(இரண்டு பேருக்குத் தேவையான அளவு)
சின்ன நெத்திலிக்கருவாடு (Anchovies) ஒரு கைப்பிடி
பெரிய வெங்காயம் 1/4
தங்காளி 1/2 தக்காளி
பூண்டு 4 பல்
புளி ஒரு எலுமிச்சை பழம் அளவு
கொத்தமல்லித் தூள் 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 1/4 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
முருங்கைக்காய் அல்லது கத்தரிக்காய் நாலைந்து துண்டுகள்
தாளிக்க எண்ணெய், கருவடாம் அல்லது கடுகு உளுத்தம்பருப்பு வெந்தயம் கருவேப்பிலை
செய்முறை
3 தேக்கரண்டி எண்ணெய் வாணலியில் ஊற்றி காய்ந்ததும், கருவடாம் (அல்லது தாளிக்க வைத்துள்ளதைப்) போட்டு, அரிந்து வைத்துள்ள வெங்காயம் பூண்டு துண்டுகளைப் போட்டு வதக்கவும்.
அத்தோடு, மிளகாய், கொத்தமல்லித் தூள், மஞ்சள் தூள், தக்காளி, முருங்கை, கத்தரி காய்களைப் போட்டு வதக்கவும்
பிறகு ஒரு கோப்பை தண்ணீர் ஊற்றி காயை வேகவைக்கவும்.
வெந்தவுடம் தலையைக் கிள்ளி தண்ணீரில் சுத்தம் செய்து வைத்துள்ள கருவாட்டு துண்டுகளைப் போட்டு வேகவிடவும்.
பிறகு புளியைக் கரைத்து அதில் விட்டு, கொதிக்க விடவும்.
உப்பு போட்டு ருசி பார்த்து இறக்கவும்.
***
- சேவல் கூவிய நாட்கள் – குறுநாவல் – இறுதிப்பகுதி
- வடிவ அமைதி
- நியதி
- பகல் நேர சேமிப்பு
- யூதர்களுக்கும் கிறுஸ்தவப் போராளிகளுக்கும் எதிரான ஜிகாத்
- இந்த வாரம் இப்படி – அக்டோபர் 27 , 2001
- நாகாிக மானுடமே!
- கலைமகளே!பதில் சொல்வாய்..!
- நிலவு
- கண்ணீர்
- கொலுசணிந்த பாதங்களுக்கு ஒரு முத்தம்
- எனக்கு மழை வேண்டாம்
- மறக்க முடியுமோ ?
- பகல் நேர சேமிப்பு
- மூலக்கூறு அளவில் கணினிக்கான டிரான்ஸிஸ்டர்
- கருவாட்டுக் குழம்பு