முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.
உலக வாழ்வு இன்பமும், துன்பமும் கலந்தது. ஆனால் வாழ்வில் அனைத்து நிகழ்வுகளிலும் அவலம் நூலிழையாக ஊடுருவி நிற்கிறது. மனிதனுக்கு மகிழ்விலும் கண்ணீர் அரும்புகிறது. அவலத்திலும் கண்ணீர் அரும்புகிறது.சிலவேளைகளில் இவ்வவலமே மனதிற்கு ஓர் அமைதியையும் தருவதாக அமைகிறது. மனிதனின் அவலத்தின்போது பல்வேறுவாழ்க்கை உண்மைகள் வெளிப்படுகின்றன. ஒருவா¢ன் பண்புகள், இயல்புகள் அனைத்தும் அனைவராலும் பேசப்படுகின்றன.வாழ்ககையை மையப் பொருளாகக் கொண்ட இலக்கியத்லும் இவ்வியல்பு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது நோக்கத்தக்கது. இதனைத் தொல்காப்பியர் கையறுநிலை என்று புறத்தினையியலில் (புறத்,77) காஞ்சித்திணையிலும், அழுகை என்று மெய்ப்பாட்டியலிலும் குறிப்பிடுகிறார். தொல்காப்பியர் கூறும் எண் சுவைகளுள் முதலிடம் பெறுவது நகைச்சுவையாகும். அதனையடுத்தே அவலச்சுவை இடம்பெறுகிறது. அக்காலச் சான்றோர் அவலத்திலும் இன்பத்தை முதன்மையாகக் கொண்டனர் என்பது இதிலிருந்து புலப்படுவதை நன்கு உணரலாம். புறப்பொருள் வெண்பாமாலை பொதுவியலில் (நூற்பா 28) எடுத்துரைக்கிறது. ஆனந்தப்பையுள், மன்னைக்காஞ்சி ஆகியனவும் இக்கையறுநிலையையே குறிக்கும்.
தனிப்பட்டோர் புலம்புதலும் தங்கள் உள்ளத் துயரத்தை வெளிப்படுத்துதலும் கையறுநிலைப் பாடல் என்று ஆங்கில அறிஞர் ஹட்சன் குறிப்பிடுகிறார். இறந்துபட்ட பெருந்தலைவனது அரும்பெரும் செயல்களையும் பண்புகளையும் புகழ்ந்து நினைவு கூர்ந்து பாடுவதாக கையறுநிலை பெற்ற வளர்ச்சியையும் அவர் எடுத்துரைப்பார். தொல்காப்பியர்
“இழிவே இழவே அசைவே வறுமையென
விளிவில் கொள்கை அழுகை நான்கே” (மெய்ப்,1199)
என்று அழுகையின் தோற்றம் பற்றி குறிப்பிடுகின்றார். காப்பியர் குறிப்பிடும் இம்மெய்ப்பாடு புறத்திணை கையறுநிலையுடன் பொருந்தியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
புறத்திணையில் இடம்பெறும் அவலங்கள் அனைத்தும் இழத்தல் பொருட்டாகவே அமைந்திருப்பது நோக்கத்தக்கது. புரவலனை இழந்த புலவன் வாழ்வில் அவலம், நண்பனை இழந்த நெஞ்சில் அவலம், தந்தையைப் பி¡¢ந்த உள்ளத்தே அவலம், இளமையைஇழந்த வாழ்வில் ஏக்கம், பழகிய பொருள்களைப் பி¡¢வதில் பெருகும் கண்ணீர் எனத் துயரப் பெருமூச்சுக்களும் துன்பக் கண்ணீர் பெருக்கும் கையறுநிலைக் கவிதைகளாகப் புறநானூற்றில் 38 பாடல்கள் இடம்பெறுகின்றன. ஆனந்தப்பையுள் துறையில் 6 பாடல்கள் அமைந்துள்ளன.
பெருஞ்சாத்தான் இறந்தான். அதனால் துயருற்ற கீரத்தனார் என்னும் புலவர்,
“வல்வேல் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே” (புறம்.242)
என்று பாடுகின்றார். பெருஞ்சாத்தான் இல்லாத ஊ¡¢ல் மகிழ்ச்சியே இல்லை. பூத்துக் குலுங்கும் புது முல்லையின் அழகை எடுத்துக் காண்பாரும் இல்லை. தொடுத்து முடிவாரும் இல்லை என்று மனம் வெதும்பப் பாடுவது புலவா¢ன் அன்புள்ளத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
புலவர்களை ஆதா¢த்த கிள்ளிவளவன் இறந்துபட மாசாத்தனார் கூற்றத்தை விளித்து,
“இளையோன் கொண்டனை ஆயின்
இனியார் மற்று நின் பசிதீர்ப்போரே” (புறம்.227)
என்று வினவுகிறார். வேள் எவ்வியின் இறப்புச் செய்தியைக் கேட்டு வெள்ளெருக்கிலையார், “ஐயோ காலையில் கேட்ட செய்தி பொய்யாகாதோ” (புறம்.233) என்று புலம்புகிறார். மழை பெய்யும் இரவில் மரக்கலம் கவிழ கண்ணில்லாத ஊமன் கடலில் அமிழந்தாற்போல அளந்தறியா அலைகடலில் அவலமாகிய மறுசுழியின் கண் துன்புறுவதைவிட இறந்து படுதலே நன்றெனப் பாடுகிறார் பெருஞ்சித்திரனார்(புறம். 238). வெளிமான் இறப்பை எண்ணி பெருக்கும் கண்ணீர் இப்பாடல்களில் தேங்கியிருக்கக் காணலாம்.
மன்னனது பெருஞ்செயல்களை அடுக்கிக் கூறி அவலம் கொள்ளும் பாடல்கள் பல புறநானூற்றில் உள்ளன(புறம். 221,224,239). ‘சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே!’ எனத் தொடங்கி ஒளவையார் அதியமானின் அருஞ்செயல்களை நினைவுபடுத்திப் பாடுவதும் அதுபோன்றதேயாகும். பா¡¢மகளிர் தந்தையையிழந்து வாடும் தங்கள் அவல நிலையினை
“அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்
எந்தையும் உடையேம்” (புறம். 112)
என மனமுருகப் பாடுகின்றனர்.
பறம்பு மலையில் பலகாலம் தங்கி வாழ்ந்த கபிலர் அம்மலையினைப் பி¡¢யும்போது தமது கண்ணீரைக் கட்டுப்படுத்தாது,
“பா¡¢ மாய்ந்தெனக் கலங்கிக் கையற்று
நீர்வார் கண்ணேம் தொழுதுநிற் பழிச்சிச்
சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே” (புறம்.113)
என்று கலஙகிப் பறம்பினைத் திரும்பத் திரும்பத் திரும்பிப் பார்த்துக்கொண்டே வருந்திப் பாடும் பாடலும் அவலநிலையை உணர்த்தும் பாடலாக அமைந்துள்ளது.
பறம்பு நாட்டு வளத்தை நினைந்து நினைந்து இவ்வளம் அழிந்துபடுமோ! என்று அவலம் கொள்ளும் நெஞ்சம் கல பாடல்களில் புலப்படுகிறது(புறம்.117,118,119,120). பா¡¢மகளி¡¢ன் செல்வச் சிறப்பையும் அவல நிலையையும் முரண்படவைத்துப் பாடுவதும் (புறம்.116), இறந்த நண்பனை எண்ணி,
“மலைகெழு நாட! மா வண் பா¡¢!
சிலை கெழு கேண்மைக்கு ஒவ்வாய், நீ; எற்
புலந்தனை ஆகுவை” (புறம்.236)
எனப் பாடுவதும் அவல நிலையினைத் தெளிவாகக் காட்டுகின்றன.
கழிந்து விட்ட இளமையை எண்ணி,
“இனிநினைந்து இரக்கம் ஆகின்று!” (புறம்.243)
எனத் தொடித்தலை விழுத்தண்டினார் பாடுவதும் நெஞ்சம் உருக்கும் பாடலாக அமைந்துள்ளது.
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை தன் மனைவி பெருங்கோப்பெண்டு இறந்தபோது,
“கள்ளி போகிய களா¢ மருங்கின்
வெள்ளிடைப் பொத்திய விளை விறகு ஈமத்து,
ஒள்அழற் பள்ளிப் பாயல் சேர்த்தி,
ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை;” (புறம். 245)
என் உயிரைப் போக்குகின்ற என் துன்பத்தின் அளவு எவ்வளவோ? என்று தான் இறவாது வாழ்வதை எண்ணி வருந்துகின்றான்.
தனது கணவன் இறந்தபோது வருந்திய பூதப்பாண்டியன் மனைவி தீயும் பொய்கையும் ஒன்றே என்று கூறி(புறம்.246) என்று தீப்பாய்கிறாள்.கணவன் இறந்தபின்னர் அதனால் மனைவி துன்பமுறுகிறாள். அதனால் இதனை ஆனந்தப்பையுள் துறை என்று குறிப்பிடுவதும் நோக்கற்கு¡¢யதாகும். வெளிமான் மறைந்தபின்னர், அவன் தம்பி இளவெளிமானைப் பா¢சில் கொடு எனப் பெருஞ்சித்திரனார் கேட்க இளவெளிமானோ சிறிதளவே கொடுத்தான். அதனைக் கண்ட பெருஞ்சித்திரனார் அதனை வாங்காது வருந்தி தனது மனதிற்கு, ” நெஞ்சமே! நாம் போவோமாக! கண்டோர் யாவரும் அறியுமாறு நம்மைக் கண்டு இரங்காதவா¢டம் நின்று சுருங்கி, நன்கு கனிந்துவராத பழத்திற்காகக் கவலைப்படுவார் இங்கில்லை” (புறம்.207) என்று மொழிகிறார்.
தம்பியால் நாட்டிலிருந்து துரத்தப்பட்டு காட்டில் வசிக்கின்றான் குமணன். அவனைப் பார்ப்பதற்காக வந்த பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் தனது வறுமைநிலையை,
“ஆடுநனி மறந்த கோடு உயர் அடுப்பின்
ஆம்பி பூப்ப, அதம்பு பசி உழவா,
பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி,
இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
சுவைத்தெகறு அழூஉம் தன்மகத்து முகம் நோக்கி,
நீரொடு நிறைந்த ஈர்இதழ் மழைக்கண் என்
மனையோள் எவ்வம் நோக்கி, நினைஇ,
நிற் படர்ந்திசினே-நல்போர்க் குமண!” (புறம்.164)
என்று குமண வள்ளலிடம் எடுத்துரைத்துப் பா¢சில் கேட்கிறார்.
இப்பாடலில் தனது வறுமைநிலையை நினைத்துப் புலவர் வருந்திக் கூறியிருப்பது அவலத்தை மிகுதியாக்குகின்றது. உணவு சமைத்தலை மறந்த உயர்ந்து ஓங்கிய அடுப்பில் காளான் பூத்துள்ளது; பசியால் வருந்திப் பாலின்மையால் தோல்போன்றுள்ள துளை தூர்ந்த வறிய முலையை சுவைக்குந்தோறும் பால் காணாமல் குழந்தை அழுகின்றது; அக்குழந்தையின் முகத்தைப் பார்த்து நீர் நிரம்பிய கண்ணோடு என் மனைவி வருந்துவாள்; என் மனைவியின் வருத்தத்தைப் பார்த்து, இத்துன்பம் தீர்த்தற்கு¡¢யவன் நீயென நினைந்து நின்னிடத்து வந்தேன்; என்று புலவர் குமண வள்ளலிடம் தனது வறுமைநிலையை மனமுருக எடுத்துக் கூறுவது இதயத்தை நெகிழவைப்பதாக அமைந்துள்ளது.
இங்ஙனம் புரவலனை இழந்த புலவன், தந்தையைஇழந்த மக்கள், நண்பனை இழந்த சான்றோர், நாட்டையோ ஊரையோ பி¡¢யும் நல்லி¨ச் புலவர்,இளமையைக் கழித்த முதியோர் என்று இந்நிலைகளில் தோன்றும் அவலச் சுவையினை மேற்குறித்த பாடல்கள் தெளிவுற எடுத்துரைக்கின்றன.
—
E. Mail: Malar.sethu@gmail.com
- கோலம் – வீடு தேடி வரும் சினிமா இயக்கத்தின் தொடக்க விழா
- ஜெயமோகனின் “காடு” நாவலை முன் வைத்து
- “புறநானூற்றில் அவலம்”
- அசோகமித்திரனின் ‘தண்ணீர்’ என்னும் குறியீட்டு நாவல்
- காலச்சுவடு பதிப்பக நூல் வெளியீடு – மெட்ராஸில் மிருது – வஸந்தா சூரியா
- சிங்கப்பூர் – கவிமாலை விருது விழா
- A STREETCAR NAMED DESIRE = screening
- இலங்கை வலைப்பதிவாளர் சந்திப்பு – ஆகஸ்ட் 23
- ‘சமசுகிருதம்’ பற்றிய கட்டுரை
- The Other Song – Screening
- வாசகர் வட்டம் இணையப் பெருவெளியில் சிங்கைவாழ் தமிழர்கள்
- பதினேழு அகவையில் பன்மொழிப் புலவரான ஈழத்தமிழறிஞர் சய்மன் காசிச் செட்டி
- துளிகள் நிரந்தரமில்லை
- கடைசி ஆலமரம்
- நடை வாசி
- பகைத்துக் கொள்!
- பயணம்….
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு காதலனின் அழைப்பு >> கவிதை -14 பாகம் -3 (முன் பாகத் தொடர்ச்சி)
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 48 << விளக்கின் ஒளி நீ >>
- என். விநாயக முருகன் கவிதைகள்
- வேதவனம் -விருட்சம் 46
- சு.மு.அகமது கவிதைகள்
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினாறாவது அத்தியாயம்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -7
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி எட்டு
- அச்சம் தவிர்
- தட்டையாகும் வளையங்கள்
- ஐம்பது ரூபாய் அற்றைக்கூலிக்கான துணை நடிகை
- சில அமானுட குரல்களும் பிள்ளை பேயும்
- காங்கிரஸ் கவனிக்க !
- ரிபப்ளிகன் கட்சியும் இலவச பிரியாணி பொட்டலங்களும்:
- தாவூத் பாய்க்கோ குஸ்ஸா கியூன் ஆத்தா ஹை?
- ஜிக்ஸா விளையாட்டு
- தன்மை
- ஈழ சகோதரர்கள்
- கடவுளுடன் ஒரு நீண்ட உரையாடல்
- பூரண சுதந்திரம் ?
- :நான்கு ஹைக்கூ கவிதைகள்:
- ஒரு நிலாக்கிண்ணம்
- பொறித்த அப்பள பொறியல் நட்பு
- வாழ்க்கை நினைவுகளின் எச்சம்
- ஏதும்…
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! காந்த விண்மீன்களில் தீவிரக் காமாக் கதிர் வெடிப்புகள் ! (High Energy Gamma-Ray Bursts fr