தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்

This entry is part [part not set] of 31 in the series 20091029_Issue

முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசி¡¢யர், மா.மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை,



மேடைநாடகத்தின் மேன்மைக்கு இரவு பகலென்று பாராது உழைத்த மேதைகளுள் ஒருவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் ஆவார். தமிழ் நாடக உலகில் ‘சுவாமிகள்’ என்று குறிப்பிட்டாலே அ·து சங்கரதாஸ் சுவாமிகளையே குறிக்கும் எனும் அளவிற்கு அனைவா¢ன் போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உ¡¢யவராகத் திகழ்ந்தவர் சங்கரதாஸ் சுவாமிகள் ஆவார். இளவயதிலேயே அறிஞராகத் திகழ்ந்தார். வாழ்ந்ததோ முப்பதாண்டுகள் என்றாலும் மூன்னூறு ஆண்டுகளுக்கு¡¢ய பணியைச் செய்து முடித்தார் சுவாமிகள்.

அத்தகைய பெருமைக்கு¡¢ய சங்கரதாஸ் சுவாமிகள் 1867-ஆம் ஆண்டு ஆவணித் திங்கள் 23-ஆம் நாள் தூத்துக்குடியில் தாமோதரம் என்பார்க்கு மகனாகப் பிறந்தார். முறையாக தமிழ் பயின்றதோடு இசையையும் நன்கு கற்றிருந்த சங்கரதாசர் தமது பதினைந்தாம் வயதிலேயே நல்ல கவிஞராகத் திகழ்ந்தார். சுவாமிகள் இருபத்து நான்காம் வயதில் நாடகத்துறைக்கு வந்தார். 1902-ஆம் ஆண்டு சுவாமிகள் நாடக ஆசி¡¢யர் ஆனார். உடுமலைச் சரபம் முத்துசாமிக் கவிராயர், கும்பகோணம் வீராசாமிக் கவிராயர், ஆ¡¢யகான சந்தானகிருஷ்ண நாயுடு ஆகியோர் அப்போதைய காலகட்டத்தில் நாடக ஆசி¡¢யர்களாக விளங்கினர்.

சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகத்தில் அழகு தமிழ் எழிற்கோலம் பூண்டது போன்றே இனிய இசையும் பூத்துக் குலுங்கியது. அக்காலத்தில் பலரும் தமது விருப்பம்போலப் புராண நாடகங்களை நடத்தி வந்தனர். அந்த நிலையை மாற்றி அமைத்தவர் சுவாமிகளே ஆவார். புராணக் கதைகளுக்கு ஒழுங்கான நாடக வடிவமும், இனிமையான பாடல்களையும் வகுத்து, அந்நாடகங்களின் தரத்தினை உயர்த்தினார்.

பவளக்கொடி, அல்லி அர்ச்சுனா, சாரங்கதரா, சிறுத்தொண்டர், பிரகலாதன், பிரபுலிங்க லீலை, நல்லதங்காள், சத்தியவான் சாவித்தி¡¢, கோவலன், வள்ளி திருமணம், ஞானசெளந்தா¢, மணிமேகலை, சதிஅனுசுயா, சுலோசனா சதி, சீமந்தினி, அபிமன்யு சுந்தா¢, சிந்தாமணி, இலங்காதகனம், மிருச்சகடி, ரோமியோ ஜூலியட், சிம்பலின் உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களைப் படைத்தளித்துள்ளார்.

சங்கரதாஸ்சுவாமிகள் கீசகன், இரணியன், இடும்பன், நரகாசூரன், யமன் ஆகிய வேடங்களில் நடித்துச் சிறந்த நடிகராகவும் புகழ்பெற்றார்.சுவாமிகள் வீரமிகு வேடமேற்று நடித்ததோடு மட்டுமல்லாமல் அந்த வேடத்தின் சிறப்புணர்ந்து நடிக்கும் ஆற்றல் மிக்கவராகவும் திகழ்ந்தார். சுவாமிகளுடன் கலியாணராமய்யர், பரமேஸ்வரய்யர், வி.பி.ஜானகியம்மாள், பரமக்குடி அரங்கசாமி அய்யர், ராமுடு அய்யர், பி.டி. தாயம்மாள் முதலியோர் சமகாலத்தில் நடித்த நடிகர்களாவர்.

பி.எஸ். வேலு நாயர், சின்னச் சாமா, உம்.ஆர்.கோவிந்தசாமி முதலிய பொ¢ய நடிகர்கள் சுவாமிகளின் மாணவர்களாகத் திகழ்ந்தனர். அவ்வை தி.க. சண்முகம், தி.க.பகவதி ஆகியோர் சிறுவர்களாக இருந்தபோது சுவாமிகளின் நாடகக் குழுவில் நாடகம் பயின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சங்கரதாஸ் சுவாமிகள் 1910-ஆம் ஆண்டு ‘மதுரை தத்துவ மீனலோசனி வித்வ பால சபா’ என்ற பெயா¢ல் ஒரு சிறுவர் நாடகக் குழுவைத் தொடங்கினார். அந்தக்குழு மிகச் சிறப்பாக இயங்கியது. இக்குழுவில் தான் டி.கே.எஸ் சகோதரர்கள் நடிக்கச் சேர்ந்தார்கள் என்பது குறிப்பிடற்கு¡¢யதாகும்.

ராமுடு அய்யர், நடேச தீட்சதர், கல்யாணராமய்யர், சுவாமிநாயுடு ஆகியோ¡¢ன் நாடக சபைகளில் சுவாமிகள் ஆசி¡¢யராகவும் நடிகராகவும் இருந்து பணியாற்றினார்.

தமிழில் சொற்கள், எதுகை, மோனை, தொடை, சீர், தளை முதலியவை, சந்தம், வண்ணம், சிந்து முதலியவை சுவாமிகளின் கவிதையைத் தேடித் தாமே வந்ததுபோன்று அவரது நாடகங்களில் பல இசைப் பாடல்களைக் கையாண்டுள்ளார். சுவாமிகளின் நாடகங்களில் பல இசைப்பாடல்கள் இயல்பாக இடம்பெற்றன.

சங்கரதாஸ் சுவாமிகளின் சுலோசனா சதி எனும் நாடகத்தைப் பற்றி, “சுவாமிகள் விநாயகர் துதி நீங்களலாக 45 தனிப்பாடல்கள், 19 தர்க்கப் பாடல்கள், 11 விருத்தங்கள், 5 கலித்துறைகள், 4 வெண்பாக்கள், ஒரு கொச்சகக் கலிப்பா ஆக 85 இசைப்பாக்கள் எழுதியிருக்கிறார்” என்று நாரண துரைக்கண்ணன் குறிப்பிடுகிறார். மேலும் இங்கிலாந்துக்குச் சேக்ஸ்பியர் போல, தமிழகத்திற்கு சங்கரதாசர் என்று கூறலாம் என்றும் அவர் பாராட்டிக் கூறியுள்ளார்.

சஙகரதாஸ் சுவாமிகளின் தலைமாணாக்கராகிய அவ்வை சண்முகம், “சங்கரதாஸ் சுவாமிகள் ஒருநாளில் நூற்றுக்கணக்கான பாடல்கள் உரையாடல்களுடன் அடித்தல், திருத்தல் இல்லாமல் எழுதியிருந்தஅபிமன்யு சுந்தா¢ நாடகத்தைக் கண்டு எல்லாரும் அதிசயப்பட்டார்கள்” என்று தமது ஆசி¡¢யரைப் பற்றி வியந்து கூறுகிறார்.

இளம் வயதிலேயே துறவு பூண்ட சங்கரதாஸ் சுவாமிகள் இறுதிவரையில் துறவியாகவே இருந்து அத்துறவின் தூய்மையைக் காத்தார், நாடகத்தில் நடிக்கும்போதும் கலைஞர்களிடம் ஒழுங்கும் கட்டுப்பாடும் இருக்க வேண்டும் என்பதில் கருத்தாக இருந்தார். நலிவுற்றிருந்த நாடகத்துறைக்குப் புத்துயிர் அளித்ததோடு புனிதமான துறையாகவும் சங்கரதாஸர் மாற்றியமைத்தார். சுவாமிகள் படைத்தளித்த நாடகங்கள் பல புராண நாடகங்களே ஆனாலும் படித்தவரும் பாமரரும் கண்டு போற்றும் திறமும் தரமும் பெற்றனவாக விளங்கின.சுவாமிகள் முறையாகத் தமிழ் பயின்ற நல்லறிஞராக விளங்கியதால் அவரது நாடகத்தில் சொல்லழகுக்கும், பொருள்நயத்திற்கும் குறைவின்றி இருந்தது.

அவரது வள்ளிதிருமண நாடகத்தில் இடம்பெற்றுள்ள,

“காயாத கானகத்தே நின்றுலவுநற் கா¡¢கையே”

என்ற முருகன் வேடனாக வந்து வள்ளியைப் பார்த்துப் பாடும் பாடல் இன்றும் அனைவரும் விரும்பிச் சுவைத்துப் பாடக் கூடிய பாடலாக விளங்குகிறது. வள்ளிதிருமணம் நாடகம் தொடங்கும் போது இன்றும் நாடகக் கலைஞர்கள் “எங்களின் நாடகப் பேராசான் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளுக்கு வணக்கம்” என்று கூறிய பின்னரே நாடகத்தைத் தொடங்குகின்றனர்

ஒருமுறை மதுரையில் சுவாமிகள் கோவலன் நாடகத்தினை நடத்திக் கொண்டிருந்தார். அந்நாடகத்தில், “மாபாவியோர் கூடி வாழும் மதுரைக்கு மன்னா!” என்று கண்ணகி கூறுவதாக ஒரு தொடரை அமைத்திருந்தார். மதுரை மக்கள் அதற்குக் கடும் எதிர்ப்பைத் தொ¢வித்தனர். அவ்வாறு எதிர்த்தவர்களைப் பார்த்து, “மா-திருமகள், பா-கலைமகள், வி-மலைமகள் மூவரும் சேர்ந்து வாழும் மதுரை” என்று விளக்கம் தந்து பரஞ்சோதி முனிவா¢ன் திருவிளையாடலை மேற்கோள் காட்டிச் சமாதானப்படுத்தினார் . அங்கிருந்த தமிழ்சங்கப் புலவர்கள், “சுவாமிகளே!நீர் எந்தக் கருத்தில் எழுதியிருந்தாலும் சா¢ உமது புலமைக்குத் தலைவணங்குகிறோம்” என்று கூறினர். இத்தகைய தமிழாற்றல் வாய்ந்த பெருந்தகையாக சங்கரதாஸ் சுவாமிகள் விளங்கினார்.

கலைவாணர் என்.எஸ.கிருஷ்ணன், “சங்கரதாஸ் சுவாமிகள் நாடக உலக மாமேதை; கலங்கரை விளக்கம்; நாடக உலகின் இமயமலை” என்று குறிப்பிடுகிறார்.”தமிழ் நாடக மேதை; தமிழ் நாடக உலகின் தந்தை; தமிழ் நாடகப் பேரறிஞர்; நடிப்புக் கலையின் பேராசான்;. ஞா¡னச் செம்மல்” என்ற சர்.பி.டி.ராஜன் பாராட்டிக் கூறியுள்ளார்.

“நாடகக்கலையின் ஆணிவேர்”எஸ்.வி.சகஸ்ரநாமம் அவர்களும், “சுவாமிகளின் நாடகங்கள் தாம், தமிழ் நாடகக்கலை வர்ச்சிக்கே அடிப்படைச் செல்வங்கள்”என்று அவ்வை தி.க. சண்முகம் அவர்களும் புகழ்ந்து கூறுகின்றனர். பொதுவுடைமைத் தலைவர் ப.ஜீவானந்தம்,”சுவாமிகளைப் போன்ற ஒரு மேதை தமிழகத்தில் முன்பு இருந்ததில்லை; பின்பும் இருக்கவில்லை”. என்று கூறியிருப்பதும் பெருமைக்கு¡¢யதாக அமைந்துள்ளது.

இத்தகைய சிறப்புகளுக்கு உ¡¢யவராகத் திகழ்ந்த சங்கரதாஸ் சுவாமிகள் 1920-ஆம் ஆண்டில் தமது 54-ஆம் வயதில் இயற்கை எய்தினார். அவர் முப்பது ஆண்டுகள் மட்டுமே இவ்வுலகில் வாழ்ந்தார். அம்முப்பது ஆண்டுகளும் நாடக வளர்ச்சிப் பணிக்காகவே தம்மை அற்பணித்துக் கொண்டு வாழ்ந்தார். தமிழ் நாடக உலகின் பேராசி¡¢யராகத் திகழ்ந்த சுவாமிகளின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்; அவரது புகழ் என்றென்றும் தமிழர் நெஞ்சங்களிலும் நிறைந்திருக்கும்.

முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசி¡¢யர், மா.மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை,

E.Mail. sethumalar68 yahoo.com

Series Navigation

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.