சிறைக்குள்ளிருந்து ஒரு கவிதை (ரஷ்ய கவிஞர் மூஸா ஜலீல் பற்றி)

This entry is part [part not set] of 27 in the series 20021027_Issue

எச். பீர்முஹம்மது.


பெர்லினின் ரஷ்யா மீதான படையெடுப்பு/ அதன் கொடூரம் இவற்றின் ஒட்டுமொத்த சேர்கையாக ரஷ்யா/ மகத்தான அந்த அக்டோபர் புரட்சிக்குப்பிறகு நாடு சோசலிசத்தை தழுவிக்கொண்டிருக்கிறது. அந்த சூழலில் நாசிச ஜெர்மனியின் வெறித்தனமான தாக்குதல்களுக்கிடையே ஒரு கவிஞூனின் வாழ்க்கை சிறைப்பட்டிருக்கிறது. மோபித் சிறையின் கம்பியறைகளுக்கிடையே இருந்து கீழ்கண்ட வாசகம் காணப்படுகிறது. நான் மூஸா ஜலில் பாசிசத்திற்கு எதிரான அரசியல் வேலை காரணமாக என்மீது குற்றம் சுமத்தப்பட்டு மரணத்தண்டனை விதிக்கப்பட்டு இந்த சிறையில் அடைபட்டிருக்கிறேன். எந்த ரஷ்யனாவது இந்த செய்தியை கண்டால் அதனை மாஸ்கோவிற்கு தொியப்படுத்துங்கள். இரண்டாம் உலகப்போாின் உலகப்போாின் நிகழ்வுகளுக்கிடையே அவாின் எழுத்து வாழ்க்கை தக்கவைக்கப்பட்டிருந்தது. என் பாடல்கள்/ மன்னியுங்கள்/ என் தாய்வீடு/ சாலைகள்/ நம்பாதீர்கள் முதலான கவிதை தொகுதிகள் அவாிடமிருந்து வெளிவந்தன.

சுதந்திரத்தை நேசிக்க எனக்கு

பாடல்கள் கற்று தரப்பட்டன

பாடல்கள் எனக்கு உதவின

பயமில்லாத மரணத்திற்கு

என் வாழ்க்கையை ஒரு பாடலாக

என் மரணமே போராட்டத்தை சுற்றி

நிகழ்கால அனுபவத்தின் வெளிப்பாடாக பிறந்தன இவ்வாிகள். சில காலங்களில் அனுபவமே நிகழ்காலம் ஆகிறது. காலக்கட்டுமானத்தின் மேல் மிதந்து கொண்டிருந்த புரட்சிகர எதார்த்த வாழ்க்கையானது அவாின் கவிதை தளத்திற்குள் பிரதிபலித்தது. 1942ல் மூஸா ஜலில் வால்காவிலிருந்தபோது அவர் நாஜி படைகளால் சூழப்பட்டார். அந்த நேரத்தில் நாஜி படைகளிடம் போர் கைதியாக பிடிபடுவதைவிட தற்கொலை செய்துகொள்வதே மேல் என்று முடிவெடுத்தார். மாஜிகள் அவரை பயங்கரவாதி/ தேசத்துரோகி என்று பெயாிட்டனர். இருந்தபோதும் கூட அவாின் தைாியமும்/ துணிச்சலும்/ எதையும் பொருட்படுத்தா தன்மையும் எழுத்திற்குள் தொடர்ந:து உள்ளிணைந்து கொண்டே இருந்தது.

நான் வாழ விரும்புகிறேன்

என் நாட்டிற்குள் அதனை அளிப்பதற்காக

என் துடிக்கும் இதயத்தின்

கடைசி நிமிடத்தில்

நான் சொல்வேன்

என் நாட்டிற்கு என்னை

கொடுத்துவிடு என்று

அவாின் கவிதை தொகுதிகளிலே மிகவும் குறிப்பிடத்தகுந்தது மோபித் குறிப்புகள். அவர் அடிமைத்தனத்திற்கும்/ சுரண்டல் வாழ்க்கைக்கும் எதிராக தொடர்ந்து போராடினார். ராணுவ மற்றும் கவிதை சுரண்டல் அவரை எழுத்திலிருந்தும் அப்புறப்படுத்திவிடவில்லை.

சோவியத் எழுத்தாளர்களின் இரண்டாவது மாநாட்டில் சோவியத் கவிஞர் சாமத்வர்கன் மூஸா ஜலீலைப் பற்றி பின் வருமாறு குறிப்பிட்டார். உலகம் மற்றும் உலக இலக்கியம் நிறைய நிலைத்த கவிஞூர்களை அறியும் அவர்களின் பெயரும்/ புகழும் அவர்களின் கவிதையும் நிலைத்து நிற்கும். அவர்களில் சிலரே சாசுவதமாக நிற்கின்றனர். அவர்களில் பைரான்/ ஹங்கோி/ கவிஞூர் பிட்டோபி/ ஜூலியஸ் பக்/ இறுதியாக மூஸா ஜலீல். மூஸா ஜலீல் நாசிசத்தின் எந்த அச்சுறுத்தல்களுக்கும் பணியவில்லை.

நீ என்னை கொல்வதற்கு

என் கால் முட்டியை நோக்கி காத்திருக்கிறாய்

நான் மரணத்திற்கு காத்திருக்கிறேன்

ஒருவித துணிச்சல் மனோபாவம் அவாிடத்திலும் அவாின் கவிதைகளிடத்திலும் இருந்தது. மூஸா ஜலீல் பற்றி விாிவான விபரங்கள் நமக்கு கிடைக்கவில்லை. அவாின் எழுத்துக்களில் சில பகுதிகள் கிடைக்காமலே போய் விட்டன. எல்லா நிலைகளிலும் கவிதை தன் இயங்குதளத்தை மாற்றிக்கொண்டே வந்திருக்கிறது. எல்லா தளங்களும் கவிதையை வெவ்வேறு வெளி காலச் சூழலில் வைத்தே அர்த்தத்தை அளிக்கின்றன. இந்த நிலையில் மூஸா ஜலீல் சோவியத் கவிதை இயக்கத்தில் குறிப்பிட்ட இடத்தை பெறுகிறார். பிறப்பு/ வாழ்வு/ இறப்பு இம் மூன்றும் சுழன்று கொண்டே வருகிறது. இந்த சுழற்சியில் மூஸா ஜலீலின் கவிதையும் நமக்குள் வலம் வருகின்றது.

**

peer13@asean-mail.com

***

Tartar poet Musa Dzhalil

Series Navigation

எச்.பீர்முஹம்மது

எச்.பீர்முஹம்மது