திசை எட்டும் இதழின் நான்காம் ஆண்டு விழா – நல்லி -திசை எட்டும் மொழிபெயர்ப்பு விருது வழங்கும் விழா

This entry is part [part not set] of 41 in the series 20071122_Issue

எஸ்ஸார்சி


சென்னை மைலாப்பூர் நியூவுட்லண்சு வளாக மய்ய அரங்கத்தில் 9 நவம்பர் 2007 வெள்ளிக்கிழமை அன்று நல்லி திசை எட்டும் விருது வழங்கும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திரு நல்லி குப்புசாமி செட்டியார் பிறந்த நாள் விழா
மொழிபெயர்ப்பு செய்த சிறந்த எழுத்தாளர்க்கு விருதுகள் வழங்கும் ஒரு இலக்கிய விழாவாக த்தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது நல்லி திசை எட்டும் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் தமிழிலிருந்து தரமான நூல்களை சிறப்பாக மொழிபெயர்த்து பிறமொழிக்கு கொண்டு சென்றவர்கட்கும் பிற மொழியிலிருந்து நல்ல நூல்களை தமிழ் மொழிக்கு கொண்டு தந்தவர்கட்கும் என தனித்தனியே வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளருக்கும் ரூபாய் பத்தாயிரம் ரொக்கப்பரிசோடு , நல்லி திசை எட்டும் நினைவுப்பரிசும் பாராட்டுச்சான்றிதழும் என அளிக்கப்பட்டு விழா மேடையில் கெளரவிக்கப்படுகிறார்கள்.
முதல் நிகழ்வாக மொழிபெயர்ப்பாளர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி எழுத்தாளர் இ. பா. தலைமை ஏற்க குறிஞ்சிவேலன் முன்னிலையில் நடைபெற்றது. மலயாள எழுத்தாளர் விஜயகுமார் குனிச்சேரி சிறப்புரை ஆற்றினார்.
இந்திய ஒருமைப்பாட்டுக்கு முற்றாக உழைக்கும் இதழாய் திசைஎட்டும் விளங்குவதால் அதற்கான உரிய தகுதி தேசிய அளவில் அங்கீகரிக்கப்படவேண்டும் என இ. பா. குறிப்பிட்டார். தமிழை த்தன் பாட்டிமொழி என விஜய்குமார் குனிச்சேரி பெருமையோடு பதிவு செய்தார்.
மூல நூல் ஆசிரியரைச்சந்தித்து மொழிபெயர்ப்பில் இடைமறிக்கும் அய்யங்களைக்களைந்து கொண்ட பின்னரே மொழிஆக்கம் செய்ய வேண்டும் என ஆர். நடராஜன் குறிப்பிட்டார்.
முனைவர் ராஜ்ஜா பேசுகையில் ஆங்கிலம் கவனமாய்க் கற்றுக்கொள்ள தனக்கு ஒரு பாதிரியார் உதவியதையும் தமிழ் ச்சுவைஉணர்வை உள்வாங்க தமிழ் அறிஞர் வெள்ளைவாரணனாரின் வகுப்பு அமர்வு உதவியதையும் நினைவு கூர்ந்தார்.
இலக்கிய சந்திப்பில் கலந்துகொண்ட எழுத்தாளர்கள் சரவணன், டி. டி. ராமகிருஷ்ணன் சாந்தாதத் இறைஅடியான் வெ. பத்மாவதி
புவனா. நடராஜன் என மொழிபெயர்ப்பாளர்கள் நல்லபல கருத்துக்களை வழங்கினர். சுப்ரபாரதிமணியன், இளம்பாரதி சாகித்ய அகாடெமி இளங்கோவன் யுகமாயினி சித்தன், சரத்கமலன் ஜி ஜி ஆர், கிருஷாங்கினி, சத்யானன்தன்
எனப்பலர் சந்திப்பு அமர்வுக்கு சிறப்பு சேர்த்தனர்.

நல்லி திசை எட்டும் விருது வழங்கும் மாலை அமர்வு முன்னாள் சென்னை தொலக்காட்சி நிலைய இயக்குனர் எ.நடராஜன் தலைமையில் நடைப்பெற்றது. எழுத்தாளர் சிவசங்கரி நிகழ்வில் கலந்துகொண்டு தன் மொழிபெயர்ப்பு அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். பதினெட்டு மொழிக்கான இலக்கிய பறிமாற்றங்களை செய்யும் இந்திய இலக்கியத் திருவிழாவாக இவ்விழா பரிணமிக்க வேண்டும் என நல்லி செட்டியார் அவர்களிடம் வேண்டுகோள் வைத்தார். நல்லி திசைஎட்டும் இதழின் ஆசிரியர் குறிஞ்சிவேலன் நல்லி திசை எட்டும் விருது நிறுவப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருதல் குறித்த தனது அனுபவங்களை விவரமாகக்குறிப்பிட்டார். சிறப்பு விருந்தினர் காவல்துறை இயக்குனர் பொன்னுசாமி ராஜேந்திரன் நெய்வேலி புத்தகக்காட்சி அமைக்கப்பட்டது தொடங்கி குறிஞ்சி வேலனோடு தனக்கு ஏற்பட்ட இலக்கிய அனுபங்களை ரசனையோடு குறிப்பிட்டார். மொழிபெயர்ப்பாளர்கட்கு நல்லி திசை எட்டும் விருதுகள் மேடையில் வழங்கப்பட்டன.
மூல நூல் ஆசிரியர்களும் பதிப்பகத்தாரும் சான்றிதழ் வழங்கப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டனர்
ஆர். நடராஜனின், ‘வனநாயகம்’ என்னும் இன்றைய அரசியலை ஆழமாய் விமர்சிக்கும் சிறுகதை நூல் மிருகாதிபத்தியம் என ச்டான்லி அவர்களால்
மலயாளத்திற்கு மொழிஆக்கம் செய்யப்பட்டு திசை எட்டும் வெளியீடாக கொண்டுவரப்பட்டுள்ளது.
இப்புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி விழா மேடையில் சிறப்பாக நடந்தேறியது. ச்டான்லி
மேடையில் கெளரவிக்கப்பட்டர்.
திருமதி சுதா ரகுநாதனின் இன்னிசை மழையோடு துவங்கிய இலக்கிய நிகழ்வில் திருவாளர்கள்
அவ்வை நடராஜன், இராம. வீரப்பன் நடிகர் விவேக் ஆகியவர்களுடன் எழுத்தாளர்கள்
நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு சிறப்பு சேர்த்தனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த ஆயிரக்கணக்கானோருக்கு செவிக்கினிய- இசை, இலக்கிய விருந்தோடு இனிய இரவு விருந்தும் படைத்திட்ட நல்லி
செட்டியார் அவர்கள் இனிய உள்ளம் போற்ருதலுக்குறியது.
விருது பெற்றவர்கள் விபரம்.
தமிழ்- பிற மொழிக்கு மலயாளம் டி டி ராமக்ரிஷ்ணன்
தெலுங்கு மந்திரிப்ரசுட சேஷாபாய்
குஜராதி நவனீத் மதராசி
இந்தி வெ. பத்மாவதி
ஆங்கிலம் பி. ராஜ்ஜா

பிற மொழி- தமிழுக்கு
ஆங்கிலம் ச,சரவணன்
மலயாளம் நிர்மால்யா
கன்னடம் இறையடியான்
தெலுங்கு சாந்தா தத்
வங்காளம் புவனா நடராஜன்

சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.


essarci@yahoo.com

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி