தமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள்

This entry is part [part not set] of 32 in the series 20060210_Issue

எச்.முஜீப் ரஹ்மான்


தமிழ்சூழலில் பின்நவீனத்துவத்தின் தாக்கம் பெரிய அளவில் இலக்கியத்தை புதுதிசைகளுக்கு கொண்டு சென்றுள்ளது.பின்காலனிய எழுச்சியுடன்

தலித்தியம்,பெண்ணியம்,அடித்தள சிறுபான்மையினர் எழுச்சி போன்றவை அமைந்த போதும் இவற்றுக்கு பின்நவீனத்துவம் மூல காரணமாக இருந்துவருகிறது.தொண்ணூறுகளுக்கு பின்னர் தமிழ் கவிதை பரப்பில் பின்நவீன கவிதைகளுக்கான சாத்தியங்கள் தெரியத்துவங்கின.நவீனத்துவம் தமிழில் வெற்றிகரமாக இயங்கிய ஒரு கலைஇலக்கிய கோட்பாட்டியக்கமாகும்.அதுபோல பின்நவீனத்துவம் இயங்குமா எ_ fdறு காலம் தான் தீர்மானிக்க முடியுமென்றாலும் கவிதையின் குணம் மாறிவிட்டிருக்கிறது என்று சொல்லமுடியும்.இலக்கியம் அகவயமான முறையில் இலக்கியத்துக்காகவே இயங்குகிறது என்பதுஅப்பாலை இலக்கியத்தின் முக்கியகூறாகும்.இச்சூழலில் அப்பாலை கவிதை(meta poem)பற்றி பேசவேண்டியிருக்கிறது.கவிதையைப் பற்றிய கவிதை என்று பொதுவாக விளக்கம் அளிக்கப்பட்டாலும் சுயபிரக்ஞையுடன்,சுயாதீன_ c1ான முறையில் கவிதையைச் சொல்லுவது மெட்டாபோயம் ஆகும்.இதைப்பற்றி தெனாப்பிரிக்க இலக்கிய விமர்சகன் செலூட்டர் சொல்லும் போது..

The metapoem is ‘supremely aware of itself as artifice and is unabashedly self-reflective. ‘ Metapoetry is self-declaratory in showing itself to be tackling issues of whatever nature head on, be these issues the art of composition, or the thematic indulgence of the poet; in other words, it refers to poetry that talks about itself.

தமிழில் கவிதை பற்றிய கவிதைகளை பலர் எழுதியிருந்த போதும் தெறி தொகுப்பில் என்.டி.ராஜ்குமார் எழுதிய கவிதை மெட்டாபொயத்துக்கு நல்ல

உதாரணமாகும்.கவிதை பின்வருமாறு

மனஅளவில் உணரப்படாமலிருக்கலாம்

அல்லது உனக்கு பிடிக்காமலிருக்கலாம்

முகம் சுழிக்கலாம்

அல்லது எரிச்சல் வரலாம்

வெப்புறாளத்திலுன் உச்சிமயிராடலாம்

எமக்குத் தொழில் இது

நேற்றுவைத்த மரச்சீனிகெழங்கும்

முள்ளும் தலையும்

பழங்கஞ்சியிலிட்டு வெரவி

வாரிக்குடித்துவிட்டு

பீ அள்ளப்போகுமென் கவிதை.

ஆனால் காலங்காலமாக கவிதைப்பற்றிய கவிதை இருக்கத்தான் செய்கிறது.இன்றைய பின்நவீன மெட்டாபொயம் எப்படியிருக்கும் தெரியுமா ?

இயந்திர தேவதை

நான்காம் கிரகத்தின் ஒலிச் சமிக்ஞைகள்

நீலம் படிந்த எனது கதிர்புகா அறைக்குள்

சங்கேத ஒளிரல்களாய் நிலைமாற்றமடைந்தன

கனவின் கசிவுகள்

படிகச் சதுரங்களுக்குள் பாதுகாக்கப்பட்டதை

மின்னணுத் திரையின் புள்ளிக்கூறுகள்

நினைவுறுத்தி மறைந்தன

அணுவரைவுகளின் விநோதச் சிக்கல் விளைவுகளே

உனது உள்மன உளைச்சல்கள் என

ஆய்வின் முடிவு பதித்த கண்ணாடி ஏடுகள்

உறைக்குள் இருந்தன

‘ ‘

‘ ‘

‘ ‘

‘ ‘

எனதொடரும் நீண்ட கவிதை ரமேஷ்-பிரேம் எழுதியிருக்கிறார்கள்.இந்த கவிதை சுயபிரக்ஞையான,சுயபிரதிபலிமிக்க,சுயாதீனமான கவிதையாகும்.

சுயாதீனமான கவிதை என்பது என்ன ?

கனவின் பனிப்படிகங்கள் வார்த்தைகளாய்

உருகித் தேங்கிய என் கண்களைப் பருக

தருவேன் – உன்னால் அதன் கவித்துவப்போதையைத்

துய்க்க இயலுமெனில்.

இதுவும் ரமேஷ்-பிரேமின் கவிதை வரிகள்.இதைத்தான் சுயாதீனமான,சுயபிரதிபலிப்புமிக்க,சுயபிரக்ஞையான கவிதை எனலாம். அண்மையில் யாதுமாகி இதழில் வெளிவந்த பிரான்சிஸ் கிருபாவின் நேற்று ஞாயிற்றுகிழமை வந்திருந்தது எனும் கவிதை பின்நவீனஅப்பாலைகவிதையாக இருக்கிறது.

கழுத்துக்கும் கீழே கூந்தல் வளர்த்திருந்த ஒருவன்

ஒரு கிழமையை தோளில் தூக்கிகொண்டு

வந்திருந்தான்

கவிதையின் தொடக்கத்திலிருந்தே மெட்டாபொயத்தின் தன்மையை காணலாம்.கவிதைமுடியும் போது

நீங்கள்

இந்த ஒரே ஒரு ஞாயிற்றுக்கிழமையை ஏன்

வாங்கிக் கொள்ளக் கூடாது

என்பதே சுயபிரதிபலிப்புமிக்கதாக மாறிவிடுகிறது.தொண்ணூறுகளிலிருந்து யுவன்,யூமா வாசுகி,ரமேஷ்-பிரேம்,பா.வெங்கடேசன்,அமலன் ஸ்டேன்லி,கரிகாலன்,மனுஷ்யபுத்திரன்,மகுடேஸ்வரன்,சிபிச்செல்வன்,சூத்திரதாரி,சுகந்தி,சல்மா,

ரிஷி போன்றோர்களிடத்தில் பின்நவீனகூறுகள் இருப்பதை காணலாம்.தற்சமயம்

யவனிகா ஸ்ரீராம்,பிரான்சிஸ்,பாலைநிலவன்,பூமாஈஸ்வரமூர்த்தி,லக்ஷ்மி மணிவண்ணன்,அப்பாஸ்,ஜீ.முருகன்,முத்துமரகந்தன் போன்றோர்களிடம் நிறைய சாத்தியங்கள் தெரிகிறது.யவனிகா ஸ்ரீராமின் அடங்கியவன் எனும் கவிதை இப்படித்

தொடங்குகிறது.

நல்ல உலகம் என்றாய்

ஏதோ விண்வெளியில் நின்று

பல உலகங்களை பார்த்தவன் மாதிரி

உணவு பொருட்களை மண்ணில் இறைத்து

பெருக்கி தின்று தீர்ந்து நகரும் வேடிக்கையான

அசைவுகளை கொண்டது இந்த உருண்டை என்றான்.

அப்பாலை கவிதைகளின் தன்மை ஆளுக்கு ஆள் வித்தியாசமாக மாறுபடுவது மட்டுமல்லாது அதன் நீட்சியை அனுமானிக்கமுடிகிறது.தென் ஆப்பிரிக்கா கவிஞரான நார்ட்ஜியின் மெட்டாபோயம் ஒன்றை பார்ப்போம்.

I peer through the skull ‘s black windows

wondering what can credibly save me.

The poem trails across the ruined wall

a solitary snail, or phosphorescently

swims into vision like a fish

through a hole in the mind ‘s foundation, acute

as a glittering nerve.

( ‘Waiting ‘ )

பின்நவீனகூறுகளை உள்வாங்கிக் கொண்டு கவிதை எழுதும் பலர்மேற்கில்

பின்நவீன கவிஞர்களாக இருக்கிறார்கள்

John Ashbery: e.g. The Burden of the Park

Frank O ‘Hara: e.g. Khrushchev is coming on the right day!

Barbara Guest ‘ e.g. Wild Gardens Overlooked by Night Lights

Charles Bernstein: e.g. Thinking I Think I Think

Andrew Levy: e.g. tom hanks is a homosexual

Jim Rosenberg: e.g. Completing the Square

Tom Raworth: e.g. All Fours

J.H. Prynne: e.g. On the Matter of Thermal Packing

David Antin: e.g. War

Jackson MacLow: e.g. Very Pleasant Soiling

Michael Basinski: e.g. The Atmosphere of Venus

Susan Howe: e.g. Eikon Basilike

Kenneth Goldsmith: e.g. Fidget

Robert Grenier: e.g. Greeting

George Hartly: e.g. Envy Pride Glutonny

மேற்சொன்ன பட்டியல் வெறும் தகவலுக்காவே சேர்க்கப்பட்டிருக்கிறது.பின்நவீன கவிதையில் சில அடிப்படையான கூறுகள் இருக்கிறன அவை:

1.பிம்பமாற்றம்( iconoclasm):பண்பாட்டு தரங்களை புனிதநீக்கம் செய்வதும்,ஆசிரியரின் அதிகாரத்தை மறுப்பதும் முரண்நகை,பகடி,ஒட்டுதல் போன்றவற்றை சுய மேற்கோளாக பாலினம்,இனம்,சூழல் சார்ந்து பயன்படுத்தும் விதம் மெட்டாகவிதையில் பிராதமானதாகும்.

2.தளமின்மை(groundless):முடிவான விளக்கமோ அல்லது விருப்புறவான முடிவோ மறுக்கப்படுவதாக பன்முக அர்த்தங்களாக கவிதை இயங்கும் போது தளமின்மை பிரதானமாகிறது

3.வடிவமின்மை(formlessness):படிமத்தின் உருவமாற்றம் மூலப்பிரதியாக இருந்து கொலாஜ்,ஒட்டுதல்,கலவைக்கு வழிவகை செய்யும்.எனவே வடிவமின்மை பிரதானப்படுத்தப்படுகிறது.

4.வெகுஜனதன்மை(populism): வெகுஜன எதார்த்தங்களை உள்வாங்கிக்கொண்டு மொழிச்சுழலை விளையாட்டு தன்மைமிக்கதாக மாற்றவேண்டும்.

இன்று The End of the Line for Poetry பிரதானமாக பேசப்படுகிறது

Russel Eldon, ‘The Prose Poem in America ‘, Parnassus, 5, no 1:321-5

Frank and Sayre, ‘The Line in Postmodern Poetry ‘, University of Illinois Press, 1988.

Stephen Fredman, ‘Poet ‘s Prose: The Crisis in American Verse ‘, Cambridge University Press, 1983.

P. Hobsbaum, ‘Metre, Rhyme and Verse Form ‘, Routledge, 1996.

T. Steele, ‘Missing Measures ‘, University of Arkansis Press, 1990.

D. Wesling, ‘The New Poetries ‘, American University Press, 1985.

Prose Poem முக்கிய உத்தியாக மாறிக்கொண்டிருக்கிறது.பூமா ஈஸ்வரமூர்த்தியின் அண்மையில் வெளியான கவிதைகள் பின்நவீன கவிதையின் குணாம்சங்களைக் கொண்டிருக்கிறது.

தாழ்வாரத்தில் வெற்றுக் கால்களோடு பதட்டமாய் யாரோ குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருக்கிறார்கள்.அனுமதியின்றி,உறங்கவும்,ஓய்வெடுக்கவும்நினைவின்றி நடந்து கொண்டேயிருக்கிறார்கள்.நான் வெளியே பார்த்துக் கொண்டும் உள்ளே கவனித்துக் கொண்டும் இருக்கிறேன்.என் ஆழ்மன அடுக்கை கலைக்கவே முயற்சிகள்.சிறிதளவிலேனும் பெரிய அளவிலேனும்,புதிய வரிகளில்.

‘…suddenly the idea of [prose poems] occurred to me as something new in which the arbitrary divisions of poetry into lines would be abolished… the poetic form would be dissolved, in solution, and therefore create … more of a surrounding thing like the way one ‘s consciousness is surrounded by one ‘s thoughts… ‘

– Ashbery

பின்நவீன கவிதைகளில் பல தன்மைகள் காணப்படுகிற்து.அவை

1.Visual Poetry

2.HyperText Poetry

3.PolyPoetry

4.PostLanguagePoetry

5.NonObjectPoetry

6.MetaPoetry

7.SoundPoetry

அண்மையில் பன்முகம் இதழில் எனது மீபிரதிகவிதை(HyperText Poetry)ஒன்று வெளியாகியுள்ளது.இக்கவிதை பின்நவீன கவிதையாக கருதப்படுகிறது.கவிதையில் வாசகர் இயங்குவதற்கான தளம் காணப்படும்.தளம் பின்வருமாறு இருக்கிறது.கவிதையின் பெயர் எரியும் கடல் என்பதாகும்.

தளம்

கடல் 1 2 3 அலை அ சப்தம் ஆ

கடல் பறவை இ கடற்கன்னி ஈ

நாக்குகள் உ அவள் ஊ

துடுப்பு எ தேவதை ஏ

கடல்வெள்ளம் ஜ

1 கீற்றுகள்

2 பறவைகள்

அ ஆ இ ஈ உ ஊ துடுப்பு எ

க் அன்பு ங் சிதல்கள் ச் கண்கள்

ஞ் அவன் ட் குரல் ண் கொந்தளிப்பு

த் பறவைகள்

இத்தளம் கவிதை இயங்க வாசகருக்கு பயன்படும் முதல் தளமாகும்.கவிதையில் வாசகர் இயங்கிக்கொண்டிருக்கும் போது இது போன்ற பல மாறுபட்ட தளங்கள் வந்து கொண்டேயிருக்கும்.உதாரணமாக வாசகர் அலை என்ற சொல்லை தேர்வுச்செய்யும் போது குறிபானுக்கும் குறியீடுக்கும் வேறுபாடுயிருக்கும் என்பதனடிப்படையில் கவிதை இயங்க துவங்குகிறது.

அலை என்ற சொல்லை ஒட்டி உள்ளே என்ற வாசல் இருக்கிறது.வாசகர் இப்போது உள்ளே நுழைந்துவிட்டார் என்று வைத்துக்கொள்வோம்.

உனது

கரை கைகளை குலுக்கி

குசலம் விசாரிக்கும்

அலைப்பெண் கைகளில்

முற்றிலும் தெரியவோ

புரியவோ

மறுக்கப்படும் ஒரு

உணர்வினால் மட்டும்.

இது கவிதை.இதை வாசித்து முடிக்கும்போது அலைப்பெண்கைகள் என்ற சொல்லுக்கு கீழே உள்ளே என்ற வாசல் இருக்கிறது.வாசகர் அந்த சொல்லுக்குள் செல்லுகிறார்.மீண்டும் கவிதை தெரிகிறது.

உருண்டு திரண்ட அசைவுகள் என

கருகரு உருவமனிதர்கள்

துடுப்புகளின் உக்ர வேகத்தால்

கடலை கீறி

அலையுடன் மோதி

சரிந்தும் ஆடியும்

நடுக்கத்துடன் சொப்ன கீதங்கள்

தாலோலம் பாடியது

சோகத்தை விலக்காமல்

விட்டு விடுதலையாகாமல்

மீண்டும் அலையுடன் மோதி,அலையும்,நீர்திவலைகள் என்று சொற்கள் வர அவற்றையெல்லாம் படித்து விட்டு செல்லும் போது தளம் வருகிறது.அத்தளத்தில் முற்றிலும் புதிய சொற்கள் தெரிகின்றன.இப்படியாக கவிதையை வாசகர் நேர்கோட்டிலும் சரி,அநேர்கோட்டிலும் சரி இயக்கமுடியும்.இம்முறையை மீபிரதி கவிதை சொல்லுகிது.கவிதையின் தொடக்கம் எது முடிவு எது என்பதை வாசகர் தான்

தீர்மானிக்கவேண்டும்.மேலும் இக்கவிதை திட்டமிடப்பட்டு தூயது,வெகுஜனமானது என்பவைகளுக்கு இடையில் உள்ளதன்மையோடிருக்கும்.எனவே தமிழில் பின்நவீன கவிதை முயற்ச்சிகள் பரவலாக எல்லோரின் கவனத்தை பெற்றிருக்கிறது என்பதை சொல்லமுடியும்.

—-

mujeebu2000@yahoo.co.in

Series Navigation

எச்.முஜீப் ரஹ்மான்

எச்.முஜீப் ரஹ்மான்