பாரதியாரது தத்துவ மரபு

This entry is part [part not set] of 36 in the series 20080327_Issue

முப்பால்மணி


தமிழக மரபில் வேதாந்தம்
சங்ககாலத் தமிழகத்தில் வேதங்கள் பயிலப் பட்டன, சங்ககால வேதக் கடவுளர் பலர். அவர்கள்; இந்த இகஉலகு சார்ந்தவரே, இந்திரன் கோசிகக் குடியில் பிறந்தவன்(ரிக்வேதம் 10 மண்டலம். அநுவாகம் 3. சூக்தம் 3 – 10), இப்படி யாகத்திற்குரிய கடவுளரும் பலர், இவர் பிறப்பும். உருவமும். குணமும் உடையவரே. காலத்திற்கும். இடத்திற்கும் உட்பட்டவரே, எனினும் வேதக் கடவுளரது துதிப் பாடல்களை. வேதமறைகளை உணர்ந்தவர் தமிழறிந்து தமது செய்யுள்களைப் புறம். அகம். பிறகு பரிபாடல் சார்ந்து அளித்தது தமிழ்மரபின் தவப்பயன் ஆகும், ஆயினும் துதிப்பாடல் கருத்தியல்கள் சார்ந்து தமிழ்மொழியில் அப்போதய தமது தத்துவம் தராதது வேதமரபின் தவக்குறை ஆகும்,
பெரியாழ்வார்தான் (கி,பி,690-775) வேதாந்த விழுப்பொருள் எனத் திருமாலைத் தமிழில் ஏத்துகிறhர்(4,3,11), திருமங்கை ஆழ்வார் இதே காலத்தில் தைத்ரீயம். சாந்தோக்கிய உபநிடதங்களையும். பவுழியன் எனக் கௌஷிதகீ பிராமணத்தையும் குறிப்பிடுகிறhர்(5,5,9), மாணிக்கவாசகர் மாயாவாதம் எனக் குறிப்பது சௌத்ராந்திக யோகாசாரப் பௌத்தத்தினை மட்டும் அல்லாது. பிரம்ம Nத்திர அத்வைதத்தினையும் ஆகும், மணிமேகலையில் சுட்டுணர்வு(29,49) எனப் பயிலப்படுவது குறிப்பிடத்தக்கது, புறநிலைப் பொருளிடத்துப் வெளிப்பொருண்மை மட்டும் அறியப்படுகின்றது. மற்றபடி அப்பொருளினுடைய பொருள். பெயர். பண்பு. சாதி. செயல் ஆகியன பஞ்சகற்பனையாக அப்பொருளுக்கு மனித உணர்வுகளால் கற்பிக்கப் படுகின்றன, உண்மையில் இவை ஐந்தும் அப்பொருளின் இடத்தில் இல்லை(29,49), இது சௌத்ராந்திக யோகாசார பௌத்தம் ஆகும், இதிலிருந்து இன்னும் முன்னேறிப் புறப்பொருளானது பண்பினை உடையது அதனால் அது அழியும் எனவும். பிரம்மம் ஒன்று மட்டுமே உண்மை, பஞ்சபு{தப் பொருள்கள் இருப்பதாகக் கருதிக் கொள்ளும் எண்ணம் அவித்தை, மாயைத் தன்மையானது, இப்படியாகச் சங்கரர் தமது அகவயஅத்வைதத்தை விளக்கினார், இதன் பொருட்டு அத்தியாசவாத முறையியலைக் கைக்கொண்டார், சௌத்ராந்திக யோகாசார பௌத்தம் மற்றும் சங்கரருடைய அத்வைதத்தை மாணிக்கவாசகர் மாயாவாதம் என்றhர், பிரம்ம சூத்திர அத்வைத ஞானமே இப்படி மதிப்பிடப்படுகின்றது, பகவத் கீதை ஆழ்வார்களால் பேசப்படவில்லை, எனினும் நம்மாழ்வாரது ஐந்தாம்பத்தின் ஆறhம்திருமொழி பகவத் கீதைக் கருத்தியலை நினைவுபடுத்துகிறது, கி,பி,700–900 காலப் பகுதியிலேதான் உபநிடதம். பிரம்ம சூத்திரம் சார்ந்த பிரம்மஞானம். அத்வைதம் இங்கு வழக்கிற்கு வந்திருந்தது, இதைத் தழுவித் தமிழகத்தில் அகவயஅத்வைத வேதாந்தம் கி,பி, எட்டு. ஒன்பதாம் நு}ற்றhண்டுகளில் விளக்கம் பெற்றது, எனினும் தமிழில் அதற்கு நு}ல்கள் இல்லை, சமஸ்கிருதத்திலேயே உபநிடதங்கள். பிரம்மசூத்திரம் ஆகியன ஓதி உணரப்பட்டன, அகம்பிரம்மாஸ்மி என அகவயப் பட்ட பிரம்மமே நிறுவப்பட்டது,
எனினும் வைணவ வழியில் உள்ளும்-புறமும். பொருளிலும்-உணர்விலும். இகஉலகிலும்-அப்பாலும் நிறைந்த கடவுளை-நாராயணனை-ஆச்சாரியர் அடிமை மற்றும் பிரபத்தி(சரணாகதி) நெறிகளுடன் தமது இறையியலிலும். தத்துவயியலிலும் முன்னிலைப் படுத்தினர், சார்வாகம் உலகாயதம். சுதந்தர மரபு(சம்சாரிகள். சங்கர அத்வைதம் மற்றும் செமித்திய நெறியாளர்). பிற மற்றும் பலதெய்வ வணக்கம். ஆகியனவற்றை எதிரிட்டுக் கொண்டு தமது விஷிட்டாத்வைத தத்துவத்தை உருப்படுத்தினர், உலகியல் பொருள்களும் மற்றும் மனிதசம்சார வாழ்வும் துன்பமானவை. பரம்பொருளே இன்பமானது என்றனர், இதனை முன்னிட்டுக் கொண்டு ஆழ்வார்களது திவ்விய பிரபந்தங்கள். உபநிடதம். பகவத்கீதை. பிரம்மசூத்திரம் ஆகியனவற்றிற்கு ஆச்சாரியர் பேருரை கண்டனர்,
அப்போது உலகப் பொருள்கள் மற்றும் உயிர்கள் அனைத்துமே கடவுளின் வடிவங்கள் என்று ஆயன் பட்டனார் (கி,பி,1100-1200) விளக்கினார், பகவத்கீதையைப் பரமார்த்த தரிசனம் எனத் தமிழில் அளித்தார், பிரஸ்தானத் திரயங்களில் இதுதான் முதல் தமிழ் நு}ல், இந்த ஆயன்பட்டனார் காலந்தொட்டு. பொருளுக்கும் உணர்விற்கும் மற்றும் புறத்திற்கும். அகத்திற்கும் எட்டாத அப்பாலான ஆழ்நிலைஅகவய பிரம்மமா. அனைத்துள்ளும் நிலவி. தனக்குள் அனைத்தையும் கொண்ட புறவய பிரம்மமா என அத்வைத வேதாந்தத்தில் இரு துறைகள் தமிழகத்தில் நிலவின, ஆயன்பட்டனார் பரமார்த்த தரிசனம் என்னும் பகவத் கீதை தமிழக அத்வைத வேதாந்த வரலாற்றில் அகவய பிரம்மஞானத்தையும். அனைத்துமான ஏகாத்ம பிரம்மஞானத்தையும் தன்னுள் சங்கமித்துக் கொண்டு எதிர் காலத்தை நோக்கித் திகழ்ந்தது, இந்த இருவகை அத்வைதங்களும் இகஉலகையும். புறநிலைப் பொருளையும். சம்சார வாழ்வையும் மாயை. காட்சிப் பிழை. பொய் என்றன என்பது குறிப்பிடத்தகுந்தது,
இகஉலக நிலையிலிருந்து அப்பாலைநிலைக்கும். சம்சார நிலையிலிருந்து முக்திநிலைக்கும். இருமைநிலையிலிருந்து ஏகத்துவ நிலைக்கும். த்வைதத்திலிருந்து அத்வைதத்திற்கும் இந்த இருவகை வேதாந்தங்களும் விளக்கம் உரைத்தன, உலகம். புறப்பொருள் ஆகியன மாயை. அநித்தியம் என்பதிலும். உலகின் பன்மைத் தன்மை என்பது தோற்றம். கற்பனை என்பதிலும். பிரம்மம் என்பது மட்டுமே உண்மை என்பதிலும் இந்த விளக்கம் வேர் கொண்டிருந்தது, எனினும் பிரம்மத்தை உணர்வதிலும். விளக்குவதிலும் இந்திய வேதாந்திகள் வேறுபாடு கொண்டு இருந்தனர்,
16-ஆம் நு}ற்றhண்டில் தத்துவராயர் தமிழக அத்வைதமரபில் அனைத்தினுடைய உள்ளும். புறமும் பிரம்மமே விளங்குகிறது. உலகும். புறப்பொருளும் இதன் பன்மைத் தன்மை எல்லாம் பிரம்மத்தின் விளக்கங்களே, எதுவும் மாயை இல்லை எனப் பரமாத்வைதம் என்ற நெறியினைக் கண்டார், இதன் பொருட்டுப் பிரஸ்தானத்திரயங்களில் ஒன்றhன உபநிடதங்களைச் சொரூபானந்த சித்தி என்ற பெயரில் தமிழில் முதன்முதலில் பிரம்மகீதை என்ற பெயரில் எழுதினார், இந்த நு}லினுக்குக் கோடகநல்லு}ர் சுந்தரசுவாமிகள் பரமாத்வைத மரபில் உரை செய்தார், தத்துவராயர் தமிழகச் சைவத் துறையில் வேதாந்தம் என்ற மரபைத் தோற்றுவித்தார் என்பது வரலாறு, இந்த வேதாந்தத்திற்கும். சித்தாந்தத்திற்கும் இடையேதான் தாயுமானவர் தொடங்கி வள்ளலார் உள்ளிட்டு அனைத்து சைவ ஞானிகளும் சமரசம் நாடிப் பாடுபட்டனர், Nதசம்ஹிதை. பிரமகீதை. பாடுதுறை. பெருந்திரட்டு. ஞானவாசிட்டம். கைவல்யநவநீதம். நிஜhனந்த விலாசம். சுவாநுபவமஞ்சரி. சுவாநுபு{தி ரசாயனம். நு}ற்றெhகை விளக்கம். மனோன்மணீயம். நாநாஜPவவாத கட்டளை-கோ, வடிவேலு செட்டியார் உரை. வையாபுரிப் பிள்ளை-இலக்கிய உதயம். தெ,பொ,மீனாட்சி சுந்தரனாரின் கானல்வரி ஆய்வு ஆகியன பரமாத்வைதத்திற்கு உரிய நு}ல்கள்,
தமிழக அத்வைதமரபு ஆயன்பட்டனாருக்குப் பிறகு செங்கோட்டை ஆவுடை அக்காளிடம் நிலை கொண்டது, இந்த அம்மையார் அனுபு{தி அத்வைதத்தை தமிழகத்தில் உருவாக்கினார், இப்போது சமஸ்கிருதத்தில் வித்யாரண்யர் பஞ்சதசி என்ற நு}லில் அத்வைதத்தை விளக்கி இருந்தார், இதனை அடியொற்றிக் கைவல்யநவநீதம் எனத் தமிழில் அத்வைத நு}ல் உருவானது, தத்துவராயர் மரபில் ஞானவாசிட்டம். நாநா ஜPவ வாத கட்டளை ஆகிய நு}ல்கள எழுந்தன, இவை பரமாத்வைத வேதாந்தத்தின் பிரமாண நு}ல்கள், அகவயபிரம்மமா? அனைத்தையும் அளாவி உள்ளும்.புறமும் ஆக உள்ள புறவய பிரம்மமா? என்ற இந்த இருதிறமும் 1892-இல் விவாதப் பொருளாக. மனோன்மணீயம் நாடகத்தில் நிட்டாபரர்-கருணாகரர் உரையாடலாகத் திரண்டது, சங்கரர் வழிவந்த அகவய அத்வைதமா. தத்துவராயரால் பொலிவு பெற்ற புறவய அத்வைதமா என்பது அந்த உரையாடலின் உள்ளொளி, அடுத்து கோ, வடிவேலு செட்டியார் என்ற சான்றேhரால் தத்துவராயரது பரமாத்துவைதம் தொடர்ந்து நிலவியது,
பாரதியாருக்கு முந்திய வேதாந்தம்
1880களில் சிதம்பரத்திலிருந்து வந்த பிரம்மவித்யா இதழில் சீனிவாச சாஸ்திரி அத்வைத கட்டுரைகளை வெளியிட்டார், சார்வாகம் உலகாயதம் மற்றும் சைவ சித்தாந்தம் ஆகியனவற்றை மறுத்து எழுதினார், ஜhன் லாக்கி. ஹhப்ஸ் ஆகியோருடைய ஆங்கிலேய உலகாயதத்தையும் மற்றும் ஜெர்மானிய புஹ்னர் மேற்கொண்டு இருந்த ஆற்றல்-பொருள் பற்றிய உலகாயதமும். அதோடு சமூகம் மற்றும் சோஷலிசத்தின்பால் இயற்கை சார்ந்த தத்துவங்களைக் கொண்டு செலுத்துவது பற்றிய கருத்துக்களையும் அறியப் பெற்று இருந்த கல்வியாளர் இங்கே 1880 முதற்கொண்டு இங்கே இருந்தனர், மேலும் வால்டேர். ரூஸேh வழிப்படுத்திய பிரெஞ்சுப் புரட்சி மற்றும் விவரித்த நாத்திகம் ஆகியனவற்றைப் பயின்ற படிப்பாளிகள் இங்கே நிலவினர், 1870 முதற்கொண்டு சைவச் சான்றேhர்கள்(யாழ்பாணம். கொக்குவில். குகதாசர் ச, சபாரத்தின முதலியார். Nளை, சோமசுந்தர நாயக்கர்)இங்கே நேர்காட்சிவாதத்தின் ஆன்மிக மற்றும் சமூக விளக்கங்களைக் கைக்கொண்டு புத்தெழுச்சியுடன் திகழ்ந்தனர், கூடவே இங்கே nஜ,எஸ்,மில். ஸ்பென்ஸர். பிராட்லா ஆகியோரது நேர்காட்சிவாத வழிப்பட்ட பகுத்தறிவு நாத்திகக் கருத்துகளும் ஆங்கிலக் கல்வியாளரிடையே வலுவுடன் மேற்கொள்ளப்பட்டு இருந்தன, (இந்த நேர்காட்சி வாதக் கல்விப் பயிற்சி பெற்றவரைத் தான் பாரதி பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள் என வெறுத்தார், பாரதியரால் பொய்மைசேர் மதியினில் புலைநாத்திகம் கூறுபவர் என்று பேசப் பட்டவர் இவர்களாக இருக்கலாம்), 1880 முதல் 1896 முடிய பிரம்மவித்யா இதழ் அவர்களோடு தத்துவப்போர் புரிந்தது, பி,ஆர், ராஜம் அய்யர். சென்னை அழகிய சிங்கர் தம் பங்குக்குக் கட்டுரைகளைத் தந்தனர், இவர்கள் புல். பு{ண்டு. மரம். விலங்கு. பறவை. மனிதர். தேவர். எல்லாப் பிறப்பும் பிரம்ம ஸ்வரூபங்கள் என்று முதலில் பேசினர், பிறகு பஞ்சபு{தப் பொருள்களும் இல்லை என்றனர், கடவுளானது(பிரம்மானது) தனது மாயை காரணமாகப் புல். பு{ண்டு. மரம். விலங்கு. பறவை. மனிதர். தேவர் என எல்லாப் பிறப்புமாகத் தோற்றம் தருகிறது, ஆகவே புல். பு{ண்டு. ஆகியன தோற்றம் மட்டுமே, இருப்பது ஒன்றே, அது பிரம்மம் எனச் சுட்டினர், புறவயப் பொருள்களையும். இயலுலகையும் ஏற்றனர், பிரம்மத்தையும் ஏற்றனர், என்றhலும். அறிவு மட்டுமே உண்மை. பொருள்கள் பொய் என்ற கருத்தியலின் பால்நின்று பிரம்மம் ஒன்று மட்டுமே உண்மை, புல். பு{ண்டு. மரம். விலங்கு. பறவை. (நதி. கடல். தீ. காற்று). தேவர் (நாட்டார் குலதெய்வங்கள்). மனிதர். எல்லாப் பிறப்புகளும் தோற்றம் மட்டுமே என்று முடிவாகக்[ கூறினர், இப்படியாக 20-ஆம் நு}ற்றhண்டுத் தொடக்கத்தில் நின்றனர், அகவய பிரம்மமா அல்லது அனைத்தையும் அளாவி உள்ளும். புறமும் ஆக விளங்கும் புறவய பிரம்மமா என்ற வரலாற்றுச் Nழ்நிலையில்

அகம்பிரமாஸ்மி என அகவய பிரம்மத்திற்கு அத்வைதத்துறையில் விளக்கம் கூறினர், அப்போது பிரஸ்தானத்திரயங்களில் ஒன்றhன பிரம்ம சூத்திரமானது முதன்முதலாக 1905-இல் சங்கர. ராமாநுஜ. நீலகண்ட பாஷ்யங்களுடன் தமிழில் மாடபு{சி-ராமாநுஜhசாரியாரால் வெனியிடப் பட்டு இருந்தது, இந்த நிலையில் சங்கரர் அகவயஅத்வைதமே முதலில் பாரதியாரிடம் பிரவேசித்தும் இருந்தது,,
பாரதியாரது வேதாந்தம்
தமிழ்நாட்டுச் சுமார்த்தப் பிராமணர்கள் பிறப்பாலேயே அத்வைதிகள், இந்நிலையில் மேற்கூறிய அத்வைதக் கருத்தியல் பின்னணியிலேயே 1882 முதல் பாரதியார் இருந்தார், அப்போது(1906-யான். 1910-சுயசரிதை) தேகம் என்பது யான் அன்று, மேலும் அகவயமான யானும் பிரம்மம் அன்று, வாழ்வு என்பது கனவு என ஏற்றிருந்தார், அதாவது சார்வாகம் உலகாயதம் போற்றி உரைத்த தேகாத்மம் என்பதை அப்போது இயல்பாகவே தமது சுயமரபு காரணமாக மறுப்பு கொண்டு இருந்தார், தேகமே ஆத்மாவாக உள்ளது, ஆத்மா எனத் தனியாக ஒன்றும் இல்லை என்பது தேகாத்மவாதம், ஆனால் பாரதி இதை ஏற்கவில்லை, அவர் தேகம் வேறு. ஆத்மா வேறு. அவை தனித்தனி என்பதையே மேற்கொண்டு இறுதிவரை இப்படியே திகழ்ந்தார், அகவயமான யான் என்பதே பிரம்மம் மற்றும் வாழ்வு என்பது கனவு என்பன சங்கர அகவயஅத்வைதம், இது அவரது சுயமரபு, இதிலிருந்துதான் அவர் மாறுபாடு அடைகிறhர்,
1906 முதல் 1913 வரை அவரது வாழ்வில் பல நிகழ்வுகள் நடந்து விட்டன, சொந்தக் குடும்பம். அரசியல். பத்திரிகை. எழுத்து என அவை பொலிவு பெற்றன, 1912-இல் அரசியல். பத்திரிகை ஆகியன தொடர்ச்சி அற்று விட்டன, 1911–இல் குள்ளச்சாமி பழங்குப்பை. பழம்பொய் எனச் சுட்டிக்காட்ட. பாரதியார் கடந்த காலத்தில் இருந்து விடுதலை பெற்ற புதியவன் ஆனார், புதியகாற்றhல் புதிய உயிராய்ப் பிறந்து விட்டார்;(யோகசக்தி), கோவிந்த ஞானியின் தொடர்பு கண்ட பின் எல்லாமுமே. அனைத்துமே பிரம்மம். பரம்பொருள். தெய்வம். பரசிவம் எனத் தௌளிந்தார், இதனோடு நிற்காது சம்சார விருத்திகள் பரம்பொருளின் விருத்திகள். செயல்கள் எல்லாம் சிவன் செயல்கள் எனத் தௌpந்து பகவத்கீதை முன்னுரை எழுதினார், விருத்தி என்பது இல்லையெனில் அழிவு, காதல் போயின் சாதல், விருத்தி என்றhல் பிறப்பு- செயல்- மாற்றம்-இன்னொரு பிறப்பை ஈன்று விட்டு ஏகமாதல், இதுவே அத்வைதநிலை. முக்தி ஆகும் என்ற உறுதிக்கு வந்து அடைந்தார், இதுவே அவரது மாற்றம், இயலுலக வாழ்வில் விருத்தி என்பது சமூக விருத்தி ஆகும்,
பாரதியாருக்கு (அதாவது 1880-க்கு) முன்பு இருந்தே புராதன பொதுவுடைமை சமூகம். கால்நடை மேய்ப்பு சமூகம். நிலவுடைமை சமூகம் பற்றிய விபரங்களை 1865-முதலே பிரம்ம சமாஜத்தினர் மேற்கொண்டு இருந்தனர், மேலும் வால்டைர்-ரூஸேh ஆகியோர் அறைகூவிய சுதந்தரம். சகோதரத்துவம். சமத்துவம் மற்றும் பிரெஞ்சுப் புரட்சி பற்றிய பற்றுணர்வு கொண்ட கற்றேhர் இங்கே இருந்து வந்தனர், 1878- முதலே தத்துவவிசாரணி பிறகு தத்துவவிவேசினி பத்திரிகையாளர் (சேமையா பிறகு பு, முனுசாமி. அமரம்பேடு முத்துசாமி. எம், தெய்வசிகாமணி) சார்வாகம் உலகாயதம் சார்பாக நின்று தொழிலாளர் உயர்வை எடுத்துக் கூறி வந்தனர்(தத்துவவிவேசினி,04-04-1885), இந்தப் பின்னணியில் மண்டையம் திருமலாச்சாhp தொடர்பால் பொதுவுடைமை என்ற சமூக நோக்கத்திற்குப் பக்குவப் பட்டார், அப்போது பொதுவுடைமையியலின் மற்ற பகுதிகளான இயங்கியல் பொருள் முதல் வாதம் மற்றும் அறிதலியல் ஆகியன தமிழகத்தில் அறிமுகம் ஆகி இருக்கவில்லை, இருந்தாலும் உலகியலின் சம்சாரநிலையில் இருந்து தொடங்கினார், இதன் பொருட்டு நீண்ட ஆயுள். நோய்இல்லாமை. அறிவு. செல்வம் எனத் தேகவாதத்திற்கு வந்து அடைந்தார்;, இது அவர் மரபுக்கு உகந்ததாக இருந்தது, பொதுவுடைமை என்ற சமூக நோக்கத்தின் அறிமுகத்தி[னை முன்னிட்டுக் கொண்டு சம்சார விருத்தி என்பது புறநிலையளவில் பாரதியாருக்குப் பொதுவுடைமை பொலிந்த கிருதயுக எழுச்சி ஆகும், தொழிலாளரையும். உழவரையும் போற்றிப் பாடி எழுதினார், அதோடு மட்டும் அன்றி அதுவே அகநிலையளவில் முக்திநிலை. பரசிவநிலை என்று வேதாந்த மரபுநிலையாகத் தௌpந்தார், இந்த நிலைகள் அப்பாலானவையோ. அகவயமானவையோ அல்ல, இயலுலகிற்கு உரியன, மனித வாழ்விற்கு உரியன, புறநிலைப்பொருளை. பஞ்சபு{தத்தால் ஆன இகஉலகப் பொருள்களை. மற்றும் பிறந்து. இருந்து. இன்னொரு சந்ததியை உண்டாக்கி விட்டு இறக்கும், இந்த மனிதவாழ்வு நிலைமைகளைக் கடவுளுக்கு. சிவத்திற்கு முரண். பகை. மறைப்பு என்று அணுகும் போது அவை தீமை தருவன. பாவத்தின் ஊற்று. மாயை. காட்சிப்பிழை. பொய் என்ற விளக்கவுரைகள் தோன்றும், இதற்கு மாற்று நிலையாகத் தமிழக வேதாந்தமரபு பாரதியார் வழியாகப் பரசிவநிலையை விளக்கப் படுத்தி உயர்ந்தது, ஆயிரம் தெய்வங்கள் உண்டு என்பதையும் கடந்து பொலிந்தது, பரசிவவெள்ளம்(1914) இந்தப் பிரபஞ்சமாக. இகஉலக வாழ்வாக இயங்கித் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளுகிறது(வசனகவிதை-சக்தி,4.5) எனத் தமது வேதாந்தமரபில் புதியகோலம் இட்டார்,
பிறகு.1918 இல் கடையத்தில் தங்கியிருந்த காலை. “கோமதி மகிமை” புனையத் தொடங்கி இருந்தார், இது Nதசம்ஹிதை என்னும் நு}ல் தொடர்பானது, இதில் Nதகீதை. பிரம்ம கீதை ஆகியன இடம் பெற்றுள்ளன, 1912 இல் Nதசம்ஹிதையை நா, சு, ராஜhராமையர் வெளியிட்டிருந்தார், (இவருடைய வீட்டில்தான் 1911 முற்பகுதியில் பாரதியார் இந்த ராஜhராமையருடைய பிதா என்,பி, சுப்பிரமணிய சர்மா மொழிபெயர்த்து வைத்து இருந்த _சங்கர பாஷ்யத்தின் ஸhராம்சங்கள் அடங்கிய உபநிடதப் பிரதிகளைத் திருத்தங்கள் செய்து செப்பனிட்டார், இதன் முதல் நான்கு உபநிடதங்களின் முதல் பதிப்பு 500 பிரதிகளும். முதல் ஐந்து உபநிடதங்களின் இரண்டாம் பதிப்பு 1000 பிரதிகளும் 12-12-1911-அன்று ஐந்தாம் ஜார்ஜ் சக்ரவர்த்தி டில்லி பட்டாபிஷேக சின்னமாய். _ ஜகத்குரு காஞ்சீ காமகோடி பீடாதிபதி _சங்கராசாரியர் அவர்கள் அருளிய ச்லாகா பத்திரிகையையும் இணைத்து அப்போதே முமுட்சுகளுக்கு இனாமாகக் கொடுக்கப் பட்டன), Nதசம்ஹிதையை ஆர், அனந்தகிருஷ்ண சாஸ்திரியார் மொழிபெயர்க்க அதை நா, சு, ராஜhராமையர் வெளியிட்டார், இது பாரதியாரது வாசிப்பிற்கு உள்ளாகி இருக்கலாம், எப்படியெனில் இந்த ராஜhராமைய்யர் பாரதியாருடைய கருத்தியல் உணர்வு வழிப்பட்ட சுயகுல உத்தமார்த்த பரோபகாரி, பாரதியாருடைய தத்துவப் புலமையை அறிந்து ஆதரித்தவர், பாரதியாருக்குச் சற்று முந்திய ஆண்டுகளில் Nதசம்ஹிதை தத்துவ உலகில் வீச்சுப் பெற்றிருந்தது, கோடக நல்லு}ர்; சுந்தர சுவாமிகள் ஊர்தோறும் பிரசங்கித்து வந்தார், இந்தச் Nதசம்ஹிதையைக் கோமதிமகிமை என்ற பெயரில் புனையத் தொடங்கினார், கோமதிமகிமை முற்றுப் பெற்றிருந்தால் 1912-இல் பகவத்கீதையை மொழிபெயர்த்த தத்துவ உணர்வு நிலையிலிருந்து தனது சொந்தப் போக்கினில் பாரதியார் முதிர்ச்சி கண்டிருந்தது இன்னும் துல்லியமாகப் புலப்பட்டிருக்கும்,
Nதசம்ஹிதையிலும். பிரம்மகீதையிலும் உலகியல் பொருள்கள். மனித ஆத்மாக்கள் வழியாகப்பிரம்மம். பரசிவம்;. பரம்பொருள் தன்னை விளங்குவித்துக் கொள்ளுகிறது, எதுவும் மாயை இல்லை, காட்சிப்பிழை அல்ல, பொய் இல்லை, அனைத்தும் கடவுளின் விளக்கங்கள், ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி (வசன கவிதை,காற்று,15), பிரம்மம் செயல் பாடு உடையது, அனைத்தும் இதன் செயல்களே, தனித்த ஆத்மாவினது சுயசெயல் என்ற சுயசுதந்தரம் என்பது இல்லை, இதுவே மாயை, பிரம்மம் அல்லாத இரண்டாவதான இன்னொன்று இல்லை, அப்படி இருப்பதாகக் கருதிக் கொள்ளுவதே இந்த நெறியில் மாயை என விளக்கப் படுகிறது, இல்லா மாயை என்பது மனோன்மணீயக் கருத்தியல், இந்த மாயையைப் பாரதி தனது பக்குவப் போக்கினில் ஜPவகற்பனை என்று உணர்ந்து புலப்படுத்தினார்,
பரசிவ வெள்ளம் என்ற கவிதையும். ஜPவகற்பனை என்ற கருத்தியலும். Nதசம்ஹிதையைக் கோமதி மகிமை எனப் பாடத் தொடங்கியதுவும் பாரதியின் மெய்யியல் வளர்ச்சிப் பக்குவ வரலாற்றில் ஊன்றிக் காணத்தக்கன ஆகும், 1912-க்குப் பிறகான அவருடைய புத்தாக்க நிலையைத் தெளிய இயலும், உள்ளும். புறமும் எங்குமான பரசிவம் செயல்நிலையில் அனைத்துமாக உள்ளது, சம்சார விருத்தியாக விளங்குகின்றது, காலம்-இடம். அகம்-புறம். பொருள்-சக்தி. எல்லாம்-தனி. செயல்-மாற்றம் அனைத்தும் ஈசவெள்ளம், தனிப்பட்ட ஒருபொருளானது. உயிரானது தன்னை மட்டும் பெரிதாக வியந்து கொள்ளுவது ஜீவகற்பனை. மாயை, ஆனாலும் அப்படி ஒரு நிலையானது உண்மையில் இல்லை, அனைத்தும் பிரம்மம். பரம்பொருள், செயல்நிலையில் உள்ள தெய்வவெள்ளம், இந்த ஆழ்ந்த பொருள்தான் அனைத்திலும் இருப்பதாகப் பரசிவவெள்ளம் கவிதையில் புலப்படுத்தினார், அவரது அப்போதய படைப்புகள் அனைத்திலும் இந்த வேதாந்தம் ஒளி விட்டது, இதனையே 1920-இல் ஹிந்து மதாபிமான சங்கத்தார் பாடலிலும் பொலிய வைத்து உள்ளார், பாரதியாருடைய கருத்தியலின்படி பரம்பொருள் எல்லாப் பொருள்களிலும் உள்ளும்.புறமும் புகுந்து நிரம்பி உள்ளது, செயலில் உள்ளது, ஒவ்வொரு தனிப் பட்டதிலும் அதுவே பிரவேசித்து உள்ளது, தனிப்பட்டவைகளும் உண்மை, தனிப்பட்ட ஆத்மாவானது பிரம்மத்தின் பிரதிபலிப்பு அன்று, பரம்பொருளே அப்படி உள்ளது என்பதுவே பாரதியாரது சிறப்பியல்பு, இதுவே அவரிடத்தில் பக்குவம் கொண்ட தத்துவம்,அதன் மரபு.
தமிழக வேதாந்த மரபில் பட்டனாருக்குப் பிந்தைய காலங்களில் அகவய பிரம்மமா? எங்குமான பிரம்மமா? என்று தொடர்ந்த இருதிறத்தில். பாரதியார் எங்குமான பிரம்மம். கடவுள். பரம்பொருள். பரசிவம் என்ற புறவயத் திறத்தினில் (1912-1914) பொலிவு பெற்றிருந்தார், இதனை முன்னிட்டுக் கொண்டே Nதசம்ஹிதை நூலில் பயிற்சி பெற்றhர், இந்த நூலின் ஆசிரியர் வியாசருடைய மாணவர் Nதமகரிஷி, இவருடைய வழியில் பதினோராவது குருவாக வந்தவர் சிவப்பிரகாசர். இவருடைய மாணவர் ஸ்வரூபானந்தர், இவரிடத்தில் ஞானம் பெற்றவர் தத்துவராயர், இவர் தமிழகச் சைவத்துறையில் பரமாத்வைதம் என்ற தத்துவ மரபினை முறைப்படுத்தியவர் ஆவார், இந்தத் தத்துவ மரபானது சைவத்துறையில் வேதாந்தம் எனப்பட்டது, தத்துவராயரின் இந்த வேதாந்தத்திற்கும். மெய்கண்டாரின் சித்தாந்தத்திற்கும் இடையேதான் சமரசம் நாடித் தாயுமானவர் தொடங்கி வள்ளலார் உள்ளிட்ட சைவ அருளாளர் பெரிதும் தவம் பேணினர், இந்த வேதாந்தமரபில் Nதசம்ஹிதை ஒரு பிரமாண நூல் ஆகும்,
1914-க்கு பிறகு. கோமதி மகிமை எனச் Nதசம்ஹிதையைப் பாடத் தொடங்கிய பொழுது. அனைத்தும் கடவுள். பிரம்மம். பரம்பொருளின் நிலைமைகளே என்று பாரதியார் பரமாத்வைதத்துடன் இணக்கம் கொள்ளுகிறhர் என்ற மதிப்பீட்டினைக் கைக் கொள்ளுவதற்குப் பாரதியாரின் சுயவரலாற்றுத் தொடர்ச்சியானது ஊக்கம் நல்குகிறது, பரம்பொருளான கடவுள் உலகியல் பொருள்களின் வழியாகத் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளுகிறது என உணரத் தொடங்கினார், உருவமற்ற அப்பாலான பிரம்மம் , பரம்பொருளானது சம்சார விருத்தியின் வழியாக இந்த உலகில் தன்னைத்தானே பொதுவுடைமையாகப் புதுப்பித்துக் கொள்ளுகிறது, இந்தப் புதுப்பித்துக் கொள்ளல் என்ற கருத்தியலால் பாரதியார் தமிழக அனைத்திறை அத்வைதத்தை எல்லையற்றது ஆக்கினார்,
பாரதியாரின் மனைவி செல்லம்மாவின் சகோதரியின் புதல்வியான ஸ்ரீமதி கோமதி ராஜாங்கம் இவர்களின் கூற்றுப்படி செங்கோட்டை ஆவுடை அக்காளுடைய அனுபு{தி அத்வைதப் பாடல்களைப் பாரதி தனது உயிருக்கு நிகராகக் கொண்டார், அப்பாடல்களை அடியொற்றி அனுபூதிவேதாந்தப் பாடல்களைப் புனைந்தார், பாரதியாருக்குத் தத்துவ முன்னோடி இந்த ஆவுடை அக்காள், அவரது தொடர்ச்சியாகப் பாரதியார். காலத்திலும். இடத்திலும். புறத்திலும்-அகத்திலும். பொருளிலும்-உணர்விலும். இகஉலகிலும்-அப்பாலும் இருப்பது ஒன்றே, பரசிவ வெள்ளமான. ஏகமயமான பரம்பொருள் அது எனத் தமிழக வேதாந்தமரபிற்கு பங்களிப்பு செய்தார், சங்கர அகவயஅத்வைதத்தில் இருந்து மாறுபாடு அடைந்து அனைத்திறை அத்வைதத்திற்கு வந்து அடைவதன் மூலம் அதைச் செய்தார், Nதசம்ஹிதை வழியான பரமாத்வைதமும். ஆவுடைஅக்காள் வழியான அனுபு{தி அத்வைதமும் ஒருவழிப் பட்டவை, அதன் தொடர்ச்சியினில் பாரதி அதற்குள் அமரர் ஆகிவிட்டார்,
உலகப் பொருள்கள். செயல்கள். பண்புகள். விதிகள் எல்லாம் உண்மை, நித்தியம். சத்தியம், இவையெல்லாம் பரசிவ வெள்ளம். இறைவெள்ளம், உள்ளும். புறமும் ஒன்றுக்கொன்று வேற்றுமை. முரண் அற்றுப் பாய்ந்து ஒரே செயலாக ஊற்றhய்ப் பொழிவது அது, தனித்த ஒரு சுயசெயல். சுயதீர்மானம். சுயஉத்தரவாதம் என்பன இல்லை, பலவாய் வேற்றுமைப்பட்டிருப்பது என்பதுவே நீக்குவதற்கு உhpயது என முடிக்கிறhர், தனிப்பட்ட குறிப்பான ஒரு பொருளின் சுயாதீனம். சுயசெயல். சுயதீர்மானம். சுய உத்திரவாதம் ஆகியனவற்றை முன்னிட்டுக் கொண்டு சுயவருமானம். சுயலாபம். சுயபிரயோசனம் ஆகியவற்றை வலியுறுத்திய ஆங்கிலேயே நேர்காட்சி வாதத்தையும். அதற்கிணையான அகம்பிரம்ம வாதத்தையும் மறுத்தபடி எங்குமாக நிறைந்துள்ள புறவய பிரம்மத்தை நிலைநிறுத்துவது அவருடைய தத்துவத்தின் பங்களிப்பாகும், இது இந்திய வேதாந்தத்திற்குத் தமிழகத்தில் இருந்து தரப்பட்ட வலுவான பகுதியாகும்,
பிறப்பு என்பது பாபமானது அன்று. ஏனெனில் அது பரசிவத்திலிருந்து உண்டாகிறது, உலகை நேசித்து இருத்தல் என்பது தீமை மற்றும் அறியாமையானது அன்று. ஏனெனில் பரசிவத்தின் இருப்பே இப்படியாக இருக்கிறது, இறப்பு என்பது தண்டனையானது அன்று, ஏனெனில் இயலுலகப் பொருள்களில் பரசிவத்தை உணரும் பொழுது அதனோடு ஒன்றhகிறது, பிறந்து. இருந்து. மறையும் போது சந்ததித் தொடர்ச்சியைத் தருவது பரசிவத்தின் புதுப்பித்துக் கொள்ளும் செயல் தன்மையே ஆகும். அகத்தில் உள்ளதுவே புறத்திலும் உள்ளது, அகமும் புறமும் முரணானவை அல்ல என்பதிலேயே இவருடைய தத்துவக் கட்டமைப்பின் சிறப்பும் உள்ளது,


muppalkumari@yahoo.co.in

Series Navigation

முப்பால்மணி

முப்பால்மணி