குன்றக்குடி அடிகளாரின் திருக்குறள் உரையும் அதன் தனித்தன்மைகளும்

This entry is part [part not set] of 42 in the series 20080207_Issue

முனைவர் மு. பழனியப்பன்


திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் பலராவர். உரையெழுதும் உரையாசிரியரின் பின்புலத்திற்கு ஏற்ற நிலையில் உரையின் போக்கும் மாறுபடுகின்றது. பெரும்பாலும் தமிழறிஞர்கள், ஆசிரியர்கள், அரசியலாளர்கள், அலுவலர்கள் போன்ற பல திறத்தவர்கள் திருக்குறளுக்கு உரை எழுதிஉள்ளனர்; எழுதி வருகின்றனர். இவர்கள் தத்தம் பின்புலத்திற்கு ஏற்ப, தன் வாழ்வனுபவங்களையும் கலந்து தத்தம் நோக்கில் உரை வரைந்துள்ளனர். திருக்குறளுக்குப் பல உரைகள் தோன்றுவதற்கும் இதுவே காரணமாகும். அது மேலும் புதுமை பெறுவதற்கும் இதுவே காரணம் ஆகும்.

திருக்குறளுக்குத் துறவி ஒருவர் எழுதிய உரை என்ற நிலையில் தனித்த சிறப்பைப் பெறுவது தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் திருக்குறள் உரையாகும். துறக்கும் மனப்பான்மை அற்றுப்போன தற்கால உலகத்தில் துறவிற்கு அடையாளமாய்; வாழ்ந்த அடிகளார் ஒவ்வொரு குறளுக்கும் உரை எழுதுகின்றபோதும் துறவுப் பின்னணியிலேயே தம் உரையை அமைத்துக் கொண்டுள்ளார்.

துறவின் ஆக்கும் நான் எனது என்ற அகநிலைப் பற்றினையும் புறநிலைப் பற்றினையும் துறத்தல். இத்துறவு நெறி மனம் துய்த்தலின் வழி ஏற்படுவது என்பது அடிகளார் துறவு என்பதற்குத் தரும் உரைவிளக்கம் ஆகும். இதுவே அவரின் வாழ்க்கை நெறியும் ஆகும்.

இவ்வடிப்படையில் ஒவ்வொரு குறளையும் அகப்பற்று, புறப்பற்று நீக்கிக் கண்டு அடிகளார் உரை செய்துள்ளார். எனவே அவரின் உரை – பற்று நீங்கப்பெற்ற நிலையில் அமைந்த துறவுநிலை சார்ந்த உரையாக அமைகின்றது.

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்( குறள் 69)

என்ற குறளுக்குப் பின்வருமாறு பொருள் தருகிறார் அடிகளார்.

தன் மகனை நல்லாண்மையுடைய சான்றோன் என்று உயர்ந்தோர் புகழ்ந்து கூறுவதைக் கேட்ட தாய் அம்மகனைப் பெற்ற பொழுதினும் பெரிது மகிழ்வாள். …

ஆசிரியர் காலத்தும், இன்றும் புறத்திணை உலகியல் ஆண்மக்களால் நடத்தப் பெறுவதால் மற்றவர் புகழும் வாய்ப்பு ஆண்மகனுக்கே உண்டு. ஆதலால் மகன் என்றார். ஒரோவழி மகளுக்கும் உண்டு. பொது விதியன்று. சிறப்பு வழியேயாம்.

… தந்தையினும் தாய் மகிழ்தல் இயற்கை. அதனால் தந்தைக்கு மகிழ்ச்சி இல்லை என்பது பொருளாகாது. ஆயினும் ஒரே புறத்திணையில் தந்தையும் மகனும் ஈடுபடுவதால் ஒரோவழி தந்தையுள்ளம் பொறாது. வறிதே தகப்பனானவன் மகன் புகழில் அழுக்காறு கொள்ளுதல் நிகழலாம். அல்லது மகன் தந்தையை விஞ்சியதாகக் கருதி தந்தையிடத்து மதிப்பில்லாதபடி ஓழுகும்பொழுது தந்தைக்கு மகிழ்ச்சி வராது

இவ்வுரையை நோக்கும்போது அடிகளாரின் அகப்பற்று, புறப்பற்று அற்ற நிலை தெரியவரும். தந்தை, மகன், மகள், தாய் என குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இக்குறள் உரையில் எடுத்துரைக்கப்பெற்றுள்ளனர். இவர்களின் அகக்கடமை ஒருபுறம். இவர்களின் புறக்கடமை மறுபுறம். புறக்கடமையை அடிகளார் புறத்திணை என்று குறித்துள்ளார். அந்தப் புறக்கடமை திருவள்ளுவர் காலத்திலும், தற்காலத்திலும் ஆண்வயப்பட்டே அமைந்துள்ளது என்பதும் உரையில் தெரிவிக்கப் பெற்றுள்ளது.

அகக்கடமை, புறக்கடமை இரண்டும் கடந்தவர் இவ்வுரையாசிரியர். தந்தை, தாய் என்ற பாச உறவையும் கடந்தவர் இவர். ஆனால் தன்னைச் சுற்றி வாழும் உலகியலில் பல்வகைத் தந்தையரையும்,மதிக்காத மகன்களையும், பெருமை பெற்ற தாயரையும்,சிறுமை கொண்ட மக்களையும் கண்டவர். உலக நடப்பின் வெளியில் நிற்கும் ஒரு பார்வையாளராக உரையாசிரியர் விளங்கித் தன் கருத்தை இக்குறள் வழி எடுத்துரைக்கிறார்.

இவ்வுரைப்பகுதியில் ஆண், பெண் என்ற பால் -பற்று நீக்கப் பெற்றுள்ளது. தந்தை, தாய் என்ற பாசப்பற்று நீக்கப் பெற்றுள்ளது. புற உலகுச் செயல்பாடுகள்- புகழ் போன்றன மீதான பற்றும் களையப் பெற்றுள்ளது. இவற்றில் எதனிலும் பற்று கொள்ளாது உரை எழுதப்பெற்றுள்ள அடிகளாரின் உள்ளம் பற்றற்றது என்பது தெளிவு. இந்நிலையில் பற்றற்ற உரையாசியராக அடிகளார் விளங்குகிறார் என்பது உறுதி. இந்நிலையில் இது திருக்குறளுக்குக் கிடைத்துள்ள முக்கியமான உரைகளுள் ஒன்று என்பது கொள்ளத்தக்கது.

அடிகளார் என்ற பற்றற்ற உரையாசிரியரின் உரைப்போக்கு திருக்குறளுக்கு இதற்கு முன்னரும் எழுந்ததில்லை; இனி எழப்போவதும் இல்லை என்ற அளவிற்கு முழுக்க முழுக்க புதுமை உடையதாகின்றது. குறிப்பாக துறவறவியல் பகுதிகளுக்கு எழுதப் பெற்றுள்ள அடிகளாரின் உரைப்பகுதிகள் சிறப்பும் தனித்தன்மையும் கொண்டன. அதற்குக் காரணம் அவரின் வாழ்வனுபவமே ஆகும்.

புலால் மறுத்தல் அதிகாரத்திற்குப் பின்வருமாறு ஒரு முன்னுரையை அடிகளார் எழுதுகிறார்.உயிர்க் கொலையால் வரும் உண(ர்) வைத் தவிர்த்தல். புலால் உணவு அன்புக்கு மாறானது. ஆதலால் புலாலைத் தவிர்த்தல் அறம். இன்று புலால் உணவு என்றால் விலங்குகள், பறவைகள் முதலியவற்றின் இறைச்சியை மட்டுமே தவிர்க்கும்படி கூறுகின்றனர். தாவரணு;களைத் தவிர்ப்பதில்லை. ஏன்டூ தாவரணு;களுக்கும் உயிருண்டு என்பதுதானே இலக்கணம்.

ஆம்ஸ தாவரணு;களுக்கு உயிர் உண்டு. எத்தகைய உயிர் தாவரணு;களுக்கு. மனிதர் தாவர விதைகளைத் தண்ணீரோடும்? மண்ணோடும் பொருத்தினாலே உயிர் தோன்றும். தாமாகத் தோன்றh. தாவரணு;களுக்குக் காதற் பசியும் காதல்சேர்க்கையும் கிடையாது. கூட்டு உண்டு. ஆனால் தேடிப்போய் அல்ல. மற்ற உயிர்கள் மு்லம் சேர்க்கை உண்டு. ஆதலால் தாவரங்களை உண்ணுதல் புலால் ஆகாது. மேலும் உயிர்த்தாதுக்கள் இல்லாத தாவரங்களை உண்ணுதலையே தவம் என்று கூறுவோரும் உண்டு.

இப்பகுதியில் தாவரங்களை உண்ணுதல் குறித்து ஒரு தடையைத் தானே ஏற்படுத்திக் கொண்டு அடிகளார் அதற்கு விடையும் தந்துள்ளார். தாவரங்களிடம் நடைபெறும் அயல் மகரந்தச்சேர்க்கை, தன்மகரந்தச்சேர்க்கை ஆகியவற்றில் காதல் உணர்வோ அல்லது நோக்கமோ அல்லது தாவரங்களின் இடப் பெயர்வோ இல்லை. ஆனால் மற்றவர்களுக்குப் பயன்தரவேண்டும் என்ற அருள் உணர்வு இருக்கிறது. இந்த மையத்தை அடிகளார் எடுத்துக்கொண்டு தான் ஏற்படுத்திக் கொண்ட தடைக்குத் தானே மேற்கண்டவாறு பதில் அளித்துள்ளார். எனவே தாவர உணவு உண்பவர்கள் இனிக் கவலை இன்றி அவ்வுணவை உண்ணலாம்.

இதுபோல கொல்லாமை அதிகாரத்திற்கு முன்னுரையில் மீனைக் கொண்டு சில செய்திகளை அடிகளார் குறிப்பிடுகின்றார். உயிர்க்குல அமைப்பில் ஓர் உயிர் பிறிதொரு உயிருக்கு இசைந்து ஒத்துழைத்து உதவி பெறும் நிலையில் வாழும் இயல்பில் அமைந்த இயற்கையின் நுட்பத்தை அறிதல்வேண்டும். எந்த ஓர் உயிருக்கும் நேரடியாகக் கொலைவழி உணவு அமைதல்- பயன்படுதல் இயற்கை நியதியன்று. மீனை எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீரில் உள்ள அழுக்குகளைத் தின்று தண்ணீரின் துய்மைக் கேடுகளை நீக்கித் தூய்மையான தண்ணீர் தந்து உதவுவதே மீனின் வாழ்க்கை முறை. மீனை உணவாக மாற்றினால் தண்ணீரின் தூய்மைப் பணிக்கு இடையூறு ஏற்படுகிறது.

அதுமட்டும் அல்ல தன்னால் உருவாக்க இயலாத ஒன்றை அழிக்க மனிதனுக்கு உரிமை இல்லை என்பது அறிவியல் நியதி. இயற்கை நியதி. ஆதலால் கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுதல் பேரறம்

அறிவியல், சுற்றுச்சூழல்அறிவியல், மனித உரிமையியல், இயற்கையியல், அறவியல் போன்ற பல் துறைப் புலமை உடையவர் அடிகளார் என்பதற்கு மேற்கண்ட உரைப்பகுதி சான்றாகின்றது. மனிதன் அழிக்கும் உரிமை அற்றவன் என்பதை இக்கொல்லாமை உரைப்பகுதி தெற்றென விளக்குகிறது.

துறவு என்ற இயலுக்கு முன்னுரை எழுதுகையில் பின்வருமாறு அடிகளார் எழுதுகிறhர். இந்த உலக வாழ்வியலில் காண்பனவும், கேட்பனவும், நுகர்வனவும் நிலையற்றவைகளாக இருக்கும் இயல்பினை அறிந்து இவற்றிடத்தில் உள்ள பற்றைத் துறத்தல் துறவு ஆகும், இதன் தொடர்வாக அப்பன் நீ- (துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ- துறவு நிலை சுட்டு அடி ) எனத் தொடங்கும் திருவாசகப் பாடலையும் காமஞ்சான்ற கடைகோட்காலை என்ற தொல்காப்பிய நூற்பாவையும் அடிகளார் காட்டித் துறவு நெறியின் தூய்மையை எடுத்துரைக்கின்றார். நிலையாமை நீக்கி நிலைத்த பொருளை எண்ணுவது துறவாகின்றது.

இத்துறவு அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள ஒரு குறளுக்கு அடிகளார் செய்துள்ள உரை இன்றியமையாத சிறப்பினை உடையதாக உள்ளது.

இயல்பாகும் நோன்பிற்குஎன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்துஸ்ரீஸ்ரீ(குறள் 344)

ஒரு பொருளையும் பற்றாகக் கொள்ளாமை தவத்திற்கு இயல்பு. அஃதன்றி ஓர் உடைமையிடத்துப் பற்றிருந்தாலும் அப்பற்று தவத்தைப் போக்கிவிடும். அவ்வழி மயக்கமும் பொருந்தக் காரணம் ஆகும். . .

நமது மடங்கள் உடைமைகள் அமைப்பு உடையன. இவ்வுடைமைகள் நடமாடும் கோயில்களைப் பேணவே அமைந்தன. இந்தப் பணி நடைமுறைக்கு வந்திருந்தால் மடணு;களின் பெருமை உயர்ந்திருக்கும். இன்று அவை அப்பட்டமான சுரண்டும் வர்க்கமாக அமைந்திருப்பது வருந்தத்தக்கது. என்ற அடிகளாரின் உரை கவனிக்கத்தக்கதாகும்.

இதனுள் காணலாகும் அடிகளாரின் வருத்தம் தற்கால மடங்களின் நடவடிக்கைகளை விமர்சிப்பதாக உள்ளது. நடமாடும் கோயில்களாக விளங்கும் மனிதர்களைச் சுரண்டும் நிலைக்குச் சென்று விட்ட மத அமைப்புகளைச் சாடும் அவரின் தூய உள்ளம் செய்தறியாது திகைத்துள்ளது. இதனை மாற்ற வழி தேடியுள்ளது. இப்பழியில் இருந்து தன்னை, தன் அமைப்பை நீக்கிக் கொள்ள அவர் தன்னை ஒரு சமுதாய முனிவராக அமைத்துக் கொண்டார். அவர் இதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகள், அனுபவங்கள் ஆகியனவற்றின் பின்னணி இத்திருக்குறள் உரையின் பின்னணியில் தெரிகின்றன.

இந்த நிலை மாற்றம் பெற உடைமைச் சமுதாயத்தில் இருந்து பொதுஉடைமைச் சமுதாயத்திற்கு இவ்வுலகம் மாறவேண்டும் என்பது அடிகளாரின் பேரவாவாகும் .

நான் -தன்முனைப்பு. எனது – உடைமை வழி ஏற்படும் முனைப்பு. நான் எனது உணர்வுகளைச் சாய்க்க எல்லாம் வல்ல இறைவன் செயல் என்ற கருத்தில் காலூன்ற வேண்டும். அல்லது நிறைநலம் மிக்க மக்களாட்சி – பொதுவுடைமைச் சமுதாயம் தோன்ற வேண்டும், என்ற உரைப்பகுதியில் தேர்ந்த இறைஞானியாகவும்- பொதுவுடைமை கருத்தின் அடிப்படை கொண்டவராவும் அடிகளார் தெரிகின்றார். இறையை நம்பி மக்கள் பொதுஉடைமை நிலைமையில் நின்று நலம் பெற இவ்வுரையாசிரியர் விரும்பியுள்ளார். அதற்கு ஏற்ற நிலையிலேயே தன் உரையை அமைத்துள்ளார். அவரின் கருத்து விரைவில் வெற்றி பெறும். பெறவேண்டும்.

அடிகளாரின் திருக்குறள் உரை அவரின் துறவு மற்றும் சமுதாய வாழ்வியலுடன் ஒட்டிய உரை என்பதால் அது திருக்குறளுக்கு மேலும் பெருமை சேர்ப்பதாக விளணு;குகிறது.

முடிவுகள்
• திருக்குறளுக்கு துறவற நெறியைக் கைக் கொண்ட ஒருவரால் எழுதப் பெற்ற உரை என்ற நிலையில் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் உரை இன்றியமையாததாகிறது.
• குறிப்பாக துறவறவியலுக்கு அவர் வரைந்துள்ள உரை தற்காலத்தில் துறவு வாழ்வு மேற்கொண்டு வெற்றிகண்ட ஒருவரின் அனுபவ நிலை பெற்றதாக விளணு;குகிறது.
• துறவு அமைப்புகளின் தற்கால நிலை குறித்த விமர்சனமாகவும் இவரின் உரை அமைந்துள்ளது.
• உலகம் நன்மை பெறத் தேவையான நெறி பொதுஉடைமை நெறி என்ற தௌpவையும் இவர் உரை முன்னிறுத்துகிறது.
• இவரின் உரை எல்லாவகையிலும் பற்றற்று உலக நடப்புகளை வெளியில் நின்று அவதானிக்கும் பெருமை உடையதாக உள்ளது.

பயன் கொண்ட நூல்
• குன்றக்குடி அடிகளார். தவத்திரு., திருக்குறள் உரை., அருள் நெறிப்பதிப்பகம், குன்றக்குடி, 2005


Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்