ஸ்பேஸ்.காம்
சூரிய மண்டலம் முன்பு சிறியதாகத்தான் இருந்தது. தற்போது பேசப்படும் ஒரு தேற்றத்தின் படி, நெப்டியூன் கிரகம் சூரியனை விட்டு விலகிச் சென்றபோது ஏராளமான பெரிய கற்களை எடுத்துக்கொண்டும் சென்றது.
கணினி மூலமாக எவ்வாறு சூரிய மண்டலம் உருவாகியிருக்கிறது என்பதை ஆராய்ந்தபோது, 1992இலிருந்து வானவியலாளர்களை படுத்திக்கொண்டிருந்த மர்மம் வெளிப்பட்டது. 1992இல் புளூட்டோவையும் தாண்டி ஒரு சிறு கிரகம் இருப்பதை வானவியலாளர்கள் கண்டறிந்தார்கள். (புளூட்டோ சில வேளைகளில் நெப்ட்யூனின் சுற்றுப்பாதைக்குள் இருக்கும். சில வேளைகளில் நெப்ட்யூனின் சுற்றுப்பாதைக்கு வெளியே இருக்கும். )
பிறகு இன்று குயிப்பர் பெல்ட் Kuiper Belt என்று அழைக்கப்படும் பகுதி கண்டறியப்பட்டது. ஏறத்தாழ 1000 குயிப்பர் பெல்ட் பெருங்கற்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் சில புளூட்டோவின் அளவில் பாதி அளவு உள்ளவை. அறிவியலாளர்கள் இன்னும் பல கோடிக்கணக்கான இது போன்ற பெருங்கற்கள் இங்கே இருக்கலாம் என்று கருதுகிறார்கள்.
ஆனால் அவை அங்கே இருக்கக்கூடாது.
நமது சூரிய மண்டலம் பற்றி முன்னணியில் இருக்கும் தேற்றம் கூறுவது என்னவென்றால், இந்த குயிப்பர் பெல்ட் கற்கள், அஸ்ட்ராய்ட் கற்கள், எரி கற்கள் போலவே சூரியனின் தோற்றத்துக்கு சற்றுப்பினர் (அதாவது 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன்னர்) உருவாகின என்பது. மீதமிருந்த வாயு மற்றும் தூசி இணைந்து கிரகத்துக்கு முந்திய தகடு ( protoplanetary disk) உருவாகியது.
ஆனால், அப்படிப்பட்ட மோதி உடையும் காட்சியமைப்பே இன்றைய குயிப்பர் பெல்ட்டுக்குக் காரணமாக இருக்க வேண்டுமென்றால், இன்று பூமியில் இருப்பதை விட 10 மடங்கு எடை அதிகமான பொருட்கள் அங்கு இருக்க வேண்டும். அவ்வளவு பொருட்கள் இருந்தாலே இப்படிப்பட்ட பெரிய பொருட்கள் மோதி உடைந்து இத்தனை அதிகமான கற்கள் இருக்க ஏதுவாகும்.
இதுவரை கண்டறியப்பட்டுள்ள விஷயங்கள் மூலம் பார்த்தால், பூமியின் எடையில் பத்தில் ஒரு பாகமே இன்று குயிப்பர் பெல்ட்டில் இருக்கிறது.
இருந்திருக்க வேண்டிய அத்தனை பொருட்களும் என்னவாயின என்பதை அறிய பல ஆராய்ச்சியாளர்கள் முனைந்தார்கள். ஒருவேளை குயிப்பர் பெல்ட் பொருட்கள் ஒன்றோடு ஒன்றுமோதி தூசாகவும் வாயுவாகவும் சென்றுவிட்டனவோ என்று கூட ஆராயப்பட்டது. இந்த விளக்கம் பரவலாக ஒப்புக்கொள்ளப்படவில்லை. புதிய தேற்றம் அங்கு ஆரம்பிக்கையில் இவ்வளவு பொருட்களோடுதான் ஆரம்பித்தது என்றே கருதுகிறது.
‘நாங்கள் இந்த எடை காணாமல் போனதை தீர்க்கவே இல்லை. நாங்கள் அதை தீர்க்கவே வேண்டியதில்லை என்று கூறிவிட்டோம் ‘ என்று கூறுகிறார் தென்மேற்கு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் ஹரோல்ட் லெவிஸன்.
குயிப்பர் பெல்டின் சுற்றுபரிமாணம் இன்று நெப்டியூன் இருக்கும் சுற்றுப்பரிமாணமே என்று முடிவு கட்டுகிறார்கள். நெப்டியூன் சுமார் 30 விண்வெளி அலகு தூரத்தில் இருக்கிறது (ஒரு விண்வெளி அலகு astronomical units (AU) என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம்)
இதனுக்கு இடைப்பட்ட தூரத்தில் குயிப்பர் பெல்ட் உருவாக ஏராளமான பொருட்கள் இருக்கின்றன. பிறகு நெப்டியூனின் புவியீர்ப்புவிசை. இது புதிதாக உருவான காலத்தில் சில பொருட்களை வெளியே இழுத்திருக்கும்.அவை சூரியனுக்கு சுமார் 48 விண்வெளி அலகு தூரத்தில் வசதியாக உட்கார்ந்திருக்கும்.
ஏன் நெப்டியூன் இவ்வாறு இழுப்பதை நிறுத்திவிட்டது.
கணினி மாதிரி இன்னொரு வினோதத்தையும் விளக்குகிறது. விண்வெளி ஆய்வாளர்கள் வெகுகாலமாக நெப்டியூன் உருவான தூரத்திலிருந்து இன்னும் விலகி சூரியனுக்கு வெகுதூரம் சென்றுவிட்டது என்று கருதுகிறார்கள்.
ஆனால், இவ்வாறு தேற்றம் வரைபவர்கள் ஏன் நெப்டியூன் இன்னும் போய்க்கொண்டே இல்லை என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.
நெப்டியூன் கிரகத்துக்கு முந்திய தகடுவின் protoplanetary disk எல்லைவரை சென்றது. சென்ற பின்னால் திடும்மென்று நின்றுவிட்டது ‘ என்று பிரான்ஸில் இருக்கும் விண்வெளி ஆய்வுமையத்தில் இருக்கும் மோர்பிடெல்லி கூறுகிறார்.
- ஹெச் ஜி ரசூலின் ‘மைலாஞ்சி ‘ – பலவீனமும் பலமும்
- பத்தினிப் பாதுகை..
- குழந்தை.
- அப்பாவும் நீயே
- ஒரே வருடத்தில் இருபது அடி வளரும் மரத்தை உருவாக்கியிருக்கிறார்கள் வடக்கு கரோலினா அறிவியலாளர்கள்
- நெப்டியூன் கட்டிய சூரிய மண்டலம்
- EPR முரண்-1
- நோபெல் பரிசாலும் தொடமுடியாத சிகரத்தில்: எல்லப்ரகாத சுப்பாராவ் (1895-1948)
- எனக்குப் பிடித்த கதைகள் – 88-இயற்கையும் எதார்த்தமும்-மாத்தளை சோமுவின் ‘தேனீக்கள் ‘
- கடித இலக்கியம்:ஒரு மூத்த சகோதரியின் அந்த நாள் ஞாபகங்கள்;பழைய சென்னை பற்றிய செய்திகள்.
- குறும்பு
- நினைவலைகள் – *** டை ***
- தி.ஜானகிராமனின் பெண்கள்,ஆண்கள்,கிழவர்கள்
- நூல் வெளியீடு : அழைப்பிதழ் : மெய்ப்பொருள் கவிதை கருத்தரங்கம்
- தமிழ் சினிமாவில் சண்டியர்…
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – ழான் தர்தியெ (Jean Tardieu 1903 – 1995)
- நகுலன் கருத்தரங்கும் பரிசளிப்பு விழாவும் – தேதி 6-12-2003
- பண்டிட் ஜவஹர்லால் நேருவைப் பழித்த பாரத அரசியல் ஞானி ஒருவர்
- அமைதி
- பிதாமகன்
- வாரபலன் – மறுபடி எழுத்து ப்ராப்தி
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தைந்து
- வசியப்படுத்தப்பட்ட பொம்மை (The Enchanted Doll by Paul Gallico)
- மஹேஸ்வரியின் பிள்ளை
- அமலா.. விமலா..கமலா
- திசை ஒன்பது திசை பத்து – புதிய நாவல்
- முகம்
- வாசம்
- கடிதங்கள் – டிசம்பர் 4,2003
- ஈராக் யுத்தம்- எண்ணெயா, டாலரின் மதிப்பா ? உண்மைக் காரணங்கள்- 2
- விடியும்!:நாவல் – (25)
- ஜாதீயத்தின் காரணிகள் மற்றும் சார்பும் முரணும்
- தொல் திருமாவளவன் புத்தக வெளியீடு
- இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களே பதில் சொல்லுங்கள் !
- காலச்சுவட்டின் ‘ரசவாதம் ‘ :பின் நவீனத்துவ ‘டெஹல்கா ‘ குறித்து
- இறங்கிய ஏற்றம் :
- வாழ்வே வரமா
- நடை முறை
- கவிதை
- கவிதைகள்