வெங்கட் சாமிநாதனுக்கு கனடாவில் இயல் விருது

This entry is part [part not set] of 44 in the series 20040115_Issue


கனடிய தமிழ் இலக்கியத் தோட்டமும், ரொறொன்ரோ பல்கலைக் கழக தென்னாசிய மையமும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இணைந்து உலகத்துச் சிறந்த தமிழ் இலக்கியவாதிகளுக்கு வாழ்நாள் இலக்கியச் சேவைக்கான ‘இயல் விருது ‘ வழங்கி வந்திருக்கின்றன.

இந்தக் கெளரவத்தில் ‘இயல் விருது ‘ கேடயமும், பணமுடிப்பு $1500 அளிப்பும் அடங்கும். 2001ம் ஆண்டுக்கான விருது கவிதை, நாவல், கட்டுரை, சிறுகதைகள், விமர்சனம் என்று சகல துறைகளிலும் தன் ஆழமான முத்திரையைப் பதித்த சிறந்த இலக்கியச் சிந்தனையாளரான திரு சுந்தர ராமசாமி அவர்களுக்கு வழங்கப் பெற்றது. அதைத் தொடர்ந்து 2002ம் ஆண்டு, மணிக்கொடி பரம்பரை எழுத்தாளரும், அறுபது வருடங்களுக்கு மேலாக இலக்கியச் சேவையில் ஈடுபட்டவருமான திரு கே. கணேஷ் அவர்களுக்கு இந்தக் கெளரவம் கிடைத்தது.

2003 க்கான ‘இயல் விருது ‘ கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கியம், சிந்தனை, சினிமா, நாடகம், சிற்பம், சங்கீதம், ஓவியம், தத்துவம் ஆகிய பல் துறை எழுத்துக்களில் தீவிரமாக இயங்கிவரும் திரு வெங்கட் சாமிநாதனுக்கு வழங்கப்படுகிறது. விருது வழங்கும் விழா ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தின் குளோட் பிஸெல் அரங்கில் எதிர்வரும் வசந்தகாலத்தில் நடைபெறும்.

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு