இலை போட்டாச்சு – 32 ரவா கேசரி

This entry is part [part not set] of 36 in the series 20070809_Issue

பாரதி மகேந்திரன்


ரவா கேசரி

தேவைப்படுபவை

மும்பை ரவை – 200 கிராம்
சர்க்கரை – 400 கிராம்
உலர்ந்த திராட்சை – 50 கிராம்
முந்திரிப்பருப்பு – 50 கிராம்
பச்சைக் கற்பூரம் – ஒரு மிளகின் பொடி யளவு
குங்குமப்பூ – ஒரு மிளகின் பொடி யளவு
நெய் – 150 கிராம்
ஏலப் பொடி – 1 தே. க.
கேசரிப் பொடி (வண்ணத்துக்காக) ஒரு மிளகுப் பொடி யளவு

முதலில் ஒரு வாணலியில் நெய்யில் பாதியை ஊற்றி அது காய்ந்ததும் முந்திரிப் பருப்பு, திராட்சை ஆகிய இரண்டையும் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். அதே
நெய்யில் நன்றாய்ச் சுத்தப்படுத்திய (அதாவது புழு, வண்டுகள் நீங்கிய) ரவையைக் கொட்டிப் பொன் வறுவலாக வறுக்கவும். இதற்கு முன்னதாகச் சுமார் இரண்டு ஆழாக்குத் தண்ணீரைக் கொதிக்கவைத்துத் தயாராக வைக்கவும். பொன் நிறமாய் வறுக்கப்பட்ட ரவையின் மீது அந்த வெந்நீரைக் கொட்டிக் கலந்து கிளறவும். ரவை நன்றாக வெந்து இறுகிய பிறகு அத்துடன் சர்க்கரையச் சேர்த்துக் கலந்து கிளறவும். சற்றே நேரத்தில் சர்க்கரையும் ரவையும் கலந்து குழையத் தொடங்கும். அதன் பின் வறுத்து வைத்துள்ள முந்திரிப்பருப்பு, திராட்சை, ஏலப்பொடி, பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, கேசரிப்பொடி, மீதமுள்ள நெய் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

mahendranbhaarathi@yahoo.com

பாரதி மகேந்திரன்

Series Navigation

பாரதி மகேந்திரன்

பாரதி மகேந்திரன்