தொழில்நுட்பச் செய்திகள்

This entry is part [part not set] of 52 in the series 20040422_Issue


எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. அதனை கணினியில் ஒரு தகட்டில் எழுதிய எண்ணை மீண்டும் எடுக்கவும் இன்னொரு எண்ணை எழுதும் வேகத்துக்கும் ஒரு எல்லை உண்டு. (உதாரணமாக நாம் வாங்கும் கணினிக்கான ஹார்ட் டிஸ்க் என்று சொல்லப்படும் வன்தகட்டில் 5400 மற்றும் 7200 போன்ற எண்கள் எவ்வளவு வேகத்தில் வன்தகட்டிலிருந்து எண்களை கணினி பெறலாம் என்பதனைக் குறிக்கிறது)

மிகவும் குறைந்த பட்ச நேரம் 2 பைகோ வினாடிகள். pico என்பதன் வரையறை ஒரு வினாடியில் பத்துலட்சத்தில் பத்துலட்சம் பங்குகளில் ஒன்று. இந்த வேகம் இன்றைய கணினி வன்தகட்டுகளின் வேகத்தை விட 1000 மடங்கு அதிகம்.

***

ஒரு பொருள் அதிக பயன்பாட்டுக்கு வரவேண்டுமெனில் அது மனிதனின் அடிப்படை குணத்துக்கு உதவ வேண்டும் போல இருக்கிறது.

பல செல் தொலைபேசிகளில் புளூடூத் என்ற தொழில்நுட்பம் இருக்கிறது. இதன் மூலம் அருகாமையில் இருக்கும் இன்னொரு அனாமத்து செல் தொலைபேசிக்கு செய்தி அனுப்பலாம்.

லண்டன் மெட்ரோவில் பயணிக்கும் பலர் இதுபோன்ற புளூடூத் உதவியுடன் அருகாமையில் இருப்பவர்களுக்கு (யாரென்றே தெரியாமல்) என்னோடு குஜா பண்ண வர்ரியா என்று செய்தி அனுப்புகிறார்கள். இதன் பெயர் டூத்திங்.

அனாமத்தான யாரோ ஆளுடன் மெட்ரோவின் கழிப்பறைகளில் பாலுறவு கொள்வது பெருகி வருவதாக ஒரு செய்தி அறிவிக்கிறது. சமீபத்தில் எவ்வாறு சரியாக டூத்திங் செய்வது என்று புத்தகம் வேறு வெளிவந்திருக்கிறது.

***

இணையத்தின் அடிப்படை பேச்சுவார்த்தை தகுதரமான டிசிபி ஐபி என்ற தொழில்நுட்பத்தில் அடிப்படைக் கோளாறு இருப்பதாக ஒரு ஆராய்ச்சிக்குழு தெரிவித்திருக்கிறது. இந்த ஓட்டை மூலம் இணையத்தை யார் வேண்டுமானாலும் பல மணி நேரங்கள் கட்டிப்போடலாம் என்றும் தெரிவித்திருக்கிறது.

இந்த ஓட்டை தெரியவந்ததும் அமெரிக்க அரசாங்கமும் பல ஐரோப்பிய அரசாங்கங்களும் இணைந்து இந்த ஓட்டையை அடைக்க நடுவில் இருக்கும் ரூட்டர்கள் என்ற இயந்திரங்களை சரி செய்யும் பணியில் ஒரு மாதத்துக்கு முன்பே இறங்கி பல வேலைகள் முடிந்துவிட்டது என்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்திருக்கிறது.

**

கம்ப்யூட்டர் அஸோசியேட்ஸ் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் தலைமை மேலாளராக இருந்துவந்த சஞ்சய் குமார் தன் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிறுவனத்தின் கணக்கு வழக்குகளில் காணப்பட்ட குளறுபடிகள் அமெரிக்க மத்திய அரசாங்கத்தை இந்த நிறுவனத்தின் மீது கடும் குற்ற வழக்குகளை போட முனைந்ததும் இதன் காரணம்.

இந்த நிறுவனத்தின் சுதந்திர தனி இயக்குனராக இருந்த லூயிஸ் ரேனியாரி இந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.

***

டோப்பன் நிறுவனமும் சோனி நிறுவனமும் இணைந்து 25ஜிபி அளவுக்கு பதிவு பெறுமானமுள்ள காகிதத்தால் ஆன தகடுகளை உருவாக்கியிருப்பதாக அறிவித்திருக்கிறது.

சாதாரணமான சிடி என்னும் குறுந்தகடுகள் அதிகபட்சம் 700 மெகாபைட் அளவுக்கு பதிவு பெறுமானமுள்ளவை.

டிவிடி என்றழைக்கப்படும் குறுந்தகடுகள் நவீன திரைப்படங்களை அதிக தெளிவுடன் பார்க்க விற்பனை செய்யப்படுகின்றன. இவை 4.5 கிகாபைட் அளவுக்கு பதிவு பெறுமானமுள்ளவை.

ஆனால் இவையும் போதாது என்று உணர்ந்த சோனி மற்றும் இதர மின்னணு நிறுவனங்கள் புதிய வடிவமைப்பை நோக்கி நகர்ந்தன. இதன் முதல் கட்டம் சிவப்பு லேசருக்கு பதிலாக நீல லேசரை டிவிடிகளில் பயன்படுத்துவது. நில லேசர் சிவப்பு லேசரை விட அலைநீளம் சிறியதாகையால், குறிப்பிட்ட இடத்தில அதிக அளவு பதிவு செய்யவும் பதிவு செய்ததை படிக்கவும் இயலும்.

இதனைக்கொண்டு புளூரே என்ற வடிவமைப்பை பல நிறுவனங்கள் இணைந்து உருவாக்கின. இதன் கொள்ளளவு 25 கிகா பைட் அளவு. (ஒரு ஹெச்டிடிவி hdtv படத்தை இரண்டு மணி நேரத்துக்கு மேல் இதில் பதிவு செய்யலாம்)

அதே நேரத்தில் இந்த அதிக கொள்ளளவு டிவிடிகளில் இருக்கும் செய்திகளை பாதுகாப்பாக (அழிக்கவேண்டும் எனத் தோன்றும்போது) அழிக்க இவற்றை காகிதத்தில் டோப்பன் நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.

***

Series Navigation

செய்தி

செய்தி