தமிழில்: வைஷாலி
பில்லி என்னும் ஒரு சிறுவன் இருந்தான். பில்லி ஒரு சாதாரண சிறுவன், எல்லா சிறுவர்களைப் போலவே அவனும் சிறுவர்களின் குணங்களைக் கொண்டவனாக இருந்தான், விளையாட்டு, சாப்பிடுதல், குளித்தல், பொருள்களை நாசப்படுத்துதல், மற்றும் பள்ளிக்கு செல்லுதல். ஒரு நாள், பில்லி பள்ளி செல்வதற்காக பள்ளி பேருந்துக்காக காத்துக்கொண்டிருக்கையில் அவனுடைய நண்பர்கள் அனைவரும் கும்பலாக கூடி ‘பர்ப்பிள் வாம்பாட் ‘ பற்றி பேசிக் கொண்டிருப்பதை கண்டான்.
பில்லி சிறுவனாக இருந்தமையால் அவனுக்கு அதைப் பற்றி தெரிந்துக்கொள்ள ஆர்வமாயிருந்தது. ஆகவே அவன் அவர்களிடம் ‘பர்ப்பிள் வாம்பாட் ‘ என்றால் என்ன ? ‘ என்று கேட்டான்.
‘உனக்கு பர்ப்பிள் வாம்பாட் பற்றி தெரியாதா ? குழந்தைகள் ஆச்சரியமுற்றனர் மிகவும் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தனர். அன்று காலை முதல் அவர்கள் அவன் பில்லியின் அருகினில் செல்லவில்லை, சற்று தூரத்திலிருந்தபடியே அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். பிற்கு பஸ் வந்தது. பில்லி, குழப்பமுற்றான், மற்ற குழந்தைகளுடன் அவன் பேருந்துக்குள் ஏறினான்.
‘பேர்ந்து ஓட்டுனரே ‘ குழந்தைகளின் ஒன்று கத்தியது. ‘பில்லிக்கு பர்ப்பிள் வாம்பாட் பற்றி தெரியவில்லை ‘ ‘
பேருந்து ஓட்டுநர் வெறுப்புடன் திரும்பி பார்த்தார். ‘உனக்கு பர்ப்பிள் வாம்பாட் பற்றி தெரியவில்லையா ? நம்பமுடியாமல் கேட்டார். அவர் பில்லியை கடைசி இருக்கையில் சென்று அமரும்படி சொன்னார்.
வழக்கம் போல் அவர்கள் பள்ளியை அடைந்தனர், பில்லி பேருந்திலிருந்து இறங்கி வகுப்பை அடைந்தான். வகுப்பு இயல்பாக தொடங்கியது; சிறுவர்கள் சிறிது நேரம் தங்கள் பெருக்கல் வாய்ப்பாட்டில் மூழ்கியிருந்தனர். பிறகு ஆசிரியர் புவியியல் பாடத்தை நடத்த தொடங்கினார். ஆனால் பில்லி உண்மையில் அவைகளில் கவனம் கொள்ளவில்லை, ஆனால் ஆசிரியர் பர்ப்பிள் வாம்பாட் பற்றி ஏதோ சொல்வதைக் கேட்டான்.
பில்லியின் கைகள் உயர்ந்தன, ஆசிரியர் அவனை அழைத்தார், பில்லி ‘ஆசிரியரே பர்ப்பிள் வாம்பாட் என்றால் என்ன ? ‘ என்றான்.
‘உனக்கு பர்ப்பிள் வாம்பாட் பற்றி தெரியாதா ? ‘ ஆசிரியர் மிகவும் கோபமாக கத்த ஆரம்பித்தார், ‘நீ உடனே தலைமை ஆசிரியர் அறைக்குச் செல், சிறுவனே ‘
ஆகவே பில்லி தலைமை ஆசிரியர் நீண்ட இருள் சூழ்ந்த பாதை வழியே அச்சத்துடன் தலைமை ஆசிரியர் அறை நோக்கி சென்றான். மெதுமாக, உயர்ந்த கடினமான கதவை திறந்தான். உள்ளே மிகவும் ஜாக்கிரதையாக அறைக்குள் அதன் பின்னே நுழைந்தான். அங்கே, மிக பெரிய ஒரு மேஜையின் பின்னால் தலைமை ஆசிரியர் அமர்ந்திருந்தார்.
தலைமை ஆசிரியர் மிகவும் வயதானவர், வழுக்கை தலையுடன், மெல்லிய மீசையுடனும் இருந்தார். ஆழமான கம்பீரமான தொனியில் பேசுபவர். கண்ணீருடன் சென்ற பில்லியைப் போன்ற சிறுவர்களை பயமுறச் செய்வதற்கு போதுமானவராயிருந்தார்.
நல்லது, பில்லி, ‘ அவர் மெல்ல ஆரம்பித்தார். ‘உன்னுடைய பிர்ச்சினை என்ன ? ‘.
‘உயர்திரு. தலைமை ஆசிரியரே, எனக்கு இன்று என்ன நடந்துக் கொண்டிருக்கின்றது என்று புரியவில்லை. ஒவ்வொருவரும் இயல்புக்கு மாறாக நடந்துக் கொள்கிறார்கள். அவர்கள் என்னை மிகவும் தவறாக நடத்துகிறார்கள். ஆசிரியர் இங்கே என்னை உங்களிடம் அனுப்பியதைப் போல. ‘
‘இப்போது, பில்லி, இங்கு உனக்கு உதவ நான் இருக்கிறேன், எல்லாவற்றுக்கும் மேலாக நான் ஒரு தலைமையாசிரியன் ஹஹ் ஹஹ் ஹஹ். நீ எனக்கு எல்லோரும் ஏன் இப்படி விபரீதமாக நடந்துக் கொள்கிறார்கள் என்று சொல்லமுடியுமா ? ‘.
‘அது, எனக்கு பர்ப்பிள் வாம்பாட் என்றால் என்னவென்று தெரியாததால். ‘
‘என்ன ? உனக்கு பர்ப்பிள் வாம்பாட் என்றால் என்னவென்று தெரியாதா ? அவ்வள்வுதான், நீ உன் பெற்றோரை அழைத்துக் கொண்டு வா சிறுவனே அத்துடன் நீ இந்த பள்ளியிலிருந்து தற்காலிகமாக விலக்கி வைக்கப் படுகிறாய் என்பதை அறிந்துக்கொள்.
தலைமையாசிரியர் பில்லியை அவரது அறையிலிருந்து வெளியே அவன் வீட்டுக்குப்போகுமாறு துரத்தினார். பில்லி அழுதுக்கொண்டே அவன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான். அவன் வீட்டை அடைந்தப்போது அவன் தாய் அவனுக்காக காத்துக்கொண்டு கதவின் அருகே நின்றுக் கொண்டிருந்தாள்.
‘பில்லி ‘ தாயின் பரிவான குரல். ‘நான் உனக்காக மிகவும் வருந்துகிறேன். என்ன ஆயிற்று ? ‘
‘அம்மா, ‘ பில்லி அழுகையினூடே ‘எல்லோரும் என்னை ஒதுக்குகின்றனர். என்னை பின் இருக்கையில் அமரவைக்கின்றனர். ஆசிரியர் என்னை தலைமை ஆசிரியர் அறைக்குச் செல்ல சொல்லுகிறார், தலைமை ஆசிரியர் என்னை தற்காலிகமாக என்னை விலக்கி வைத்துள்ளார். இவையெல்லாம் எனக்கு பர்ப்பிள் வாம்பாட் என்பது என்னவென்று தெரியாதென்பதற்காக ‘ ‘.
‘என்ன ? உனக்கு பர்ப்பிள் வாம்பாட் பற்றி தெரியாதா ? ‘ பில்லியின் தாய் வீறிட்டாள். ‘இந்த நிமிடமே நீ உன் அறைக்குப் போ. போ ‘ அங்கே உன் தந்தை வரும்வரை இரு. ‘
பில்லி படியிலேறி தன் அறைக்குச் சென்றான். படுக்கையில் அழுதவாறே படுத்திருந்தான். சிறிது நேரத்தில் காரின் ஒலியும் கதவைத் திறந்து மூடும் சத்தமும் கேட்டன. அவன் தந்தை வீடு திரும்பிவிட்டார். பில்லிக்கு அவன் பெற்றோர் கீழே பேசிக்கொண்டிருப்பது கேட்டது, ஆனால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது தெரியவில்லை. படியேறி வரும் காலடி ஓசை கேட்டது, அறையின் கதவு திறக்கப்பட்டது.
‘பில்லி, ‘ அவனுடைய தந்தை உரை நிகழ்த்தும் தோனியில் ஆரம்பித்தார், ‘உன் அம்மா நீ மிகவும் தவறாக நடந்துக் கொள்வதாக சொன்னாள், இறுதியில் நீ என்ன செய்தாய என்பதை சொல்ல முடியுமா ? ‘
‘அப்பா, நான் எதையும் செய்யவில்லை ‘ எனக்கு பர்ப்பிள் வாம்பாட் என்றால் என்னவென்று தெரியவில்லை அவ்வளவுதான் ‘.
‘உனக்கு…….பர்ப்பிள் வாம்பாட் பற்றித் தெரியாதா. நல்லது, அப்படியென்றால், இரவுமுழுவதும் இந்த அறையிலேயே முடங்கிக்கொள், அத்துடன் உன் இரவு உணவையும் மறந்துவிடு ‘ பில்லியின் தந்தை கதவை அறைந்து மூடிவிட்டு மிகவும் கோபமாக சென்றார். பில்லி அழுதவாறே தன் படுக்கையில் படுத்திருந்தான். அடுத்து பல மணி நேரங்கள் அவன் எழுந்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வுடனேயே படுத்திருந்தான்.
பிறகு, நள்ளிரவில், ஒரு குரல் கேட்டது. அது ‘பில்லி. நான் தான் பர்ப்பிள் வாம்பாட், பில்லி ‘
பில்லி எழுந்து உட்கார்ந்தான். அறையில் சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தான் அந்த ஒலிக்கான காரணத்தை எதிர்பார்த்து, ஆனால் அவனால் முடியவில்லை.
‘பில்லி. நான் தான் பர்ப்பிள் வாம்பாட். என்னை கண்டுகொள், பில்லி ‘
அந்த ஒலி ஜன்னலின் வெளியே இருந்து வந்தது. ஆகவே பில்லி படுக்கையை விட்டு எழுந்தான், தன் காலணிகளை அணிந்துக் கொண்டு, ஜன்னலைத் திறந்தான், கூரையின் மேல் ஏறினான்.
‘பில்லி. நான் தான் பர்ப்பிள் வாம்பாட். ‘
பில்லி கூரையிலிருந்து இறங்கி அந்தக் குரலைத் சாலையின் வழியே தொடர்ந்தான். அது ஒரு மரக்கட்டையின் இறுதி முனையை அடைந்தது.
‘பில்லி. நான் தான் பர்ப்பிள் வாம்பாட். என்னை தொடர்ந்து வா, பில்லி. ‘
அந்த குரல் மரக்கட்டையின் உள்ளிருந்து வந்துக் கொண்டிருந்தது. மிகவும் இருளாகவும் பயம் கொள்ளும் விதமாக இருந்தது, ஆனால் பில்லி அவை பற்றி கவலைக் கொள்ளவில்லை, அவனுக்கு பர்ப்பிள் வாம்பாட் பற்றி தெரிந்துக் கொள்ளவேண்டியிருந்தது, ஆகவே அவன் தைரியமாக மரக்கட்டையின் உள்ளே சென்றான்.
‘பில்லி. நான் தான் பர்ப்பிள் வாம்பாட் சென்றுக்கொண்டே இரு, பில்லி. ‘
பில்லி தொடர்ந்து கட்டையின் உள்ளே சென்றுக்கொண்டிருந்தான், அவனால் எதையும் தெளிவாக பார்க்க முடியவில்லை, அவன் தடுக்கி விழுவதும் எதன் மீதாவது மோதிக்கொள்வதுமாகவே, அவனைப் பெயர் சொல்லி அழைக்கும் அந்தப் பிரச்சினை என்ன அறிந்துக் கொள்ளும் பொருட்டு தொடர்ந்து சென்றுக்கொண்டிருந்தான்.
அந்த மரக்கட்டையின் மறுமுனை அடைந்த பில்லி அந்த நகரத்திலுள்ள ஒரு ஏரியின் கரையில் நின்றுக் கொண்டிருந்தான்.
‘பில்லி. நான் தான் பர்ப்பிள் வாம்பாட், நான் இங்கிருக்கிறேன். பில்லி ‘.
அந்த குரல் ஏரியிலிருந்து வந்துக் கொண்டிருந்தது. பில்லி ஒரு அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய படகை அவிழ்த்து அதில் ஏறி இயக்கத்தொடங்கினான். மிகவும் சிறுவனாக இருந்ததால் அது அவனுக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் அவனுக்கு பர்ப்பிள் வாம்பாட் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியிருந்தது.
‘பில்லி. நான் தான் பர்ப்பிள் வாம்பாட், துடுப்பு இடு, பில்லி ‘
அந்தக் குரல் மறுகரையிலிருந்து வந்துக் கொண்டிருந்தது. பில்லி தன் முயற்சியை இரட்டிப்பாக்கினான், படகு சிறிது வேகமாக முன்னேற தொடங்கியது. அவன் பாதி வழியிலிருக்கும் போது, ‘பில்லி, நான் தான் பர்ப்பிள் வாம்பாட் இதோ நான் இங்கே மேலேயிருக்கிறேன் ‘ என்ற குரல் கேட்டது.
அந்தக் குரல் அவனுக்கு நேர் மேலே கேட்டுக்கொண்டிருந்தது. பில்லி துடுப்பு இடுவதை நிறுத்திவிட்டு எழுந்து நின்று அதைத் தேடிக்கொண்டிருந்தான். படகு சாய்ந்து அவனைக் ஏரியில் மூழ்கடித்து. பில்லிக்கு நீந்தத் தெரிந்திருக்கவில்லை. ஆகவே அவன் மூழ்கிப்போனான்.
கதையின் நீதி : படகில் நிற்காதீர்கள்.
- கிழிந்து கிடக்கும் வானம் அல்ல நீ.
- பர்ப்பிள் வாம்பாட்.
- கார்ல் சாகன் அவர்களது மேற்கோள்கள்
- மனத்தின் வைரஸ்கள் – 3 – விஞ்ஞானமும் ஒரு வைரஸா ?
- ஒதுங்கியிரு
- தேடல்..
- விக்னேஷ் கவிதைகள் ஐந்து
- இன்னும் கொஞ்சம்
- ரவிசுப்ரமணியனின் கவிதை
- பூலோகத் திருப்பள்ளியெழுச்சி
- ஜன்னல்
- அழிவின் தீராநடனங்கள்
- மனித சங்கிலி
- வளர்ந்த அமெரிக்கா, வளரும் இந்தியா
- பெரியாரியம் – தத்துவத்தை அடையாளப்படுத்துதலும், நடைபெற வேண்டிய விவாதமும் – ஆய்விற்கான முன் வரைவுகள் – 3
- இந்த வாரம் இப்படி – நவம்பர் 19 2001
- பிறவழிப் பாதைகள்
- பூக்கும் கருவேலம்–பூமணியின் படைப்புலகம்
- சிப்பி
- அத்தனை ஒளவையும் பாட்டிதான்- 3