஐந்து வயது சின்னவள்.
‘அம்மா அம்மான்னு கொல்லைக் கதவை யாரோ தட்டறா பாரு ‘, அம்மா சமையல்கட்டிலிருந்து கத்தினாள். கிருஷ்ணன் கையில் வைத்திருந்த மெளத் ஆர்கனை வைத்து விட்டு புழக்கடை பக்கம் போனான்.
அப்போது கிருஷ்ணனின் அப்பா பம்ப்பில் தண்இர் அடித்துக் கொண்டிருந்தார். எவ்வளவுதான் கிணற்றில் நீர் இருந்தாலும் பம்ப் அடித்து தான் தண்இர் எடுத்துக் கொள்வதை விட மாட்டார். அவ்வளவு மடி!
புழக்கடை வாடமல்லிப் புதரில் தண்இர் பானையை கவிழ்த்துப் போட்டு அதன் மீதமர்ந்து பிளாஸ்டிக் மெளத்ஆர்கனில் அவன் வாசித்ததை அட்சர சுத்தமாக தாளம் போட்டு வாசித்துக் கொண்டிருந்தாள்.
கிருஷ்ணனுக்கு அந்த கணமே ஓடிப்போய் ஜார்ஜை தரதரவென்று இழுத்து வந்து அவள் முன்னால் றுத்த வேண்டும் போலிருந்தது.
ஐயோ! அவள் எப்படி தன்னை விட பிரமாதமாக வாசிக்கிறாளே! இவள் வாசிப்பில் ஜ“ஸஸ் மீண்டும் வந்து பிறந்து விடுவாரோ ?
‘இது என்ன ராகம் தெரியுமா ? ‘ ‘ ‘
அவன் கேட்க அவள் ஒரு கணம் ஒன்றும் புரியாமல் விழித்தாள்.
சங்கீதம் சொல்லிக் கொடுத்தால் மட்டும் வருகிற வித்தையில்லை. குடம் குடமாக தேன் குடித்திருக்க வேண்டும் என்று சொல்லும் அம்மாவின் வார்த்தைகள் சத்தியமான வார்த்தைகள். இல்லாவிட்டால் ஸ்வர ஞானம் கூடத் தெரியாதவள் ‘கன்னட பேமானி ‘ ராகத்தைப் பாடுவது எப்படி ?
(சொந்த கதை சோகக் கதை. மற்ற கதையும் ஒரே சோகம்தான்)
4. ஏன் பிளாட்பாரம் ஏறிப் போய்விட வேண்டும் என்று தோன்றுகிறது. இங்கேயே இப்படியே நடுரோட்டில்,இருந்து நடு ராத்திரி வருகிற நாய்களை என்ன அழகு எப்படியிருக்கிறது என்று பார்க்கலாம் என்று ஏன் னைக்கத் தோன்றவில்லை. எங்கு சுற்றினாலும் கடைசியில் பிளாட்பாரத்தில் போய் சுருண்டு விழ வேண்டும் என்பது பழக்கமாகி விட்டது. இன்னும் எத்தனை பயங்கள் இருக்கின்றன ? தூரத்தில் ஆட்டோ ஸ்டாண்ட்டில் குடித்து விட்டு கிடக்கும் மாரி கூட பதினோரு மயானதும் கண் விழித்தால் பிளட்பாரத்துக்குத்தான் வருவான். அதோ அங்கே தெரியும் பிச்சைக்காரன், தெருவில் குப்பை பொறுக்குபவன், ஆப்பம் சுடும் ஆயா, சுண்டல் விற்கும் ராமு என்று எல்லோரும் பிளாட்பாரத்துக்கு வந்தாக வேண்டும். பகலில் எங்கே வேண்டுமானாலும் மேயலாம். இரவில் தொழுவத்திற்குத்தான் வந்தாக வேண்டும் என்ற கட்டாயம் மாடுகளுக்கும் உண்டு.முதுகில் ஒரு ஈ உட்கார்ந்தது. மாரியின் முதுகைப் பார்த்தான். எப்படி கூனிக் குறுகிக் கிடந்தது ? உடனே திரும்பி தன் முதுகை பார்க்க வேண்டும் போல் இருந்தது. நடுரோட்டில் ன்று கொண்டு அப்படியெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அம்மாவிடம் சொன்னால் போதும் பார்த்துச் சொல்லி விடுவாள்.
( எங்கே இவங்களை காணும் ?ஓய்வு பெற்று விட்டார்களா ?வெள்ளை வெளேரென்று உயரமாய் கண்ணாடி போட்டுக் கொண்டு இன்டெலெக்சுவல் கதாநாயகனும் ரிடையர் ஆகி விட்டாரா ?)
5. தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி கொண்டு சுஷ்மா மெல்லச் சிரித்தாள்.
‘பெருக்கறதுக்கு சாதாரண தென்னம் விளக்குமாறு இருந்தாப் போறாதா ? எதுக்கு பிளாஸ்டிக் துடப்பம் ? ‘, என்று பாட்டி கேட்டதும் ஒரு கணம் தூக்கி வாரிப் போட்டது.
வெறும் பெருக்கறதுக்கும், வார்றதுக்கும் தானே பொறந்திருக்கோம். இதுக்கு இன்னும் வசதிப் பண்த் தராளாக்கும் ‘, என்று பாட்டி முணுமுணுத்தாள்.
அவள் சட்டென்று சுய னைவுக்கு வந்தாள். இவர்கள் உலகத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத லையில் இதைப் பற்றி விமர்சனம் செய்ய எனக்கு எந்த அருகதையும் இல்லை என்று அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள். ஆணும் பெண்ணும் விகல்பமில்லாமல் கூட்டிச் சுத்தம் செய்வது இந்தச் சமூகத்திற்கு நடைமுறைப் பழக்கமாக இருக்கலாம்.
அவளுக்கு தீடாரென்று மிஸஸ் வர்மாவின் னைவு வந்தது. அவர்கள் வீட்டில் தங்கியிருந்த போது மிஸ்டர் வர்மா வாசலை கூட்டிப் பெருக்கி சாத்தெளித்து பின் தான் மிஸஸ் வர்மாவை எழுப்புவார்.
‘ப்ளீஸ் எழுந்துண்டு ஒரு இழை கோலம் போட்டுடேன் ‘, என்று கெஞ்சுவார்.
இந்தச் சமூகம் வாயை மூடிக் கொண்டு ஜ“ரத்துக் கொள்ள வேண்டுமென்றால் வரையறையின் எல்லைக் கோடுகள் மட்டுமே அகன்று கொள்ள வேண்டும். மனித அன்பின் புது பரிமாணங்கள் அகல வேண்டாம். யோசித்ததில் ஆயாசமும் அலுப்புமே மிஞ்சியது.
(இவங்க கதையில் வருகிற குப்பைத்தொட்டி, குட்டி நாய், தோட்டி, பூனை எல்லாமே இவங்க மாதிரியே அறிவு பூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் யோசித்துக் கொண்டே…யிருக்கும்.)
6. ‘எனக்கு ரொம்ப பயம்மா இருக்கு அத்திம்பேர் ‘,
‘எதுக்கு ? ‘,
‘முக்யமானதை பிள்ளையாத்துகாரக் கிட்டேந்து மறைக்கிறோம் நாள பின்ன தெரிய வந்து ஏன் மறைச்சேள்னு கேட்டா ? ‘,
‘கேட்டா பாத்துக்கலாம். நீ முதல்லே உன் அலங்காரத்தை முடிச்சுக்கோ அவாள்லாம் வந்துடற நேரமாச்சு! ‘,
உடுத்திக் கொண்டிருந்த மடிசார் புடவையின் கொசுவத்தை கால் பாதத்தால் அழுத்திய வாறே மற்றொரு முனையை சரி செய்து கொண்டே ஜானகி கேட்டாள்.
‘கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி மடிசார் உடித்திக்கறதை மறைச்சு கல்யாணம் பண்ண்டு நாளைக்கு அவாத்துக்கு போனப்புறம் இதை மாத்திக்க முடியுமா ? ‘,. இந்தக் கேள்வியை ஜானகி கேட்டதும் வைதேகியின் முகம் மாறியது.
எனக்கென்னவோ இப்பவே சொல்லிடறது பெட்டர்னு தோணறது. உனக்கு அக்கா ? ‘, என்றதும்
நீ வேற! இதையே கேட்டுண்டு மச மசன்னு க்காதே! பக்தாத்துலே கொண்டு போய் கட்டிப் போட்டுருக்கிற ஜில்லுவையே நெனச்சிண்டு இருக்கேன். அவாளாலே சமாளிக்க முடியாம அது எப்பொ கட்டவிழ்த்துண்டு இங்கே குறுக்கும் நெடுக்குமா ஓடி மானத்தை வாங்கப் போறதோ ? ‘, என்று அக்கா புலம்பியதைக் கேட்டதும் இத்தனைக்
குழப்பத்திற்கும் நடுவில் தனக்கு ஒரு கல்யாணம் தேவைதானா என்று யோசித்தாள்.
வாசலில் இரண்டு மயில் அகவும் ஓசைப் போல் ஆட்டோ சத்தம் கேட்டது. இரண்டு பெண்கள், மூன்று சிறுவர்கள் இறங்கினார்கள்.
ஆரம்ப அறிமுகம் தொடங்கியது.
‘என்ன சாப்பிடறேள் ? காபியா, டாயா ? ‘,
‘முதல்லே பொண்ணை கூட்டிண்டு வாங்கோ ‘, என்று அமர்த்தலாய் பேசினார்கள்.
‘உக்காரும்மா ‘, என்று பக்கத்தில் அமர்த்தி அந்தச் சிறுவர்கள் அவளைக் கிள்ளிப் பார்த்தார்கள்.
எத்தனை வருஷமா வீட்டிலே இருக்கே ? சமைப்பியா ? கோலம் போடுவியா ? என்றதும் வைதே ?’ குறுக்கிட்டாள்.
‘வாசல்லே ஸ்டார் கோலம் போட்டது அவதான். பிரமாதமா பழையது பிழிஞ்சு போடுவா. எச்சப் பத்து பாக்காம மாவடு ஊறுகாயை கையால் எடுத்துத் தருவா ‘, என்று பெருமைப் பட்டுக் கோண்டாள்.
வாசலில் வள் வள் என்று குரல் கேட்டதும் இருவரும் திடுக்கிட்டுப் பார்த்தனர்.
(தமிழ்ப் பெண்களை தலை சிறந்த வெங்காய உரிப்பாளர்களாக வெற்றி பெறுவதற்கு உண்டான அத்தனை முயசியும் எடுப்பதாக பெருமைப் பட்டுக் கொள்ளும் இவர் உலகமெங்கிலும் செயற்கைக் கோள் மூலமாக வேறு அழியாத கோலமாக முயன்று கொண்டிருக்கிறார்.)
7. ‘பறவைகளின் பாஷை அறிந்தவன் முக்காலம் உணர்ந்த ஞானியாவான்.
கரவைகளின் ஒலி அறிந்தவன் முப்பாலும் உணர்ந்து அப்பால் செல்வான்
துறவிகளின் மோகம் உணர்ந்தவன் உலகிலேயே பெரிய பேமானியாவான்
யாகவா முனிவரின் மரண யோகம்
வேலூர் மத்திய சிறைச்சாலை. வேலூரின் வறண்ட தூசி றைந்த கந்தக பூமியில் ஆயிரம் ஏக்கரா பரப்பளவில் புல் பூண்டு கூட முளைத்து விடாத பாறை பூமியின் மேற்பரப்பில் அவரோடு சுவரோடு சுவராக ஒரு மதில் சுவர் அமைதியாக ன்றது.
முகப்பில் மட்டும் எல்லாத் தொலைக்காட்சி நாடகத்தன்மையான கதவு. கதவுகளுக்கு முன்னால் கிரீச்சிடலோடு வந்து ன்ற போலிஸ் ஜ“ப். உள்ளேயிருந்து இறங்கிய குருக்களின் முகத்தில் சொட்டு நீலம் போட்டு தோய்த்தது போன்ற வெண்ற மூன்று நாள் தாடி.அழுத்தி வாரிய தலையில் இறுகக் கட்டிய குடுமி. கையில் தர்ப்பை கட்டு. கூடவே இறங்கிய சிறைச்சாலை வார்டரை பார்த்ததும் கதவுகள் மரியாதையுடன் திறந்து கொள்கின்றன.இருவரும் சேர்ந்தே நுழைகிறார்கள்.
‘சாமி! முனீஸ்புரன்னு ஒரு கைதி. உங்கக் கிட்டே உங்க எருமை தொலைந்த விஷயத்தை சொல்லித்தான் ஆவேன் என்று இரண்டு நாளாய் ஒரேத் தொல்லை. அதான் உங்களை இங்கே கூட்டியாந்துட்டோம் ‘, என்று தயக்கத்துடன் இழுக்க
‘ஈஸ்வரோ ரக்ஷது. ஈச்வர சங்கல்பம் அப்படியிருந்துதுன்னா நானும் நீயும் அவன் கையில் வெறும் கருவிகள்தானே ‘,
‘இருந்தாலும் கோர்ட்ல அவன் ரெண்டு பசுமாடு திருடியதைத்தான் ஒப்புத்துக்கிட்டு இருக்கான். ஆனா ஒரு பெரிய மந்தையையே அவன் ஒளிச்சு வச்சிருக்கான்னு நாங்க சந்தேகப்படறோம் ‘, என்று ரகசியம்போல் எதையோ சொல்ல ஆசைப்படுவது புரிகிறது.
‘இருந்தாலும் என்னண்டை அவன் சொன்னதும் என்னுடைய எருமையை பாத்துண்டுதான் உங்களுக்கு உபகாரம் பண்ண முடியும் ‘, என்றார் தீர்மானமாக.
(திகில் கலந்த மர்மம் கலந்த காதல் கலந்த உணர்ச்சி கலந்த கதைகள் தந்து…. ?“ம்….)
8. அன்றிரவு அனைவரும் ஈசல் பொறுக்குவதற்காக ஆளுக்கொரு கூடையை எடுத்துக் கொண்டு கூடியிருந்தனர். காஞ்சிபுரத்திற்குப் பக்கத்தில் காளான் பிடுங்குவற்காகப் போயிருந்த போது வாங்கிப் பரிசளித்த சாம்பல் ற உடலொடு அழுக்குக் கறை சேலை அவள் இடையை தழுவ வந்திருந்தாள்.
‘எதைக் கட்டிக் கொண்டாலும் அசல் பிச்சைக்காரிதான் நீ ‘, என்று கிசுகிசுத்த ஷ’வா அவளது கையை மெதுவாக முகர்ந்து விட்டு,
‘அட! ஊச ரச வாசனை ஊரைத் தூக்கறதே! ‘, என்றான் உல்லாசமாக.
‘நீங்க மட்டும்…. இடுப்பில் ஓட்டைக் கோவணம் தோளில் தொங்கும் கோப்பை காவித்துண்டு சகிதம்…. ஈசல் பொறுக்குவதற்கு தோதாத்தான் உடித்திகிட்டு இருக்கீங்க ‘, பதிலுக்கு அவளும் பரிகசித்தாள்.
இரண்டு தினங்களுக்குப் பிறகு சம்மந்தி அம்மாள் வீட்டுக்கு மனைவியும் மகளும் சென்று ஷேமம் விசாரித்து விட்டு வர வேண்டும் என்பது முனிராமின் உத்திரவு. குப்பைகளை அடைத்து வைத்திருக்கும் அறையிலிருந்த அழுக்குப் பையிலிருந்து அழுகல் பழங்களையும் ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த நாயர் கடை பொறை பன்னையும் ஒரு மஞ்ச பையில் எடுத்துப் போட்டு ரப்பிக் கொண்டிருந்தாள்.
‘அத்தை சூடாக தண்இர் குடித்து விட்டு கிளம்புங்கள் ‘, என்று உபசரித்தாள். ‘இந்தாங்க உங்களுக்கும் உப்பு போட்டு தண்இ கொண்டு வந்திருக்கிறேன் ‘, என்று அலுமினியத் தம்ளரை நீட்டிய போது அதை வாங்க அவன் கரம் நடுங்கியது.
ன்று கொண்டே வாங்கி மடமடவென்று குடித்து விட்டு ஒரு மிஷம் கூட அனாவசியமாகத் தாமதியாமல் அவன் விரைந்து விட்டான்.
உட்ம்பு முழுவதும் சூடாகி விட்டது. பயமா குழப்பமா என்று இனம் தெரியாத உணர்வில் நெஞ்சு திக்திக்கென்று அடித்துக் கொண்டது.
அவள் மாமியார் வழக்கம் போல் கனமானதொரு கருப்புப் போர்வையை போர்த்தி கொண்டு தலை றைய ஈரும் பேனுமாக நெற்றி றைய கருப்புத் திட்டும் காதிலும் மூக்கிலும் ஈர்க்குச்சி பளிச்சிட கழுவித் துடைத்த சரளைக் கல்லாய் அதே சிடுசிடுத்த முகத்துடன் மூலையில் தனியே அமர்ந்திருந்தாள்.
(ஆப்பிரிக்கா போனால் என்ன ? அண்டார்டிக்கா போனால் என்ன ? பெண்கள் கஷ்டமும் மாமியார் கொடுமையும் மாறாது)
9. ‘சவாலங்கடி கிரிகிரி
சைதாப்பேட்டை வடகறி
விட்டாம் பாரு ஜாங்கிரி
சோன்பப்டி நைனா நைனா
?ா சவலங்கடி விட்டாம் பாரு
இயல்பாகவே பரம ?ம்சனுக்கு கூனியும் குறுகியும் இணைந்த உடம்பு. எந்த இடத்திலாவது லேசாகக் கிள்ளினால் கூட சதை வராது. எலும்பு வருகிற உடம்பு அது. அந்த உடலில் நோஞ்சான் உண்டு. தசை கிடையாது. அகோரம் உண்டு.அலங்காரம் கிடையாது. பள்ளிக் கூடத்தில் படிக்கிற நாளில் ஆசிரியர் சாக்பீஸை மூக்கருகே காட்டினால் உடனே தும்மல் வந்து விடும். அவ்வளவு மென்மையான உடல் அவனுடையது.
அன்று நடுத்தெருவில் போலிஸ’டம் திருடிவிட்டு வாங்கிய அறை தன் முகத்திலேயே விழுந்தது போல் வெம்பித் துடித்தாள் சம்பூர்ணம். விழிகளில் தொற்று நோய் ஊற்றெடுத்து வர நெஞ்சம் பதைத்தது. உள் நடுங்கி ன்றாள் அவள். நகக் கண்ல் இணையும் ஊசி போல் அவன் அறை வாங்கிய வலியின் வேதனையில் பங்கு கொள்வதற்காக அவள் மனம் விரைந்து அந்த வேதனையில் போய் இணைந்தது.
‘பரம ?ம்சன் நீங்கள் அன்று எனக்காக வாழைப்பழம் திருடி மழையில் வழுக்கி விழுந்தீர்கள். இன்று எனக்காக ஸ்டிக்கர் பொட்டு எடுக்கப்போய் அறை வாங்கினீர்கள். இன்னும் என்னென்ன வாங்கி தரச் சொல்ல னைத்தேனோ இந்தப்பாவி! ‘, என்று னைத்து உள்ளம் புழுங்கினாள்.
அவள் சிறுமியாக இருந்தபோது கேட்டிருந்த பழையனூர் நீலிக் கதையை காவியமாகக் கற்ற போதும் அப்பா சொல்லியிருந்தார். உலகிலேயே பெரிய சோகக் கதை இதுதான் அம்மா. நீலி என்ற பெண்ன் கதையை பேனாவால் எழுதியிருக்க மாட்டார். ரத்தத்தால் தான் எழுதி அழித்திருப்பார். என்று பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் மனம் இளகியவர்களுக்கு கண்களில் ஈரம் கசிந்து விட்டது.
(இந்தக் கதை எத்தனையோ பேர் நெஞ்சைத் தொட்டு அவர்களின் குழந்தைகளுக்கு இந்த கதாநாயகன் கதாநாயகியின் பெயரை வைத்ததாக ஒரு…. வெறும் பெயரை மட்டும் வைத்து விட்டால் போதுமா ? இதேபோல் இலட்சியவாதியாக இருக்க வேண்டாமா)
10. பத்து எழுத்தாளர்கள் இருக்க வேண்டும் என்று ஏதாவது வேண்டுதலா என்ன ? நான் எழுதிய சம்பவங்களிலிருந்து ‘க்யூபிச ‘ முறையில் நீங்கள் ஒரு கதை எழுதி விடுங்கள். பிறகு நீங்கதான் அந்த பத்தாவது எழுத்தாளர். இதுக்கே எனக்கு வெலவெலத்துப் போச்சு. இதுவரை படிக்காத எழுத்தாளர்களையெல்லாம் படித்து.
பின் குறிப்பு: போன வார எழுத்துக்களுக்கு விடை தெரியவில்லையா ? இன்னும் ஒரு வாரம் …. இந்த வாரத்தையும் சேர்த்து அடுத்த வாரம். என்னுடன் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்ட வாசகர்களுக்கு நன்றி
பிகு: ஈசலை நிஜமாகவே வறுத்து சாப்பிடலாம் கருவடாம் அப்பளம் போல்.(இதேபோல் பச்சைக்கிளி மன்னிக்கவும் வெட்டுக்கிளியைக் கூட). சீசனல் காய்கறிகள் போல் மழைக்காலத்தில் மட்டும் தெருவிளக்கு அடியில் தேட வேண்டியிருக்கும்.
சித்ரா ரமேஷ் சிங்கப்பூர்
kjramesh@pacific.net.sg
- நைஜீரியா -2: கிரிஸ்துவ தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு எதிராக முஸ்லிம்கள்
- கீழ்படிதல் குறித்த ஒரு உளவியல் பரிசோதனை
- ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து
- அமெரிக்கக் கூட்டு மாநிலங்களின் விடுதலைப் புரட்சி நூற்றாண்டில் தோன்றிய சுதந்திரச் சிலை [American War of Independence Centennial S
- சமீபத்தில் படித்தவை -3 : உமா மகேஸ்வரி , சுஜாதா, மனுஷ்ய புத்திரன் , யசுநாரி கவபத்தா, வெ சாமிநாதன் , நாஞ்சில் நாடன்
- தண்ணீர் தேடும் தமிழகம்
- மூங்கில் இலைப் படகுகள்
- பட தலைப்புகள்
- ‘ஒரு பொன்விழா கொண்டாட்டம் ‘ தொடர்ச்சி
- கடிதங்கள்- மே 20,2004
- தமிழ் இலக்கியக் கூட்டமும் புத்தகக் கண்காட்சியும்
- நைஜீரியா 1 : நைஜீரிய இனக்கலவரங்களில் முஸ்லீம்கள் மீது கிருஸ்துவர்கள் தாக்குதலைத் தொடர்ந்து யெல்வாவில் 50 கிருஸ்துவர்கள் கொலை
- ஓவிய ரசனை
- நைஜீரியா 3 : ஆப்ரிக்கா கிருஸ்துவர்-முஸ்லிம் கலவரம் : நைஜீரியா கானோ நகரத்தில் 500-600 கிரிஸ்தவர்கள் கொலை
- நைஜீரியா 4:நைஜீரியாவின் வன்முறைக்குப் பின்னே மதமல்ல , பொருளாதாரம் – ஒரு ஆராய்ச்சி
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் — 6
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 3)
- புலம் பெயர்ந்த வாழ்வில் இனக் கலப்பு
- மாண்புமிகு தமிழக முதல்வருக்கு
- ஊழ்வினை
- ஆர்வம்
- நீர் வளர்ப்பீர்
- பிரிவினை
- தேர்தல்களும் முடிவுகளும் எண்ணங்களும்
- மஸ்னவி கதை – 08-கீரை வியாபாரியும் கிளியும்
- பழையன கழிதலும் புதியன புகுதலும்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்-20
- உறவுக்காக ஏங்கும் இதயங்கள்….
- பிறந்த மண்ணுக்கு – 3
- என் அண்ணனின் புகைப்படம்
- வாரபலன் மே 20,2004 : தொண்டு கிழம் வயசாளி எம்பியாகித் தொண்டு செய்ய.. , அட்டப்பாடி அடாவடி, எருதந்துறையில் கவிதைத் துறை,
- அரசியல் கட்சிகள் வெற்றி, மக்கள் தோல்வி
- தேர்தல் 2004 (தொடர்ச்சி) – முதல் 3 தோல்விகள்
- ‘இண்டியாவின் ‘ இறக்குமதி பிரதமரின் திறமை
- வாழ்க மதச்சார்பின்மை
- கா ற் று த் த ட ம்
- பணம் – ஒரு பால பாடம்
- ஈரோட்டுப் பாதை சரியா ? – 2
- தமிழவன் கவிதைகள்-ஆறு
- நட்பாகுமா ?
- வாழ்க்கை
- தனிமை
- தலைகளே….
- கவிக்கட்டு – 7 -தெருப்பிச்சைக்காரன்
- அதி மேதாவிகள்
- அன்புடன் இதயம் – 18. நாணமே நீயிடும் அரிதாரம்