மைக்ரோசாஃப்ட் – வின்டோஸ் சமாச்சாரங்கள்

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

சீனாவில் மைக்ரோஸாஃப், இண்டர்டிரஸ்ட் காப்புரிமை


மைக்ரோசாஃப்ட் ஏறக்குறைய 750 மில்லியன் டாலர்களை முதலீடு செய்து சீனாவில் தன்னுடைய விற்பனையையும் சீன மொழி நிரலிகளையும் உருவாக்கும் என்றும் அறிவித்திருக்கிறது.

சீனாவில் ஏற்கெனவே மிகவும் பரவலாக மைக்ரோஸாஃப்டின் விண்டோஸ் இயங்குதளம் உபயோகப்படுத்தப்பட்டாலும், அதன் மூலம் மைக்ரோஸாஃப்டுக்கு ஏதும் பண விஷயத்தில் (தற்போதைக்கு) பிரயோசனமில்லை.

காரணம் இரண்டு. முதலாவது, மைக்ரோஸாஃப்டின் அனைத்து இயங்குதளம் மற்றும் இதர நிரலிகளில் ஒரு டாலர் விலையில் திருட்டு சிடிக்கள் விற்கப்படுகின்றன. இரண்டாவது சீன அரசாங்கம் தனது உபயோகத்துக்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மைக்ரோஸாஃப் இல்லாத இயங்குதளம் மற்றும் நிரலிகளையே பயன்படுத்துகிறது.

சீன அரசாங்கம் அறிவிக்கும் கொழுத்த காண்டிராக்டுகள், இணைய வேலைகள், கணினி தொழில்நுட்ப வேலைகள் ஆகியவற்றை இதுவரை அது சீனாவின் கணினி நிறுவனங்களுக்கே அளித்து வந்திருக்கிறது. அவை யூஎஃப் சாப்ட், சீனாசாஃப்ட், கிங்சாஃப்ட் ஆகிய நிறுவனங்கள்.

இதனை உடைக்க சென் என்ற ஒருவரை மைக்ரோஸாஃப் தனது சீன பகுதியின் தலைவராக அறிவித்திருக்கிறது. காரணம் சென் சீன அரசாங்கத்தில் இருக்கும் தலைவர்களுக்கு நெருங்கிய நண்பர்.

***

மைக்ரோஸாஃப்ட் நிறுவனம் இண்டர்டிரஸ்ட் நிறுவனத்துக்கு சுமார் 400 மில்லியன் டாலர்கள் கொடுத்து அதன் காப்புரிமையை சுட்டு தன் நிரலிகளுக்குள் பொறுத்தி விற்றதற்கு ஈடு கட்டியிருக்கிறது.

ஏற்கெனவே சன் நிறுவனத்துக்கு 1.6 பில்லியன் டாலர் ஈடு கட்டி அதனோடு சமாதானம் செய்துகோண்டது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்,

***

Series Navigation

சான்ஃபிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி பாரதி தமிழ்ச் சங்கம்

சான்ஃபிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி பாரதி தமிழ்ச் சங்கம்