மாட்டுக்கறி பிரியாணி

This entry is part [part not set] of 26 in the series 20020428_Issue


தேவையான பொருட்கள்

1 கிலோ மாட்டுக்கறி

அரை லிட்டர் (அல்லது 1 பைண்ட்) தயிர்

3 நடுத்தர வெங்காயங்கள்

4 அங்குல நீளமுள்ள இஞ்சி

1 சிறு கொத்து புதினா

கால் கிலோ அரிசி

25 கிராம் பாதாம் பருப்பு

50 கிராம் திராட்சை

குங்குமப்பூ சிறிதளவு

கிராம்பு சிறிதளவு

ஏலக்காய் சிறிதளவு

கசகசா விதைகள்

பட்டை

நெய்

செய்முறை.

இரண்டு நடுத்தர வெங்காயங்கள், 6 பூண்டு பற்கள், 4 அங்குல நீளமுள்ள இஞ்சி, கொத்து புதினா, 4 ஏலக்காய், 4 கிராம்பு, 2 தேக்கரண்டி கசகசா, 1 இஞ்ச் பட்டை, 4 பச்சை மிளகாய்களை ஒரு மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.

மாட்டுக்கறியை 2 கோப்பை தண்ணீரில் மெதுவான சூட்டில் வேகவைத்து கொதி நிலைக்கு கொண்டுவரவும். நன்றாக மிருதுவாக ஆகும் வரை வேகவைக்கவும்

அரிசியை குளிர்ந்த நீரில் கழுவி, தண்ணீர் இல்லாமல் எடுத்துக்கொள்ளவும்.

நெய்யை ஒரு வாணலியில் ஊற்றி, அதிக சூடாக்கி, அதில் அரிசியை போட்டு பிரட்டவும். நன்றாகக் கலந்ததும் தனியே எடுத்து வைக்கவும். வாணலியில் அரிசி ஒட்டாமல் இருக்கும்படி கலக்கவும். இத்துடன் ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து தனியே எடுத்து வைக்கவும்.

ஒரு பெரிய உலையில் (Oven) வைக்கக்கூடிய பாத்திரத்தில், அரிசியை போட்டு, விழுதாக அரைத்த கலவையையும், அளவிற்கேற்ற மாட்டுக்கறியையும் போட்டுப் புரட்டவும். நீரை ஊற்றவும். கலவைக்கு மேலே அரை அங்குலம் தண்ணீர் நிற்க வேண்டும். நெய்யையும் ஊற்றவும். குங்குமப்பூவை லேசாகப் பொடி செய்து பாலில் கலந்து மேற்பரப்பில் தெளிக்கவும். வாணலியை இறுக்கமாக மூடி உலைக்குள் தள்ளவும். 450 டிகிரி ஃபாரன் ஹீட்டில் 45 நிமிடத்திற்கு வேக விடவும். மாட்டுக்கறி பிரியாணி தயார்.

Series Navigation