Dr.இரா.சீனிவாசன், Ph.D, தைவான்
உணவை மென்று தின்னும் வாய், துளைத்து உறிஞ்சும் வாய், உறிஞ்சு குழல் வாய், அரிவாள் போன்று நீட்டிக்கொண்டு இருக்கும் வாய் என விதவிதமான வாய்கள் இருப்பதால் , பூச்சிகள் தேவையான இடத்தில் மட்டுமே உணவை சாப்பிடும். எப்போதாவது நீங்கள் சமைக்க எடுக்கும் கத்தரிக்காயில் புழு துளைத்த துளை இருந்தால் உற்றுப் பாருங்கள்.
காயின் மேற்பரப்பில்தான் எங்காவது துளை இருக்கும். காயின் அடிப்பரப்பை மூடியிருக்கும் புல்லி இதழ் களை எப்போதுமே துளைக்காது. ஏனெனில், புல்லி இதழ் களில், ஒரு சில நச்சுப்பொருட்கள் இருக்கின்றன. (பூச்சிகளுக்குதான் நச்சு – நமக்கல்ல!! எனவே, பயப்படாதீர்கள்!!!). எனவே, எதற்கு வீண்வம்பு என புல்லி இதழ் களை தொடவே தொடாது. பருத்திக்காய்ப்புழு கூட அப்படித்தான்! பருத்திக்காயில் காஸிப்பால் (Gossypol), ட்டேன்னின் (Tannin) போன்ற நச்சுப்பொருட்கள் இருக்கின்ிறன. எனவே, பருத்திக்காய்ப்புழு இந்தப்பொருட்களின் வீரியம் குறைந்த இடமாகப் பார்த்து, சாப்பிடும். துளைத்து உறிஞ்சும் வாய் அமைப்பு கொண்ட வெள்ளை ஈக்களுக்கு இன்னும் செளகர்யம். எங்காவது பசுமையான இலையின் புளோயம் (Phloem) குழலில் வாயைப் பொருத்திக்கொண்டுி, உட்கார்ந்துகொள்ளும்.
பொதுவாக, பூச்சிகள் உணவு இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, சாப்பிடுவதே ஒரு சுவாரசியமான நிகழ்வுதான்!! முதலில் உணவு இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் (Host Habitat Finding). அதை எப்படி கண்டுபிடிக்கும் தொியுமா ?
காதல் மன்னன் படத்தில் ஒரு காட்சி! மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், தன்னுடைய கண்ணதாசன் மெஸ்ஸில் உட்கார்ந்திருப்பாாி. அப்போது, அங்கு வரும், விவேக்குடன் பேசிக்கொண்டிருப்பார்!! இடையில்….
‘ ‘டே நரசிம்மா…. ரசத்துல உப்பு போடு ‘ ‘ – எம்.எஸ்.வி.
‘ ‘இதப்பாருடா…. எப்படி இங்க இருந்துட்டே ரசத்துல உப்பு பத்தைலன்னு கண்டுபிடிச்சீங்க ? ‘ ‘ – விவேக்
‘ ‘ஹும்…. வாசனை…. ‘ ‘ – எம்.எஸ்.வி.
இப்படிதான் பூச்சிகளும்!
குறிப்பிட்ட வாசனையை வைத்து, தன்னுடைய உணவுப்பொருள் இருக்கும் திசையைக் கண்டுபிிடித்துவிடும். ஒரு தோராயமாக பறந்து உணவுப்பொருள் இருக்கும் இடத்தையும் அடைந்துவிடும். ஆனால் அங்கு அவற்றின் உணவுப்பொருள் மட்டுமே இருக்காது ; பல்வேறு செடிகளும் இருக்கும். அந்த குறிப்பிட்ட உணவுப்பொருள் செடியை (Host Finding) எப்படி கண்டுபிடிக்கும் தொியுமா ? மீண்டும் வாசனைதான்!! அது சரி, உணவுப்பொருள் செடியைக் கண்டுபிடித்தாயிற்று; அது சரியான பருவத்தில் இருக்கின்றனதா ? அதில் நச்சுப்பொருட்கள் ஏதேனும் இருக்கின்றனவா ? அந்த குறிப்பிட்ட உணவுப்பொருள் செடியை சாப்பிட்டால் ஏதேனும் ஒவ்வாமை வருமா ? என்றெல்லாம் சோதனை செய்யும் (Host Recognition). இதற்காக, கொஞ்சம்போல, உணவுப்பொருள் செடியை சோதனை அடிப்படையில் (Test biting), நாம் அடையாறு ஆனந்தபவனில் இனிப்பு வாங்குமுன் சாப்பிட்டுப் பார்ப்போமே, அப்படி சாப்பிட்டுப் பார்க்கும். ஏதும் வில்லங்கம் இல்லை எனில், தொடர்ந்து சாப்பிடும் (Haost Acceptance); இல்லையேல் விடு ஜுட்!!!
எவ்வளவுதான் புத்திசாலித்தனம் இருந்தாலும், ஏதேனும் கவனக்குறைவால், ஒரு கட்டத்தில் உணவு நச்சாவது தவிர்க்ிக முடியாததாகிவிிடுகிறது. அவ்வாறு ஆகும்பட்சத்தில், மரணம்தான்; வேறுவழியில்லை. ஆனால் எல்லாம் கொஞ்ச காலம்தான்!!! அதற்கப்புறம் நச்சையும் உணவாக்கிக்கொள்ளும். ஏனெனில், காலப்போக்கில் நச்சையும் செரிக்கும்வண்ணம், குறிப்பிட்ட செரிமான நொதிகளை அதிகப்படுத்திக்கொள்ளும். பிறகு இந்த நச்சுப்பொருட்கள்தான், அவற்றின் உணவுப்பொருளைக் கண்டுபிடிப்பதற்கான அடையாளம். உதாரணமாக, முட்டைகோசு குடும்பத்தில், கடுகு எண்ணெய் சர்க்கரைகள் (Mustard oil glycosides) இருக்கின்றன. பெரும்பாலான பூச்சிகளுக்கு இவை நச்சு; ஆனால் வைரமுதுகுபூச்சிக்கு (Diamondback moth) இவைதான், சுவைகூட்டும்பொருள்!!
ஆக, இதே கதிதான், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கும். எனவேதான், எவ்வளவு வீரியமான பூச்சிக்கொல்லியும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, பயனற்றுப் போகிறது.
இலைப்பூச்சி (Leaf insect) மற்றும் குச்சிப்பூச்சி (Stick insect) என்று ஒரு சில பூச்சிகள் உண்டு. ஒன்றுமில் லை, இவர்கள் பார்ப்பதற்கு இலையைப் போலவும் குச்சியைப் போலவும் இருப்பார்கள். அதனால்தான் இந்த பெயர்.
இவர்களுக்கு ஏதேனும் விபத்தில் கால் போனால், பல்லிக்கு வால் அறுந்தால் மீண்டும் வால் முளைப்பது போல, இவர்களுக்கும் மீண்டும் கால் முளைக்கும்.
பூச்சிகள் செடியைத் தின்னும். செடி பூச்சிகளைத் தின்னுமா ?
…. அடுத்த வாரம்!!
amrasca@yahoo.com
- ஒரு வெங்காயம் விவகாரமான கதை.
- காகிதங்கள் + கனவுகள் = மீரா
- வருணாசிரமமும் ‘கருணாசிரமும் ‘
- ஆட்டோகிராஃப் -17 : “ஊருக்குப் போன பொண்ணு உள்ளூரில் செல்லகண்ணு கோவில் மணி ஓசை கேட்டாளே”
- கடிதம் செப்டம்பர் 9,2004
- வீர சாவர்க்கர் குறித்து ஒரு இடதுசாரி சிந்தனையாளரின்எதிர்வினை (ப்ரண்ட்லைன் பத்திரிகையில் (ஆகஸ்ட்-3 – 16, 2002) வெளியான கடிதம்)
- கடிதம் செப்டம்பர் 9,2004
- சமூக சேவையும் அரசியல் அதிகாரமும்:(அ) வை.கோ தமிழக முதல்வராகும் கட்டாயம்.
- நெரூதாவும் யமுனா ராஜேந்திரனும் நானும்
- GMAIL ஒரு பார்வை.
- இஸ்லாம் பயங்கரவாதத்தை எதிர்க்கிறது (Islam denounces Terrorism) ஹாருன் யஹ்யாவின் ஆவணப் படம்
- மெய்மையின் மயக்கம்-16
- கடிதம் செப்டம்பர் 9,2004 – இந்து சமுதாயத்தை இழிவுபடுத்தும் கருணாநிதி
- தனிமை
- கவிதைகள்
- சிறியதில் மறைந்த பெரிது
- முதலிடம்
- நில அதிர்ச்சி – ஒரு அனுபவம்
- ஜெயமோகனின் ஏழாம் உலகம்
- கடிதம் செப்டம்பர் 9,2004 – தாஜூக்கு..
- கடிதம் செப்டம்பர் 9,2004
- நடவு நாள்…
- ஜெயலட்சுமிகள் பற்றிய சிந்தனைகள்
- ஆடை மொழி
- கற்பூரவாசனை
- பெரியபுராணம் – 8
- பயணங்கள்
- சொற்களை அடுக்கியக் குப்பைகள்
- போட்டோக் கவிதை…
- ஒரு தலைராகம்
- சத்தியின் கவிக்கட்டு-24
- நீலக்கடல் -(தொடர்)-அத்தியாயம் 36
- கோவிந்தா..க்கோவிந்தா!!
- சரித்திரப் பதிவுகள் – 1
- கார்பன் நானோ குழாய்களை தெரிந்துகொள்வோம்
- உணவாகும் நச்சு
- இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் அணுவிலிருந்து மின்சக்தி உற்பத்தி [Nuclear Energy in the Twenty First Century]
- ஒரு கூட்டமும் அதன் மீதான காட்டமும் :காலச்சுவடு x உயிர்மை
- ஆய்வுக் கட்டுரை: கீழப்பாவூர் கள ஆய்வும் கண்டுபிடிப்புகளும்
- செப்டம்பர் 11 பாரதி நினைவு தினம் பாரதியின் ஆன்மீகம்
- உரத்துப் பேச….