புளி அவல்
அவல் –1/2 ஆழாக்கு(பொடி செய்துவைத்துக் கொள்ளவும்.)
மிளகாய் வற்றல் –6
தேங்காய் –1/2 மூடி
பெருங்காயம் –சிறிது
வெல்லம் –சிறிதளவு
புளி –நெல்லிக்காய் அளவு
உப்பு –தேவையான அளவு
கெட்டி அவல் வாங்கி மிக்ஸியில் ரவை பதத்திற்குப் பொடி செய்து வைத்துக் கொண்டால், தேவையான போது உபயோகிக்கலாம். அவலை நீரில் பிசிறி வைத்தால் 2-3 நிமிடங்களில் உதிரியாகி விடும்.
மிளகாய் வற்றல், தேங்காய், பெருங்காயம், வெல்லம், புளி, தகுந்த அளவு உப்பு இவற்றை மிக்ஸியில் நைஸாக அரைத்து, பிசிறி வைத்துள்ள அவலுடன் சேர்க்கவும். கொஞ்சம் எண்ணெயில் நிலக்கடலை,கருவேப்பிலை வறுத்து, இத்துடன் கலந்து விட்டால் மிகவும் சுவையாய் இருக்கும். அடுப்பில் வைத்துக் கிளற வேண்டிய அவசியம் இல்லை.
- சூரியனைத் தேடும் இலைகள்
- சினிமா போஸ்டர் வடிவில் ஒரு கவிதை
- கல்கி
- கியூப சமூகமும் கலைஞனின் சுதந்திரமும் :
- ஆண்மையின் புதிய அளவு கோல்கள் :ராஜ்குமார் கன்னட வெகுஜன தளத்தில் – இறுதிப்பகுதி
- ஏன் ஆப்பிரிக்கா பின் தங்கி இருக்கிறது ? (அல்லது ஏன் இந்தியா பின் தங்கி இருக்கிறது ?)
- இந்த வாரம் இப்படி – பெப்ரவரி 18 -2001
- ஜெயமோகனின் கடிதம்
- என்னைப் போல…
- கியூப சமூகமும் கலைஞனின் சுதந்திரமும் :
- ஒரு கடற்கரையின் இரவு…
- 2 கவிதைகள்
- இயற்கை மொழி கணிணியியல் (Natural Language Processing)
- காரட்–தேங்காய் மிக்ஸட் பர்பி
- புளி அவல்
- கிரிஷ் கர்னாட் – இந்திய நாடகங்களின் பரிமாணங்களை விரிவு படுத்தியவர் – நண்பர் குர்த்கோடி அவர்களுடன் பேட்டி
- தினகப்ஸா – 18 பெப்ரவரி 2001