சிற்றுண்டி ஃபலாஃபல் (கொண்டைக்கடலை வடை)

This entry is part [part not set] of 15 in the series 20010325_Issue


தேவையானப் பொருட்கள்

6 கோப்பை பெரிய கொண்டைக்கடலை ஊறவைத்து, வேகவைத்தது

1 பெரிய சிவப்பு வெங்காயம் நறுக்கியது

3 பூண்டு பற்கள், நசுக்கியது

1 1/2 கோப்பை ரொட்டித்தூள் (கடையில் கிடைக்கும் ப்ரட் வாங்கி தோசைக்கல்லில் போட்டு ரஸ்க் போல காயவைத்து தூளாக்கி வைத்துக்கொள்ளலாம்)

2 சிறிய சிவப்பு மிளகாய்கள்

1 தேக்கரண்டி சீரகத்தூள்

1 தேக்கரண்டி மல்லித்தூள்

1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள்

1 பெரிய கரண்டி நறுக்கிய கொத்துமல்லி

1 முட்டை, அடித்தது

வறுக்க எண்ணெய்

உப்பும் மிளகும் ருசிக்குத் தகுந்தாற்போல

(தக்காளி, வெள்ளரித்துண்டுகளும், எலுமிச்சை துண்டுகளும் பரிமாறும்போது வைக்கலாம்)

செய்முறை

1. ஒரு கோப்பை ரொட்டித்தூளுடன், கொண்டைக்கடலை, வெங்காயம், பூண்டு, மிளகாய், சீரகத்தூள், மல்லித்தூள், மஞ்சள், கொத்துமல்லி போன்றவற்றை ஒரு மிக்ஸியில் போட்டு 30 வினாடிகள் அடிக்கவும். நன்றாக கலக்கி மீண்டும் ஒரு முறை அடிக்கவும்.

2. வெளியே எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு உப்பு மிளகுத்தூள் போட்டு நன்றாகக் கலக்கி ருசி பார்க்கவும். பிறகு இந்த கலவையை நெல்லிக்காய் அளவு சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.

3. ஒரு பாத்திரத்தில் உடைத்த அடித்த முட்டையை வைத்துக் கொள்ளவும். இன்னொரு சிறு தட்டில் மீதமிருக்கும் அரை கோப்பை ரொட்டித்தூள்களை வைத்துகொள்ளவும். உருண்டைகளை முதலில் முட்டையில் போட்டு மேலாக முட்டை ஒட்டியவுடன் ரொட்டித்தூளில் சிறிது உருட்டி ஒட்டாத ரொட்டித்தூள்களை தட்டிவிடவும்.

4. எண்ணெயை காயவைக்கவும்( ஒரு ரொட்டித்துண்டு போட்டால் 30 வினாடிகளில் பொன்னிறமாகும் அளவுக்கு சூடாக்கிய எண்ணெய், சரியான பதம்). உருண்டைகளை எண்ணெயில் மூன்று நான்கு உருண்டைகளாகப் போட்டு பொன்னிறமாகும்வரை வறுக்கவும். எண்ணெயில் இருந்து எடுத்து பேப்பரில் வைத்து எண்ணெய் வடிக்கவும்.

5. ஒரு ஈரமில்லாத தட்டில் மேற்கண்ட உருண்டைகளை வைத்து கொத்துமல்லி, தக்காளி, வெள்ளரித்துண்டுகள், எலுமிச்சைத்துண்டுகள் வைத்து பரிமாறவும்.

இதனுடன் சாப்பிட தயிர் நன்றாக இருக்கும். தயிர், கொத்துமல்லி, ஒரு நசுக்கிய பூண்டு, மிகச்சிறிதளவு உப்பு ஆகியவற்றை நன்றாகக் கலந்து வைக்கலாம்.

**

Series Navigation